Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 23 Nov 2013 10:38 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



பாரத ரத்னா - Bharat Ratna விருது பெற்றவர்கள்

Posted: 23 Nov 2013 10:28 AM PST

  நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். இந்த விருது ஏற்படுத்தப்பட்டபோது, அமரர்களுக்கு வழங்கப்படாது என்ற விதி பின்பற்றப்பட்டது. அதனால்தான் 1948-ல் மறைந்த மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை மாற்றும் வகையில் 1966-ல் அந்த விதியில் திருத்தம் ...

கண் பார்வை இன்றி முடிதிருத்தும் சிகை அலங்கா நிபுணர்

Posted: 23 Nov 2013 09:58 AM PST


-
பிரிட்டனில் 56 வயதான டயானா கெண்டல் எனும்
சிகையலங்கார பெண்மணி, மூளையில் ஏற்பட்ட
ரத்தக் கசிவால் பார்வையை இழந்தார்
-
40 வருடமாக செய்து வந்த தொழிலையே நம்பிக்கையுடன்
மேற்கொண்டார்.
-
அவரது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பார்வையிழந்த
அவரிடமே சிகை அலங்காரம் செய்து கொள்வதை
விரும்புகின்றனர்.
-

சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு

Posted: 23 Nov 2013 09:56 AM PST

தமிழகத்தில் சபரிமலை சீசன் துவக்கம் காரணமாக, டாஸ்மாக் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2011 ஜூலை, 11, 2012 ஜூன், 14ல் பீர் விலை மட்டும் உயர்வு, செப்டம்பர், 10ல் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலை உயர்வு என, மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள, 2012-13ம் ஆண்டுக்கான மது விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,கார்த்திகை ...

சொத்து !

Posted: 23 Nov 2013 08:49 AM PST

சொத்து ! இதன் மேல் பலருக்கு பித்து ! சேர்த்தவன் போய் சேர்ந்தபிறகு பிரிப்பது உறவை மட்டுமல்ல ! உயிரையும் தான் ! சொத்து ! கெட்டுப் போன இதன் மேல் கெட்டுப் போகும் உடலுக்கும் அதனைவிட்டுப்போகும் உயிருக்கும் என்ன அத்தனை ,மோகம் ? பழம் கெட்டுப் போனால் சொத்து என்று ஒதுக்குகிறோம் ! பருப்பு கெட்டுப் போனால் சொத்து என்று ஒதுக்குகிறோம் ! பணம் நமை தொட்டு நின்றால் சொத்து என்று விலக்குவதில்லை ! தனம் என்று விளக்குகின்றோம் ! என்ன மனமடா ?இது மடமடா ? இனியேனும் சொத்தை சுற்றி சொத்தைப் போவதை நிறுத்து ...

கடல் விழுங்கிய தனுஷ்கோடி!

Posted: 23 Nov 2013 08:44 AM PST

22  டிசம்பர் 1964 கடல் விழுங்கிய தனுஷ்கோடி தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் பற்றிய தொடர், சம்பவங்களில் தொடர்புடைய நேரடி சாட்சியங்களுடன் தனுஷ்கோடி மக்களின் பசி தீர்த்ததும் அதே கடல்தான். தனுஷ்கோடியையும் அங்குள்ள மக்களையும் மொத்தமாக விழுங்கி ருசி பார்த்ததும் அதே கடல்தான். ராமேஸ்வரத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில், வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் வகிடு எடுத்து வாரிவிட்டது போலிருக்க, நடுவில் இருந்த துறைமுக நகரம் தனுஷ்கோடி. ஒரு துறைமுகம், ஒரு ரயில்வே ஸ்டேஷன், தபால் தந்தி அலுவலகம், சுங்க ...

தூணும் துரும்பும்

Posted: 23 Nov 2013 08:40 AM PST

நினைப்பு தூணாகக் கருதி துணையாய் வரிந்தாள். துரும்பாகிப் போனான் துணையவன் அவனே. மாற்றம் தூணென நினைத்து துணையைப் பார்த்தான். துரும்பென நினைத்தாள் துணையவள் அவனை. கிண்டல் தூணாக அவனும் துரும்பாக அவளும். மாறித்தான போனாரே, தூணாக அவளும் துரும்பாக அவனும். காலம் துரும்பாக இருந்தாள் பல் குத்த தோதாக, தூணாகி போனாளே பாழான வயதாலே. கோலம் தூணாக இருந்தானே இளமைக் காலத்தில். துரும்பாகி போனானே முதுமைக் கோலத்தில். கேலி செய்தார் அன்று தூணுடன் துரும்பென்று. செய்கிறார் ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 23 Nov 2013 06:21 AM PST

20-11-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/lf896zdryzj1u3q/Kumudam20.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 11-11-2013-புதிய தலைமுறை கல்வி இதழ் http://www.mediafire.com/download/80odct876vx0i7u/PTK+11.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 17-11-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/5qi3s0l5sg1cd63/Reporter+17.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 4-11-2013-புதிய ...

மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

Posted: 23 Nov 2013 05:46 AM PST

  வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இருக்குமென ஜோகூர் சுல்தான் இன்று அறிவித்தார். வேகமாக வளர்ந்து வரும் இஸ்கண்டார் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்திருப்பதாகவும் சுல்தான் தனது 55 பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார். "இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை அமைதியான முறையில் நடத்த வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமியர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகின்றது" ...

தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 23 Nov 2013 05:39 AM PST

புவனேஸ்வர்: ஒடிசா, பாசோர் கடற்கரை பகுதியில், சந்திப்பூர் அருகே தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இன்று காலை, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலில் இருந்து தனுஷ் ஏவுகணை ஏவப்பட்டது. கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இது, 500 முதல் 1000 கிலோ என்ற அளவில் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பாதையிலே'........

Posted: 23 Nov 2013 05:16 AM PST

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம். பிப்ரவரி 6 (1897) காலை 7.30 மணி. போட்மெயில் பிளாட்ஃபாரத்தில் நுழைகிறது. எள் போட்டாலும் கீழே விழாத அளவு கூட்டம். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் லாரிகளில் பஸ்களில் கூட்டிக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. காசுக்காக வந்த கூலிப் பட்டாளமும் அல்ல. மாறாக, காசு கொடுத்து பிளாட்ஃபாரம் டிக்கெட் வாங்கி உள்ளே வந்திருந்த பக்தர்கள் கூட்டம் அது. அன்றைக்கு பிளாட்ஃபாரம் டிக்கெட் ஸ்டாக் தீர்ந்து போய்விட்டது! ஒரு ஸ்டேஜில் பிளாட்ஃபாரம் டிக்கெட் இல்லாமலேயே ...

பாரிஜாதம் பகலில் பூத்ததே...!

Posted: 23 Nov 2013 05:02 AM PST

--- நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில் - பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே - என்று வரிகள் உள்ளன்... - பாரிஜாதம் எப்போது பூக்கும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் -

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது?

Posted: 23 Nov 2013 04:56 AM PST

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான். 150 ஆண்டுகள் மகதப் பேரரசு ...

தமிழ்நாட்டில் தங்க தேர்!

Posted: 23 Nov 2013 04:48 AM PST

தமிழ்நாட்டில் தங்க தேர் உள்ள முக்கிய கோவில்கள் பழனி தண்டாயுதபாணி கோவில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில் வடபழனி பழனியாண்டவர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோவில் - dinamani

உலக செஸ்: ஆனந்தை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்

Posted: 23 Nov 2013 04:46 AM PST

  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தி, நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு உலக சாம்பியனை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான உலக செஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வந்தது. அதன் 10-வது சுற்று இன்று நடந்தது. மும்முரமாக நடந்த இந்த சுற்று, டிராவில் முடிந்தது. இதன் மூலம் கார்ல்சன் ஆறரை புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றார். கார்ல்சன் யார்? உலக செஸ்ஸில் ஒன்றல்ல… ...

கசப்பான உண்மைகள்!!,,,,

Posted: 23 Nov 2013 04:39 AM PST

கசப்பான உண்மைகள்!! 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5.ஒரு ...

இனி ' குட்மார்னிங் '- இல்லை - ' ஜெய் ஹிந்த் '- சொல்லுங்கள் !

Posted: 23 Nov 2013 04:24 AM PST

புதுடில்லி: வெள்ளைக்காரர்கள் சொல்லிக்கொடுத்த ' குட்மார்னிங் ' இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர். சுதந்திர போராட்டக்காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் ...

டாஸ்மாக் கடையில், ரூ.100 க்கு தொப்பியை அடகு வைத்த ஏட்டு

Posted: 23 Nov 2013 04:24 AM PST

சேலம்: சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரில், டாஸ்மாக் கடையில், 100 ரூபாய்க்கு, தொப்பியை அடகு வைத்து குடித்த, போதை போலீஸ்ஏட்டு யார் என, போலீசார் விசாரிக்கின்றனர். தமிழக போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு, தொப்பி, பெல்ட், பெயர் பேட்ஜ் ஆகியன, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. இவற்றை, அவர்கள், தொலைத்து விடும் பட்சத்தில், போலீசில் பணியாற்ற, தகுதி இல்லாதவராக கருதப்படுவர். இந்த பொருட்கள், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை, துறை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவர். ...

ஏயர்ஸ் பாறை! - Ayers rock

Posted: 23 Nov 2013 04:17 AM PST

ஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது. அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படுகிறது. அங்கு வாழும் பழங்குடி மக்கள் அந்தக் கற்பாறையை உலுரு பாறை என்று அழைக்கின்றனர்.  அந்த அதிசயப் பாறையை முதன்முதலாக வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஒரு வெள்ளைக்காரர். அவர் அதை 1873-இல் கண்டார். தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயலராக அப்போது இருந்த சர் ஹென்றி ஏயர்ஸ் என்பவரின் ...

காமன்வெல்த் மாநாட்டின் புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார்,,,

Posted: 23 Nov 2013 03:38 AM PST

காமன்வெல்த் மாநாட்டின் மூலம் இலங்கை அரசு அள்ளிச்சென்றிருக்க வேண்டிய புகழையும் பெருமையையும் பிரிட்டன் பிரதமர் கேமரூன் பறித்துச்சென்றுவிட்டார் என்பதே உண்மை. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் - அதாவது, 2009 மே மாதவாக்கில் இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு எதிர்கொண்டிருக்கிறது. அவற்றைச் சமாளிக்கவும் சர்வதேசத்திடம் நல்ல பெயர் எடுத்து கவனத்தை ஈர்க்கவும் 23-வது காமன்வெல்த் மாநாட்டை இலங்கை அரசு நடத்தியது. ஆனால், ...

சிந்தனைத் துளிகள்

Posted: 23 Nov 2013 02:49 AM PST

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

உலகச் செய்திகள்!

Posted: 23 Nov 2013 02:42 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

பாகப்பிரிவினையால் வந்த விபரீதம்!

Posted: 23 Nov 2013 02:37 AM PST

சாதாரணமாக குடும்பங்களில், அண்ணன் - தம்பிகளுக்குள் பாகப் பிரிவினையின் போது, பகை ஏற்படுவது சகஜம்.தகப்பனார் இருக்கும் போதே அவர், யார், யாருக்கு என்னென்ன என்பதை பங்கு போட்டுக் கொடுத்து விடுவது நல்லது. ஒன்றும் எழுதி வைக்காமல் மண்டையைப் போட்டு விட்டால், பாகப் பிரிவினையின் போது, அண்ணன் -தம்பிகளுக்குள் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. இதில் யாராவது ஒருவருக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால், விஷயம் சுமூகமாகத் தீர்ந்து விடும். அது போன்ற எண்ணம் இல்லாவிட்டால் அண்ணன், மனைவி, மச்சினன், மாமனார் இவர்கள் ...

திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’

Posted: 23 Nov 2013 02:20 AM PST

தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டது என்பதற்கு 'இரண்டாம் உலகம்' படம் ஒரு முன்னுதாரணம். காலங்காலமாக தமிழ் சினிமாவில் காதலை எத்தனையோ வழிகளில் காட்டியாகிவிட்டது இனி புதுமையாக இன்னொரு உலகிற்கு சென்று காட்டுவோம் என்ற கற்பனையில் இப்படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். ஆனால் அவரது சிந்தனையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இரண்டாம் உலகத்தை அடையத் தயாராகிவிட்டார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. வித்தியாசமான கதை வேண்டும், புதுமை வேண்டும் என்று தமிழ் சினிமா இயக்குநர்களைப் ...

மலேசியா: பிரதமரின் மனைவி அரசாங்க விமானத்தைப் பயன்படுத்த தகுதியானவரா?

Posted: 23 Nov 2013 02:14 AM PST

பிரதமர்  நஜிப் துன் ரசாக் உடன் இன்றி அவரது மனைவி மட்டும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஜெட் விமானத்தைப் பயன்படுத்தி கத்தார் சென்று வந்தது ஒன்றும் முதல் முறையல்ல என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். "இது முதல் முறையாக நடக்கவில்லை. அது பற்றிய மேலும் பல தகவல்களைத் திரட்டி வருகின்றேன்" என்று செய்தியாளர்களிடம் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். மேலும் ரோஸ்மாவின் இந்த பயணம் இரண்டு விவகாரங்களை எழுப்பியுள்ளது – பிரதமரின் மனைவி அரசாங்க விமானத்தைப் பயன்படுத்த தகுதியானவரா? மற்றும் அரசாங்க விவகாரங்களில் ...

இவருக்கு சொந்த வீடில்லை சேவை செய்வதில் ஈடில்லை!

Posted: 23 Nov 2013 02:10 AM PST

சொந்தமாக வீடு இல்லாத நிலையிலும் மக்களுக்கான சேவைகளை முறையாகச் செய்து வருகிறார் ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நிறைய பேர் பொழைக்கத் தெரியாதவன்னு என் காதுபடவே பேசத்தான் செய்யுறாங்க. அவங்க சொல்றத எல்லாம் நான் காதுல வாங்குறதே இல்ல. ஆண்டவன் இப்ப குடுத்துருக்க வசதியே போதுமுங்க. என் ஊர் மக்கள் என்ன நம்பித்தான் இந்தப் பொறுப்ப ஒப்படச்சுருக்காங்க. அவங்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். இன்னைக்கு நான் செய்யுற நல்லது, காலத்துக்கும் என்ன அவங்க மனசுல நிக்க வைக்கும். அது போதும் எனக்கு" என்கிற ராமையா, முதுகுளத்தூர் ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 23 Nov 2013 01:46 AM PST

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா

Posted: 22 Nov 2013 11:46 PM PST

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம் இதப்படிங்க. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு. ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி ...

Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!

Posted: 22 Nov 2013 09:55 PM PST

சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHV-E400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம். உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. ...

நமது பூமியின் கதை

Posted: 22 Nov 2013 09:21 PM PST

சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள் ஆகும், பூமியின் நிறை ஏறக்குறைய 5.98×1024 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீஷியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும்அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது.நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது பூமி தன்னைத்தானே ...

மதுரை லோக்சபா தொகுதியில் அழகிரி வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Nov 2013 09:00 PM PST

மதுரை லோக்சபா தொகுதியில் அழகிரி வெற்றி செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை: மதுரை லோக்சபா தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நன்றி தினமலர் ,  இதே போல் நிதி அமைச்சர் சிதம்பரம் சார்பாக  வழக்கு இருந்ததே.  தீர்ப்பு வந்ததா ? நினைவில்லை .  யாருக்காவது தெரியுமா?   ரமணியன்  

மக்கள் அனைவருக்கும் சம்பளம்

Posted: 22 Nov 2013 08:03 PM PST

பெர்ன் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை போன்றவற்றை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த பிரச்னையை சமாளிக்க, மக்கள் அனைவருக்கும், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை ஊதியமாக வழங்க, சுவிட்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி, ஒருவருக்கு, 1.70 லட்ச ரூபாய் ஆண்டு ஊதியம் கிடைக்கும். சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை, 8 கோடி. ...

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 22 Nov 2013 07:03 PM PST

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™