Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உறுப்பினர் அறிமுகம் பகுதி

Posted: 20 Nov 2013 02:32 PM PST

உறுப்பினர் அறிமுகம் பகுதியில் புதியவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள புதிய பதிவிட என்பதை அழுத்தியதும் கீழ்கண்ட விபரங்களை ஈகரை தளம் தானியங்கி முறையில் கேட்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது! பெயர்: சொந்த ஊர்: ஈகரையை அறிந்த விதம்: பொழுதுபோக்கு: தொழில்: மேலும் என்னைப் பற்றி: இவற்றில் மாற்றம் விரும்பினாலோ அல்லது புதிய கேள்விகளை இணைக்க விரும்பினாலோ உறவுகள் இங்கு அறியத் தரலாம்!

சாலைகளால் ஏழைகளுக்கு என்ன பயன்? ராகுல் கேள்வி

Posted: 20 Nov 2013 01:17 PM PST

போபால் : "மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, சாலை வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சாலை வசதியை ஏற்படுத்தினால் மட்டும், ஏழைகளுக்கு உணவு கிடைத்து விடுமா?'' என, காங்., துணை தலைவர் ராகுல், கேள்வி எழுப்பினார். ம.பி., மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல், தார் என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், நேற்று பேசியதாவது:மத்திய பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், ...

ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில் கரையை கடக்கும்

Posted: 20 Nov 2013 01:14 PM PST

சென்னை : வங்கக்கடலில் உருவான, "ஹெலன்' புயல், இன்று இரவு அல்லது நாளை காலை, சென்னை அடுத்த, ஸ்ரீஹரிகோட்டா மற்றும் ஓங்கோல் இடையில், கரையை கடக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வங்கக்கடலில், கடந்த,17ம் தேதி உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேற்கு மத்திய வங்கக் கடலில், நிலை கொண்டிருந்தது. இது, வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 19ம் தேதி, சென்னை ...

மறைந்தும் காட்சி தந்த மகான்

Posted: 20 Nov 2013 01:05 PM PST

ஸ்ரீராகவேந்திரர் "என் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் எனது சமாதி உயிர்ப்புடன் விளங்கும்; தேவையானவருக்கு, தேவையான சமயத்தில் தக்க வழி காட்டும்" என்றவர் மகான் ஸ்ரீ ராகவேந்திரர். வாழும் காலத்தில் பல்வேறு அற்புதங்கள் புரிந்த அம்மகான், இறந்த பின்னரும், ஏன் இன்றும் கூட பல அற்புதங்கள் செய்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் மாஞ்சாலி கிராமம் எனப்படும் மந்த்ராலயம். இது ஆந்திராவில், துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது. அது பூர்வ காலத்தில் பிரகலாதன் யாகம் செய்த இடம். ...

ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு ஸ்ரீவிஐயீந்திரர்

Posted: 20 Nov 2013 12:17 PM PST

மகான்கள்... இறைவனின் தூதர்கள்! சாதாரண மனிதர்களாக அவதரித்தாலும் இவர்களது அற்புதங்கள் சாதாரணமானவை அல்ல. இறைவனின் மகிமையை சக மனிதர்களுக்கும் உணர்த்தி, அவர்களுக்குள் தெளிவை ஏற்படுத்தியதில் மகான்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தீராத நோய் குணமாக வேண்டும் என்று தன்னிடம் வேண்டியவர்களிடம், 'இவர்களைதரிசியுங்கள் எல்லாம் நலமாகும்!' என்று ஸ்ரீநடராஜபெருமனே வழிகாட்டிய பெருமைக் குரிய மகான்களை (ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் மற்றும் பசுவந்தனை ஸ்ரீசங்கு சுவாமிகள்) பற்றி இந்த பகுதியில் ஏற்கெனவே படித்திருக்கிறோம்.மகான்களின் ...

'ராகவேந்திரர் அருளால் தாயானேன்!'

Posted: 20 Nov 2013 12:05 PM PST

பரம்பொருளையும் அதன் அம்சமான மகான்களின் திருவருளையும் நமக்கு உணர்த்துவது, சிலிர்க்க வைக்கும் சில அனுபவங்களே! அப்படி, எனது வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருமணமாகி 6 மாதங்களில் நான் கருவுற்றேன். மருத்துவப் பரிசோதனையின்போது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இதயத் துடிப்பு குறைவாக உள்ளது என்றும், இதனால் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் கூறிய மருத்துவர்கள், 'கருவைக் கலைத்து விடுவதே நல்லது' என்றும் கருத்து தெரிவித்தனர். அதேநேரம்... 'முதல் குழந்தை என்பதால்... ...

காப்பாற்றினார் பாபா!

Posted: 20 Nov 2013 11:57 AM PST

வெளியே கிளம்பும்போது, 'நல்லபடியே சென்று வர வேண்டும்' என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன். நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வாடகை காரில் நான், என் கணவர், தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய நால்வரும் சென்றோம். பாதி வழியைக் கடந்து சென்ற வேளையில் ...

நந்தி தேவர்!

Posted: 20 Nov 2013 11:55 AM PST

முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். "இது என்ன?" என்று யமனிடம் கேட்டார். "முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்" என்று யமன் கூற முனிவர் நடுங்கினார். "நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?" என்றார் ...

துளசிதாசரை ஆட்கொண்ட ஸ்ரீராமபிரான்!

Posted: 20 Nov 2013 11:54 AM PST

ராமனின் புகழ் போற்றும் புண்ணிய நூல்களில் குறிப்பிடத் தக்கது ராமசரித மானஸ். இதை இயற்றியவர் துளசிதாசர். வால்மீகி முனிவரின் அம்சமாக போற்றப் படும் துளசிதாசரது வாழ்க்கைச் சம்பவங் கள், நம்மையும் ராம பக்தியில் திளைக்கச் செய்வன! ராமனை தரிசிப்பதையே லட்சியமாகக் கொண்டு துளசிதாசர் தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த கால கட்டம். நாள்தோறும் கங்கையில் நீராடி நித்ய கர்மானுஷ் டானங்களை நிறைவேற்றுவார். கமண்டலத்தில் கொண்டு வரும் நீரில் கை-கால் கழுவியது போக மீதியுள்ளதை அருகில் உள்ள மரத்தடியில் ஊற்றுவார். பன்னிரண்டு ...

கர்ணன் அவதரித்த கதை!

Posted: 20 Nov 2013 11:52 AM PST

சாகா வரம் வேண்டி கடும் தவம் இருந்தான் தானாசுரன் எனும் அரக்கன். அதன் பயனாக அவனுக்கு தரிசனம் தந்தார் சிவபெருமான். ''எந்தவொரு ஜீவாத்மாவும் மரணத்தைத் தவிர்க் கவே முடியாது. எனவே, வேறு வரம் கேள்!'' என் றார் பரமேஸ்வரன். உடனே தானாசுரன், ''எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழாத வகையில், ஆயிரம் குண்டலங் களுடன் உயிர்க் கவசம் ஒன்றும் தர வேண்டும். இவை, எனது உடலை விட்டு நீங்காத வரை மரணம் என்னை நெருங்கக் கூடாது!'' என்று வரம் கேட்டான். ''அப்படியே ஆகட்டும்!'' என்று கூறி மறைந்தார் ஈசன். பிறகென்ன, ஆணவம் ...

மரணத்தை வென்ற இல்லறத்தான்!

Posted: 20 Nov 2013 11:50 AM PST

துரியோதனன் தர்மவான்; அன்பாளன்; இன்சொல் பேசுபவன்; பொறாமை இல்லாதவன்; இரக்க குணம் உள்ளவன்; புலன்களை வென்றவன்; தற்பெருமை பேசாதவன்; எவரையும் அவமதிக்காதவன்; விதிப்படி யாகங்களைச் செய்பவன்; புத்திமான்; வேதங்களை அறிந்தவன்; அந்தணர்களை மதிப்பவன்; வாக்கு தவறாதவன்; எல்லாவற்றுக்கும் மேலாக பராக்கிரமசாலி. இவனது ஆட்சியில் மழைக்கு பஞ்சமே இல்லை. ரத்தினங்கள், பசுக்கள், உணவு தானியங்கள், செல்வம் என எல்லாமே நிறைந்திருந்தன. கருமி, ஏழை, நோயாளி, உடல் இளைத்தவர் என்று ஒருவர் கூட இவனது தேசத்தில் இல்லை... என்ன, ஆச்சரியமாக ...

புன்னகைப் பக்கம்...!

Posted: 20 Nov 2013 11:39 AM PST

நந்தீஸ்வரர்

Posted: 20 Nov 2013 11:38 AM PST

1. சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி 2. பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி 3. செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி மங்களங்கள் அத்தனையும் கொடுக்கு நந்தி மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி 4. அருகம்புல் மாலையை ...

மகேந்திர மலை

Posted: 20 Nov 2013 11:34 AM PST

மகேந்திரமலை எது? மகேந்திர மலை என்பது இமய மலைச்சாரலில் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஒன்று என்பதும், அதன் அடிவாரத்திலேயே சிவன் ஆகமங்களை தத்துவ ஞானத்தை உபதேசித்தான் என்பதும், அந்த இடம் அர்ச்சுனன் பாசுபதம் வேண்டி தவம் இருந்த இடம் என்பதும், அவ்விடம் நீரருவிகளும், பறவைகளும், மான்களும் உள்ள இடம் என்பதும் அறியப்படுகின்றது. ஆகவே இது தென்னிந்தியாவில் உள்ள பொதியமலையோ அல்லது விந்திய மலைத்தொடரோ அல்ல. அதே சமயம் உயர்ந்த கைலாச மலையும் அல்ல என்பது தெளிவு. ஆனால் சிவன் ஆகமங்களையும், தத்துவஞானத்தையும் உபதேசித்த மகேந்திர ...

தமிழ் மரபில் மரணச் சடங்குகள் - மின்னூல்

Posted: 20 Nov 2013 10:58 AM PST

 

தமிழ் மரபில் மரணச் சடங்குகள் 1 of 2
தமிழ் மரபில் மரணச் சடங்குகள் 2 of 2


என் அறிமுகம்

Posted: 20 Nov 2013 10:36 AM PST

வணக்கம். என் பெயர் சந்துரு. கேட்டரிங் படித்து கொண்டு இருக்கிறேன்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் திரு வாசுதேவன் சார்!

Posted: 20 Nov 2013 10:35 AM PST



வாசுதேவன் சார்
தங்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்…

Posted: 20 Nov 2013 10:33 AM PST

நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா சுத்தறான், உமா..! - நீங்க எப்ப பார்த்தீங்க..? - வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு வர்றப்ப பார்த்தேன்…! - >அ.ரியாஸ் - ———————————————————– அவனவன் கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கிறான்…திருட்டு டி.வி.டியா விக்கிறே… நட ஸ்டேஷனுக்கு…! - நான்தான் சார் தயாரிப்பாளரே…! இந்த படத்தை இப்படி வித்தாத்தான் உண்டு…! - >கி.ரவிக்குமார் - ————————————————————— - சிபிஐ யோட குற்றப்பத்திரிகையில உங்க பெயர் சேர்க்கிறதா, வேண்டாமான்னு கேட்கிறாங்க தலைவரே..! - கூட்டணிக்கு ...

ஜெ. சொன்ன குட்டிக்கதைகள்

Posted: 20 Nov 2013 10:32 AM PST

சென்னை: அன்பும், அமைதியும் இல்லாத இடத்தில் ஆத்திரம் தான் குடிகொண்டு இருக்கும்.கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள் என்று முதல்வர் ஜெயலலிதா குட்டிக் கதைகள் மூலம் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற அமைச்சர்கள் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரைகள் கூறும் வகையில் குட்டிக்கதைகளை கூறினார். அன்பாய் இருங்கள்!… ஆத்திரப்படாதீர்கள் ஜெ. சொன்ன குட்டிக்கதைகள் துறவியும் சீடனும் ஒரு துறவி, தன் சீடருடன் காட்டு ...

தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்

Posted: 20 Nov 2013 10:31 AM PST

தங்கம் விலை ரூ.56 குறைந்தது சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் ...

ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))

Posted: 20 Nov 2013 10:29 AM PST

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார். போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?" அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்." மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்." போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்." அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை." மனைவி ...

குழந்தைகளுக்கான மழைக்கால மருத்துவக் குறிப்புகள்!

Posted: 20 Nov 2013 10:20 AM PST

  மழையும், குளிரும் மனதை வருடும் காலம் இது. ஆனால், வெப்பம் குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பதால், கிருமிகளுக்கும் கொண்டாட்டம். வைரஸ், பாக்டீரியா கிருமிகள் மிக வேகமாகப்  பரவும் நேரம் இது.  காய்ச்சல், சளி, தொண்டை வலி, நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அதிகம் உள்ளாவது குழந்தைகள்தான்.   'இந்தப் பருவத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் இருக்கும். பனிமூட்டம் காரணமாக, பல இடங்களில் சூரிய ஒளி குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக ...

கடவுள் எங்கும் இருக்கிறார்..!

Posted: 20 Nov 2013 09:57 AM PST

சமீபத்தில் ஒரு மாநகரில் கடவுளுக்கு கோடானு கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்து, கடனை வாங்கி, மிகவும் கஷ்டப்பட்டு ஒரு கோவில் கட்டினார்கள். - அதனைக் கண்ட முற்போக்குவாதிகள், கிண்டலாக கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே, அவருக்கு எதுக்கு இவ்ளோ செலவில் கோவில் என்று கேள்வி எழுப்பினார்களாம். - அவர்களுக்கு மூக்கிலடித்தாற்போல, அந்தக் கோவிலின் முக்கிய ப்ரதிநிதி ஒருவர், காற்று எங்கும்தான் இருக்கிறது, ஆனால் அதை உணர்த்த ஒரு காற்றாடி (fan) தேவையாக இருல்கிறதல்லவா, அது போலத்தான் கடவுளும் எங்கும் ...

திப்பு சுல்தான் பிறந்த தினம் -நவம்பர் 20

Posted: 20 Nov 2013 09:51 AM PST

புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி . ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான் . திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் ...

இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…! -

Posted: 20 Nov 2013 09:34 AM PST

- உங்க கணவர் உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு..! நிஜமாவா டாக்டர்…? - ஆமாம், அவரை இனிமே அடிக்காதீங்க..! - >வி.பார்த்தசாரதி - ——————————————- - அடிக்கடி வந்து நீ குற்றவாளிக் கூண்டில் நிற்கிறாயே உனக்கு கஷ்டமாக இல்லை..? - கஷ்டமாத்தான் இருக்கு …ஒரு நாற்காலி போடச் சொல்லுங்க எசமான்…! - >வி.பார்த்தசாரதி - ———————————————- - இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே…! - குடிச்சுட்டு வந்துட்டீங்களா…?! - >வி.சாரதி டேச்சு - —————————————– நன்றி: குமுதம் -

கார்த்திவாசுகி கவிதைகள் - நட்பு

Posted: 20 Nov 2013 09:28 AM PST

இமைகளை பார்த்து வருவதில்லை
 இதழினை பார்த்து வருகிறது
இதயத்தை பார்த்து வருவதில்லை
 இடையை பார்த்து வருகிறது
உள்ளத்தினை பார்த்து வருவதில்லை
உடைகளையும் பார்த்து வருகிறது
அன்றோ இருமனதில் தொடங்கி
   திருமணத்தில் முடிந்தது
இன்றோ கணினியில் தொடங்கி
காணாமல் போகிறது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

Posted: 20 Nov 2013 08:26 AM PST

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இவை 2 மாதத்துக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை 8 மணிக்கு உண்டியல் எண்ணிக்கை தொடங்கியது. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் இந்து சமய அறநிலையத்துதுறை உதவி ஆணையர் அருணாசலம், ஆய்வாளர் சாரதா, முதுநிலை கணக்கர் இங்கர்சால், நாகர்கோவில் தேவசம்தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான சோணாச்சலம், ...

வேகமாக பரவும் கோமாரி நோய்:2 மாதங்களில் 175 மாடுகள் பலி

Posted: 20 Nov 2013 07:10 AM PST

ஈரோடு: ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதங்களில் மட்டும், கோமாரி நோய் தாக்கி, 175 மாடுகள் பலியாகி உள்ளன.இதனால், விவசாயிகள் அச்சமும், நஷ்டமும் அடைந்துள்ளனர். அம்மை நோய்: மழைக் காலங்களில், மாடுகளை கோமாரி என்ற நோய் தாக்கும். இந்த நோய் தாக்கிய மாடுகளின் வாய் மற்றும் பாதங்களில் புண்கள் உருவாகும். சில நாட்களில் அவை இறந்துவிடும். விவசாயிகள் இந்த நோயை, மாடுகளுக்கு ஏற்படும் அம்மை நோய் என்று கூறுகி்றனர். தமிழகத்தில் உள்ள ...

60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை

Posted: 20 Nov 2013 07:06 AM PST

நண்பர்களுக்கு காலை வணக்கம்.

எங்கள் அப்பாவிற்கு வரும் ஜனவரியில் 60 வயது ஆரம்பமாகிறது.
ஆதலால் 60 ஆம் கல்யாணம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அங்கே எப்படி பதிவு செய்ய வேண்டும், முன்பே பதிவு செய்ய வேண்டுமா ?
அப்படி பதிவு செய்ய யாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிந்த நண்பர்கள்
அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், தெரிந்த குருக்கள் இருந்தாலும் அவர்களுடைய
தொடர்பு எண் கொடுங்கள்.
நன்றி

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா

Posted: 20 Nov 2013 07:00 AM PST

குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம் பாப்பா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மனசு பிடிக்கல அதுல வந்த சண்டையில இவள நெனைக்கல அவசரமா அப்பா போன இடமும் தெரியல அவசரமா அப்பா போன இடமும் தெரியல அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல அம்மா கண்ணும் பாப்பா கண்ணும் அழுது முடியல குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது கொஞ்சம் பாப்பா யாருமில்லா அனாதையா கடையிலே கிடந்தா எங்க அம்மாவுக்கு பொண்ணா வந்து மடியிலே இருந்தா ஆயிரம்தான் ...

மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ. திட்டம்; தாவூத் இப்ராகிமிடம் பொறுப்பு ஒப்படைப்பு!

Posted: 20 Nov 2013 06:54 AM PST

புதுடெல்லி: பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கொல்ல பாகிஸ்தானின் உளவுத் துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பொறுப்பு பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அண்மையில் பீகார் தலைநகர் பாட்னாவில்  மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மோடி அங்கு வருவதற்கு முன்னரே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்திற்கு இந்திய முஜாகிதீன் ...

சஞ்சிக்கூலி

Posted: 20 Nov 2013 06:51 AM PST

சஞ்சிக்கூலி என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல் ஆகும். இது சஞ்சி (மலாய்: Janji) எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள்படும். மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி வைத்தனர். தென்னிந்தியாவில் இருந்து ஆள் பிடித்து வருமாறு இந்தக் கங்காணிகள் பணிக்கப் பட்டனர். 'மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் ...

வெங்காய கடைக்கு பாதுகாப்பு வேண்டும்...!

Posted: 20 Nov 2013 06:49 AM PST

- அந்த மருந்து கடைக்காரரை எதுக்கு கண்டபடி திட்டிட்டு வர்றே..? - பிரிஸ்கிரிப்ஷன்ல டாக்டர் போட்டிருந்த பிள்ளையார் சுழிக்கு கூட ஒரு மாத்திரை கொடுக்கிறாரே..! - >சரவணன் - ---------------------------------------------------------------------- - வெங்காய வியாபாரிகள் எல்லாம் பிரதமரிடம் என்ன கோரிக்கை வைக்கிறாங்க...? - தங்கள் கடைகளுக்கு ராணுவ பாதுகாப்பு வேண்டுமாம்..! - >அ.குணசேகரன் - -------------------------------------------------------------------------------- - டாக்டர்..! தெரியாம ...

தலைவருக்கு இப்போ இலக்கியத்துல ஆர்வம் வந்து விட்டதா..? -

Posted: 20 Nov 2013 06:40 AM PST

- - இந்த போட்டோவுல இருக்கறதுதான் என் எதிர்கால மனைவி...! - அப்படியே இறந்த கால மனைவி போட்டோவையும், நிகழ்கால மனைவியோட போட்டோவையும் காட்டுடா...அப்பதான் நம்புவேன்...! - எஸ்.கோபாலன் - ------------------------------------------------------------------------------------ - கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டும்'னு போர்டு வெச்சிருக்கே..! அப்படி என்ன வியாபாரம் செய்யறாங்க..? - வெங்காயம்...! - >ஒய்.கே.சங்கர் - -------------------------------------------------------------------------- - அவரிடமிருந்து ...

எங்க தாத்தாவுக்கு ஹன்சிகாவை ரொம்ப பிடிக்கும்..!

Posted: 20 Nov 2013 06:34 AM PST

- நேத்து உன் மாமியாரை வேணும்னுதானே மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டே  ? - இல்லையே...! வேணாம்னுதான் தள்ளினேன்..! - >சி.ஆர்.ஹரிஹரன் - -------------------------------------------------------------------- - ஒரு செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காம இருக்காரே ...ஏன்? - இன்னொரு செருப்பும் வரட்டுமேன்னுதான்..! - >சி.ஆர்.ஹரிஹரன் - --------------------------------------------------------------------- - நல்ல பாட்டு வரும்போது உங்க பாட்டி ஏன் படக்குன்னு டி.வி.யை அணைக்கிறாள்...? - எங்க ...

பெர்முடா முக்கோணம்

Posted: 20 Nov 2013 06:27 AM PST

பெர்முடா முக்கோணம். உ லகில் மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இடங்கள் எத்தனையோ இருக்கின்றன . அந்தப் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது பெர்முடா முக்கோணம். கப்பல்களையும் விமானங்களையும் விழுங்கும் இந்த முக்கோணைத்தின் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?! மர்ம முக்கோணம் ! மரண முக்கோணம் ! பேய் முக்கோணம் என்று அச்சமூட்டம் பெயர்களில் அழைக்கப்படுவது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொரிகா ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் முக்கோண வடிவிலான பகுதிதான் பெர்முடா ...

முதலிரவு முடிஞ்சதும் மனைவி சொன்னது...!

Posted: 20 Nov 2013 06:26 AM PST

- முதலிரவு முடிஞ்சதும்  என் மனைவி ஒண்ணு சொன்னா..! - என்னது? - இதற்குத்தானே ஆசைப்பட்டாயா பாலகுமாரன்னுதான்...! - >பி.பாலாஜி கணேஷ் - ------------------------------------------------ - கேடி கபாலி லாக்கப் ரூம்ல ஒரு புதுக்கவிதை எழுதி வெச்சிருக்கான் சார்..! - என்ன கவிதை? - சாவிகள் மறைத்து வைக்கப்படுவதால்தான் பல பூட்டுகள் உடைக்கப்படுகின்றன..! - >செய்யது புகாரி ----------------------------------------------------- - தலைவர் ரவுசு தாங்கலை...! - ஏன்? - ஏடி.எம்.ல பணம் எடுக்கப்போனவர் ...

குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!

Posted: 20 Nov 2013 04:48 AM PST

அன்பு நண்பர்களே, நெடுங்காலம் ஆகி விட்டது... ஒரு பாடலை இப்போதாவது இடலாம் என எண்ணம் ! ஒருத்தி , அவளது தோழி , அவ்வொருத்தியின் தலைவன் ! மூவர்தான் இங்கு உலகம் !! இந்த தோழி இருக்காளே - நான் சொல்வது சங்கப்பாடல்களில் காணும் தோழிகளை - எந்த இலக்கியத்திலும் காண முடியாதவள் ! அடியேன் இதைச் சொல்லவில்லை ; சொல்வதற்கான தகுதியும் இல்லை - ஏனெனில் தெரிந்தது , தமிழன்றி ஆங்கிலம் மட்டும்தான் ! ஆயின் , பல மொழிகள் கற்றுத்துறைப் போகிய ஞானம் சிறந்த பல்லோர் சங்க இலக்கியத் தோழிகள் போல் திறம் வாய்ந்தோர் வேறு இலக்கியங்களில் ...

ராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல்

Posted: 20 Nov 2013 04:43 AM PST

ஆல்வர் : டில்லியில், ராகுல் பொதுக்கூட்டத்தில், மக்கள் பாதியில் எழுந்துபோனது குறித்து, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, கிண்டல் அடித்தார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக, ஆல்வரில் நடந்த கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியதாவது: சில பொதுக்கூட்டங்களில், பாதியில் எழுந்து போகும் மக்களை பார்த்து, 'போகாதீங்க... போகாதீங்க...'ன்னு கெஞ்சுறாங்க. ஆனால், நான் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில், என்னை பார்க்க முடியாமல் மக்கள் ...

பாதுகாப்பு இல்லை

Posted: 20 Nov 2013 04:36 AM PST

இன்று பெங்களுரு வில் ATM இல் பணம் எடுக்க போன பெண் தாக்கப்பட்ட செய்தி கண்டு ,மனம் வருந்தியது. எவருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லையே. பணமே முக்கியம். எவ்வழியிலாவது சேர்க்க ஆசை. வீடியோ பாருங்கள். ரமணியன்

கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள்

Posted: 20 Nov 2013 04:34 AM PST

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார். கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை. மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் ...

தமிழக அரசின் ஒத்துழையாமை! - பட்டியல் போடும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி

Posted: 20 Nov 2013 04:21 AM PST

  'தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது' என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டும் நிலையில், 'தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடு தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கிக் கிடக்கிறது' என்று குற்றம்சாட்டியுள்ளார் இந்த ஆணையத்தின் சென்னை மண்டல தலைமை பொதுமேலாளர் ஐ.ஜி.ரெட்டி. அவரைச் சந்தித்துப் பேசினோம்.  ''தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் பராமரிக்கவும் ...

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Posted: 20 Nov 2013 03:41 AM PST

தமிழனின் கண்டுபிடிப்பு உலகத்தை வியப்படையவைத்துள்ளது.

Posted: 20 Nov 2013 03:01 AM PST

ஜெ.பி. என்னும் எந்திரன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™