ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மீண்டும் சந்திப்போம்
- நாடாளுமன்ற கூட்டத்தொடர்...
- 'என்.டி. ராமராவுக்கும் வேண்டும்'
- நடிகர் "திடீர்' கண்ணையா காலமானார் !
- 50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை
- அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100
- 'கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... ஓடுங்க ஓடுங்க வீட்டை விட்டே ஓடுங்க'
- ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
- 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2)
- 21000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இனியவள் ஜாஹீதாபானுவிற்கு வாழ்த்துகள்!
- உடல் இளைக்க
- சோமவார விரதம்
- நல்ல கணவன் கிடைக்க வேண்டும்... குற்றாலத்தில் கன்னிப் பெண்கள் வழிபாடு
- பக்தி பாடல்கள் - (தொடர் பதிவு)
- கூகுள் விதித்த தடை
- பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்!
- சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் !
- 18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள்
- நாடோடி மன்னன் - 1958.
- டூப் டூப் - ஒரு பக்க கதை
- தலைமுறை - ஒரு பக்க கதை
- மஞ்சள் கலர்மேல சென்டிமென்ட்...!
- 50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை !
- வெந்தயம்!
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- நடிகர் சிட்டிபாபு மரணம் ! :(
- ரசித்த திரைப்பட பாடல்கள் (தொடர் பதிவு)
- உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- மீசை - குறும்படம் - காணொளி
- காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- இந்த வார சினிமா செய்திகள்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம்
- சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்!
- நவ.19: உலகக் கழிவறை தினம்
- மதம் பிடித்த யானை எதிரில் வருகையில் ...
- தோழியே!
- ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது...!
- புண்ணியம் தரும் திருக்கார்த்திகை!
- பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு
- இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம்
- அரசியல்வாதிகள் முட்டாள்கள் - பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி
| Posted: 18 Nov 2013 02:25 PM PST பூமலரும் காடுகளின் குளிர்வான மணல் மேடுகளில் மீண்டும் நாம் சந்திப்போம் - பழைய நாட்களின் ஈரம் முழுமையையும் திருப்ப முடியாவிடினும் ஒவ்வொரு புதுத்தருணத்திலும் உயிர் உருகி நின்றதை நினைவு கொள்வோம்... - அன்றெனக்குப் பரிசாய் தந்த கடல்பாசியை நட்சத்திரக் கனவுகள் ஆழ்ந்த அந்த நேரத்தின் அமைதியை இழந்துவிடவில்லை - இளவேனிற்காலத்தின் ஏதேனும் இடைவெளியில் மீண்டும் நாம் சந்திப்போம் நிச்சயமாக... - -------------------------- >உமாஷக்தி நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 18 Nov 2013 02:18 PM PST புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 5ம் தேதி துவங்கி, 20 ஆம் தேதியன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒரு மாத காலம் நடைபெறும். ஆனால் இந்த முறை ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, கூட்டத்தொடர் டிசம்பர் 20 ஆம் தேதியன்றே முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் டிச.4ம் தேதியுடன் முடிவடைய ... |
| 'என்.டி. ராமராவுக்கும் வேண்டும்' Posted: 18 Nov 2013 02:15 PM PST தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான என்.டி. ராம ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய சினிமாவுக்கும், அரசியலுக்கும் அவர் ஆற்றியுள்ள பெரும் பங்கை அலட்சியப்படுத்திவிட முடியாது என நாயுடு கூறியுள்ளார். |
| நடிகர் "திடீர்' கண்ணையா காலமானார் ! Posted: 18 Nov 2013 01:33 PM PST நடிகர் "திடீர்' கண்ணையா (76) உடல் நலக்குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். "அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக ... |
| 50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை Posted: 18 Nov 2013 01:30 PM PST (சங்கர்) கணேசின் 50ம் ஆண்டு விழாவும் 64வது பிறந்த நாள் விழாவும் காமராஜர் அரங்கத்தில் நேற்று (நவம்பர் 17) சிறப்பாக நடந்தது. முன்னணி இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள். விழாவில் கணேஷ் பேசும்போது கூறியதாவது: 1963ல் மகராசி படத்தில் அறிமுகமாகி எல்லா மொழிகளிலும் சேர்த்து 1050 படங்களுக்கு இசை அமைத்துவிட்டேன். இப்போது கருவேலன், பப்பு கொப்பம்மா, இயக்குனர் என்ற படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். 7 படத்துல நடிச்சேன், 2 படம் டைரக்ட் பண்ணினேன். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினேன். ... |
| அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100 Posted: 18 Nov 2013 09:28 AM PST 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ... |
| 'கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... ஓடுங்க ஓடுங்க வீட்டை விட்டே ஓடுங்க' Posted: 18 Nov 2013 09:22 AM PST வீடுகளை... உண்டு, இல்லை என்றாக்கி நம் நிம்மதியைக் குலைத்து விடும் பூச்சிகள், எலிகள் போன்றவற்றை ஒழித்துக் கட்டுவதற்காக 'வீட்டு பராமரிப்பு சிறப்பிதழ்' மூலமாக நிறைய யோசனைகளைச் சொல்லிருக்கிறீர்கள். ஆனால், அவை அத்தனையுமே ரசாயனங்களைப் பயன்படுத்தி அழிக்கும் யுக்திகளாகத்தானே இருக்கின்றன... அத்தகைய ரசாயனங்களைப் பயன்படுத்துவது, மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று வேறு பயமுறுத்துகிறார்கள். ஏன்... இயற்கையான முறையில் விரட்டியடிக்க வழிகளே இல்லையா..?'' - இது, கடந்த இதழில் வெளியான 'கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு... ... |
| ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :) Posted: 18 Nov 2013 09:18 AM PST சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை தான்', இந்த பிரபலமான கூற்று உண்மையாகவே உள்ளது. அவர்களுடைய ஈகோவிலோ அல்லது பொதுவாகவோ ஆண்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். பெரும்பான்மையான ஆண்கள் சொல்வதைக் கேட்பவர்கள் அல்ல மற்றும் பிறருடைய அறிவுரைகளையும் ஏற்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கடுமையாக முயற்சி செய்து சொல்வதை கேட்க வைப்பது முடியாத விஷயம். பிரசித்தி பெற்ற பழமொழி ஒன்றில் கூட, 'உங்களால் குதிரையை ஏரிக்கு அழைத்துச் செல்ல தான் முடியும், ஆனால் தண்ணீர் குடிக்குமாறு நிர்பந்தம் செய்ய முடியாது' என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ... |
| 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) Posted: 18 Nov 2013 09:14 AM PST 'பணம்' ('சிவாஜி என்ற மாநடிகர்') (தொடர் 2) தொடர்-2 'பணம் 'வெளி வந்த நாள்: 27.12.1952 மூலக்கதை: என்.வி.பாபு திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள்: கண்ணதாசன், பாரதிதாசன். ஒளிப்பதிவு: மோஹன்ராவ் தயாரிப்பு: மதராஸ் பிக்சர்ஸ் இயக்கம்: என்.எஸ். கிருஷ்ணன் நடிக, நடிகையர் : நடிகர் திலகம், என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, தங்கவேலு, பி.ஆர்.பந்துலு, பத்மினி, டி.ஏ.மதுரம் மற்றும் பலர். கதை: ஆடியபாத ... |
| 21000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இனியவள் ஜாஹீதாபானுவிற்கு வாழ்த்துகள்! Posted: 18 Nov 2013 08:59 AM PST 21000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இனியவள் ஜாஹீதாபானுவிற்கு வாழ்த்துகள்! மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் அக்கா! |
| Posted: 18 Nov 2013 08:21 AM PST உடல் இளைக்க 1. உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா? ஆமனக்குச் செடி வேரைக் கொண்டுவந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே ஊறவைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் நல்ல பயன் தெரியும். 2. பொன்னாங்கன்னிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். நல்ல தேஜஸும், ... |
| Posted: 18 Nov 2013 08:18 AM PST சோமவார விரதம் இருக்கும் முறை - - சோமவார விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். திங்கள் தோறும் விரதமிருந்து, குளித்து ஒருவேளை உணவு தவிர்த்து, சிவன் கோவிலில் தீபம் ஏற்றி, ஏற்ற பதிகம் பாடி சிவனை தரிசித்து, சோமவார விரதம் இருக்கவேண்டும். இவ்வாறு, பதினாறு சோம வாரம் விரதங்கள் முடித்து மறுநாள் விடியலில் 16 லட்டுகள் தயாரித்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தந்து, தானும் சாப்பிடவேண்டும். பசு மாட்டிற்கு ஒரு லட்டைக் கொடுத்து, மீதி ஒரு லட்டை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டில் ... |
| நல்ல கணவன் கிடைக்க வேண்டும்... குற்றாலத்தில் கன்னிப் பெண்கள் வழிபாடு Posted: 18 Nov 2013 08:16 AM PST குற்றாலம்: குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடத்தினர். நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று கன்னிப்பெண்களும், கணவர் நல்ல சுகத்துடன் இருக்க வேண்டும் என்று திருமணமான பெண்களும் வழிபாடு நடத்தினர். பெண்களின் வழிபாடு காரணமாக குற்றாலம் மெயின் அருவியே பெண்கள் மயமாகக் காணப்பட்டது. இந்துக்களுக்கு அனைத்து தமிழ் மாதங்களிலும் எதாவது ஒரு முக்கிய விரதம்,பூஜைகள்,திருவிழாக்கள்,வருவது உண்டு. கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே வரிசையாய் சிறப்பு தினங்கள் தான். நேற்று கார்த்திகை ... |
| பக்தி பாடல்கள் - (தொடர் பதிவு) Posted: 18 Nov 2013 08:13 AM PST |
| Posted: 18 Nov 2013 08:07 AM PST என்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைப் பயன்படுத்த கூகுள் தடைவிதித்துள்ளது. கூகுள் இயக்கி வரும் குரோம் வெப் ஸ்டோரிலிருந்து இறக்கப்படும் புரோகிராம்களை மட்டுமே குரோம் பிரவுசர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தடையினை குரோம் உருவாக்கியுள்ளது. இந்த தடை பாதுகாப்பு கருதியே விதிக்கப்பட்டுள்ளதாகக் கூகுள் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் தன்னுடைய புதிய யூசர் இண்டர்பேஸ் டூல்களைத் தன்னுடைய வெப் ஸ்டோரிலிருந்து மட்டுமே இறக்கிப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை ... |
| பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்! Posted: 18 Nov 2013 08:06 AM PST புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல். அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே ... |
| சங்கராபரணம் - ஓல்ட் இஸ் கோல்ட் ! Posted: 18 Nov 2013 07:33 AM PST தெலுங்குப் படம் சங்கராபரணம் வெளியாகி 35 வருடங்களாகிறது. பொதுவாக பழைய தமிழ்ப் படங்களைதான் துசு தட்டி சினிமாஸ்கோப், டிஜிட்டல் என்று மெருகேற்றி வெளியிடுவார்கள். இந்தமுறை வித்தியாசமாக பழைய தெலுங்குப் படம் சங்காராபரணத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தமிழில் வெளியிடுகின்றனர். இந்தத் தலைமுறைக்கு சங்காராபரணத்தின் புகழ் தெரியாது. கே.விஸ்வநாத்தின் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யாமலே தமிழ்நாட்டில் வசூலை குவித்தது. தமிழ்; என்ன... பிற மாநிலங்களிலும் படம் வியந்து பாராட்டப்பட்டது. அதற்கு உறுதுணையாக ... |
| 18 நவம்பர் - கப்பலோட்டிய தமிழனின் நினைவு நாள் Posted: 18 Nov 2013 07:10 AM PST வ .உ. சிதம்பரனார் (பிறப்பு)- செப்டம்பர் 5 1872 - (இறப்பு ) நவம்பர் 18 1936 கப்பலோட்டிய தமிழன். சிறந்த தமிழ் பற்றாளர் . வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர், தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு இவர் அளித்த பங்கு அளப்பரியது . எவரும் செய்யத் துணியாத காரியத்தை இவர் செய்து முடித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாமே வணிகம் செய்ய ... |
| Posted: 18 Nov 2013 07:08 AM PST நாடோடி மன்னன் - 1958. மக்கள் திலகத்தின் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட அருமையான படம் . கண்ணதாசனின் கருத்தாழமிக்க உரையாடல்கள் - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடங்கள் - இயக்கம் . 55 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு படம் உள்ளது . நாடோடி மன்னனில் எம்ஜிஆர் சொன்னார் -1958ல் சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார் -1977ல். உலகில் யாருக்கும் கிடைத்திடாத பாக்கியம் எம்ஜிஆரின் புகழுக்கு ... |
| Posted: 18 Nov 2013 07:07 AM PST - - ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான் ''பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?'' - இல்லை, அமர், டூப்பை வச்சு பண்ணிடுங்க, என்றவாறே கேரவனுக்குள் சென்றான் பிரேம்குமார். - டைரக்டர், தன் உதவியாளரிடம் கூறினான், 'இவன் ஒரு காலத்தில் ஃபைட்டரா கூலிக்கு மாரடிச்சவன்தான், இப்ப ஒரு சின்ன பைக் ஜம்புக்கு இவனுக்கு டூப் போட வேண்டியிருக்கு' என்று அலுத்துக் கொண்டான் அமர். - கேரவனிலிருந்து வந்து டச்சப் செய்து கொண்டிருந்த பிரேம்குராரிடம் அஸிஸ்டென்ட் டைரக்டர் கணேஷ் கேட்டான். - ''சார் ... |
| Posted: 18 Nov 2013 07:05 AM PST பெரியவர் பக்தவச்லம் வீட்டு வாசலில் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து ஒரு வாரப்பத்திரிகையை படித்துக் கொண்டிருந்தார். அவரது பேரன் மகேஷ் புதிதாக வாங்கிய மோட்டார் பைக்கை பளபளவென்று துடைத்துக் கொண்டிருந்தான். - வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது. காரிலிருந்தவர் கண்ணாடியை மட்டும் இறக்கிவிட்டு பெரியவரே, இங்கே பிருந்தாவன் நகர்னு புதுசா பிளாட் போடறாங்களே, அது எங்கே ? என்று கேட்டார். - அது மாதிரி எந்த நகரும் இங்கே இல்லையே! என்றார் பக்தவச்லம். - சார், நேரா போயி லெப்ட்ல கட் பண்ணுங்க, ஒரு சவுக்குத் ... |
| மஞ்சள் கலர்மேல சென்டிமென்ட்...! Posted: 18 Nov 2013 07:03 AM PST தலைவருக்கு மஞ்சள் கலர்மேல சென்டிமென்ட் அதிகம்! - அதுக்காக, அவருக்கு மஞ்சள் காமாலை வந்ததும், தொண்டர்கள் வெடி வெடிச்சு கொண்டாடறது சரியில்ல...! - >நந்தினி - ------------------------------------------------- - பஸ் கட்டணம், மின்சார கட்டணம்னு வரிசையா ஏத்தினது தப்பாப்போச்சா...ஏன் தலைவரே...? - தொகுதி மக்களும், ஓட்டுக்கு ஐயாயிரம் விலை ஏத்திட்டாங்களே..! - >பெ.பாண்டியன் - ---------------------------------------------------- - என்னடி இது, நான் வெளியே போனதும் பக்கத்து வீட்டுக்காரனை வீட்டுற்குள் ... |
| 50 ஆண்டுகளில் 1000 படங்களுக்கு இசை: (சங்கர்) கணேஷ் சாதனை ! Posted: 18 Nov 2013 06:57 AM PST நேற்று (நவம்பர் 17) இசை அமைப்பாளர் (சங்கர்) கணேசுக்கு 64வது பிறந்த நாள். அதோடு அவர் சினிமாவிற்கு இசை அமைக்கத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த பிறந்த நாள் அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல். (சங்கர்) கணேஷ் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் ஓட்டிப் பார்க்கலாமா... பக்கா சென்னை வாசி. அப்பா சின்னசாமி ராணுவத்தில் டிரைவர். அவர் ரிட்டையர் ஆனதும் சினிமா கம்பெனிகளின் டிரைவரானார். இப்படித்தான் கணேஷ் சினிமாவுக்குள் வருகிறார். அப்போ வந்த சினிமா பாட்டுகளை அப்படியே மனப்பாடம் பண்ணி பாடிக்கொண்டே அப்பாவுடன் ஸ்டூடியோ ... |
| Posted: 18 Nov 2013 06:55 AM PST பொதுவாக, வெந்தயத்தை உளுந்துடன் ஊற வைத்து இட்லி, தோசைக்கு மாவு அரைப்போம். வெந்தயக் குழம்பு செய்வோம். வயிற்றுச் சூடு குறைய வெந்தயத்தை முதல்நாள் இரவு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவோம். அதிக மருத்துவ குணம் உடைய வெந்தயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பார்ப்போம். * சளி அகல: இரண்டு பல் பூண்டுடன் வெந்தயப் பவுடர் 1 டீஸ்பூன் கலந்து இருவேளை சாப்பிட சளி அகலும். * வெள்ளைப்படுதல்: வெநதயப் பொடியுடன் சிறிது பால் கலந்து குழைத்து சாப்பிட்டு வர குணமாகும். * வாயுத் தொல்லைக்கு: ... |
| Posted: 18 Nov 2013 06:53 AM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 18 Nov 2013 06:51 AM PST நடிகர் சிட்டிபாபு சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 49. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் சிட்டிபாபு. கடந்த திங்கட்கிழமை திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை முகப்பேரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூளையில் உண்டான கட்டி காரணமாக தொடர் சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை ராயப்பேட்டை அரசு ... |
| ரசித்த திரைப்பட பாடல்கள் (தொடர் பதிவு) Posted: 18 Nov 2013 06:50 AM PST |
| உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Posted: 18 Nov 2013 06:49 AM PST குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம் மூளை: நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது. உடனே அதிக ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம். இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும் ரிலீஸ் செய்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல். நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி ... |
| Posted: 18 Nov 2013 06:42 AM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 18 Nov 2013 06:39 AM PST |
| காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 18 Nov 2013 05:59 AM PST காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! புதிய தரிசனம் பதிப்பகம் ,10/ 11 அப்துல் ரசாக் இரண்டாவது தெரு, சைதாப்பேட்டை ,சென்னை .15. தொலை பேசி 044- 4214728. விலை ரூபாய் 200. காந்தி தேசம் ! என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டச் சொன்னவர் தந்தை பெரியார் . காந்தி தேசம் ! என்று உலக நாடுகள் நம்மை பெருமையாகப் பார்த்த காலம் இருந்தது அன்று .ஆனால் இன்று உலக நாடுகள் நம்மை சிறுமையாக என்னும் வண்ணம் ... |
| Posted: 18 Nov 2013 04:47 AM PST - ஜில்லா, வீரம் படங்கள் பொங்கலுக்கு வெளியிடுவதில் சிக்கல் - ரஜினியின், 'கோச்சடையான்' படத்தின் பாடல்கள் டிசம்பர் 12–ந் தேதி வெளியிடப்படும் என்றும் ,படம் ஜனவரி 10–ந் தேதி வெளியிடப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. - தமிழகம் முழுவதும் மொத்தம் 950 திரையரங்குகள் உள்ளன. இதில் 700 திரையரங்குகள் 'கோச்சடையானு'க்கு ஒதுக்கப்பட்டால் மீதி 250 திரை யரங்குகள்தான் உள்ளன. - எனவே பொங்கலுக்கு விஜய்யின் 'ஜில்லா', அஜீத்தின் 'வீரம்' படங்கள் ரிலிஸாகுமா என்பது கேள்விக்குகுறியாக இருக்கிறதாம்..! |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 18 Nov 2013 04:37 AM PST NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| ஸ்ரீநடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.9-ல் தொடக்கம் Posted: 18 Nov 2013 04:25 AM PST சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற டிச.9-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடை பெறுகிறது. - 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா, டிச.18-ம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த ... |
| சீரியல்களுக்குள்ளும் வந்துவிட்டது டாஸ்மாக்! Posted: 18 Nov 2013 04:05 AM PST ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கும் காட்சி இல்லாத சினிமாவே இப்போது கிடையாது என்கிற அளவுக்கு சினிமாவில் டாஸ்மாக்கின் ஆதிக்கம் இருக்கிறது. இப்போது டாஸ்மாக் சீன்கள் சின்னத்திரை சீரியல்களுக்கும் வந்து விட்டது. அதுவும் கடந்த வாரம் ஒளிபரப்பான ஒரு சீரியலில் ஹீரோ தன் நண்பர்களுடன் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு ஹீரோயின் வருகிறார். "இப்போ பொம்பளைங்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா" என்று அதில் ஒருவன் கேட்கிறான்.இனி அடிக்கடி சீரியல்களில் டாஸ்மாக் சீன் பார்க்கலாம் ... |
| Posted: 18 Nov 2013 03:59 AM PST நவ.19: உலகக் கழிவறை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது... - ![]() |
| மதம் பிடித்த யானை எதிரில் வருகையில் ... Posted: 18 Nov 2013 03:47 AM PST - மதம் பிடித்த யானை எதிரில் வருகையில் விலகிச் செல்பவன் விவேகியன்றிக் கோழையல்ல! - >சண்முகவடிவு - --------------------------------------------------- - எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை - >அம்மாளு கண்ணன் - --------------------------------------------------------- - தொலைய வேண்டும் என்றே தேடிக்கண்டு பிடித்த காடு காதல்...! - >மதன் செந்தில் - ----------------------------------------------------------- - அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால் ... |
| Posted: 18 Nov 2013 03:42 AM PST தோழியே! சுகமாய் சுவாசிக்கிறேனடி நுரையீரல் நிறைத்து நிற்கும் நுட்பமான நாம் நட்பினால்! நெஞ்சு நிறைய நேசிக்கிறேனடி பஞ்சும் தீயுமாய் நாமிருந்தும் பற்ற விடாது நமைத் தடுத்த நாகரீக நட்பதனை! புனிதப் பொருட்களாய் பூசிக்கிறேனடி அவ்வப்போது நீயளித்த அழகான அன்பளிப்புகளை! கண்மூடி யோசிக்கிறேனடி நட்பென்னும் நதியிறங்கி நாம் நீராடிய நிமிடங்களை! வரலாற்று நூலாய் வாசிக்கிறேனடி நம் நட்பு நிகழ்வுகளைத் நயம்படத் தாங்கி நிற்கும் நானெழுதிய நாட்குறிப்புகளை! நட்பின் சிறப்பு ... |
| ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது...! Posted: 18 Nov 2013 03:29 AM PST - உங்ககிட்டே திருடி வச்சிருக்கிற பொருளோட லிஸ்ட் இது... படிச்சு பார்த்துட்டு ஒரு கையெழுத்து போடுங்க...! - இது என்னய்யா...புது மாதிரியா இருக்கு? - புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர் எங்க பேச்சை நம்ப மாட்டார் சார்...! - >வி.ரேவதி ------------------------------------------------- - தலைவர் ஒரு சரியான மக்கு பிளாஸ்திரி...! - ஒரு மக்காடா பத்தாயிரம் கோடி அடிச்சுது...! >வி.சகிதா முருகன் - ---------------------------------------------------- - தரிசா இருந்த நிலத்துல எப்பிடி இவ்வளவு விளைச்சலை கொண்டு ... |
| புண்ணியம் தரும் திருக்கார்த்திகை! Posted: 18 Nov 2013 03:15 AM PST "கார்த்திகைக்கு அப்புறம் மழையில்லை கர்ணனுக்கு அப்புறம் கொடையுமில்லை' கார்த்திகை மாதம் பல சிறப்புகள் கொண்ட அற்புதமான மாதம் ஆகும். கார்த்திகை மாதத்தின் முதல் தினம் "முடவன் முழுக்கு' என்று சொல்லப்படுகிறது. முடவன் ஒருவனுக்கு கடவுள் முக்தி கொடுத்தமையால், அன்றைய தினம், நாம் புண்ணிய நதிகளில் நீராடினால், நமக்கும் முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம். * விளக்கு சமர்ப்பிக்கும் வைபவம்! சாதாரணமாக, பித்தளைக் குட்டி விளக்குகளை தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கலாம். ஆலயத்துக்கு விளக்குகள் சமர்ப்பித்தால் ... |
| பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Posted: 18 Nov 2013 03:12 AM PST புதுடில்லி: சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கும் பட்சத்தில், நாட்டுக்கு உழைத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஹாக்கி வீரர் தயான்சந்த் ஆகியோருக்கும் ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்ல என அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.வாஜ்பாய் அனைவராலும் போற்றப்படக்கூடியவர் என்றும் அவருக்கு பாரதரத்னா வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. ... |
| இனி பேஸ்புக்கில் எல்லாரையும் பார்க்கலாம் Posted: 18 Nov 2013 03:10 AM PST இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம். இந்த கட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும். இருப்பினும் பேஸ்புக் இணைய தளம் தரும் பிரைவசி கண்ட்ரோல்களைப் (privacy controls) பயன்படுத்தி, சில வரைமுறைகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, பேஸ் புக்கில் உள்ள தேடல் கட்டத்தில், பெயர்களை டைப் செய்து, அந்தப் பெயருக்குரியவர் அக்கவுண்ட் வைத்திருந்தால், அவரின் தளப் பக்கத்தினைக் ... |
| அரசியல்வாதிகள் முட்டாள்கள் - பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி Posted: 18 Nov 2013 03:01 AM PST புதுடில்லி: நாட்டின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதில் அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவதில்லை என்றும், அவர்கள் மிக குறைவாகவே நிதி தருகின்றனர், அதுவும் காலம் தாழ்ந்து ஆய்வுக்கு கிடைக்கிறது. இவ்வாறு நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் முட்டாள்கள் என பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கடும் காட்டமாக விமர்சித்துள்ளார். நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற சச்சினுக்கு கடந்த சனிக்கிழமை மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி கவுவரவித்தது. இவருடன் வேதியியல் துறை விஞ்ஞானி பேராசிரியர் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
