Tamil Star |
- அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வட மாகாணசபை கவனத்தில் எடுக்க வேண்டும்
- 2014-ம் ஆண்டு மக்களுக்கான ஒரு அரசு மீண்டும் அமையும் : அந்த அரசு இளைஞர்களின் அரசாக இருக்கும் – ராகுல் காந்தி
- சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை : பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே சிறிலங்கா செல்கிறேன் – பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன்
- மலிவு விலையில் கிடைக்கும் கோழிக்கறி
- தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்திய பின் சத்தியப்பிரமாணம்
- பிரபாகரனுக்கு நேர்ந்த கதியே ஹக்கீமுக்கும் நேரும்
- காணாமல் போன வடமாகாணசபைக் கொடி!!
- தமிழர்களை ஏமாற்றிய குர்ஷித்தின் இலங்கைப் பயணம்
- 6 நிமிடத்தில் 180 கோடிக்கு ஏலம் போன “வெள்ளை வைரம்”
- புத்தம் புது பொலிவுடன் உலகின் மிகப் பழமையான சினிமா தியேட்டர்
| அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக வட மாகாணசபை கவனத்தில் எடுக்க வேண்டும் Posted: 09 Oct 2013 08:42 PM PDT
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து கடந்த 5ம் திகதி சனிக்கிழமை முதல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாத யாத்திரையினை ஆரம்பித்திருந்தார். யாழ். நகருக்குள் நேற்று பிரவேசித்த தம்பிராசா, தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மஹிந்தவுக்கு வழங்குவதற்காக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்தின் ஊடாக கையளித்திருந்தார்.அத்துடன் இந்திய பிரதமர் மற்றும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளிற்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பினில் போட்டியிட்டிருந்த தம்பிராசா தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 09 Oct 2013 07:23 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 09 Oct 2013 07:05 PM PDT
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், "கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று மனிதஉரிமை அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும், நான் அந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன். ஏனென்றால், அப்போது தான், அந்தப் பிரச்சினைகளை எழுப்ப முடியும். கொமன்வெல்த் மாநாட்டில், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த கவலைகளை நிச்சயம் எழுப்புவேன். பிரித்தானியப் பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது சரியானதே என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாம் கொமன்வெல்த் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். சிக்கலான பிரச்சினைகளை எழுப்புவதற்கு பிரித்தானியா ஒரு போதும் பின்வாங்காது. சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்த எமது நிலை தெளிவானது. அதிலிருந்து பின்வாங்க முடியாது. ஏனென்றால் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை." என்றும் அவர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலிவு விலையில் கிடைக்கும் கோழிக்கறி Posted: 09 Oct 2013 06:34 AM PDT புரட்டாசி எதிரொலியாகவும், கேரளாவில் பிளாட் ரேட் அடிப்படையில் கோழிக்கு வரி விதிக்கப்படுவதாலும் கோழிக்கறி விற்பனை கடும் பாதிப்படைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம், சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர், உடுமலை, மடத்துக்குளம், நெகமம், அவிநாசி, பெருமாநல்லூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பண்ணைகள் உள்ளன. கோழிக்கறிக்கு பல்லடம் பிராய்லர் கோ ஆர்டினேஷன் கமிட்டி (பிசிசிசி) மூலம் பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்திய பின் சத்தியப்பிரமாணம் Posted: 09 Oct 2013 06:31 AM PDT தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். வடமாகாண சபை அமைச்சர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறுமென அவர் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமைச்சர்கள் தெரிவு இதுவரையில் வெளியிடப்படாதது தொடர்பாக கேட்டபோது, அமைச்சர்கள் தெரிவு இன்று வியாழக்கிழமை நிறைவு பெறாவிட்டால், […] |
| பிரபாகரனுக்கு நேர்ந்த கதியே ஹக்கீமுக்கும் நேரும் Posted: 09 Oct 2013 06:29 AM PDT ரணில் மற்றும் பிரபாகரனுக்கு ஏற்பட்ட தலைவிதியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஏற்படும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வீரவன்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட அதிகளவான அதிகாரங்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் நீதியமைச்சர் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாக […] |
| காணாமல் போன வடமாகாணசபைக் கொடி!! Posted: 09 Oct 2013 06:27 AM PDT வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றியுள்ளனர். யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை யாழ். ரில்கோ விடுதியில் நேற்று மாலை சந்தித்தார். இதன் போது இவர்களின் சந்திப்பு இடம்பெறவிருந்த அறையில் வடக்கு மாகாண சபையின் கொடியும் இந்தியத் தேசியக் கொடியும் விடுதி பணியாளர்களினால் ஏற்பாடு […] |
| தமிழர்களை ஏமாற்றிய குர்ஷித்தின் இலங்கைப் பயணம் Posted: 09 Oct 2013 06:21 AM PDT இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் கடுமையான போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, போரை முடிவுக்கு கொண்டு வந்து, ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 6 நிமிடத்தில் 180 கோடிக்கு ஏலம் போன “வெள்ளை வைரம்” Posted: 09 Oct 2013 06:10 AM PDT ஹாங்காக்கில் அரிய வகை வெள்ளை வைரம் ஒன்று ஆறே நிமிடத்தில் சுமார் 180 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. பிரபல ஏல நிறுவனமான சோத்பை இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம் விடப் போவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தொலைபேசி மூலம் ஏலத்தில் பங்கெடுத்த ஆப்பிரிக்காவை சேர்ந்த இருவர் இந்த வைரத்தை தனதாக்கிக்கொள்ள போட்டியிட்டார்கள். முடிவில் வெறும் ஆறே நிமிடத்தில் ஏலத்தொகை 19 ஆயிரம் பவுண்ட் என முடிவு செய்யப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் அது சுமார் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| புத்தம் புது பொலிவுடன் உலகின் மிகப் பழமையான சினிமா தியேட்டர் Posted: 09 Oct 2013 06:04 AM PDT உலகிலேயே மிகப் பழமையான சினிமா தியேட்டர் மீண்டும் திறக்கப்படுகிறது. பிரான்சின் துறைமுக நகரமான மார்செய்லின் அருகே லா சியோடட் என்ற ஊரில் உலகின் மிகப் பழமையான ஈடன் தியேட்டர் உள்ளது. இங்கு கடந்த 1899ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி திரையுலகின் முன்னோடி எனக் கருதப்படும் லூமிரே சகோதரர்களான ஆகஸ்ட் மற்றும் லூயி தங்களின் திரைப்படத்தை வெளியிட்டார்கள். இதனை அப்போது 250 ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தார்கள். அதன்பின்னர் இங்கு பிரபல நடிகர்களின் திரை நாடகங்களும், […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



