Tamil Star |
- காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம் கவலை தருகிறது. -வைகோ
- அதிகாரம் கோத்தாவின் கைகளில், பொறுப்பு மட்டும் முதலமைச்சரிடமா? : கோத்தா நகைப்பிற்குரியவர் – சுரேஸ்பிறேமச்சந்திரன்
- பீகார் மாநிலத்தில் பதுங்கியிருந்த9 மாவோயிஸ்டுகள் கைது
- இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டும் – ஐக்கிய நாடுகள் அமைப்பு
- இராணுவம் காணிகளை பகிரும் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பான செயல் -முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன்
- ஆஸ்திரேலியாவில் தீயை அணைக்கும் பணியில் விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது
- போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் – கோத்தபாய ராஜபக்ச
- வட மாகாணசபையில் முதல் அமர்வு இன்று
- தொலைபேசியில் உரையாடிய பெண் எரித்துக்கொலை : ஏமன் நாட்டில் தொடரும் கெளரவ கொலைகள்
- காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
| காமன்வெல்த் மாநாடு குறித்த சட்டசபைத் தீர்மானம் கவலை தருகிறது. -வைகோ Posted: 24 Oct 2013 09:12 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 24 Oct 2013 09:05 PM PDT
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச்செயலாளர் கோத்தா தனது கைகளினில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவி;த்துள்ளார்.வடக்கினில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு என பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீகார் மாநிலத்தில் பதுங்கியிருந்த9 மாவோயிஸ்டுகள் கைது Posted: 24 Oct 2013 08:59 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டும் – ஐக்கிய நாடுகள் அமைப்பு Posted: 24 Oct 2013 08:41 PM PDT
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் போன்ற முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச பிரகடனங்களிலில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதகாவும் இதன் அடிப்படையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சுபினாய் நென்டி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இராணுவம் காணிகளை பகிரும் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பான செயல் -முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் Posted: 24 Oct 2013 08:32 PM PDT
நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு இராணுவம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது. இதனை மறைப்பதற்காக தமிழர்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர். இந்தநிலையில் காணிப்பகிர்வில் இராணுவத்தினர் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பான செயல் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் அதனை தீர்க்கமுடியாது என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணசபையின் முதலாவது செயலமர்வின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆஸ்திரேலியாவில் தீயை அணைக்கும் பணியில் விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கியது Posted: 24 Oct 2013 08:24 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் – கோத்தபாய ராஜபக்ச Posted: 24 Oct 2013 08:16 PM PDT
பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் ஒத்துழைப்பதற்கு எதுவும் கிடையாது. ஏனெனில் அது சரியானதல்ல. நாங்கள் செய்த எவ்வளவு விடயங்களைப் பார்த்த பின்னரும் ஏன் இலங்கையரை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? நாங்கள் என்ன தரக்குறைவானவர்களா? .நீங்கள் ஏன் அமெரிக்கா மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ளவில்லை. ஆப்கான் அதிபர் சொல்லியிருக்கிறார் அங்கு நடந்த மொத்தமான போரில் கொல்லப்படவர்களை விட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களே அதிகம் என்று. அப்படியிருக்கையில் நீங்கள் ஏன் அமெரிக்காவைக் கேட்கவில்லை. அவர்கள் பலமிக்கவர்கள் என்பதாலா? பயங்கரவாதத்தை எவ்வாறு ஒடுக்குவது என்பதை நாம் உலகுக்கு காட்டியிருக்கிறோம். போருக்குப் பின்னரான நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து நாம் காட்டியிருக்கின்றோம். அவற்றை எவரும் அங்கீகரிப்பது கிடையாது. ஆனால் ஆதாரமில்லாத பல குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். காணாமல்போனோர் குறித்து நான் பல விசாரணைகளை நடத்தியிருக்கின்றேன். ஆனால் எவரும் முன்வரவில்லை. தமது ஆட்களை இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கான சாத்தியங்கள் போரின் போது இருந்திருக்கவில்லை. இந்தப் போரின் கடைசி இரண்டு வருடங்களில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் இறந்திருக்கிறார்கள். இது ஒரு கடுமையான போர். இதில் இரண்டு தரப்பினரிலும் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். நானே எனது பல அதிகாரிகளை இழந்திருக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் சடலங்களை மீட்க முடியாமல் போய்விடும். அதனால்தான் பலர் காணாமல் போனதாக பலரும் கூறுகின்றனர். இலங்கை நிலைமை புரியாததால் தான் இப்படி நடக்கிறது. தமது பிள்ளை மோதலில் இறந்து விட்டது என்பதை பெற்றோர் நம்ப மறுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் காணாமல் போய்விட்டதாக நினைக்கின்றார்கள். எங்கள் தரப்பிலும் இந்த நிலைமை இருக்கின்றது. நான் செய்தது நாட்டுக்கான எனது கடமையைத் தான். சமூகத்திற்கான எனது கடமையே. அமெரிக்காவிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் நாட்டுக்கு வெளியே சென்று தான் சண்டை போட்டார்கள். நான் எனது நாட்டிலே தான் போராடினேன். 30 வருட கால மனித குழுக்களை நான் தடுத்து நிறுத்தினேன். இன்று மக்கள் இறப்பதில்லை. சிறார் போராளிகள் பாடசாலைக்கு செல்கிறார்கள். பல பொருளாதார இலக்குகள் புலிகளால் தாக்கப்பட்டன. இவையெல்லாம் இன்று நடப்பதில்லையே. நாட்டில் ஜனநாயகத்தை திரும்பச் செய்திருக்கின்றோம். மக்களை விரைவாக மீளக் குடியமர்த்தியிருக்கின்றோம். முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கி விடுவித்திருக்கின்றோம். எந்தவொரு நாடும் இந்தளவுக்குச் செயற்பட்டதில்லை. என்றார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வட மாகாணசபையில் முதல் அமர்வு இன்று Posted: 24 Oct 2013 07:51 PM PDT
கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வட க்கு மாகாணசபையின் புதிய கட்டடத்தில், இந்த அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக, வடக்கு மாகாணசபைக் கட்டடம் திறந்து வைக்கப்படும். அதையடுத்து, புதிய உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்பட்டு, அது தொடர்பான அதிகாரபூர்வ பணிகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து, வடக்கு மாகாணசபையை ஆரம்பித்து வைத்து, ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உரையாற்றவுள்ளார். இதன் பின்னர், வடக்கு மாகாணசபையின் சபை முதல்வர், பிரதி முதல்வர் தெரிவுகள் இடம்பெறும். 38 உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு மாகாணசபையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட அமைச்சரவை ஏற்கனவே தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளது. வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈபிடிபியை சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் செயற்படவுள்ளார். வடக்கு மாகாணசபையில் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 7 பேரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளனர். வடக்கு மாகாணசபையில், அனந்தி சசிதரன் மற்றும் மேரி கமலா குணசீலன் ஆகிய இரண்டு பெண் உறுப்பினர்கள் மட்டும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவானவர்கள். வடக்கு மாகாணசபையில் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தெரிவான இருவரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு சிங்களப் பிரதிநிதிகளும் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொலைபேசியில் உரையாடிய பெண் எரித்துக்கொலை : ஏமன் நாட்டில் தொடரும் கெளரவ கொலைகள் Posted: 24 Oct 2013 07:44 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் Posted: 24 Oct 2013 07:32 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















