Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தொடர்ந்தும் வட மாகாணத்தில் கூடுதலான இராணுவ பிரசன்னம்

Posted: 23 Oct 2013 09:58 PM PDT

cmev_CI

cmev_CIவட மாகாணத்தில் கூடுதலான இராணுவ பிரசன்னம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொடர்ந்தும் இடையூறாக அமைந்துள்ளது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவப் பிரசன்னம் மக்களின் சிவில், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்ற காலத்தில் படைத்தரப்பினர் அடக்குமுறைகளிலும் அச்சுறுத்தல் விடுத்தல்களிலும் ஈடுபட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது.

படையினர் ஆளும் கட்சியினர் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சியினரை அடக்குமுறைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. வடக்கு இராணுவமயப்படுத்தல்கள் தேர்தலின் நேர்மைத்தன்மைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணும் நடவடிக்கைகளின் போது கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படாமை பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலிய நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வரும் காட்டுத்தீ

Posted: 23 Oct 2013 09:54 PM PDT

AUSTRALIA BUSHFIRES

AUSTRALIA BUSHFIRESஆஸ்திரேலிய நாட்டில், நியூ சவுத்வேல்ஸ் மாகாணம், அடர்ந்த காடுகள் கொண்டதாகும். அங்குள்ள காடுகளில் கடந்த வாரபரவி வரு திடீரென பற்றியது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த மாகாணம் முழுவதும் 71 இடங்களில் தீ எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 71 இடங்களில் தீப்பற்றி எரிந்துவருவதில், 29 இடங்களில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. பிற மாகாணங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. 95 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருப்பதால் இந்தப் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தக் காட்டுத்தீ விபத்தில் ஒரு வாரத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகி விட்டன. பயங்கரக் காற்று வீசி வருவதால் இந்தத் தீ சிட்னி புறநகர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. இந்தத் தீ விபத்தினால் மேலும் பெருமளவில் பொருட்சேதம் ஏற்படக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிட்னி புறநகர் ஒன்றில் தனது வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். காட்டுத்தீ குறித்து ஆஸ்திரேலிய நெருக்கடி நிலைத்துறை மந்திரி மைக்கேல் கல்லாச்சர் கூறுகையில், " மக்கள் அனைவரும் காரில் ஏறி சிட்னி மாநகருக்குள் போய் விடுங்கள். தீயணைப்புத்துறையினர் தங்கள் பணியை திறம்படச் செய்து, முடிந்த அளவுக்கு சமூகத்தை காக்கட்டும்" என்றார்.நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதின் காரணமாக சிட்னிவாசிகள் விடுமுறையை கொண்டாடச் செல்லுகிற புளூ மவுண்டன் பகுதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புளூ மவுண்டன் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிலைமை மேலும் மோசமாகும் முன்பு, புளூ மவுண்டன் பகுதியில் வசித்து வருகிற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும் சிட்னி தகவல்கள் கூறுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழில் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் – திருமாவளவன்

Posted: 23 Oct 2013 09:49 PM PDT

thiruma

thirumaவிடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்கவேண்டும் என நீண்டகாலமாகத் தமிழக அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்காக வழக்கறிஞர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வழக்காடு மொழியாகத் தமிழ் சிறப்பாகப் பயன்பட வேண்டுமென்றால் தமிழில் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். இதுநாள் வரை தமிழகத்தில் இயற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே தான் இயற்றப்பட்டு வருகின்றன. இனிமேலாவது அந்த நிலை மாற்றப்படவேண்டும். தமிழில் சட்டங்களை உருவாக்கினால் அது மக்களுக்கும் எளிதாகப் புரியும், வழக்கறிஞர்களும் நன்றாக வாதிட முடியும். தமிழைப் பயன்பாட்டு மொழியாக வளர்த்தெடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். எனவே தமிழக அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். த ற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதற்கான அறிவிப்பை இந்தக் கூட்டத் தொடரிலேயே வெளியிடுமாறு தமிழக முதல்-அமைச்சரை வேண்டுகிறேன். இந்தக் கோரிக்கையின் தேவையை உணர்ந்து தமிழகத்திலிருக்கும் பிற அரசியல் கட்சிகளும் இதை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் பதிலின்றித்தொடரும் தொடரும் மனித உரிமை குற்றச்சாட்டுக்கள்

Posted: 23 Oct 2013 09:43 PM PDT

A Sri Lankan soldier stands guard during the resettlement of refugees to their homes in Mannar

A Sri Lankan soldier stands guard during the resettlement of refugees to their homes in Mannarஇலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்ந்தும் பதிலளிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிபிசியின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தாம் சந்தித்த பொதுமக்கள் இலங்கை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். மனித உரிமை அமைப்புகளும் அரசாங்கத்தின் மீது இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அரசாங்கம் அதனை மறுத்துவருகிறது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இந்த விடயத்தில் உள்நாட்டு விசாரணைகள் போதுமானவை என்று கூறுகிறது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதக்காலப் பகுதியே உள்ளது. இந்தநிலையிஅரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்து வருவதாகவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடிவேலுவின் திக்கித் திணறுது தேவதை….. அசத்தலான காணொளி….

Posted: 23 Oct 2013 07:53 AM PDT

வடிவேலுவின் திக்கித் திணறுது தேவதை….. அசத்தலான காணொளி….

This posting includes an audio/video/photo media file: Download Now

சல்மான் கானை மிரள வைத்த பெரியவர் – நீங்களும் ஆச்சர்யப்படுவீங்க…..

Posted: 23 Oct 2013 07:51 AM PDT

சல்மான் கானை மிரள வைத்த பெரியவர் – நீங்களும் ஆச்சர்யப்படுவீங்க…..

This posting includes an audio/video/photo media file: Download Now

எதிலும் கொஞ்சம் வித்தியாசம் வேணும்லா…… அதை தான் இவங்க பண்றாங்க….

Posted: 23 Oct 2013 07:50 AM PDT

எதிலும் கொஞ்சம் வித்தியாசம் வேணும்லா…… அதை தான் இவங்க பண்றாங்க….

This posting includes an audio/video/photo media file: Download Now

தொலைந்து போன குடும்பத்தை கூகுள் மேப்பின் மூலம் கண்டுபிடித்த மனிதர்…..

Posted: 23 Oct 2013 07:49 AM PDT

தொலைந்து போன குடும்பத்தை கூகுள் மேப்பின் மூலம் கண்டுபிடித்த மனிதர்…..

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த ஹோட்டல பாருங்க…. மிஸ் பண்ணவே மனசு இருக்காது…..

Posted: 23 Oct 2013 07:48 AM PDT

இந்த ஹோட்டல பாருங்க…. மிஸ் பண்ணவே மனசு இருக்காது…..

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடிய தலைநகர் ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் : கனடிய தமிழ் மக்கள் பெருமெடுப்பி தயார்

Posted: 23 Oct 2013 07:04 AM PDT

harper

harperகனடிய அரசிற்கும் குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் அதன் தலைமைகள் கனடிய ஊடகங்கள் தமது சக கனடிய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் வரும் திங்கட்கிழமை ஒக்டோபர்; 28ஆம் நாள் நடைபெறவுள்ள மாபெரும் ஒன்றுகூடலுக்கு கனடிய தமிழ் மக்கள் பெருமெடுப்பில் தயாராகி வருகின்றார்கள் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கனடா அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி நிற்கும் சுயாதீன சர்வதேச விசாரணையை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தியும் நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும் கனடியத் தமிழர் அமைப்புக்களின் ஒத்தாசையுடன் கனடியத்தமிழர் சமூகம் நடாத்தும் மாபெரும் கனடியத் தமிழர் ஒன்று கூடல் திங்கட்;கிழமை ஒக்டோபர்; 28ஆம் நாள் காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதில் பெருமளவில் கலந்து கொள்வதங்காக ரொரன்ரொ பெரும்பாகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து தமிழர்கள் பணி விடுப்பெடுத்து ஒட்டாவா நோக்கியப் பயணிக்க தயாராகி வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார். இவர்களுடன் மொன்றியல் கொன்வால் தலைநகர் ஒட்டாவா வாழ் தமிழர்களும் தயாராவதாக மேலும் அறியப்படுகின்றது.

இது குறித்த விபரம் அடங்கிய சுவரொட்டிகள் அனைத்து தமிழ் வர்த்தக நிலையங்களிலும் காணப்படுவதாகவும் பல வர்த்தக நிலையங்கள் தாமாகவே முன்வந்து பேருந்திற்கான பதிவுகளை செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பல தமிழ் ஊடகங்களும் இவ்விடயத்தை முதன்மைப்படுத்தி செய்திகளையும் தவகல்களையும் வழங்கி வருவதாகவும் மேலும் அறியப்படுகின்றது.

அதேவேளை வரவேற்பு மடல்கள் அரசியல் மட்டத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலர் ஏற்கனவே கலந்து உரையாற்றச் சம்மதித்திருப்பதாகவும் அரசியல் மட்ட விவகாரங்களை கவனித்து வரும் செயற்பாட்டுக்குழுவினர் செய்தியாளரிடம் மேலும் தெரிவித்தனர்.

ரொரன்ரோ பெரும் பாகத்தின் பல பகுதிகளிலும் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் பதிவுகளை உடன் மேற்கொள்ளுமாறு அதன் ஒருங்கமைப்பு குழு தெரிவித்துள்ளது. வரும் வெள்ளிக்குள் பதிவுகளை மேற்கொண்டால் பேருந்துகளை ஒழுங்கமைத்து ஏற்றுமிடங்களை தெரிவு செய்து சாப்பாடொழுங்குகளையும் நேர்த்தியா மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும் அதலால் கடைசிவரை பொறுத்திருக்காது பதிவுகளை உடன் மேற்கொள்ளுமாறும் அவர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேவேளை ஒட்டாவாவில் பல்வேறு இராஐதந்திர செயற்பாடுகளை அன்று முன்னெடுக்கும் பல்வேறு பணிகளை பல தமிழர் அமைப்புக்கள் பகிர்ந்து முன்னெடுத்து வருவதாக செயற்பாட்டாளர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர்.

இந்நிகழ்வில் பெருமளவில் கலந்து கொள்வதினூடாக இதுவரை எட்டப்பட்ட அரசியல் வலுநிலையை கனடியத் தமிழர்கள் மேலும் வலுப்படுத்தவேண்டும் என்றும் இச்செயற்பாடுகளை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகளும் தங்கள் நாடுகளில் அரசியல் ரீதியாக வலுவுடன் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அறைகூவல் வடுக்கப்பட்டுள்ளது.

ஓற்றுமைப்பட்ட இனமாக ஒரணியில் அணிதிரள்வோம் என கனடிய தமிழர் சமூகம் கனடியத் தமிழர்களுக்கு நேசமுடன் அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புகளுக்கும் பேருந்து பதிவுகளுக்கும் 416-930-5937 அல்லது 647-203-6261 அல்லது 416-903-6058 என்ற தொலைபேசி இலக்கங்களில் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™