Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரஷ்யாவில் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி

Posted: 21 Oct 2013 08:27 PM PDT

article-2470371-18E341F200000578-708_634x339

article-2470371-18E341F200000578-708_634x339தெற்கு ரஷ்யாவின் காகாசஸ் மாகாணத்தின் வழியே சென்ற பயணிகள் பஸ் மீது தற்கொலைப் படை பெண் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகினர். ஒரு நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றபோது பஸ்சினுள் ஒரு பெண் ஏறினாள். அடுத்த சில நிமிடங்களில் மரங்கள் அடர்ந்த சாலையில் பஸ் சென்றபோது அவளது உடல் வெடித்து சிதறியதும், பயணிகள் பலர் தூக்கி வீசப்பட்டதையும் டிரைவர் சீட் அருகேயுள்ள சி.சி.டி.வி. கேமரா படம் பிடித்துள்ளது. இந்த தாக்குதலில் 32 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியது நய்டா அசியலோவா(30) என்றும், டகேஸ்தான் பகுதியை சேர்ந்தவள் என்றும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் காகாசஸ் மாகாணத்திற்கு அருகே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்த தற்கொலைப் படை தாக்குதல் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. முஸ்லிம்களுக்கென்று தனிநாடு வேண்டும் என்று போராடி வரும் குழுவினர் 2002-ம் ஆண்டு திரையரங்கம் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், 2010ம் ஆண்டு மாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 35 பேரும் பலியானது நினைவிருக்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் : கென்யா ,ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை

Posted: 21 Oct 2013 07:54 PM PDT

commen

commenஇலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று கென்யா ஆபிரிக்க நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர தரப்புக்களை சுட்டிக்காட்டி கென்யாவின் தெ ஸ்டார் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ஏற்கனவே உகண்டா ,தான்சானியா, றுவண்டா, நைஜீரியா, தென்னாபிரிக்கா மற்றும் ஸம்பியா ஆகிய நாடுகள் இலங்கை மாநாட்டில் பங்கேற்பது  என்று முடிவெடுத்துள்ளன. கென்யாவின் ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுககு எதிர்ப்பு வெளியிடும் முகமாகவே இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறும் காலத்திலேயே கென்ய ஜனாதிபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கென்யா தமது ஜனாதிபதிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்ட போதும் அதனை தடுக்கமுடியவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் சானியா மிர்சா ஒன்பதாவது இடத்திற்கு முன்னேற்றம்

Posted: 21 Oct 2013 07:35 PM PDT

SaniaMirza3

SaniaMirza3பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று  முன்னேறியுள்ளார். சானியா இந்த வாரம் எந்தப் போட்டியிலும் விளையாடாதபோதிலும் மற்ற வீராங்கனைகள் தங்களின் புள்ளிகளை இழந்ததால் சானியாவின் நிலை உயர்ந்துள்ளது. சானியா இந்த மாத துவக்கத்தில் சீனா ஓபன் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் போட்டியிலும் இரட்டையர் போட்டியில் வென்றார். அவருடன் இணைந்து விளையாடிய ஜிம்பாப்வே நாட்டவரான காரா பிளாக்கும் 13 ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். இத்தாலி நாட்டவர்களான சாரா எர்ரானி, ரோபர்டா வின்சி தொடர்ந்து முதல் நிலையைத் தக்க வைத்துள்ளனர். ஸ்லோவேனியா வீராங்கனையான காத்தரீனா ஸ்ரபோட்டனிக் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தைவானின் சியு வெய் செய் இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்

Posted: 21 Oct 2013 06:53 AM PDT

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும். நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டில் பெண்களின் பொறுப்புகள்

Posted: 21 Oct 2013 06:42 AM PDT

வேலைக்குச் செல்கிற பெரும்பாலான பெண்களை, அவர்களது கணவர்களும், கணவர் வீட்டாரும் விரோதியாகவே பார்ப்பது சகஜம். 'வேலைக்குப் போற திமிரு', 'சம்பாதிக்கிற கொழுப்பு' என்கிற விமர்சனங்கள் சர்வசாதாரணமாக வரும். அவற்றைப் பெரிது படுத்த வேண்டாம். கணவர், அவரது பெற்றோர், கணவரது உடன்பிறப்புகள் என உங்களுக்கு நெருங்கிய வட்டத்துடன் நல்ல நட்பை வளர்த்துக் கொள்வதுதான் முதல் தீர்வு. வேலைக்குச் செல்கிற எல்லா பெண்களுக்கும், குழந்தைகளை யார் பொறுப்பில் விடுவது என்கிற கவலை பெரிதாக இருக்கும். பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கணவன் – மனைவி உறவுக்குள் கேப் விழுந்திருச்சா?

Posted: 21 Oct 2013 06:34 AM PDT

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவுநெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒருகட்டத்திற்குப் பின்காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று சிலவற்றை பார்க்கலாம். • தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல்பற்றியதாகவும் இருக்கலாம். பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மனஅழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தைபாதிக்காத அளவு […]

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Posted: 21 Oct 2013 06:30 AM PDT

கொழுப்பை குறைக்கும் : உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பினி அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும். தசைகளுக்கு வலிமை : உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலைநிறுத்த உதவும். மனநிலையை ஊக்குவிக்கும் : உணவு முறையை நம்புவதற்கு, பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலைக் […]

மனித மூளையை போன்று செயல்படும் கணனி! IBM நிறுவனம் சாதனை (வீடியோ இணைப்பு)

Posted: 21 Oct 2013 06:21 AM PDT

மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, மனிதன் இயங்குவதற்கு இன்றியமையாத ஒன்று. இதனை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது. அதாவது, மனித மூளையை போன்று கணனி ஒருவகை திரவத்தால் சக்தியை பெறுவதுடன் அதே திரவத்தால் தன்னை வெப்பம் நீக்கி குளுமைப்படுத்தியும் கொள்ளும். மூளையில் உள்ள குருதிச் சுற்றோட்டத்தொகுதி போன்ற ஒன்று, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியது சோனி

Posted: 21 Oct 2013 06:18 AM PDT

ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் சோனி நிறுவனமும் களமிறங்கியுள்ளமை அறிந்த விடயமே. இந்நிலையில் தனது Sony SmartWatch 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினையும் தற்போது ஜப்பானில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. 150 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரங்கள் 1.6 அங்குல அளவு, 220 x 176 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றில் பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கான அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்றைய இளம் தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்பு டிப்ஸ்கள்

Posted: 21 Oct 2013 06:12 AM PDT

இன்றைய காலச்சூழலில் திருமணத்திற்கு பின்பு ஓர் ஆண்டு காலம் வரை தம்பதிகளுக்கு நடுவில் அன்னியோநியமும், காதலும் அளவுக்கு அதிகமாக இருக்கும், அவர்கள் வசிக்கும் வீடே அன்பால் காதலால் நிறைந்திருக்கும். ஆனால் உங்கள் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது என்றால் வீட்டின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷம் மேன்மேலும் அதிகரித்து ஆனந்தம் பெருகும். குழந்தைகள் துருதுருவென செய்யும் சேட்டைகளால் தான் நம் வீட்டிற்கே வெளிச்சம் உண்டாகிறது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், மன நிறைவையும் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™