Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை: 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

Posted: 19 Oct 2013 11:23 PM PDT

தென்மேற்கு பருவ மழை காலம், வடகிழக்கு பருவ மழைகாலம் என இரு பருவ காலங்களில் மழை பெய்யும். ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் நீடிக்கும். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்குப் பகுதியில் உள்ளதால் மழை மறைவு பகுதியாக உள்ளது. என்றாலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு […]

நன்றாக தூங்கினால் மூளை சுத்தமாகும் விஞ்ஞானிகள் தகவல்

Posted: 19 Oct 2013 10:57 PM PDT

எப்போதும் தூங்கி கொண்டிருப்பவரை தூங்கு மூஞ்சி, சோம்பேறி என இழிவாக பேசுகிறோம். ஆனால், அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்கார்டு தலைமையிலான குழுவினர் 'மனிதர்கள் தூங்குவது ஏன்?' என ஆய்வு மேற்கொண்டனர். அதில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது தெரிய வந்தது. தூங்கும் போது பெருமூளையின் தண்டு வட திரவம் மூளையை சுற்றி பீச்சி […]

டைட்டானிக் வயலின் 185 மில்லியனுக்கு ஏலம்

Posted: 19 Oct 2013 10:37 PM PDT

டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதில் பணியாற்றிய இசைக்குழுவின் தலைவரால் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் வயலின் 185 மில்லியன் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வயலின் தென்மேற்கு இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டது. 1912ஆம் ஆண்டும் அந்தக் கப்பல் மூழ்கிய போது அந்த வயலின் இசைக்கலைஞரான வலஸ் ஹார்ட்லி தனது வயலினை தனது உடலோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு, ´´இறைவா உன்னருகில் நான் இருந்தால்´´ என்ற பாடலை இசைத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. ஹார்ட்லியின் உடல் கடல் நீரில் மிதந்து கொண்டிருந்தபோது, […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சீன அதிகாரிகள் மீது கந்தக அமில தாக்குதல்

Posted: 19 Oct 2013 10:29 PM PDT

சீனாவில் விற்பனைப் பொருட்களை சேமித்து வைப்பதற்காக சட்டவிரோதமாக கட்டப்பட்ட கிடங்கினை அழிக்க முயன்ற அதிகாரிகள் 19 பேர் அமிலம் வீசி தாக்கப்பட்டனர். ஃபுஜியான் மாகாணத்தில் ஷாவோ என்பவருக்கு சொந்தமான பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அதனை அழிக்கும் முயற்சியில் நகர்ப்புற மேலாண்மை அதிகாரிகள் 19 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஷாவோ திடீரென்று அவர்கள் மீது கந்தக அமிலத்தை வீசினார். இத்தாக்குதலில் அதிகாரிகள் 19 பேரும் படுகாயமடைந்தனர். […]

அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ: காரணம் என்ன?

Posted: 19 Oct 2013 10:18 PM PDT

அவுஸ்திரேலியாவின் நியூ சௌவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு இராணுவப் பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக அமைந்ததாக என்பது குறித்து அந்த நாட்டு இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிராந்தியத்திலுள்ள நீல மலைத்தொடருக்கு அருகிலுள்ள இராணுவ தளத்தில் இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தற்போது தொடர்ந்தும் பரவி வருவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. பல நாட்களாக பரவி வரும் இந்த தீ காரணமாக 200க்கும் […]

மெக்ஸிக்கோவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted: 19 Oct 2013 10:11 PM PDT

மெக்ஸிக்கோவில் பஜா கலிபோர்னியா மாநிலத்தில் லொட்ரேட்டோ நகரின் கிழக்குபகுதியில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கலிபோர்னியா வளைகுடா கடல் பகுதியில் 14. கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியிருந்தது என்று அந்நாட்டின்நில அதிர்வு ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருள்சேதமோ ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

இந்தியத் தயாரிப்புகளுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு

Posted: 19 Oct 2013 10:07 PM PDT

சீனாவை விட இந்தியப் பொருள்களின் தரத்துக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று மத்திய வர்த்தக தொழில்துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு சிறுதொழில் சோப் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டு அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சிப்பன் பேசியது: மகாராஷ்டிரம், உத்தரபிரதேசத்திலும் சிறிய தொழிலாக தொடங்கி பெரிய தொழிற்சாலைகளாக உருவான நிறுவனங்களும் உள்ளன. கெமிக்கல் சார்ந்த சோப்புகள் மட்டும் இல்லாமல் இயற்கை […]

72 மணி நேரத்தில் 20 குழந்தைகள் பலி: அதிர்ச்சித் தகவல்

Posted: 19 Oct 2013 09:59 PM PDT

மேற்கு வங்க மாநில மால்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் பச்சிளம் குழந்தைகள் அதிக அளவில் இறப்பதாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மே மாதம் 16 குழந்தைகள் இங்கு இறந்துள்ளன. சத்து குறைபாடு மற்றும் எடை குறைவு காரணமாக குழந்தைகள் இறந்ததாக டாக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், மால்டா மருத்துவமனையில் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 20 குழந்தைகள் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 10 குழந்தைகள் கடந்த 24 மணி […]

எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 19 Oct 2013 09:56 PM PDT

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் முயற்சி நேற்று சனிக்கிழமை முறியடிக்கப்பட்டது. அதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டம் குலியன்-சுசேத்பூர் வழியாக சனிக்கிழமை அதிகாலையில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். இதைக்கண்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது பாகிஸ்தான் படையினரும், ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் வகையில் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதற்கிடையே, இந்திய எல்லையில் […]

2015 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானம்

Posted: 19 Oct 2013 09:41 PM PDT

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பல தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாங்களிலிருந்து தெரியவருகின்றது. 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் மூன்று தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்களை எந்தெந்த காலங்களில் நடத்துவ என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் தயாரித்த அட்டவணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்பிரகாம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல் மற்றும் தென் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™