Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


500 அகதிகளை பொறுப்பேற்கும் பிரான்ஸ்

Posted: 17 Oct 2013 11:06 PM PDT

சிரியா நாட்டைச் சேர்ந்த 500 அகதிகளை பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே அறிவித்துள்ளார். சிரியா நாட்டில் ஏற்பட்ட ரசாயன தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் புகலிடம் கோரி ஏனைய நாடுகளுக்கு இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு ஏற்பட்ட போரின் போதே 2 மில்லியன் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், ஜேர்மன், ஸ்வீடன், துருக்கி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் நாடானது […]

கனடாவில் 40 பேர் கைது

Posted: 17 Oct 2013 11:03 PM PDT

arrest_CI

arrest_CIகனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டதுடன், துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காமன்வெல்த்: பிரதமர் பங்கேற்பது சந்தேகமே

Posted: 17 Oct 2013 09:10 PM PDT

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது சந்தேகமே என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் நெருக்கடியே இதற்கு காரணம் என்றும் நெருக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இது குறித்து இறுதி முடிவை கடைசி நேரத்தில் தான் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது. இருப்பினும், இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் […]

அமெரிக்காவின் முடிவு ஆறுதலளித்துள்ளது: அமைச்சர்

Posted: 17 Oct 2013 09:03 PM PDT

அமெரிக்காவின் கடன் எல்லையை அதிகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியும் செனட்டும் எட்டிய உடன்பாடு அமெரிக்க திறைசேரி உண்டியலில் வெளிநாட்டு ஒதுக்குகளை முதலீடு செய்த இலங்கைக்கு பெரும் ஆறுதலளித்துள்ளது என அமைச்சர் ஒருவர் கூறினார். கடன் எல்லையை அதிகரிக்க முடிந்தமையால் அமெரிக்க அரசாங்கம் கடன்களை திருப்பிச் செலுத்தமுடியாத வங்குரோத்து நிலை ஏற்படுவதை தவிர்த்துக்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்காவில் உண்டியலில் முதலீடு செய்திருந்ததால் அமெரிக்காவில் நடைபெறுவதை கவனமாக அவதானித்து வந்தோம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். […]

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்குள் முரண்பாடு

Posted: 17 Oct 2013 08:51 PM PDT

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சிக்குள் முரண்பாட்டு நிலமை ஏற்பட்டுள்ளது. மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் வெற்றியீட்டியவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தமது கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு கோரியுள்ளனர். ஜனநாயகக் கட்சிக்கு கண்டி மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. சீ.ஏ. கலப்பத்தி மற்றும் அசங்க திலகரட்ன ஆகிய இருவருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாவர். […]

வடமேல் மாகாணத்தில் மட்டும் 400 விஹாரைகள் மூடுவிழா

Posted: 17 Oct 2013 08:36 PM PDT

பௌத்த பிக்குகள் இன்றி வடமேல் மாகாணத்தில் மட்டும் 400 விஹாரைகள் மூடப்பட்டுள்ளன. ரம்புக்கன திஸ்மல்பொல விஹாரையில் 3 சிறுவர்களை துறவறத்தில் இணைத்து கொண்ட போது அங்கு உரையாற்றிய தெல்தனிய ரதனசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் அதிகளவானவர்கள் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். எனினும், இந்த மக்களுக்கு சேவையாற்ற 35000 பௌத்த பிக்குகளே இருக்கின்றார்கள். அதிகளவான விஹாரைகள் மூடப்படுவதற்கு பௌத்த பிக்குகள் போதியளவு இன்மையே காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரிமோட் தர மறுத்ததால் உயிரை விட்ட மாணவி

Posted: 17 Oct 2013 09:11 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய தங்கை தொலைக்காட்சி ரிமோட்டை தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அவரது வீட்டில், தங்கையுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மற்றொரு சேனலில் கல்லூரி மாணவிக்குக்கு பிடித்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது, இதனை கண்ட மாணவி தொலைக்காட்சி ரிமோட்டை தன்னிடம் தருமாறு தங்கையிடம் கேட்டுள்ளார். தொலைக்காட்சியின் ரிமோட்டை மாணவியின் தங்கை தரவில்லை. இதனால் அவரிடம் வாக்குவாதம் செய்த மாணவி கோபித்துக்கொண்டு அறைக்குள் […]

ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகின்றது Angry Birds Go (வீடியோ இணைப்பு)

Posted: 17 Oct 2013 09:08 AM PDT

கம்பியூட்டர் ஹேம் வரலாற்றில் குறுகிய காலத்தில் மிகப் பிரபல்யம் அடைந்ததோடு பலராலும் விரும்பி விளையாடப்பட்ட ஒரு ஹேமாக Angry Birds திகழ்கின்றது. தற்போது இதன் புதிய பதிப்பான Angry Birds Go – இனை வெளியிடவுள்ளதாக Rovio நிறுவனம் அறிவித்துள்ளது. அப்பிளின் iOS, கூகுளின் Android, BlackBerry 10 மற்றும் Windows Phone 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேமினை எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பயனர்களை கவரும் புதிய வடிவமைப்பில் வெளிவருகின்றது Samsung Galaxy Round (வீடியோ இணைப்பு)

Posted: 17 Oct 2013 09:04 AM PDT

வேறுபட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவந்த Samsung நிறுவனம் தற்போது வடிவத்திலும் புதுமையை புகுத்தியுள்ளது. இதற்கிணங்க Samsung Galaxy Round எனும் வளைந்த தோற்றம் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உருவாக்கியுள்ளது. 5.7 அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியில் 2.3GHz வேகம் கொண்ட Processor மற்றும் 3GB RAM ஆகியனவும் காணப்படுகின்றது. மேலும் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்களைப் பாதுகாக்கும் முருங்கை பூ

Posted: 17 Oct 2013 06:33 AM PDT

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™