| அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது – ஜனாதிபதி Posted: 10 Oct 2013 08:51 PM PDT 
அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்டோரின் வெளிநாட்டு விஜயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் எந்தவொரு வெளிநாட்டு விஜயத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். அரச செலவு முகாமைத்துவம் மற்றும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டு முன் ஆயத்தப்பணிகள் என்பனவற்றுக்காக இவ்வாறு வெளிநாட்டு விஜயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன்படி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள், மேலதிக செயலாகளர்கள், திணைக்களப் பிரதானிகள் மற்றும் அரச நிறுவன பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட அனைவரினதும் அடுத்த மாத வெளிநாட்டு விஜயங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 1ம் திகதி முதல் 30ம் திகதி வரையிலான காலத்திற்கான வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராகுல் அடுத்த பிரதமராக பதவியேற்க வேண்டும் : கட்சிக்கும், நாட்டுக்கும் தலைமை தாங்க வேண்டும் Posted: 10 Oct 2013 08:44 PM PDT 
கட்சிக்கும், நாட்டுக்கும் ராகுல் காந்தி தலைமை தாங்க வேண்டும் என்று, காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து உள்ளது. ராகுல் அடுத்த பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே கூறினார். அது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- "நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும், கட்சிக்கும், இந்த நாட்டுக்கும் ராகுல் காந்தி தலைமை தாங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விஷயம் விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சினை அல்ல. ராகுல் காந்தி எங்கள் அழைப்பை ஏற்று, தலைமை தாங்க சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறோம். இந்த நாட்டு மக்களுடைய விருப்பமும் அதுதான். அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும், அதற்குப்பின்னரும் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமை தாங்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்". இவ்வாறு பி.சி.சாக்கோ கூறினார். பேட்டியின்போது எதிர்க் கட்சிகள் மீதும் அவர் தாக்குதல் தொடுத்தார். "ராகுல் காந்தியை பொருட்படுத்தாத எதிர்க்கட்சிகள் பற்றி நமக்கு கவலை இல்லை. பொதுமக்கள் ராகுலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அலிகார் மற்றும் பஞ்சாபில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும்" என்றும், பேட்டியின்போது சாக்கோ குறிப்பிட்டார். ராகுல் காந்தி சமீபத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றியபோது, உ.பி. மாநிலம் முசாபர்நகரில் வகுப்பு வாத வன்முறையை தூண்டியதாக, பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் மீது குற்றம் சாட்டி இருந்தார். முசாபர்நகரில் பாதிக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினரே இந்த தகவலை தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். நேற்று முன்தினம் ராம்பூரில் பேசிய ராகுல் காந்தி, 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இளமையான அரசு பதவி ஏற்க வேண்டும் என்று கூறி இருந்தார். ராகுலின் இந்த கருத்து பற்றி கேட்டதற்கு பதில் அளித்த சுஷில்குமார் ஷிண்டே, "ராகுலின் கருத்தை நான் வரவேற்கிறேன். இளைஞர்களிடம் தலைமை பொறுப்பு வரவேண்டும் என்று அவர் சரியாகக் கூறி இருக்கிறார். மகத்தான நமது நாட்டின் பிரதமராக ராகுல் வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்" என்று தெரிவித்தார்.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராகுல் காந்தி இந்திய பிரதமர் ஆவார் – ராஜீவை தாக்கிய முன்னார் இலங்கை வீரர் தெரிவிப்பு Posted: 10 Oct 2013 08:39 PM PDT 
இந்தியாவில் பிரதமராகுவதற்கு ராகுல் காந்திக்கு சகல தகுதிகளும் இருப்பதாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் வீரர் விஜித ரோஹண விஜிதமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகமொன்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1987 ஆம் ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைச் சிப்பாய் தற்போது ஜோதிடராகவும், இசைக் குறுந்தகடுகளை விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார். கொழும்பு அருகில் உள்ள சூப்பர்மார்க்கெட் ஒன்றில் இரண்டு கணினிகளுக்கு முன் அமர்ந்து, சுற்றிலும் இசைத் தட்டுகள் அடுக்கப் பட்டுள்ள நிலையில் தாடியுடன் காணப் படும் அவரைப் பார்ப்பவர்கள் அவர் சில ஆண்டுகளுக்கு முன் ராஜீவைத் தாக்க முற்பட்டார் என்பதை அறிந்தால் நம்ப மாட்டார்கள். தற்போது 46 வயதான முன்னாள் கடற்படை சிப்பாயான விஜித ரோஹண விஜிதமுனி, முன்னாள் கடற்படை சிப்பாய் ஆவார். கடந்த 1987 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கடற்படை அணி வகுப்பு மரியாதையில் அணி வகுத்து நின்றவர்களின் விஜேமுனி ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கினார். இதனையடுத்து 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட விஜேமுனி, மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பின்னர் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தற்போது ஜோதிடராகவும், மியூசிக் சிடி விற்பவராகவும் தொழில் புரிந்து வருகிறார்.இவரது கடையில் புத்த மதப் பாடல்கள் தொகுப்பும், சிங்களப் படப்பாடல்கள் தொகுப்பும், சில ஹிந்திப் பட பாடல்களும் உள்ளன. ராஜீவைத் தாக்கிய சம்பவம் குறித்து அவரிடம் இந்தியப் பத்திரிக்கை ஒன்று பேட்டி கேட்டது. ஆனால், அதற்குக்கு வாய் திறக்க மறுத்து விட்ட விஜேமுனி, ராஜபக்சே குறித்து மட்டும் ஊடகத்திற்கு ஜோதிடம் கூற சம்மதித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'அடுத்த தேர்தலில் ராஜபக்சே தோல்வியைத் தழுவுவார்' என்றார். மேலும், இந்திய அரசிய அரசியலையும் தான் கவனித்து வருவதாகவும், வரும் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் எனவும் ஜோதிடம் தெரிவித்துள்ளார். ராஜீவ் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த விஜேமுனி,' ராகுல் நிசயம் பிரதமராவார். ஆனால், இப்போதல்ல, இதற்கும் அடுத்தத் தேர்தலில்.'எனக் கூறியுள்ளார். ராகுலுக்கு தீர்க்காயுசு எனவும் தனது ஜோதிட திறமை மூலம் கணித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இவர். மேலும், மற்றொரு சிங்கள் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விஜேமுனி, 'தான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல என்றும் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, பறந்து நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் இலங்கை அரசியலமைப்புக்குள் புகுத்தியதாலேயே அவரை தாக்கியதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது Posted: 10 Oct 2013 08:32 PM PDT 
இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமைகளில் இருந்து தோல்வி கண்டமை குறித்த ஆராய்வு அறிக்கை விரைவில் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஜோன் ஹிட்டிங் தெரிவித்துள்ளார். இறுதிப்போர் காலத்தில் வன்னி மக்களை பாதுகாப்பதில் இருந்து ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் ஜோன் பெற்றி என்பவர் விசாரணைகளை நடத்தி ஐக்கிய நாடுகளின் தோல்வியை உறுதி செய்தார். இதனையடுத்து பான் கீ மூன் தமது மன்னிப்பையும் கோரியிருந்தார். இந்தநிலையிலேயே ஜோன் பெற்றியின் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கழிவுநீர் தொட்டியில் தள்ளி மாணவன் கொலை : ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கொடூரம் Posted: 10 Oct 2013 08:04 PM PDT 
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக இன்னொரு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலை கொண்டம்மன் சாலையை சேர்ந்தவர் கருணாகரன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பரிமளாதேவி. இவர்களுடைய மகன் ஹரிபிரசாத் (வயது 11). இவன் திண்டுக்கல் அருகேயுள்ள ம.மு.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 7-ந்தேதி காலை விடுதி அறையில் இருந்து மாணவன் ஹரிபிரசாத் தனது நண்பர்களுடன் வெளியே சென்றான். ஆனால், அதன் பின்னர் அவன் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கூட விடுதியின் கழிப்பறை அருகில் உள்ள கழிநீர் தொட்டியில் ஹரிபிரசாத்தின் உடல் கிடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாணவன் ஹரிபிரசாத்தின் நெருங்கிய நண்பர்களிடமும், மற்றும் அவன் காணாமல் போன அன்று யாருடன் கடைசியாக வெளியே சென்றான் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் படித்து வரும் மற்றொரு மாணவனே, ஹரிபிரசாத்தை கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- விடுதியில் தங்கி படித்து வந்த ஹரிபிரசாத்திற்கு நண்பர்கள் சிலர் இருந்தனர். அதில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் உண்டு. இவர் திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தைக்ல் சேர்ந்தவர். அந்த 10-ம் வகுப்பு மாணவர், ஹரிபிரசாத்தை கட்டாயப்படுத்தி அடிக்கடி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஓரினச்சேர்க்கைக்கு ஹரிபிரசாத் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினான். சம்பவத்தன்றும் ஹரிபிரசாத்தை 10-ம் வகுப்பு மாணவர் அழைத்துள்ளார். இதற்கு ஹரிபிரசாத் மறுப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரிடம் சொல்லி விடுவேன் என்று கூறினான். இதனால் பயந்து போன 10-ம் வகுப்பு மாணவர் நைசாக பேசி ஹரிபிரசாத்தை தனியாக அழைத்து சென்று கழிவுநீர் தொட்டிக்குள் ஹரிபிரசாத்தை தள்ளிவிட்டு மூடியால் தொட்டியை மூடிவிட்டு சென்று விட்டார். தொட்டிக்குள் விழுந்த ஹரிபிரசாத் கழிவுநீரில் மூழ்கி இறந்தான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஹரிபிரசாத்தை கழிவுநீர் தொட்டியில் தள்ளி கொலை செய்த, 10-ம் வகுப்பு மாணவரை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையின் ஜனநாயகம் மௌனிக்க செய்யப்படுகிறது – ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் Posted: 10 Oct 2013 07:54 PM PDT 
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் கண்டித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நடைபெற்று முடிந்துள்ள காலப்பகுதியில் எந்த நாடுகளிலும் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கவில்லை என்று ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் அமர்வு கொழும்பில் நடைபெறுவதை முன்னிட்டு கொழும்பில் அதிகப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொலிஸாருக்கும் படையினருக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் மௌனிக்க செய்யப்படுகிறது என்று ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளில்….. Posted: 10 Oct 2013 07:51 PM PDT 
அவுஸ்திரேலிய கொக்கோஸ் தீவுகளுக்கு இலங்கையில் இருந்து அகதி படகு ஒன்று சென்றுள்ளது அபோட்டின் அரசாங்கம் அகதிகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில் இந்த படகு சென்றுள்ளது. அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று முற்பகல் 11 மணிக்கு இந்த படகை கொக்கோஸ் தீவு மக்கள் அவதானித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலிய கடற்படையினர் இன்னும் தகவல்களை வெளியிடவில்லை. அண்மையில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தலின் போது படகு அகதிகளை குறைக்கும் வகையில் அவுஸ்திரேலியாவுக்குள் வரும் அகதி படகுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மனித உரிமை அமைப்புக்களின் விமர்சனங்களில் இருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் Posted: 10 Oct 2013 07:38 PM PDT 
ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று சென்னை தடா கோர்ட்டில் பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று, வேலூர் ஜெயிலில் இருப்பவர் பேரறிவாளன். இவர், சென்னை முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அன்றைய காலக்கட்டத்தில் இருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எனக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த கொலை வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. பலரை தேடப்படும் குற்றவாளியாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில், பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் கொலையின் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. எனவே ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அந்த விசாரணையை இந்த கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி தண்டபாணி (பொறுப்பு) முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு சி.பி.ஐ.யின் கீழ் செயல்படும் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராஜீவ் காந்தி 21-5-1991 அன்று மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, நளினி உட்பட 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கீழ் கோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வழங்கிவிட்டது. மேலும், ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை 2-12-1998 அன்று அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கண்காணிக்கவும், வழக்கை விசாரிக்கவும் செய்து வருகிறது. எனவே பேரறிவாளன், மீண்டும் விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்ய எந்த உரிமையும் இல்லை. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ஒபாமா விரைவில் தீர்வு காண்பார் – ஜான் கெர்ரி Posted: 10 Oct 2013 07:33 PM PDT 
அமெரிக்காவில் நிதி மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படாததால் அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல அரசு நிறுவனங்கள் 10-வது நாளாக மூடிக்கிடக்கின்றன. ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் கூட குறைந்த அளவிலேயே ஊழியர்கள் வேலைக்கு வருகிறார்கள். அதுமட்டுமல்ல வெளிநாட்டு நிறுவனங்களும் பாதிக்கும் சிக்கல் உள்ளது. இதனால் புரூனே நாட்டில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட சீன பிரதமர் லீ கேகுயாங் நேற்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியிடம் தனது கவலையை தெரிவித்தார். அதற்கு ஜான் கெர்ரி பதில் அளிக்கையில், 'இதற்கு உள்ளூர் அரசியல் விவகாரமே காரணம். இப்பிரச்சினையில் ஜனாதிபதி ஒபாமா விரைவில் தீர்வு காண்பார்' என்று உறுதியாக தெரிவித்தார்.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாணவர்கள் மத்தியில் வன்முறைகள் வளர்வதற்கு சினிமாவே காரணம் – வைகோ Posted: 10 Oct 2013 07:20 PM PDT 
வல்லநாட்டில் கல்லூரி முதல்வர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் மனதில் வன்முறை வளர்வதற்கு சினிமாவே காரணம் என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இதயத்தை உறைய வைக்கும் கொடூரமான துன்பச் செய்தி, அறிந்த மாத்திரத்தில் அனைவரையும் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்குச் செல்லுகின்ற வழியில், வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே பொறியியல் கல்லூரியின் 3 மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இந்த மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இந்த மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர். தமிழ்நாட்டில் லட்சோபலட்சம் மாணவர்கள், கல்வியில் முனைப்போடு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு, பெற்றோரின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளோடு பயின்று வருகிறார்கள், அமைதி காத்து வருகிறார்கள். ஆனால், அண்மைக்காலமாக, ஒரு சில மாணவர்கள், கல்லூரிகளுக்குள் மோதிக் கொள்வதும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கும் வன்முறையில் ஈடுபடுவதும், மிகவும் விபரீதமான நிலையை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, வேறு விதமான குறுகிய உணர்வுகளோ, எண்ணங்களோ ஏற்பட்டது கிடையாது. ஆகக்கூடுதலாக சத்தம் போட்டுப் பேசி சண்டை போட்டுப் பின்னர் சேர்ந்து கொள்வார்களே தவிர, கத்தி, அரிவாள் கொண்டு தாக்குவது போன்ற நிகழ்வுகள் கிடையாது. கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும். இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் மாணவர்களின் மனதில் வளர்வதற்கு, அண்மையில் வருகின்ற திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும் ஒரு காரணம் ஆகும். பல இடங்களில் மதுவும் ஒரு காரணம் ஆகும். இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயர்ந்த இலட்சியங்களுக்காக, தமிழகத்தின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டிய மாணவர் சமுதாயம், நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு வாய்ந்த மாணவர் சமுதாயம், வள்ளுவப் பெருந்தகை உள்ளிட்ட நமது முன்னோர்கள் வகுத்த அறநெறிகளை மனதில் கொண்டு, வன்முறைகளுக்கு இடம் கொடுக்காமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |