Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- குடிசைப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது
- பேருந்து - லாரி மோதல்:ஒருவர் சாவு , 11 பேர் காயம்
- பாரதிதாசன் பல்கலை. சிறந்த ஆணழகனாக அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர் தேர்வு
- இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சி
- விவசாயக் கருவிகளை மானியத்தில் பெறலாம்
- விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கல்லூரி சிறப்பிடம்
- மருதாநல்லூர் ஊராட்சியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் திறப்பு
- 3-வது அணி அமையாது : மணிசங்கர் அய்யர்
- மண் வளம் காக்க காடு வளர்ப்பது அவசியம்
- பாபநாசம் அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
- நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
- காரைக்கால் அருகேஆற்றில் மூழ்கி ஒருவர் சாவு
- நுகர்வோர் கூட்டுறவுபண்டகச்சாலை நிர்வாகக்குழுக் கூட்டம்
- லாரி உரிமையாளர்கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
- இளைஞரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
- கஞ்சா விற்றவர் கைது
- கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா
- கருப்புக் கொடியேற்றி தீபாவளி
- மின்வெட்டை தவிர்க்க கோரிக்கை
- மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்
- பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- துவாக்குடி அருகே காவலர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
- பெண் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது.
- திருச்சியில் சரக்கு ரயில் தடம் புரண்டது
- குமரி மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டும் :விடுதலைத் தியாகிகள்
- சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 78.5 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள்
- இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
- கொல்லங்கோடு, மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை
- களியக்காவிளை அருகே சிதையில் விழுந்தவர் சாவு
- குமரி மாவட்ட வழக்குரைஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு
- திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா தொடக்கம்
- பத்மநாபபுரம் நகராட்சிக் கூட்டம்: 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு
- திருவிதாங்கோட்டில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்
- குமரி தமிழகத்துடன் இணைந்த நாள்: விடுதலை தின விழாவாகக் கொண்டாட்டம்
- 190 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி
- செந்தூர் எக்ஸ்பிரûஸ சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க கோரிக்கை
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
- மாணவர், மாணவிகளுக்கு பண்பாட்டு போட்டிகள்
- தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை
- யோகா போட்டி: காயல்பட்டினம் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
- சாத்தான்குளம் வட்டத்தில் 399 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகள்
- தூத்துக்குடியில் நவ. 4-ல் தொழில் முனைவோர் பயிற்சி
- தலைமையாசிரியரைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
- பேய்க்குளத்தில் திடீர் மழை
- 75 பேருக்கு விலையில்லா மடிக்கணினி
- இன்று அம்மா திட்ட முகாம்
- தடுப்புச் சுவரில் கார் மோதி முதியவர் சாவு
- மரக்கன்றுகள் நடும் விழா
- ஸ்டெர்லைட் சார்பில் மாணவிகளுக்கான அறிவியல் போட்டி
- கன்னியாகுமரி
- ஸ்ரீ ராதா கிருஷ்ணஆலயத்தில்நவம்பர் 4-இல் கோவர்த்தன பூஜை
- தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆய்வு அறிக்கை தாக்கல்
- தில்லி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி போதைப் பொருள் பறிமுதல்
- ஒரு மாதத்தில் 198 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
- பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி
- விசாரணைக் கைதி தப்பியோட்டம்
- நவம்பர் 10 வரை நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம்
- "மத்தியில் அடுத்த அரசு அமைவதில் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகிக்கும்
- முதல்வர் ஷீலா தீட்சித் தொகுதியில் மேம்பாடு இல்லை
- தீபாவளிக்குப் பிறகு வேட்பாளர்கள் அறிவிப்பு
- இலங்கை-இந்தியா வழியாக ஆசிய நாடுகளை இணைக்கும் திட்டங்கள்
- வேலைக்காரச் சிறுமிக்கு கொடுமை:சகோதரிகள் இருவருக்கு நீதிமன்றக் காவல்
- இரவு 10 மணிக்குமேல் பட்டாசு வெடிக்கத் தடை
- கனடா பெண்ணை திருமணம் செய்த ராணுவ அதிகாரி மீது விசாரணை
- சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்
- இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு
- மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் "ஆபரேஷன் ஆம்லா'
- பொறியியல் கல்லூரிக்கு சிறந்த மாணவர் அமைப்புக்கான விருது
- விபத்தில்லா தீபாவளி
- ரூ. 50 லட்சம் கேட்டு ஜேத்மலானி வழக்கு: பாஜகவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- முசாஃபர் நகர் கலவரம்: 8 பேர் கைது, 15 பேர் மீது வழக்கு
- "இந்திய-வங்கதேச எல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு'
- டாஸ்மாக் கடை: தோல்வியில் முடிந்த திருட்டு முயற்சி
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை
- கொசு அழிக்கும் இயந்திரங்கள் வழங்கக் கோரிக்கை
- மருத்துவ முகாம் : 250 பேருக்கு சிகிச்சை
- அபாயத்தில் நீர்த்தேக்கத் தொட்டி: அச்சத்தில் பள்ளி
- மாணவர்களுக்கும் மகளிர் குழுவினருக்கும் உதவி வழங்கும் விழா
- பாபா ராம்தேவ் உதவியாளருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
- பட்டாசுக் கடைக்காரர்களுக்கு ஒத்திகை
- மணிப்பூரில் 8 தீவிரவாதிகள் கைது
- அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
- வங்கதேசத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்
- வழக்குரைஞர்கள் சாலை மறியல்
- ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் கோரி தீர்மானம்
- பூடான்: ஏரியில் மூழ்கி இந்திய தம்பதி சாவு
- மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்
- திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- துபையில் சாக்கடை பராமரிப்பு பணி: மூச்சுத் திணறி 4 இந்தியர்கள் சாவு
- பெண் தூக்கிட்டு தற்கொலை
- வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராட மூன்றாவது அணி தேவை
- கனடா பெண்ணை திருமணம் செய்த ராணுவ அதிகாரி மீது விசாரணை
- வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்
- தீபாவளி பண்டிகைக்காக போடிமெட்டு மலை சாலை திறப்பு
- லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு
- ஒன்றுபட்ட ஆந்திரத்துக்காக குரல் கொடுத்தவர் இந்திரா காந்தி
- கோவையில் நவ.6 முதல் 14 வரை ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம்
| குடிசைப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது Posted: 31 Oct 2013 01:15 PM PDT குடிசைப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| பேருந்து - லாரி மோதல்:ஒருவர் சாவு , 11 பேர் காயம் Posted: 31 Oct 2013 01:15 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் ஒருவர் இறந்தார், 11 பேர் காயமடைந்தனர். |
| பாரதிதாசன் பல்கலை. சிறந்த ஆணழகனாக அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர் தேர்வு Posted: 31 Oct 2013 01:15 PM PDT பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆணழகனாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதர் மொகைதீன் கல்லூரி மாணவர் பியாஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார். |
| இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சி Posted: 31 Oct 2013 01:14 PM PDT தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| விவசாயக் கருவிகளை மானியத்தில் பெறலாம் Posted: 31 Oct 2013 01:14 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயக் கருவிகளை 50 சத மானியத்தில் பெற வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை விவசாயிகள் நவ. 30-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம். |
| விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கல்லூரி சிறப்பிடம் Posted: 31 Oct 2013 01:14 PM PDT கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி (தன்னாட்சி) உடற்கல்வித் துறை மாணவிகள் கடந்த 26-ம் தேதி நடைபெற்ற தஞ்சை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான கால்பந்து, மேசைப்பந்து, பூப்பந்து போட்டிகளில் முதலிடமும், இறகுப்பந்தில் 2-ம் இடமும் பெற்றனர். மேலும் கால்பந்தாட்டத்தில் 8 மாணவிகள், பூப்பந்தாட்டப் போட்டிகளில் 3 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர். |
| மருதாநல்லூர் ஊராட்சியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் திறப்பு Posted: 31 Oct 2013 01:14 PM PDT மருதாநல்லூர் ஊராட்சி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. |
| 3-வது அணி அமையாது : மணிசங்கர் அய்யர் Posted: 31 Oct 2013 01:13 PM PDT நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3-வது அணி அமைய வாய்ப்பில்லை, அப்படியே அமைந்தாலும் மத்தியில் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறாது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான மணிசங்கர் அய்யர். |
| மண் வளம் காக்க காடு வளர்ப்பது அவசியம் Posted: 31 Oct 2013 01:13 PM PDT மண் வளம் பாதுகாக்க காடு வளர்ப்பது அவசியம் என்றார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டலப் பொது மேலாளர் ஆர்.கே. குப்தா. |
| பாபநாசம் அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு Posted: 31 Oct 2013 01:13 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே விபத்தில் காயமடைந்து சிகிóச்சை பெற்றவர் புதன்கிழமை இறந்தார். உடையார்கோவில் வடபாதி கீழத் தெருவைச் சேர்நதவர் சி. வரதராஜன் (65). இவர் கடந்த அக்.28-ல் |
| நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல் Posted: 31 Oct 2013 01:12 PM PDT ஈரப்பதத்தைக் கணக்கிடாமல் குறுவை நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| காரைக்கால் அருகேஆற்றில் மூழ்கி ஒருவர் சாவு Posted: 31 Oct 2013 01:12 PM PDT காரைக்கால் அருகே ஆற்றைக் கடக்க முயன்றபோது, தண்ணீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். |
| நுகர்வோர் கூட்டுறவுபண்டகச்சாலை நிர்வாகக்குழுக் கூட்டம் Posted: 31 Oct 2013 01:12 PM PDT திருவாரூரில் வியாழக்கிழமை, திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| லாரி உரிமையாளர்கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது Posted: 31 Oct 2013 01:11 PM PDT சென்னை லாரி உரிமையாளர் கடத்தல் வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். சென்னை செங்குன்றம் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் |
| இளைஞரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி Posted: 31 Oct 2013 01:11 PM PDT : மன்னார்குடியில் மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வியாழக்கிழமை மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. |
| Posted: 31 Oct 2013 01:11 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா விற்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா Posted: 31 Oct 2013 01:10 PM PDT திருச்சி மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. |
| Posted: 31 Oct 2013 01:10 PM PDT அரியமங்கலத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கருப்பு கொடியேற்றி தீபாவளி கொண்டாட உள்ளனர். |
| Posted: 31 Oct 2013 01:10 PM PDT பண்டிகை நாட்களில் மின்வெட்டை தவிர்க்க வேண்டும் என திருச்சி மாவட்ட உபயோகிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மாநகராட்சி துப்புரவுபணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல் Posted: 31 Oct 2013 01:09 PM PDT திருச்சி மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் 1646 பேருக்கும் ரூ. 16 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட சீருடைகளை மேயர் அ. ஜெயா வியாழக்கிழமை வழங்கினார். |
| Posted: 31 Oct 2013 01:09 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே கணவன் இறந்த விரக்தியில் புதன்கிழமை மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| துவாக்குடி அருகே காவலர் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு Posted: 31 Oct 2013 01:08 PM PDT திருச்சி துவாக்குடி அருகே அசூரில் காவலர் வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு 50 பவுன் நகைகை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| பெண் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது. Posted: 31 Oct 2013 01:08 PM PDT திருமணமான பெண்ணிடம் ஆசை வரர்த்தை கூறி ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துக் கொண்ட கே.கே.நகரைச் சேர்ந்த விஜய் ஆண்டனியை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்துள்ளனர். |
| திருச்சியில் சரக்கு ரயில் தடம் புரண்டது Posted: 31 Oct 2013 01:08 PM PDT திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ஆல்வாய்க்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் கரூர் வழியாக திருச்சிக்கு வரவேண்டிய அனைத்து ரயில்களும் மாலை வரை ரத்து செய்யப்பட்டன. |
| குமரி மாவட்டம் வளர்ச்சியடைய வேண்டும் :விடுதலைத் தியாகிகள் Posted: 31 Oct 2013 12:56 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளதாக மாவட்ட விடுதலைத் தியாகிகள் தலைமைச் சங்கத் தலைவர் சி. குமாரதாஸ் கவலை தெரிவித்துள்ளார். |
| சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 78.5 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் Posted: 31 Oct 2013 12:56 PM PDT கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ. 78 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. |
| இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு Posted: 31 Oct 2013 12:56 PM PDT முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 29-ஆவது நினைவு தினத்தையொட்டி நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| கொல்லங்கோடு, மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை Posted: 31 Oct 2013 12:55 PM PDT கொல்லங்கோடு, களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. |
| களியக்காவிளை அருகே சிதையில் விழுந்தவர் சாவு Posted: 31 Oct 2013 12:55 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே தகனம் செய்த சிதையில் விழுந்தவர் உயிரிழந்தார். களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு இலவிளை பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார் (35). |
| குமரி மாவட்ட வழக்குரைஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 31 Oct 2013 12:55 PM PDT இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிகளை வியாழக்கிழமை புறக்கணித்தனர். |
| திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா தொடக்கம் Posted: 31 Oct 2013 12:54 PM PDT திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா வெள்ளிக்கிழமை (நவ. 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| பத்மநாபபுரம் நகராட்சிக் கூட்டம்: 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 31 Oct 2013 12:53 PM PDT பத்மநாபபுரம் நகராட்சியில் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து 10 நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடத்தினர். |
| திருவிதாங்கோட்டில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் Posted: 31 Oct 2013 12:53 PM PDT திருவிதாங்கோட்டில் பொது அமைதியை நிலை நாட்டவும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவும் வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை மாலை ஆர்பாட்டம் நடைபெற்றது. |
| குமரி தமிழகத்துடன் இணைந்த நாள்: விடுதலை தின விழாவாகக் கொண்டாட்டம் Posted: 31 Oct 2013 12:50 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்த விழா, விடுதலை தின விழாவாக குமரி தமிழ்ச் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மார்த்தாண்டத்தில் கொண்டாடப்பட்டது. |
| 190 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் Posted: 31 Oct 2013 12:50 PM PDT :தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 190 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார். |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதி உதவி Posted: 31 Oct 2013 12:49 PM PDT உடன்குடி அருகே தைக்காவூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சர் சண்முகநாதன் நிதி உதவி அளித்தார். |
| செந்தூர் எக்ஸ்பிரûஸ சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க கோரிக்கை Posted: 31 Oct 2013 12:49 PM PDT திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் Posted: 31 Oct 2013 12:49 PM PDT கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மாணவர், மாணவிகளுக்கு பண்பாட்டு போட்டிகள் Posted: 31 Oct 2013 12:48 PM PDT சாத்தான்குளம் ஸ்ரீ மாரியம்மன் இந்து தொடக்கப் பள்ளியில் விவேகானந்த கேந்திரம் சார்பில் ஒன்றிய அளவிலான பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றது. |
| தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை Posted: 31 Oct 2013 12:48 PM PDT :எட்டயபுரம் பகுதியில் தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அடுத்தபடியாக அதிகளவு தீப்பெட்டித் தொ |
| யோகா போட்டி: காயல்பட்டினம் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் Posted: 31 Oct 2013 12:48 PM PDT மாநில அளவிலான யோகா போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர். |
| சாத்தான்குளம் வட்டத்தில் 399 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 31 Oct 2013 12:48 PM PDT :சாத்தான்குளம் வட்டத்தில் 399 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையை ஆட்சியர் ம. ரவிக்குமார் வியாழக்கிழமை வழங்கினார். |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகள் Posted: 31 Oct 2013 12:47 PM PDT கோவில்பட்டியில் சுற்றுச்சூழல் மேம்பாடு என்ற தலைப்பில் ஒரு வாரம் நடைபெற்ற போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிக்கப்பட்டது. |
| தூத்துக்குடியில் நவ. 4-ல் தொழில் முனைவோர் பயிற்சி Posted: 31 Oct 2013 12:47 PM PDT :தூத்துக்குடியில் நவ. 4-ல் நடைபெறவுள்ள தொழில் முனைவோர் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தலைமையாசிரியரைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டம் Posted: 31 Oct 2013 12:47 PM PDT கயத்தாறு அருகே உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டன |
| Posted: 31 Oct 2013 12:46 PM PDT சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென மழை பெய்தது. |
| 75 பேருக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 31 Oct 2013 12:46 PM PDT படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. |
| Posted: 31 Oct 2013 12:46 PM PDT எட்டயபுரம் வட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.1) வேடபட்டி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இம்முகாம் எட்டயபுரம் வட்டாட்சியர் ஜெயராணி |
| தடுப்புச் சுவரில் கார் மோதி முதியவர் சாவு Posted: 31 Oct 2013 12:46 PM PDT :கோவில்பட்டி புறவழிச் சாலையில் வியாழக்கிழமை தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். இருவர் காயமடைந்தனர். |
| Posted: 31 Oct 2013 12:45 PM PDT கோவில்பட்டி கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. |
| ஸ்டெர்லைட் சார்பில் மாணவிகளுக்கான அறிவியல் போட்டி Posted: 31 Oct 2013 12:45 PM PDT :தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் 75 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்ற அறிவியல் போட்டி புதியம்புத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 31 Oct 2013 12:43 PM PDT |
| ஸ்ரீ ராதா கிருஷ்ணஆலயத்தில்நவம்பர் 4-இல் கோவர்த்தன பூஜை Posted: 31 Oct 2013 12:16 PM PDT தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத், வைஷாலியில் உள்ள ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் கோவர்த்தன பூஜை வரும் நவம்பர் 4-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. |
| தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆய்வு அறிக்கை தாக்கல் Posted: 31 Oct 2013 12:15 PM PDT தில்லி, ஹரியாணாவில் உள்ள தனியார் சிறு மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பது |
| தில்லி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி போதைப் பொருள் பறிமுதல் Posted: 31 Oct 2013 12:15 PM PDT ஒரு கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்தியதாக மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். |
| ஒரு மாதத்தில் 198 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு Posted: 31 Oct 2013 12:15 PM PDT தலைநகரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 198 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தில்லி அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. |
| பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி Posted: 31 Oct 2013 12:15 PM PDT பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட வசந்த விஹாரைச் சேர்ந்த பெண் வழக்குரைஞர் புதன்கிழமை மாலை தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |
| Posted: 31 Oct 2013 12:14 PM PDT பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர் என சந்தேகிக்கப்படும் நபர், பிகார் காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினரின் (என்.ஐ.ஏ) பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். |
| நவம்பர் 10 வரை நடைமேடை டிக்கெட் விற்பனை நிறுத்தம் Posted: 31 Oct 2013 12:14 PM PDT தில்லியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நவம்பர் 10-ஆம் தேதி வரை ரயில்வே நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் விற்பனையை நிறுத்துவது என்று வடக்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. |
| "மத்தியில் அடுத்த அரசு அமைவதில் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகிக்கும் Posted: 31 Oct 2013 12:13 PM PDT மத்தியில் அடுத்த அரசு அமைவதில் இடதுசாரி கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறினார். |
| முதல்வர் ஷீலா தீட்சித் தொகுதியில் மேம்பாடு இல்லை Posted: 31 Oct 2013 12:13 PM PDT தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தொகுதியான புது தில்லி மேம்பாடு அடையவில்லை என்று பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் புகார் தெரிவித்தார். |
| தீபாவளிக்குப் பிறகு வேட்பாளர்கள் அறிவிப்பு Posted: 31 Oct 2013 12:13 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர் |
| இலங்கை-இந்தியா வழியாக ஆசிய நாடுகளை இணைக்கும் திட்டங்கள் Posted: 31 Oct 2013 12:12 PM PDT இலங்கை, இந்தியா வழியாக ஆசிய நாடுகளை சாலை, ரயில் மார்க்கமாக இணைக்கும் திட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் தில்லியில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| வேலைக்காரச் சிறுமிக்கு கொடுமை:சகோதரிகள் இருவருக்கு நீதிமன்றக் காவல் Posted: 31 Oct 2013 12:12 PM PDT வீட்டு வேலை செய்த சிறுமியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் கைதான விமானப் பணிப்பெண், அவரது மூத்த சகோதரி ஆகிய இருவரையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| இரவு 10 மணிக்குமேல் பட்டாசு வெடிக்கத் தடை Posted: 31 Oct 2013 12:11 PM PDT தீபாவளி திருநாளின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் அறிவித்துள்ளார். |
| கனடா பெண்ணை திருமணம் செய்த ராணுவ அதிகாரி மீது விசாரணை Posted: 31 Oct 2013 12:11 PM PDT ராணுவத்தின் அனுமதி பெறாமல் கனடா நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த கடற் படை அதிகாரி மீது விசாரணை நடைபெறவுள்ளது. |
| சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் Posted: 31 Oct 2013 12:11 PM PDT செங்கல்பட்டு அண்ணா நகர் எல்லையம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீயோக நாயகி உடனுறை யோக நாதேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நவம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிப்பு Posted: 31 Oct 2013 12:11 PM PDT இந்திராகாந்தி நினைவு நாள் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை காங்கிரஸாரால் அனுசரிக்கப்பட்டது. |
| மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் "ஆபரேஷன் ஆம்லா' Posted: 31 Oct 2013 12:11 PM PDT மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை "ஆபரேஷன் ஆம்லா' என்ற பெயரில் தீவிரவாதிகளை கண்காணிப்பு ஒத்திகை மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் தலைமையில் நடத்தப்பட்டது. |
| பொறியியல் கல்லூரிக்கு சிறந்த மாணவர் அமைப்புக்கான விருது Posted: 31 Oct 2013 12:10 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரிக்கு சிறந்த மாணவர் அமைப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Oct 2013 12:10 PM PDT உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட மணித்தோட்டம் கிராமத்தில் சர்வசேவா மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. |
| ரூ. 50 லட்சம் கேட்டு ஜேத்மலானி வழக்கு: பாஜகவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 31 Oct 2013 12:10 PM PDT பாஜகவில் இருந்து தன்னை வெளியேற்றிய அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு நடவடிக்கையை செல்லாது என்றும் அக்கட்சியிடம் ரூ. 50 லட்சம் இழப்பீடு கேட்டும் மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜேத்மலானி தாக்கல் செய்த மனுவுக்கு பாஜகவும் அதன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. |
| முசாஃபர் நகர் கலவரம்: 8 பேர் கைது, 15 பேர் மீது வழக்கு Posted: 31 Oct 2013 12:09 PM PDT உத்தரப் பிரதேசத்தின் முசாஃபர்நகரில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| "இந்திய-வங்கதேச எல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு' Posted: 31 Oct 2013 12:08 PM PDT வங்கதேசத்திலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க திரிபுரா மாநிலத்தில் சர்வதேச எல்லையில் 2 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என அந்த மாநில டிஜிபி சி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். |
| டாஸ்மாக் கடை: தோல்வியில் முடிந்த திருட்டு முயற்சி Posted: 31 Oct 2013 12:08 PM PDT : ஊத்துக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் நுழைந்த மர்மநபர்கள் அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். |
| Posted: 31 Oct 2013 12:07 PM PDT வழக்குரைஞரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பூந்தமல்லியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை Posted: 31 Oct 2013 12:07 PM PDT பொன்னேரியில் பலசரக்கு அங்காடி உரிமையாளரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.2.60 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கொசு அழிக்கும் இயந்திரங்கள் வழங்கக் கோரிக்கை Posted: 31 Oct 2013 12:07 PM PDT மழைக் காலத்தை முன்னிட்டு, அனைத்துப் பகுதிகளுக்கும் கொசு அழிக்கும் இயந்திரங்களை வழங்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரமா கண்ணன் கேட்டுக் கொண்டார். |
| மருத்துவ முகாம் : 250 பேருக்கு சிகிச்சை Posted: 31 Oct 2013 12:06 PM PDT கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாமில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| அபாயத்தில் நீர்த்தேக்கத் தொட்டி: அச்சத்தில் பள்ளி Posted: 31 Oct 2013 12:06 PM PDT திருவள்ளூர் அருகே மொன்னவேடு ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளதால் அங்கு |
| மாணவர்களுக்கும் மகளிர் குழுவினருக்கும் உதவி வழங்கும் விழா Posted: 31 Oct 2013 12:06 PM PDT கும்மிடிப்பூண்டி ஷேர் பெண்கள் மற்றும் சிறார் அறக்கட்டளையின் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், மகளிர் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி உதவி மற்றும் கடனுதவி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. |
| பாபா ராம்தேவ் உதவியாளருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு Posted: 31 Oct 2013 12:06 PM PDT போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் உள்பட இருவருக்கு எதிராக சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. |
| பட்டாசுக் கடைக்காரர்களுக்கு ஒத்திகை Posted: 31 Oct 2013 12:06 PM PDT பட்டாசு கடைகளில் ஏற்படும் தீவிபத்துகளை தவிர்ப்பது மற்றும் தீத்தடுப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி திருத்தணியில் வியாழக்கிழமை நடந்தது. |
| மணிப்பூரில் 8 தீவிரவாதிகள் கைது Posted: 31 Oct 2013 12:05 PM PDT மணிப்பூர் மாநிலத்தில் நான்கு பெண் தீவிரவாதிகள் உள்பட எட்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். |
| அரசுப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை Posted: 31 Oct 2013 12:05 PM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. |
| வங்கதேசத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் Posted: 31 Oct 2013 12:05 PM PDT வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. |
| Posted: 31 Oct 2013 12:05 PM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. |
| ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் கோரி தீர்மானம் Posted: 31 Oct 2013 12:05 PM PDT தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் தணிக்கைத் துறை எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். |
| பூடான்: ஏரியில் மூழ்கி இந்திய தம்பதி சாவு Posted: 31 Oct 2013 12:04 PM PDT பூடானில் உள்ள பிரசித்தி பெற்ற மெபார்ட்ஷோ ஏரியில் மூழ்கி இந்திய தம்பதி உயிரிழந்தனர். |
| மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம் Posted: 31 Oct 2013 12:04 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் "மக்களைத் தேடி வருவாய்த்துறை" என்ற அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: |
| திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை Posted: 31 Oct 2013 12:04 PM PDT திருவள்ளூர் நகராட்சியில் ரூ.1.34 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளது. செலுத்த தவறியவர்களின் கட்டடங்களை ஜப்தி செய்யப் போவதாக நகராட்சி ஆணையர் கே. அட்சயா எச்சரித்துள்ளார். |
| துபையில் சாக்கடை பராமரிப்பு பணி: மூச்சுத் திணறி 4 இந்தியர்கள் சாவு Posted: 31 Oct 2013 12:04 PM PDT துபை நாட்டின் கத்தாரில் சாக்கடை பராமரிப்பு பணிக்காக சாக்கடை மூடியை ("மேன்ஹோல்') திறந்து உள்ளே இறங்கிய 4 இந்தியர்கள் விஷ வாயு தாக்கி புதன்கிழமை உயிரிழந்தனர். |
| Posted: 31 Oct 2013 12:04 PM PDT குடும்ப பிரச்னை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராட மூன்றாவது அணி தேவை Posted: 31 Oct 2013 12:03 PM PDT "வகுப்புவாத சக்திகள் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க மூன்றாவது அணி கட்டாயம் தேவை' என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். |
| கனடா பெண்ணை திருமணம் செய்த ராணுவ அதிகாரி மீது விசாரணை Posted: 31 Oct 2013 12:03 PM PDT ராணுவத்தின் அனுமதி பெறாமல் கனடா நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த கடற் படை அதிகாரி மீது விசாரணை நடைபெறவுள்ளது. |
| வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் Posted: 31 Oct 2013 12:03 PM PDT : காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, வியாழக்கிழமை தேனி மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணி புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட |
| தீபாவளி பண்டிகைக்காக போடிமெட்டு மலை சாலை திறப்பு Posted: 31 Oct 2013 12:02 PM PDT போடிமெட்டு மலை சாலை தீபாவளி பண்டிகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. |
| Posted: 31 Oct 2013 12:02 PM PDT கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| ஒன்றுபட்ட ஆந்திரத்துக்காக குரல் கொடுத்தவர் இந்திரா காந்தி Posted: 31 Oct 2013 12:02 PM PDT "கடந்த காலத்தில் தனி மாநில போராட்டங்கள் நடைபெற்றபோது, ஆந்திரம் ஒன்றுபட்ட மாநிலமாக இருக்கச் செய்தவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி' என ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி புகழாரம் சூட்டினார். |
| கோவையில் நவ.6 முதல் 14 வரை ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் Posted: 31 Oct 2013 12:01 PM PDT கோவை நேரு விளையாட்டு மைதானத்தில், ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில், வரும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, ராணுவப் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |