Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்

Posted: 30 Oct 2013 01:06 PM PDT

குமரி மாவட்டத்தில் தனியார் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தொடர் வேலை நிறுத்தம் செய்துவரும் நிலையில், இந்த தீபாவளிப் பண்டிகை தங்களுக்கு எவ்வித மகிழ்ச்சியையும் அளிக்கப்போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 30 Oct 2013 01:06 PM PDT

கன்னியாகுமரியில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பேரணி  புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு எதற்கு அறிக்கை?

Posted: 30 Oct 2013 01:06 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க 2011-இல் அமைக்கப்பட்ட பி.சி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு, தனது 2,670 பக்க அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் அளித்திருக்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது

Posted: 30 Oct 2013 01:05 PM PDT

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற நாகர்கோவில் நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமரியில் விமானத்தளம் அமைக்க நிலம் ஒதுக்கக் கோரிக்கை

Posted: 30 Oct 2013 01:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானத்தளம் அமைக்கத் தேவையான 832 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கோரிக்கை விடுத்து, குமரி மகா சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Posted: 30 Oct 2013 01:04 PM PDT

நித்திரவிளை அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

படித்து வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித் தொகை

Posted: 30 Oct 2013 01:04 PM PDT

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தக்கலையில் அறிவியல் கண்காட்சி

Posted: 30 Oct 2013 01:03 PM PDT

தக்கலை சரக தொடக்கப்பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மேட்டுக்கடை அரசு தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்தமிழகப் போராட்ட தியாகிகளுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

Posted: 30 Oct 2013 01:03 PM PDT

திருத்தமிழகப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை ரூ. 10ஆயிரமாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் நல உரிமைச் சங்

நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்: இளைஞர் கைது

Posted: 30 Oct 2013 01:03 PM PDT

திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Posted: 30 Oct 2013 01:03 PM PDT

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி புதன்கிழமை பக்தர்களுக்கு சங்கரலிங்கர், கோமதிஅம்பாள் ஆகியோர் காட்சியளித்தனர்.

பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

Posted: 30 Oct 2013 01:02 PM PDT

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

Posted: 30 Oct 2013 01:02 PM PDT

கோவில்பட்டியில் புதன்கிழமை மூதாட்டியிடம் நூதன முறையில் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேவர் ஜயந்தி: சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 30 Oct 2013 01:02 PM PDT

கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில்   பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

வஉசி துறைமுகத்தில் விழிப்புணர்வு வாரம் தொடக்கம்

Posted: 30 Oct 2013 01:01 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார தொடக்க விழா நடைபெற்றது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுரையின்படி, தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்பு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புத்தாடை

Posted: 30 Oct 2013 01:01 PM PDT

திருச்செந்தூரில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அதிமுக தொகுதிச்செயலர் எஸ்.வடமலைபாண்டியன் தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கினார்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 30 Oct 2013 01:01 PM PDT

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், நம்மாழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குருபூஜை-நினைவு தின நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தால் பிரச்னைகளே வராது

Posted: 30 Oct 2013 01:01 PM PDT

குருபூஜை-நினைவு தின நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தாலே பிரச்னைகளே ஏற்படாது என்று பரமக்குடி சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளித்துள்ள நீதிபதி கே.சம்பத் தனது பரிந்துரைகளில் ஒன்றாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளி பேருந்து மீது கல் வீச்சு

Posted: 30 Oct 2013 01:01 PM PDT

கோவில்பட்டியில் பள்ளி பேருந்து மீது கல் வீசிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

காயல்பட்டினத்தில் இறகுப் பந்து போட்டி

Posted: 30 Oct 2013 01:00 PM PDT

காயல்பட்டினத்தில் இறகுப்பந்து போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 30 Oct 2013 01:00 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே அக்கநாயக்கன்பட்டியில் மாற்றுத் திறன் குழந்தைகளின் பெற்றோருக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர் விவகாரம்: அமைச்சர் பதில்

Posted: 30 Oct 2013 01:00 PM PDT

டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்தார்.

மது விற்பனை: இருவர் கைது

Posted: 30 Oct 2013 01:00 PM PDT

கயத்தாறில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குடியிருப்புகள் இடிப்பு: ஆதிதிராவிடர்களுக்கு நிவாரணம்

Posted: 30 Oct 2013 12:59 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் குடியிருப்புகள் இடிப்பால் பாதித்த ஆதிதிராவிடர்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.

கன்னியாகுமரி

Posted: 30 Oct 2013 12:59 PM PDT

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Posted: 30 Oct 2013 12:58 PM PDT

பேரவையில் இருந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவரும், தேமுதிக அவைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுடன் வெளிநடப்பு செய்யாமல் தொடர்ந்து பங்கேற்றார்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம்

Posted: 30 Oct 2013 12:55 PM PDT

விலைவாசி ஏற்றத்துக்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கன நிதி ஒதுக்கீடு செய்த பிறகு அதில் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

Posted: 30 Oct 2013 12:54 PM PDT

பேரவை குளிர்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமையோடு (அக்.30) முடிவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் நியமனம்

Posted: 30 Oct 2013 12:54 PM PDT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரமேரூர் ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்படும்

Posted: 30 Oct 2013 12:53 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து

Posted: 30 Oct 2013 12:52 PM PDT

ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.

ஒரே நாளில் 9 மசோதாக்கள் நிறைவேற்றம்

Posted: 30 Oct 2013 12:48 PM PDT

தஞ்சாவூர், திண்டுக்கல்லை மாநகராட்சிகளாக்கும் மசோதாக்கள் உள்பட சட்டப்பேரவையில் ஒரே நாளில் (புதன்கிழமை) 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்கு இன்று ஒத்திகை

Posted: 30 Oct 2013 12:46 PM PDT

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) ஒத்திகை பார்க்கப்பட உள்ளது.

"ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் டிசம்பர் 15-ல் விண்ணில் பறக்கும்'

Posted: 30 Oct 2013 12:45 PM PDT

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் டிசம்பர் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பிரதமர் மீதான ராசாவின் குற்றச்சாட்டு ஜேபிசி அறிக்கையில் இடம்பெறவில்லை

Posted: 30 Oct 2013 12:43 PM PDT

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பொறுப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தெரிவித்த குற்றச்சாட்டு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி.) இறுதி அறிக்கையில் இடம்பெறவில்லை.

டீசல் விலை ரூ.5, கேஸ் விலை ரூ.250 உயர்த்த பரிந்துரை

Posted: 30 Oct 2013 12:43 PM PDT

டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5, மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4, சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.250 உயர்த்த மத்திய அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.

பாட்னா குண்டு வெடிப்பு வழக்கு: மூன்றாவது நபர் கைது

Posted: 30 Oct 2013 12:30 PM PDT

பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக மூன்றாவதாக ஒரு நபரை ராஞ்சியில் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

லாலு ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

Posted: 30 Oct 2013 12:30 PM PDT

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.

நவம்பர் 2ல் மோடி பிகார் பயணம்

Posted: 30 Oct 2013 12:26 PM PDT

பாட்னா தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நவம்பர் 2ஆம் தேதி பிகார் வருவதாக அந்த மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை சென்செக்ஸ்

Posted: 30 Oct 2013 12:25 PM PDT

அமெரிக்க மைய வங்கி, தனது நிதிச் சலுகையைத் தொடரும் என்ற நம்பிக்கை நிலவுவதால், புதன்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் 21,034 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Posted: 30 Oct 2013 12:24 PM PDT

ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் விதிகளை மீறிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அணிக்கு தில்லியில் களம்!

Posted: 30 Oct 2013 12:24 PM PDT

ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகியவற்றுக்கு எதிராக அணி திரளும் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரே அணியில் சேர்ப்பதற்கான அரசியல் களத்தை அமைக்கும் முயற்சி தில்லி அரசியலில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

லாரி கவிழ்ந்து விபத்து: 4 தொழிலாளர்கள் சாவு

Posted: 30 Oct 2013 12:22 PM PDT

செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போர்வெல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் இறந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர்.

நூலக வாசகர் வட்டம் தொடக்க விழா

Posted: 30 Oct 2013 12:22 PM PDT

வந்தவாசியை அடுத்த சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சித் தலைவர் பி.சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளி ஆச

குழந்தைகள் கடத்தலைத் தடுத்தல்: கிராம அளவில் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 30 Oct 2013 12:22 PM PDT

பெண்கள், குழந்தைகள் கடத்தலைத் தடுத்தல், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த கிராம அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில்

செய்யாறு ரோட்டரி சங்க விழா 9 பேருக்கு தொழிற்சேவை விருது

Posted: 30 Oct 2013 12:21 PM PDT

செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் 9 பேருக்கு தொழிற்சேவை விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மாம்பட்டு கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவுவிழா

Posted: 30 Oct 2013 12:21 PM PDT

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில் உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீசுயம்பு நாதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா மற்றும் கோயில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.

முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

Posted: 30 Oct 2013 12:21 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.  ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்

வடமணப்பாக்கத்தில் டெங்கு தடுப்பு பணிகள்

Posted: 30 Oct 2013 12:20 PM PDT

: செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொழிற்கல்வி ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்

Posted: 30 Oct 2013 12:20 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டத் தேர்தலும், பொதுக்குழு கூட்டமும் போளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இதில் மாவட்டத் தலைவராக பீ.பிரபாகரனும், செயலாளராக கே.சிவபிரகாசமும், பொரு

புதிய நீதிபதி நியமனத்துக்கு எதிரான மனு: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 30 Oct 2013 12:20 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு கர்நாடக அரசு வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முதல்வர் கோப்பை போட்டி: வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

Posted: 30 Oct 2013 12:20 PM PDT

தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அ.ஞானசேகரன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

களம்பூரில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 30 Oct 2013 12:20 PM PDT

போளூரை அடுத்த களம்பூர் பேரூராட்சியின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. இதனை பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜராணி

நுண்ணுயிரியல் துறை கூட்டமைப்பு தொடக்கம்

Posted: 30 Oct 2013 12:19 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நுண்ணுயிரியல் துறை கூட்டமைப்புத் தொடக்க விழா நடைபெற்றது.

பாமக சார்பில் பசும்பொன் தேவர் பிறந்த நாள் விழா

Posted: 30 Oct 2013 12:19 PM PDT

ஆரணியில் பசும்பொன்தேவரின் 106வது பிறந்த நாளையொட்டி புதன்கிழமை அவரது படத்துக்கு நாடாளுமன்ற பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மாலை அணிவித்தார்.

ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 30 Oct 2013 12:19 PM PDT

செங்கத்தை அடுத்த சின்னபிஞ்சூர் பாப்பாங்கும் அருகில் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விபத்தில்லா தீபாவளி: துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 30 Oct 2013 12:19 PM PDT

போளூர் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த துண்டுப் பிரசுரம் பேருந்து நிலையம், அரசு பெண்கள், ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும்

2 கோயில்களில் தங்கத் தாலிகள் திருட்டு

Posted: 30 Oct 2013 12:18 PM PDT

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கேணி. இவர் அக்கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில், ஸ்ரீகுட்டி அம்மன் கோயில் ஆகியவற்றில் அர்ச்சகராக உள்ளார்.

செஞ்சிலுவை சங்க நிறுவனர் நினைவு தின பேரணி

Posted: 30 Oct 2013 12:18 PM PDT

செய்யாறில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், அதன் நிறுவனர் ஹென்றிடூனான்ட் நினைவு தின பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 30 Oct 2013 12:18 PM PDT

சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் போளூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவியை தாக்கியவர் கைது

Posted: 30 Oct 2013 12:18 PM PDT

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுகி (16).(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் சாவு

Posted: 30 Oct 2013 12:13 PM PDT

பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்டன் பழங்குடியினப் பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

தியானென்மென் சதுக்க கார் விபத்து: 5 பேர் கைது

Posted: 30 Oct 2013 12:13 PM PDT

சீனா தியானென்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த மர்ம கார் விபத்து சம்பவம், பயங்கரவாத தாக்குதல் என்று அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல்களில் 2,227 பேர் சாவு

Posted: 30 Oct 2013 12:12 PM PDT

பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் தீவிரவாதிகள் 2,160 பேரும், பொதுமக்கள் 67 பேரும் கொல்லப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் தீபாவளி

Posted: 30 Oct 2013 12:10 PM PDT

அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

மக்களைத் திசை திருப்ப மாற்று அணி

Posted: 30 Oct 2013 12:09 PM PDT

மக்களைத் திசைத் திருப்ப மாற்று அணி போர்வையில் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒன்று சேர முயற்சி மேற்கொண்டுள்ளன என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லி தேர்தலில் மோடி பிரசாரம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது

Posted: 30 Oct 2013 12:09 PM PDT

தில்லியில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்திருப்பதால் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்று தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கவில்லை

Posted: 30 Oct 2013 12:09 PM PDT

ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான தொலைபேசி அழைப்பு விவரங்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) சேகரித்ததாக வெளியான செய்தியை அந்த அமைப்பு மறுத்துள்ளது.

மின்னஞ்சல் கொள்கையை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 30 Oct 2013 12:08 PM PDT

பொது ஆவணச் சட்டத்தின்படி, மின்னஞ்சல் கொள்கையை நான்கு வாரங்களில் தயாரிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகும்

Posted: 30 Oct 2013 12:08 PM PDT

தீபாவளிப் பண்டிகை தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் வசிக்கும் அனைத்து மாநில மக்களும் மத, மாச்சரியங்களைக் கடந்து தீபாளியைக் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். தீப ஒளித் திருநாளான தீபாவளியை இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர் பல்வேறு காரணங்களைக் கூறி கொண்டாடுகின்றனர்.

விபத்துகளை தடுக்க சைக்கிள்களில் ஸ்டிக்கர்

Posted: 30 Oct 2013 12:07 PM PDT

விபத்துகளைத் தடுக்க 1 லட்சம் கைக்கிள்களில் மின்னும் ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும் என்று தில்லி போக்குவரத்துக் காவல் துறை இணை ஆணையர் அனில் சுக்லா தெரிவித்தார்.

வேலை செய்யும் வீட்டிலிருந்து தப்பிய சிறுமியிடம் நீதிமன்றம் விசாரணை

Posted: 30 Oct 2013 12:07 PM PDT

வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது.

இந்தியா சார்பில் பூடானுக்கு ரூ.100 கோடி நிதியுதவி

Posted: 30 Oct 2013 12:07 PM PDT

பூடான் புதிய அரசின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய சார்பில் ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கால் சென்டர் பெண் ஊழியர் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

Posted: 30 Oct 2013 12:07 PM PDT

தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள குர்கானில் கால் சென்டர் பெண் ஊழியரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக மூன்று இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

Posted: 30 Oct 2013 12:06 PM PDT

சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.37 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவுபுது தில்லி, அக். 30:

நெல் பயிரில் புகையான் தாக்குதல்

Posted: 30 Oct 2013 12:06 PM PDT

நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலைநகரில் பனி மூட்டம் இரண்டு நாள்களுக்குத் தொடரும்

Posted: 30 Oct 2013 12:06 PM PDT

தேசியத் தலைநகர் தில்லியில் மேலும் இரண்டு நாள்களுக்கு பனி மூட்டம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லி பெண்கள் பாதுகாப்புக்கு அமெரிக்கா ரூ.15 கோடி நிதியுதவி

Posted: 30 Oct 2013 12:06 PM PDT

தலைநகர் தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ரூ.15 கோடி நிதி உதவியை வழங்க சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை முன்வந்துள்ளது.

கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடியில் அதிக வருவாய் பெற...

Posted: 30 Oct 2013 12:06 PM PDT

கொள்ளு, கொண்டைக்கடலை சாகுபடியில் விதைப் பண்ணை அமைப்பதன் மூலம் அதிக வருவாய் பெறலாம் என மாவட்ட வேளாண் துறை தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கிலிருந்து கணவர் விடுதலை

Posted: 30 Oct 2013 12:05 PM PDT

கணவரைப் பழிவாங்க 11 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கூறி விசாரணை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற வழி செய்த மனைவியின் நாடகம் தில்லி உயர் நீதிமன்றத்தில் அம்பலமானது. 

ஆறாவது மாடியில்  இருந்து குதித்து அதிகாரி தற்கொலை

Posted: 30 Oct 2013 12:05 PM PDT

தில்லியில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

விளையாட்டுப் போட்டிகளில் டிடிஇஏ மாணவர்கள் வெற்றி

Posted: 30 Oct 2013 12:05 PM PDT

மத்திய தில்லியைச் சேர்ந்த 18-ஆவது மண்டலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்றனர்.

தில்லி தேர்தலில் மோடி பிரசாரம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது

Posted: 30 Oct 2013 12:05 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்திருப்பதால் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை என்று தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு!

Posted: 30 Oct 2013 12:04 PM PDT

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது.

"ஊடகம், சர்வதேசவிவகாரங்கள்':இன்று கருத்தரங்கம்

Posted: 30 Oct 2013 12:04 PM PDT

தில்லி ஜாமியா மிலியா பல்கலைகழகத்தில் "ஊடகம், சர்வதேச விவகாரங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பு: இருவர் கைது

Posted: 30 Oct 2013 12:04 PM PDT

சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்ததாக இருவரைக் கலால் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு மதுபான வகை பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தில்லி காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் மேற்கு வங்கத்தில் கைது

Posted: 30 Oct 2013 12:04 PM PDT

காவலரை வேனை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த பத்தன் (எ) மன்னனை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் மேற்கு வங்க மாநிலத்தில் கைது செய்தனர்.

அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையிழப்பு

Posted: 30 Oct 2013 12:03 PM PDT

அரசுகளின் மீது நம்பிக்கை இழந்து வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு கடந்த சில ஆண்டுகளாகப் பொதுமக்கள் மாறியுள்ளனர் என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சிங்வி புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது வேதனை தெரிவித்தார்.

துவாரகா மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

Posted: 30 Oct 2013 12:03 PM PDT

நொய்டா -  துவாரகா மெட்ரோ வழித்தடத்தில் மின்சுற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புதன்கிழமை ரயில் சேவையில் சுமார் ஒரு மணி நேரம்  தடங்கல் ஏற்பட்டது.

பக்கத்துவீட்டுப் பெண் பாலியல் பலாத்காரம்: ஐ.டி.ஐ. மாணவர் கைது

Posted: 30 Oct 2013 12:03 PM PDT

பக்கத்து வீட்டு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐ.டி.ஐ. மாணவரைப் போலீஸார் கைது செய்தனர்.

மணல் சேமிப்புக் கிடங்கில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Posted: 30 Oct 2013 12:01 PM PDT

வாலாஜாபாத் அருகே பழையசீவரம் மணல் சேமிப்பு கிடங்கில் குவிக்கப்பட்டுள்ள மணலை அளவிடும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் ஆட்சியர் திடீர் ஆய்வு

Posted: 30 Oct 2013 12:01 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் அரசு அலுவலகங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் நீதிமன்ற ஆலோசனைக் கூட்டம்: வழக்குரைஞர்கள் புறக்கணிப்பு

Posted: 30 Oct 2013 12:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர்.

காமாட்சியம்மன் அவதாரத் திருநாள்: பால்குட ஊர்வலம்

Posted: 30 Oct 2013 12:00 PM PDT

காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் அவதாரத் திருநாளை முன்னிட்டு,  பால்குடம் ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

Posted: 30 Oct 2013 12:00 PM PDT

: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்காவுக்கான பட்டா மாறுதல் சம்மந்தமான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

அரசு துறைகளிடையே தகவல் பரிமாற்றம் இல்லை

Posted: 30 Oct 2013 12:00 PM PDT

காஞ்சிபுரத்தில் அரசு துறைகளிடையே தகவல் பரிமாற்றமே இல்லாததால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

நவம்பர் 7-ல் கிராம உதவியாளர்கள் போராட்டம்

Posted: 30 Oct 2013 12:00 PM PDT

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நவம்பர் 7-ஆம் தேதி சிறு விடுப்புப் போராட்டம் நடத்தப் போவதாக ஆயத்த மாநாட்டில் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் அமெரிக்க பெண் குழந்தைகளுடன் மாயம்

Posted: 30 Oct 2013 11:59 AM PDT

அமெரிக்காவிலிருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை காணாமல் போனது குறித்து போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சமி நிலம் மீட்கக்  கோரி பிரசாரப் பயணம்

Posted: 30 Oct 2013 11:59 AM PDT

பஞ்சமி நிலத்தை மீட்க வலியுறுத்தி திருக்கழுகுன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பிரசார பயணம் மேற்கொண்டனர்.

வேன் மோதி 2 பேர் சாவு: டிரைவர் கைது

Posted: 30 Oct 2013 11:59 AM PDT

போரூர் அருகே பஞ்சராகி நின்றிருந்த மினி வேன் மீது மற்றொரு வேன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளுர் அடுத்த வெங்கத்தூரிலிருந்து தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™