Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரேக் அறுந்ததால் சுவரை உடைத்து நின்ற எல்பிஜி டேங்கர் லாரி
- தேனி மாவட்ட விவசாயியை மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு
- விடுமுறை நாளில் திறக்கப்பட்ட தனியார் பள்ளி முற்றுகை
- கம்பன் சொல்லும் நியாயத் தராசு
- மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய கிளைகள் தொடக்கம்
- அன்னவாசல் அருகே மலைப்பாம்பு
- முன்னாள் மாணவிகள் சந்திப்புக் கூட்டம்
- பணிகளுக்கு தகுதியான ஆட்கள் பற்றாக்குறை'
- கரந்தையில் நகராட்சி கணினி மையம் அமைக்க வலியுறுத்தல்
- முஸ்லிம் சமுதாயத்துக்கு இடுகாடு அமைக்க கோரிக்கை
- பொறுப்பேற்பு
- 40 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன்கள் வருகை
- கூட்டுறவு பண்டக சாலை மூலம் பட்டாசு விற்பனை இலக்கு ரூ. 70 லட்சம்
- பாசிக்: ஊதிய நிலுவையை உடனடியாகவழங்க வலியுறுத்தல்
- தொற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை தேவை
- மாநில கிரிக்கெட்:அக். 19-ல் மாணவர்கள் தேர்வு
- மருத்துவக் கல்லூரி பணிகளை தொடங்கக் கோரி மார்க்சிஸ்ட் தர்னா
- அக்டோபர் 17 மின் தடை
- இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சாவு
- பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி
- கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது
- வாக்காளர் பட்டியலில்திருத்தம்: குறைகளை எஸ்எம்எஸ் செய்யலாம்
- பக்ரீத்: தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு குர்பானி
- செல்போன் கடையில் திருடிய இருவர் கைது
- "அரியலூர் மாவட்டத்தில் 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்'
- குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
- பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை
- திருச்சியில் நாளை வேளாண் இயந்திரக் கண்காட்சி
- விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கல்
- புதுகையில் நாளை குறைகேட்பு முகாம்
- தாற்காலிக பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல்
- புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
- இலுப்பூரில் இன்று விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- காவேரி நகரில் மின்கட்டண வசூல் மையம் திறக்கக் கோரி மனு
- டெங்கு அறிகுறி: நோயாளிக்கு சிகிச்சை அளித்ததில் அரசு மருத்துவமனை மெத்தனம் செய்ததாகப் புகார்
- தொழில் முனைவோருக்கு இலவசப் பயிற்சி
- நகர கூட்டுறவு பண்டக சாலையில் தீபாவளி சிறப்பு விற்பனை
- மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை
- தேமுதிக சார்பில் குர்பானி அளிப்பு
- குடந்தையில் ரயில் மறியல் : 30 பேர் கைது
- தஞ்சாவூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை
- அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தவர் சாவு
- மக்கள் நேர்காணல் முகாம்அக். 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகரக் கூட்டம்
- பாபநாசம் அருகேகார் மோதி தொழிலாளி சாவு
- நெம்மேலி மாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு
- உண்ணாவிரதம்: பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
- சக்கராப்பள்ளியில் மருத்துவ முகாம்
- ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தல்
- அக்டோபர் 17 மின் தடை
- இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
- நிர்வாகிகள் கூட்டம்
- மானாவாரி வயல்களில் வானத்தை நம்பி விதைப்பு செய்துள்ள விவசாயிகள்
- மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
- திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
- திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது
- நீடாமங்கலத்தில் இன்று விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம்
- காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தல்
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
- காமன்வெல்த் மாநாட்டில்இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
- பக்ரீத்: காரைக்கால் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- குமரி மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை
- ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்
- ஆயுத பூஜை விழாவில் மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்குப் பரிசு
- கோட்டாறு ஆட்டோ ஓட்டுநர் கொலையில் மேலும் ஒருவர் கைது
- தீக்காயம் அடைந்த பெண் சாவு
- மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள்
- அதிமுக சாதனை விளக்கப் பிரசாரம்
- குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது
- கடும் வறட்சியால் கருகும் "கற்பக விருட்சங்கள்'
- கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: ஆட்சியர் ஆலோசனை
- விளாத்திகுளம் பகுதியில் மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு
- வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டி போராட்டம்
- ரேஷன் கடையில் மோசடி:விற்பனையாளர் கைது
- கன்னியாகுமரி
- சாரதா நிதி நிறுவன மோசடி: குணால் கோஷ் எம்.பி.க்கு சம்மன்
- பொது விநியோகத் திட்டத்துக்கு இந்திரா காந்தியின் பெயர்?
- ம. பி.: அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து பத்திரிகையாளர் தற்கொலை
- ரூ. 1,523 கோடி உதவி கோருகிறது மாநில அரசு
- பாய்லின் புயல்: ஒடிஸாவில் 647 கிராமங்கள் பாதிப்பு
- தற்கொலைத் தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் சாவு
- பிரதமர் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க.
- அதிக வாக்குப்பதிவுக்குப் பரிசு!
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்
- தலைநகரில் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம்
- பிரதமர் மீதான விமர்சனம்: பாஜகவின் பொறுப்பற்ற செயல்
- கடலோரக் காவலுக்கு சிறப்பு போலீஸ் பிரிவு
- பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது அமைச்சர்கள் குழு
- சோனியா உடல்நலக் குறைவாக இருப்பதாக விளம்பரம்
- ஆசாராம் பாபுவின் மகனை தில்லியில் தேடுகிறது சூரத் போலீஸ்
- பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?
- சீனாவுடன் எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒப்பந்தம்?
- தில்லி பொது விநியோகத் திட்டம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
- மாணவர் சங்கம் சார்பில் கலாசார தின விழா
- விசாரணை குற்றப் பிரிவிடம் ஒப்படைப்பு:நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தகவல்
- பக்ரித் நாளில் பேரவைக் கூட்டம்: காங்கிரஸ் புறக்கணிப்பு
- சிபிஐ அதிகாரியாக நடித்தவர் கைது
| பிரேக் அறுந்ததால் சுவரை உடைத்து நின்ற எல்பிஜி டேங்கர் லாரி Posted: 16 Oct 2013 01:17 PM PDT திருச்சியில் பிரேக் அறுந்ததால், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலாமணி (பட்டாலியன்) அலுவலக தடுப்புச் சுவர் மீது டேங்கர் லாரி புதன்கிழமை மோதியது. இதில் தடுப்புச் சுவர் சேதமடைந்தது. |
| தேனி மாவட்ட விவசாயியை மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு Posted: 16 Oct 2013 01:17 PM PDT திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் தேனி விவசாயியை மிரட்டி 6 பவுன் நகை மற்றும் ரூ. 25,000-ம் ரொக்கத்தை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விடுமுறை நாளில் திறக்கப்பட்ட தனியார் பள்ளி முற்றுகை Posted: 16 Oct 2013 01:16 PM PDT கரூரில், விடுமுறை நாளான புதன்கிழமை பள்ளி திறக்கப்பட்டதைக் கண்டித்து, தனியார் பள்ளியை தமுமுகவினர் முற்றுகையிட்டனர். |
| Posted: 16 Oct 2013 01:16 PM PDT பொன்னை நிறுத்தும் தராசாக இருக்கும் நீதிபதிதான் நீதி தவறாமல் இருக்க முடியும் என்றார் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன். |
| மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய கிளைகள் தொடக்கம் Posted: 16 Oct 2013 01:15 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளைகளின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 16 Oct 2013 01:15 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மலைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் புதன்கிழமை பிடித்தனர். |
| முன்னாள் மாணவிகள் சந்திப்புக் கூட்டம் Posted: 16 Oct 2013 01:15 PM PDT பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பணிகளுக்கு தகுதியான ஆட்கள் பற்றாக்குறை' Posted: 16 Oct 2013 01:14 PM PDT தகுதியான நபர்கள் பற்றாக்குறையே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு மூலக்காரணமாகும் என வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சியின் பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ்காந்தி தெரிவித்தார். |
| கரந்தையில் நகராட்சி கணினி மையம் அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 01:14 PM PDT தஞ்சாவூர் கரந்தையில் நகராட்சி கணினி மையம் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. |
| முஸ்லிம் சமுதாயத்துக்கு இடுகாடு அமைக்க கோரிக்கை Posted: 16 Oct 2013 01:14 PM PDT கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட உள்ளூர் ஊராட்சியில் முஸ்லிம் சமுதாயத்திற்கு என தனியாக இடுகாடு அமைக்க இட ஒதுக்கீடு செய்து தருமாறு கும்பகோணம் |
| Posted: 16 Oct 2013 01:13 PM PDT நாகை கடலோர காவல்படைக் குழும சிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இராம. அம்பிகாபதி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். |
| 40 நாட்களுக்கு பிறகு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன்கள் வருகை Posted: 16 Oct 2013 01:12 PM PDT மீனவர்களின் 40 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு புதன்கிழமை முதல் மீண்டும் மீன்கள் வரத்து தொடங்கியுள்ளது. |
| கூட்டுறவு பண்டக சாலை மூலம் பட்டாசு விற்பனை இலக்கு ரூ. 70 லட்சம் Posted: 16 Oct 2013 01:12 PM PDT திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை மூலம் ரூ. 70 லட்சத்துக்கு தீபாவளி பட்டாசு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். |
| பாசிக்: ஊதிய நிலுவையை உடனடியாகவழங்க வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 01:12 PM PDT பாசிக் (அரசு வேளாண் நிறுவனம்) ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக புதுச்சேரி அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| தொற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை தேவை Posted: 16 Oct 2013 01:11 PM PDT வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், நீரின் மூலம் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| மாநில கிரிக்கெட்:அக். 19-ல் மாணவர்கள் தேர்வு Posted: 16 Oct 2013 01:11 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில், மாநில கிரிக்கெட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு முகாம் அக். 19-ம் தேதி நடைபெறுகிறது என்றார் பெரம்பலூர் மாவட்ட பள்ளி கிரிக்கெட் சங்கப் பொதுச் செயலர் ஜெ. கண்ணன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| மருத்துவக் கல்லூரி பணிகளை தொடங்கக் கோரி மார்க்சிஸ்ட் தர்னா Posted: 16 Oct 2013 01:11 PM PDT தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி பணிகளைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| Posted: 16 Oct 2013 01:10 PM PDT சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில், வியாழக்கிழமை (அக். 17) மின் விநியோகம் இருக்காது என்றார் உதவிச் செயற்பொறியாளர் க. கரிகால்சோழன். |
| இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சாவு Posted: 16 Oct 2013 01:10 PM PDT பெரம்பலூரில், இருசக்கர வாகனத்தின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். |
| பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி Posted: 16 Oct 2013 01:10 PM PDT பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய |
| கடனை திருப்பி கேட்டவரை தாக்கியவர் கைது Posted: 16 Oct 2013 01:09 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தாக்கிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| வாக்காளர் பட்டியலில்திருத்தம்: குறைகளை எஸ்எம்எஸ் செய்யலாம் Posted: 16 Oct 2013 01:09 PM PDT அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக குறைகள் இருந்தால் தொலைபேசி, மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார். |
| பக்ரீத்: தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு குர்பானி Posted: 16 Oct 2013 01:09 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி, அரியலூரில் தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு புதன்கிழமை குர்பானி வழங்கப்பட்டது. |
| செல்போன் கடையில் திருடிய இருவர் கைது Posted: 16 Oct 2013 01:08 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் செல்போன் கடைகளில் செல்போன்களை திருடிய இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| "அரியலூர் மாவட்டத்தில் 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்' Posted: 16 Oct 2013 01:08 PM PDT அரியலூர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில், 2.16 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் நயினார்முகமது தெரிவித்தார். |
| குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 01:08 PM PDT : ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பள்ளி மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை Posted: 16 Oct 2013 01:07 PM PDT பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்: |
| திருச்சியில் நாளை வேளாண் இயந்திரக் கண்காட்சி Posted: 16 Oct 2013 01:07 PM PDT திருச்சி குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரியில் வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சி வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது. |
| விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கல் Posted: 16 Oct 2013 01:06 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி மற்றும் சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் நாளை குறைகேட்பு முகாம் Posted: 16 Oct 2013 01:06 PM PDT புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு முகாம் நாளை (அக். 18) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தாற்காலிக பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 01:06 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தாற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை அவர்களது குடும்ப நலன் கருதி மீண்டும் நியமனம் செய்யவேண்டுமென தமிழ்நாடு டாஸ்மாக் |
| புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை Posted: 16 Oct 2013 01:06 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் புதன்கிழமை சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர். |
| இலுப்பூரில் இன்று விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 16 Oct 2013 01:05 PM PDT புதுக்கோட்டை மாவட்ட, இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (அக். 17) விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென அத்தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். |
| காவேரி நகரில் மின்கட்டண வசூல் மையம் திறக்கக் கோரி மனு Posted: 16 Oct 2013 01:05 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள காவேரி நகரில் மின் கட்டண வசூல் மையம் திறக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மனு அனுப்பியுள்ளார். |
| டெங்கு அறிகுறி: நோயாளிக்கு சிகிச்சை அளித்ததில் அரசு மருத்துவமனை மெத்தனம் செய்ததாகப் புகார் Posted: 16 Oct 2013 01:04 PM PDT டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக நோயாளியின் உறவினர்கள் புகார் தெரிவித்ததால் புதன்கிழமை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. |
| தொழில் முனைவோருக்கு இலவசப் பயிற்சி Posted: 16 Oct 2013 01:04 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த படித்த இளைய தொழில் முனைவோருக்கு சென்னையில் இரு வாரம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| நகர கூட்டுறவு பண்டக சாலையில் தீபாவளி சிறப்பு விற்பனை Posted: 16 Oct 2013 01:04 PM PDT புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டக சாலையின் சுயசேவைப்பிரிவில் தீபாவளி சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை Posted: 16 Oct 2013 01:04 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே சாத்தாக்குளத்தில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பருவமழை எதிர்பார்த்த வகையில் பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் |
| தேமுதிக சார்பில் குர்பானி அளிப்பு Posted: 16 Oct 2013 01:03 PM PDT புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை முஸ்லிம்களுக்கு குர்பானி (இறைச்சி) வழங்கப்பட்டது. |
| குடந்தையில் ரயில் மறியல் : 30 பேர் கைது Posted: 16 Oct 2013 01:02 PM PDT இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கும்பகோணம் ரயில் நிலையத்தில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்திய விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியினர் 30 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தஞ்சாவூரில் பக்ரீத் சிறப்புத் தொழுகை Posted: 16 Oct 2013 01:02 PM PDT தஞ்சாவூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அத் அமைப்பு சார்பில் பல்வேறு இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை வழிபாடு புதன்கிழமை காலை நடைபெற்றது. |
| அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்தவர் சாவு Posted: 16 Oct 2013 01:02 PM PDT தஞ்சாவூரில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| மக்கள் நேர்காணல் முகாம்அக். 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு Posted: 16 Oct 2013 01:02 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த மக்கள் நேர்காணல் முகாம் அக். 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகரக் கூட்டம் Posted: 16 Oct 2013 01:01 PM PDT தஞ்சாவூர் அண்ணா நகரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 47, 48-வது வட்டத்தின் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| பாபநாசம் அருகேகார் மோதி தொழிலாளி சாவு Posted: 16 Oct 2013 01:01 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே கார் மோதி விவசாய கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| நெம்மேலி மாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 16 Oct 2013 01:01 PM PDT மதுக்கூர் ஒன்றியம், நெம்மேலி கிராமத்திலுள்ள ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். |
| உண்ணாவிரதம்: பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு Posted: 16 Oct 2013 01:00 PM PDT சென்னையில் நவ. 8-ம் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| சக்கராப்பள்ளியில் மருத்துவ முகாம் Posted: 16 Oct 2013 01:00 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அல்முபீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அய்யம்பேட்டை பாசமலர் வெல்பர் அசோசியேசன், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை உள்ளிட்டவை இணைந்து அண்மையில் இலவச மருத்துவ முகாமை நடத்தின. |
| ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 01:00 PM PDT கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 31 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 16 Oct 2013 12:59 PM PDT அதிராம்பட்டினத்தில் வியாழக்கிழமை (அக். 17) மின்சார விநியோகம் இருக்காது. |
| இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 16 Oct 2013 12:58 PM PDT நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற அக். 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். |
| Posted: 16 Oct 2013 12:57 PM PDT மதிமுகவின் குத்தாலம், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பூரில் அண்மையில் நடைபெற்றது. |
| மானாவாரி வயல்களில் வானத்தை நம்பி விதைப்பு செய்துள்ள விவசாயிகள் Posted: 16 Oct 2013 12:57 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வழக்கத்துக்கு மாறான வறண்ட வானிலை நீடித்து வரும் நிலையில், மானாவாரி நிலத்தில் வானத்தை நம்பி நேரடி நெல் விதைப்புப் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல் Posted: 16 Oct 2013 12:57 PM PDT நாகை மாவட்டம், திருமருகல் வட்டாரத்துக்குள்பட்ட திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 16 Oct 2013 12:56 PM PDT திருவாரூரில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: |
| அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 12:56 PM PDT 60 வயது நிறைவடைந்த அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது Posted: 16 Oct 2013 12:56 PM PDT காரைக்காலில் பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகளை திருடிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| நீடாமங்கலத்தில் இன்று விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம் Posted: 16 Oct 2013 12:55 PM PDT திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை (அக்.17) விரைவு பட்டா மாற்றும் முகாம் நடைபெறவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீடாமங்கலம் வ |
| காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 12:55 PM PDT காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 12:55 PM PDT பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (புதிய) ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| காமன்வெல்த் மாநாட்டில்இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் Posted: 16 Oct 2013 12:54 PM PDT திருவாரூரில் புதன்கிழமை, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பக்ரீத்: காரைக்கால் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை Posted: 16 Oct 2013 12:54 PM PDT பக்ரீத் திருநாளையொட்டி, காரைக்காலில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது. தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் திருநாள் நிகழ்ச்சி காரைக்காலில் |
| Posted: 16 Oct 2013 12:54 PM PDT |
| Posted: 16 Oct 2013 12:53 PM PDT |
| குமரி மாவட்டத்தில் பக்ரீத் தொழுகை Posted: 16 Oct 2013 12:41 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. |
| ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தல் Posted: 16 Oct 2013 12:40 PM PDT ஊதிய முரண்பாடுகளை அரசு களைய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே. மணிவாசகன் கூறினார். |
| ஆயுத பூஜை விழாவில் மாணவர்கள், தலைமை ஆசிரியர்களுக்குப் பரிசு Posted: 16 Oct 2013 12:39 PM PDT தக்கலையில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. |
| கோட்டாறு ஆட்டோ ஓட்டுநர் கொலையில் மேலும் ஒருவர் கைது Posted: 16 Oct 2013 12:39 PM PDT நாகர்கோவில் கோட்டாறு ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 16 Oct 2013 12:39 PM PDT பூதப்பாண்டியில் தீக்காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள் Posted: 16 Oct 2013 12:39 PM PDT திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநில மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியையடுத்து குமரி மாவட்ட வீரர்கள் தேர்வு, நாகர்கோவிலில் அக். 20-ஆம் தேதி நடைபெறுகிறது. |
| அதிமுக சாதனை விளக்கப் பிரசாரம் Posted: 16 Oct 2013 12:38 PM PDT சுசீந்திரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரத்தை அமைச்சர் கே.டி. பச்சைமால் புதன்கிழமை தொடக்கி வைத்தார். |
| குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது Posted: 16 Oct 2013 12:38 PM PDT தேரூர் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனர். |
| கடும் வறட்சியால் கருகும் "கற்பக விருட்சங்கள்' Posted: 16 Oct 2013 12:38 PM PDT சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பனை மரங்கள் கருகி அழிந்து வருகின்றன. |
| கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: ஆட்சியர் ஆலோசனை Posted: 16 Oct 2013 12:37 PM PDT தொழிற்சாலைகளுக்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| விளாத்திகுளம் பகுதியில் மர்மமான முறையில் ஆடுகள் இறப்பு Posted: 16 Oct 2013 12:37 PM PDT விளாத்திகுளம் அருகே கந்தசாமிபுரம் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் ஆடுகள் இறந்து கிடந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| வீடுகள் முன் கருப்புக் கொடி கட்டி போராட்டம் Posted: 16 Oct 2013 12:37 PM PDT கோவில்பட்டி வட்டம், வெங்கடாசலபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ரேஷன் கடையில் மோசடி:விற்பனையாளர் கைது Posted: 16 Oct 2013 12:36 PM PDT ரேஷன் கடையில் போலி ரசீது தயாரித்து ரூ. 58 ஆயிரம் மோசடி செய்ததாக விற்பனையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 16 Oct 2013 12:36 PM PDT |
| சாரதா நிதி நிறுவன மோசடி: குணால் கோஷ் எம்.பி.க்கு சம்மன் Posted: 16 Oct 2013 12:19 PM PDT சாரதா சீட்டு நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. குணால் கோஷுக்கு மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. |
| பொது விநியோகத் திட்டத்துக்கு இந்திரா காந்தியின் பெயர்? Posted: 16 Oct 2013 12:18 PM PDT பொது விநியோகத் திட்டத்துக்கு இந்திரா காந்தியியின் பெயரைச் சூட்ட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலனை எதிர்க்கட்சிகள் பெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு மத்திய அரசு உத்தேசித்துள்ளது. |
| ம. பி.: அதிகாரிகளின் முறைகேட்டை கண்டித்து பத்திரிகையாளர் தற்கொலை Posted: 16 Oct 2013 12:17 PM PDT மத்தியப் பிரதேச அரசு அதிகாரிகளின் முறைகேடுகளைக் கண்டித்து, போபாலில் தற்கொலைக்கு முயன்ற பத்திரிகையாளர் சிகிச்சை பலனிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார். |
| ரூ. 1,523 கோடி உதவி கோருகிறது மாநில அரசு Posted: 16 Oct 2013 12:17 PM PDT ஒரிஸா மாநிலத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கு உடனடியாக ரூ.1,523 கோடி நிதியுதவி தருமாறு மத்திய அரசை முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். |
| பாய்லின் புயல்: ஒடிஸாவில் 647 கிராமங்கள் பாதிப்பு Posted: 16 Oct 2013 12:15 PM PDT பாய்லின் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஒடிஸாவில் 5 வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த 647 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப் பேரழிவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அங்கு நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. |
| தற்கொலைத் தாக்குதல்: பாகிஸ்தான் அமைச்சர் சாவு Posted: 16 Oct 2013 12:14 PM PDT பாகிஸ்தானில் புதன்கிழமை நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் சட்ட அமைச்சர் இஸ்ராருல்லா கண்டபூர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். |
| பிரதமர் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க. Posted: 16 Oct 2013 12:14 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நிகழ்ந்திருந்தால் பிரதமர் மன்மோகன் சிங்தான் முதல் குற்றவாளி என்று நிலக்கரித்துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் கருத்து கூறியுள்ள நிலையில் ஊழலுக்கு தார்மிக பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. கோரியுள்ளது. |
| அதிக வாக்குப்பதிவுக்குப் பரிசு! Posted: 16 Oct 2013 12:14 PM PDT ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்காளர்களை அதிகளவு வாக்களிக்கச் செய்யும் தேர்தல் அதிகாரிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். |
| இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் Posted: 16 Oct 2013 12:14 PM PDT நடப்பு 2013-14ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி விகிதமானது 4.7 சதவிகிதமாக குறைந்துவிடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, இது 6.1 |
| தலைநகரில் ஈகைப் பெருநாள் கொண்டாட்டம் Posted: 16 Oct 2013 12:13 PM PDT தலைநகர் தில்லியில் தியாகத்தை வலியுறுத்தும் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இப் பண்டிகையையொட்டி, தில்லியுள்ள வரலாற்றுச் |
| பிரதமர் மீதான விமர்சனம்: பாஜகவின் பொறுப்பற்ற செயல் Posted: 16 Oct 2013 12:13 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்புப்படுத்தி பாஜக பேசி வருவது அதன் பொறு ப்பற்ற செயல் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவித்தார். |
| கடலோரக் காவலுக்கு சிறப்பு போலீஸ் பிரிவு Posted: 16 Oct 2013 12:13 PM PDT கடலோர காவலுக்குச் சிறப்புப் பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய முழு நேர தனிப் பிரிவை மாநில காவல் துறையில் உருவாக்க மத்திய உள்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. |
| பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது அமைச்சர்கள் குழு Posted: 16 Oct 2013 12:12 PM PDT ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட விதிமுறை குறிப்புகள் மீது பொதுமக்களின் கருத்துகளை மத்திய உள்துறை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: |
| சோனியா உடல்நலக் குறைவாக இருப்பதாக விளம்பரம் Posted: 16 Oct 2013 12:12 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவுடன் இருப்பதாக விளம்பரப் பலகை வைத்த கட்சி நிர்வாகிகள் 2 பேரை உத்தரப் பிரதேச காங்கிரஸ் புதன்கிழமை இடைநீக்கம் செய்துள்ளது. |
| ஆசாராம் பாபுவின் மகனை தில்லியில் தேடுகிறது சூரத் போலீஸ் Posted: 16 Oct 2013 12:12 PM PDT பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக தில்லியில் சூரத் போலீஸார் விசாரணை நடத்தினர். |
| Posted: 16 Oct 2013 12:12 PM PDT தில்லி பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அக் கட்சியின் தில்லி தேர்தல் பொறுப்பாளர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| சீனாவுடன் எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒப்பந்தம்? Posted: 16 Oct 2013 12:11 PM PDT இந்தியா-சீன எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில், சீன சுற்றுப் பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| தில்லி பொது விநியோகத் திட்டம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் Posted: 16 Oct 2013 12:11 PM PDT தில்லியில் செயல்படுத்தப்படும் பொது விநியோக முறை குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் வலியுறுத்தியுள்ளார். |
| மாணவர் சங்கம் சார்பில் கலாசார தின விழா Posted: 16 Oct 2013 12:11 PM PDT தில்லி லோதா மாணவர் அமைப்பு சார்பில் கலாசார தின விழா அண்மையில் நடைபெற்றது. |
| விசாரணை குற்றப் பிரிவிடம் ஒப்படைப்பு:நீதிமன்றத்தில் தில்லி போலீஸார் தகவல் Posted: 16 Oct 2013 12:11 PM PDT வெளிநாடு வாழ் இந்திய மாணவர் அன்மோல் சர்னா (24) மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் பிரிவு போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். |
| பக்ரித் நாளில் பேரவைக் கூட்டம்: காங்கிரஸ் புறக்கணிப்பு Posted: 16 Oct 2013 12:11 PM PDT பக்ரித் நாளான புதன்கிழமை நடைபெற்ற கோவா சட்டப்பேரவைக் கூட்டத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதற்கு பேரவைத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| சிபிஐ அதிகாரியாக நடித்தவர் கைது Posted: 16 Oct 2013 12:10 PM PDT சிபிஐ துணை இயக்குநர் போல நடித்த அமித் அகர்வால் (31) புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |