Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சுசீந்திரம் பாலத்தை சீரமைக்கக் கோரி நாகர்கோவிலிலிருந்து நடைப்பயணம்

Posted: 10 Oct 2013 01:00 PM PDT

நூற்றாண்டு பழமை வாய்ந்த சுசீந்திரம் பெரிய பாலத்தை அகலப்படுத்தி சீரமைக்கக்கோரி அன்பர் கழகம் சார்பில் வியாழக்கிழமை நாகர்கோவிலிலிருந்து சுசீந்திரத்திற்கு நடைப்பயணம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

Posted: 10 Oct 2013 01:00 PM PDT

நாகர்கோவிலில் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் குளறுபடி

Posted: 10 Oct 2013 01:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் குளறுபடி உள்ளதாக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதி பாலகிருஷ்ணா மீண்டும் நியமனம்?

Posted: 10 Oct 2013 01:00 PM PDT

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் தமிழ முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவை மீண்டும் நியமிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2013 01:00 PM PDT

கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டடத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்து, பணிப் பாதுகாப்பு வழங்கக்கோரி

வீட்டை சேதப்படுத்திய பெண் கைது

Posted: 10 Oct 2013 12:59 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே வீட்டை சூறையாடியதாக மேரி லிட்டில் பிளவர் (40) என்பவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

குமரி பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவீன மரச் சிற்பங்கள்

Posted: 10 Oct 2013 12:59 PM PDT

கன்னியாகுமரி பூம்புகார் கைவினை பொருள்கள் விற்பனை நிலையத்தில் நவீன வகை மர சிற்பங்கள் மற்றும் அலங்கார பூ  ஜாடிகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பூம்பு

திமுக வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு

Posted: 10 Oct 2013 12:59 PM PDT

ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெள்ளிக்கிழமை (அக்.11) கருணாநிதி அறிவிக்க உள்ளார்.

குமரி மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா

Posted: 10 Oct 2013 12:59 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நவராத்திரி மற்றும் ஏடு தொடங்கும் விழா நடைபெறுகிறது.

சிகிச்சைக்காக 50 கி.மீ. அலைக்கழித்ததால் பழங்குடி பெண்ணின் சிசு இறந்ததாகப் புகார்

Posted: 10 Oct 2013 12:59 PM PDT

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கர்ப்பிணி  பெண்ணுக்கு உரிய நேரத்தில் மகப்பேறு சிகிச்சை கிடைக்காததால் அப்பெண்ணின்  குழந்தை இறந்துள்ளது என மலைவாழ் மக்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலைதி.ராமகிருஷ்ணன்

Posted: 10 Oct 2013 12:58 PM PDT

அகஸ்தீசுவரம் வட்டாரப் பகுதிகளில் போதுமான விதை நெல் கிடைக்காததால் விளை நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாணையில் திருத்தம்கோரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 10 Oct 2013 12:58 PM PDT

முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்யக்கோரி நாகர்கோவிலில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

2-ஜி ஊழல் கருத்து: சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் நிறுவனத்துக்கு தடை

Posted: 10 Oct 2013 12:58 PM PDT

2-ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த கருத்து தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனம் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாகர்கோவிலில் தடம் மாறி இயக்கப்பட்ட 2 மினி பஸ்கள் பறிமுதல்

Posted: 10 Oct 2013 12:58 PM PDT

நாகர்கோவிலில் தடம் மாறி இயக்கப்பட்ட மினிபஸ்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவிலில் ஆன்மிக கருத்தரங்கு

Posted: 10 Oct 2013 12:57 PM PDT

நாகர்கோவிலில் இறைஞானாலயம் என்ற ஆன்மிக அமைப்பு சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

மினி பஸ் கண்ணாடியை உடைத்த இருவர் கைது

Posted: 10 Oct 2013 12:57 PM PDT

கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியில் மினி பஸ் கண்ணாடியை உடைத்து

தங்கம்: பவுனுக்கு ரூ.120 உயர்வு

Posted: 10 Oct 2013 12:57 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ. 22 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாத்தான்குளம் கோவிலில் 151 திருவிளக்கு பூஜை

Posted: 10 Oct 2013 12:56 PM PDT

சாத்தான்குளம் செல்வ விநாயகர் கோவிலில்  151 திருவிளக்கு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க பேரறிவாளன் மனு

Posted: 10 Oct 2013 12:56 PM PDT

ராஜீவ்காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய பேரறிவாளனுக்கு உரிமை இல்லை என சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

Posted: 10 Oct 2013 12:56 PM PDT

விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவனந்தபுரம் இஸ்ரோ மைய விஞ்ஞானி சதீஷ் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. புதன்கிழமை பரிசுகளை வழங்கினார்.

Posted: 10 Oct 2013 12:56 PM PDT

:தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  சி.த.செல்லப்பாண்டியன் எம்.எல்.ஏ. புதன்கிழமை பரிசுகளை வழங்கினார்.

குரும்பூர்-ஏரல் சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 10 Oct 2013 12:56 PM PDT

குரும்பூர்-ஏரல் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியர்,

நவீன எரிவாயு கூடத்துக்கான இடம்:காயல்பட்டினத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 10 Oct 2013 12:55 PM PDT

காயல்பட்டினம் நகராட்சியில் நவீன எரிவாயு கூடம் மற்றும் குப்பை கொட்டும் இடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களை ஆட்சியர் ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

இளைஞரை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை

Posted: 10 Oct 2013 12:55 PM PDT

காயல்பட்டினத்தில் இளைஞரை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 10 Oct 2013 12:55 PM PDT

:ஓட்டப்பிடாரத்தில் புதன்கிழமை வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியும், நாகம்பட்டி மனோ கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாமும் நடைபெற்றது.

ஊழல் தடுப்பு செயற்குழுக் கூட்டம்

Posted: 10 Oct 2013 12:54 PM PDT

நாசரேத்தில் ஊழல் தடுப்பு மற்றும் மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

ஆர்டிஇ சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் செலவினத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்

Posted: 10 Oct 2013 12:54 PM PDT

தகவல் உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் சேரும் நலிவடைந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கான செலவினத்தை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 10 Oct 2013 12:54 PM PDT

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டியில் மாணவர்கள் பேரணி

Posted: 10 Oct 2013 12:53 PM PDT

கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் உலக மனநல நாளையொட்டி மாணவர், மாணவிகளின் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாரதி மணிமண்டபத்தின் தொன்மை மாறாமல் வளர்ச்சிப் பணி: ஆட்சியர்

Posted: 10 Oct 2013 12:52 PM PDT

எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

லஞ்சம்: நகராட்சி வருவாய் உதவியாளர் கைது

Posted: 10 Oct 2013 12:52 PM PDT

:கோவில்பட்டியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக நகராட்சி வருவாய் உதவியாளர் வேல்முருகனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

18 லட்சம் அரசு ஊழியருக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 10 Oct 2013 12:52 PM PDT

தமிழகத்தில் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வியாபாரி கொலை வழக்கு: 2 இளைஞர்கள் கைது

Posted: 10 Oct 2013 12:51 PM PDT

நாசரேத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த வியாபாரி கொலையில்  2 இளைஞர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த மகன் சாவு

Posted: 10 Oct 2013 12:51 PM PDT

காயல்பட்டினத்தில் தந்தையின் இறுதிச் சடங்குக்கு வந்த மகனும் இறந்தார்.

கயத்தாறு அருகேவேன் கவிழ்ந்து 24 பேர் காயம்

Posted: 10 Oct 2013 12:51 PM PDT

:கயத்தாறு அருகே வியாழக்கிழமை சாலையில் திடீரென வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்பட 24 பேர் காயமடைந்தனர்.

கோவில்பட்டி இறைச்சிக் கடைகளில் அதிகாரிகள் சோதனை

Posted: 10 Oct 2013 12:50 PM PDT

கோவில்பட்டியில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

குலசேகரன்பட்டினத்தில் நீர்,மோர் பந்தல் திறப்பு

Posted: 10 Oct 2013 12:50 PM PDT

குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி, தண்டுபத்து சண்முகபெருமாள் நாடார்-பிச்சமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.

பாமக மனுவுக்கு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Oct 2013 12:49 PM PDT

மரக்காணம் கலவரத்தின் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ரூ.4.44 கோடி இழப்பீட்டை செலுத்த பாமகவுக்கு அந்த நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது.

மனுநீதிநாள் முகாம்

Posted: 10 Oct 2013 12:49 PM PDT

கீழ்பென்னாத்தூரை  அடுத்த மேக்களூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 75 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Posted: 10 Oct 2013 12:49 PM PDT

செய்யாறை அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு: நீடாமங்கலம் நீதிமன்றத்தில் திவாகரன் ஆஜர்

Posted: 10 Oct 2013 12:49 PM PDT

ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு தொடர்பாக, நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் வியாழக்கிழமை ஆஜரானார்.

"மகளிரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியவர் ஜெயலலிதா

Posted: 10 Oct 2013 12:48 PM PDT

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கியதன் மூலம் மகளிரின் வாழ்க்கை தரத்தை ஜெயலலிதா மேம்படுத்தி உள்ளார் என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் பேசினார்.

உரிமம் பெறாத பட்டாசுக் கடைகள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 10 Oct 2013 12:48 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பட்டாசுக் கடை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.

"புதுச்சேரியில் 2014-ல் ஐ.ஐ.எம்.'

Posted: 10 Oct 2013 12:48 PM PDT

புதுச்சேரியில் 2014-ல் இந்திய மேலாண்மைக் கல்வி நிலையத்தை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பல்லம் ராஜு ஒப்புக் கொண்டுள்ளார் என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பணி நீக்கப்பட்ட பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு

Posted: 10 Oct 2013 12:48 PM PDT

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம், ஊத்தூர் ஊராட்சி பொதுமக்களுக்கு மனுநீதிநாள் முகாம் நரசிங்கபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

Posted: 10 Oct 2013 12:47 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம், ஊத்தூர் ஊராட்சி பொதுமக்களுக்கு மனுநீதிநாள் முகாம் நரசிங்கபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

வங்கிகள் திறக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுவதாகத் தெரியவில்லை

Posted: 10 Oct 2013 12:47 PM PDT

நாட்டில் புதிய வங்கிக் கிளைகள் திறக்கப்படுவதன் நோக்கம் நிறைவேறுவதாகத் தெரியவில்லை என மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.

அனுமதியின்றி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தொடங்கியதாக 34 பேர் கைது

Posted: 10 Oct 2013 12:47 PM PDT

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில் அனுமதியின்றி சிஐடியு சார்பில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தொடங்கியதால் 34 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் வியாழக்கிழமை விடுவித்தனர்.

உரிமம் பெறாத பட்டாசுக் கடைகள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 10 Oct 2013 12:47 PM PDT

: திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பட்டாசுக் கடை நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு

Posted: 10 Oct 2013 12:47 PM PDT

விழுப்புரம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த வி.மதியழகன், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 10 Oct 2013 12:46 PM PDT

ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  விழாவில் ஒன்றியக்குழுத்தலைவர் சாந்தி சேகர் தலைமை தாங்கி நலத்திட்ட உ

துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

Posted: 10 Oct 2013 12:46 PM PDT

திருவண்ணாமலை நகராட்சி சார்பில், துப்புரவுப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

804 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் வழங்கினார்

Posted: 10 Oct 2013 12:46 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர் 804 பேருக்கு, தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை இலவச சைக்கிள்களை வழங்கினார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் எ.வ.வேலு ஆஜர்

Posted: 10 Oct 2013 12:46 PM PDT

சொத்துக் குவி ப்பு வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

Posted: 10 Oct 2013 12:46 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவருக்கு மாவட்டக் கல்வி அலுவர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

Posted: 10 Oct 2013 12:44 PM PDT

குலசேகரன்பட்டினம்

Posted: 10 Oct 2013 12:44 PM PDT

பணியிட மாற்றம்: பள்ளியை பூட்டிய தலைமை ஆசிரியர்

Posted: 10 Oct 2013 12:44 PM PDT

பெரியகுளம் அருகே தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவரை ஆசிரியராக வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளியை தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பூட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பூட்டை உடைத்து பள்ளி திறக்கப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 10 Oct 2013 12:44 PM PDT

ஜவுளித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்

Posted: 10 Oct 2013 12:43 PM PDT

ஜவுளித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழகக் கைத்தறி, கதர் மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்களை மீட்க புதிய நடைமுறை: உள்துறை அமைச்சகம்

Posted: 10 Oct 2013 12:41 PM PDT

இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க புதிய நடைமுறையை கடைப்பிடிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்று உள்துறை அமைச்சக செயலர் அனில் கோஸ்வாமி கூறினார்.

7 மாதங்களில் ரூ. 600 கோடி சேவை வரி ஏய்ப்பு

Posted: 10 Oct 2013 12:36 PM PDT

கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் சுமார் ரூ. 600 கோடி அளவுக்கு சேவை வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.

மலைப்பாதையில் விபத்து: 20 யாத்ரிகர்கள் சாவு

Posted: 10 Oct 2013 12:35 PM PDT

பஞ்சாபில் வியாழக்கிழமை மலைப்பாதையில் சென்ற யாத்ரிகர்கள் வாகனம் 100 அடி பள்ளத்தில் விழுந்து 15 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இந்திரா காந்தி விருது

Posted: 10 Oct 2013 12:35 PM PDT

வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு (88), 2012-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படவுள்ளது.

ராகுல் பிரதமராக வேண்டும்: மத்திய அமைச்சர் ஷிண்டே

Posted: 10 Oct 2013 12:33 PM PDT

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கும், சோனியாவும் எனது அரசியல் குருநாதர்கள்

Posted: 10 Oct 2013 12:30 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் எனது அரசியல் குரு. அவர் நல்ல நோக்கம் கொண்ட உயரிய மனிதர் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பேர முறைகேடு: மத்திய அரசுக்கு சிபிஐ நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 10 Oct 2013 12:29 PM PDT

சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரூ. 3,600 கோடி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற உத்தரவையும் மீறி வெளிநாட்டுக்கு பயணம் செய்தது குறித்து பதிலளிக்க, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இரண்டு துறைகளுக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நாளந்தா பல்கலைக்கழகம்: 7 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 10 Oct 2013 12:25 PM PDT

பிகாரில் உள்ள உலகின் மிகப் பழைமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்து, சர்வதேசத் தரத்தில் உயர்த்துவதற்கு 7 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஜவுளித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்

Posted: 10 Oct 2013 12:25 PM PDT

ஜவுளித் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழகக் கைத்தறி, கதர் மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜன் வலியுறுத்தினார்.

7 மாதங்களில் ரூ. 600 கோடி சேவை வரி ஏய்ப்பு

Posted: 10 Oct 2013 12:25 PM PDT

கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் சுமார் ரூ. 600 கோடி அளவுக்கு சேவை வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.

ஹெலிகாப்டர் பேர முறைகேடுமத்திய அரசுக்கு சிபிஐ நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 10 Oct 2013 12:24 PM PDT

சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரூ. 3,600 கோடி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்ற உத்தரவையும் மீறி

2ஜி:  சாக்கோவுக்கு பாஜக கண்டனம்

Posted: 10 Oct 2013 12:23 PM PDT

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான அறிக்கையை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட்டு ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக் குழு) தலைவர் பி.சி. சாக்கோ நிறைவேற்றிய விதம்

மேற்கு வங்கத்தில் உருவான 20 அடி உயர துர்கா சிலை தில்லி வந்தது

Posted: 10 Oct 2013 12:22 PM PDT

மத்திய தில்லி, ஆரம்பாக் பகுதியில் கொண்டாடப்படும் துர்கா பூஜை வழிபாட்டுக்காக மேற்கு வங்கத்தில் இருந்து துர்கா சிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்ணனை கொன்றவருக்கு ஆயுள் சிறை

Posted: 10 Oct 2013 12:22 PM PDT

தகராறில் அண்ணனைக் கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பெண்கள் பாதுகாப்பு: துர்கா பூஜையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 

Posted: 10 Oct 2013 12:21 PM PDT

பெண் கடவுள் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்ற துர்கா பூஜையில்  பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தில்லிவாசிகள் இந்த ஆண்டு முடிவு செய்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்க ஜூவாலாவுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 10 Oct 2013 12:20 PM PDT

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் விளையாட ஜுவாலா கட்டாவை அனுமதிக்க வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நடவடிக்கை கோரி போராட்டம் வலுக்கிறது

Posted: 10 Oct 2013 12:20 PM PDT

பாலியல் புகாருக்கு உள்ளான தில்லி பீமா ராவ் அம்பேத்கர் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லியில் போரட்டம் வலுத்து வருகிறது.

ஷீலா தீட்சித் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்

Posted: 10 Oct 2013 12:19 PM PDT

தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் தவறான கருத்துகள் மூலம் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார் என்று பாஜக கும்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக் கட்சியின் தில்லி பிரதேச தலைவர் விஜய் கோயல் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை : 

10 அமைச்சர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் கடிதம்

Posted: 10 Oct 2013 12:19 PM PDT

: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டே பிற மத்திய அமைச்சகங்களும் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்து மத்திய அமைச்சகர்களுக்கு மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

ஃபிஞ்ச் அதிரடி; ஆஸ்திரேலியா 201

Posted: 10 Oct 2013 12:19 PM PDT

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்துள்ளது.

ராகுல் பிரதமராக வேண்டும்: மத்திய அமைச்சர் ஷிண்டே

Posted: 10 Oct 2013 12:19 PM PDT

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.

200-வது டெஸ்டுடன் சச்சின் ஓய்வு!

Posted: 10 Oct 2013 12:18 PM PDT

கடந்த 24 ஆண்டுகளாக ரன் குவிக்கும் எந்திரமாக இயங்கி வந்த சச்சின் டெண்டுல்கர், தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு இந்திரா காந்தி விருது

Posted: 10 Oct 2013 12:18 PM PDT

வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எஸ். சுவாமிநாதனுக்கு (88), 2012-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படவுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதம் வியப்பாக உள்ளது: ஷிண்டே

Posted: 10 Oct 2013 12:18 PM PDT

தெலங்கானா விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பது வியப்பளிப்பதாக  உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

கால்வாயில் விழுந்து லாரி டிரைவர் சாவு

Posted: 10 Oct 2013 12:17 PM PDT

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் மழைநீர் கால்வாயில் விழுந்து வடமாநில டிரைவர் புதன்கிழமை உயிரழந்தார்.

காஞ்சிபுரம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

Posted: 10 Oct 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது.

100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் சாலை மறியல்

Posted: 10 Oct 2013 12:17 PM PDT

காஞ்சிபுரம் அருகே 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரத்தை அடுத்து காரை ஊராட்சி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்டப்

தொழிற்சங்க கொடியேற்று விழா

Posted: 10 Oct 2013 12:16 PM PDT

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பாரதிய மஸ்தூர் யூனியன்(பி.எம்.எஸ்.) தொழிற்சங்க கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் புதன்கிழமை  நடைபெற்றது.

கண் பார்வை விழிப்புணர்வு தின மனிதச் சங்கிலி

Posted: 10 Oct 2013 12:16 PM PDT

உலக கண்பார்வை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி நடைபெற்றது.

2.93 லட்சம் பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 10 Oct 2013 12:16 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2.93 லட்சம் பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி விநியோகிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டா பெயர் மாற்ற முகாம்: 208 பேர் மனு

Posted: 10 Oct 2013 12:16 PM PDT

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டா மாற்றம் குறித்த சிறப்பு முகாமில் 208 பேர் மனு அளித்துள்ளனர்.

அக்டோபர் 11 மின் தடை

Posted: 10 Oct 2013 12:15 PM PDT

விமானப் படைக்கு ஆள்கள் தேர்வு

Posted: 10 Oct 2013 12:14 PM PDT

விமானப் படைக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்திய விமானத் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

விதை விற்பனை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 10 Oct 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை மையங்களில் விதையின் தரம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 புதிய தொடக்கப் பள்ளிகள்

Posted: 10 Oct 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 2 தொடக்கப் பள்ளிகள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவுக்கு உள்பட்ட ஓணம்பாக்கத்தில் அசேபா சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தொடக்கப் பள்ளி நடத்தப்பட்டு வந்தது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்

Posted: 10 Oct 2013 12:14 PM PDT

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 5 பேர் வியாழக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

796 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Posted: 10 Oct 2013 12:13 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் மற்றும் திருக்கழுகுன்றம் பகுதிகளில் 796 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டியில் ரூ.1.44 கோடியில் நலத்திட்டப் பணிகள்

Posted: 10 Oct 2013 12:12 PM PDT

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடி மதிப்பில் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெண் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

Posted: 10 Oct 2013 12:07 PM PDT

புழல் அருகே பெண்ணை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

திருவள்ளூரில் இரவு வரை "அம்மா குடிநீர்' விற்பனை

Posted: 10 Oct 2013 12:07 PM PDT

"தினமணி' செய்தி எதிரொலியாக திருவள்ளூர் பஸ் நிலையத்தில் "அம்மா' குடிநீர் விற்பனை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™