Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் தகவல்

Posted: 29 Oct 2013 11:01 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் டிசம்பர் 1–ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 9–ந்தேதி தொடங்குகிறது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விலைவாசி உயர்வே மக்களின்

ஆந்திரா: மழையால் பயிர்கள் நாசம் - மேலும் 7 விவசாயிகள் தற்கொலை

Posted: 29 Oct 2013 10:53 PM PDT

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள்

மணிப்பூரில் முதல்–மந்திரி வீடு அருகே குண்டு வெடித்து 2 பேர் பலி

Posted: 29 Oct 2013 10:26 PM PDT

மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலில் நேற்று அங்குள்ள தங்கல் பஜாரில் குண்டு வெடித்தது. அதில் 5 பேர் காயம் அடைந்தனர். மார்க்கெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு வாகனத்தில் இந்த குண்டு வைக்கப்பட்டு இருந்தது

எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா? – ரம்யா

Posted: 29 Oct 2013 10:15 PM PDT

பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு

சந்திரபாபுநாயுடு மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார்: நடிகை ரோஜா கடும் தாக்கு

Posted: 29 Oct 2013 09:38 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதி நடிகை ரோஜா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– இரண்டு முறை தோல்வி அடைந்து தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வர முடியாததால் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதோ என சந்தேகமாக

ஐதராபாத் அருகே பஸ்சில் தீப்பிடித்து 42 பயணிகள் பலி

Posted: 29 Oct 2013 07:55 PM PDT

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. வால்வோ வகையைச் சேர்ந்த அந்த ஏ.சி. பஸ்சில் 47 பயணிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 49 பேர் இருந்தனர். இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு அந்த பஸ் ஆந்திராவில் மெகபூப்நகர் மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் பாலம் என்ற ஊரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்

டெல்லி செங்கோட்டையை பாதுகாக்க நிபுணர்கள் குழு அமைப்பு

Posted: 29 Oct 2013 05:05 PM PDT

யமுனை நதிக்கரையில் கம்பீரமாக நிற்கும் டெல்லி செங்கோட்டை மெகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது ஆகும். 1638-ம் ஆண்டு தொடங்கிய டெல்லி செங்கோட்டையின் கட்டுமான பணிகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு 1648-ல் நிறைவடைந்தது.

ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைக்க கூடாது என்றால் பேரரசர் என்றா அழைப்பது?: பா.ஜ.க. கிண்டல்

Posted: 29 Oct 2013 04:33 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பொதுக் கூட்டங்களில் பேசும் போது காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை பற்றி பேசுகையில் அவரது பெயரை குறிப்பிடாமல் 'ஷெஹ்ஜாதா' (பட்டத்துக்குரிய இளவரசர்) என்று கூறி வருகிறார்.

குஜராத் மாநிலம் தொடர்பான பிரச்சினைகளை பேச நேரம் ஒதுக்குவதற்கு பிரதமர் மறுத்து விட்டார்: மோடி வருத்தம்

Posted: 29 Oct 2013 03:54 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் நேற்று பங்கேற்றார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு

மோடியின் பொய் பேச்சு: திக்விஜய் சிங் கூறிய 'டுவிட்டர் கதை'

Posted: 29 Oct 2013 03:27 PM PDT

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களில் பேசும் போது தொடர்ந்து பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி வருவதாக குறைகூறும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், தனது கூற்றுக்கு உவமையாக 'டுவிட்டர்' மூலம் ஒரு கதை சொல்லி இருக்கிறார்

ரூ. 50-க்கு டெல்லி அரசு விற்கும் அழுகல் வெங்காயத்தை புறக்கணிக்கும் குடும்பத் தலைவிகள்

Posted: 29 Oct 2013 01:50 PM PDT

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பீதியால் நெரிசல் - மதக்கலவரம் ஏற்பட்டு மக்கள் சாவதற்கு தான் பாட்னா வெடிகுண்டு தாக்குதல்: பிடிபட்டவன் வாக்குமூலம்

Posted: 29 Oct 2013 12:54 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

மாவோ கொரில்லாக்களுடன் துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் பலி

Posted: 29 Oct 2013 12:06 PM PDT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

செவ்வாய்த் திட்டத்திற்கான கவுண்டவுன் ஞாயிறன்று தொடங்குகின்றது

Posted: 29 Oct 2013 11:02 AM PDT

இந்தியாவின் கனவுத்திட்டமான செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் மூலம் செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் பணிக்கான கவுண்டவுன் வரும் ஞாயிறன்று துவங்க உள்ளது. வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி மாலை இந்திய நேரப்படி 2 மணி 36 நிமிடத்திற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட்

தீபாவளி நெரிசலை சமாளிக்க சென்னை - பெங்களூர் இடையே மேலும் 10 சிறப்பு ரெயில்கள்

Posted: 29 Oct 2013 10:24 AM PDT

தீபாவளியையொட்டி சென்னை - பெங்களூர் மார்க்கத்தில் மேலும் 10 சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தென்னக ரெயில்வே இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

உ.பி. கோட்டையில் தங்கம் எதுவும் இல்லை: தொல்லியல்துறை ஆய்வு பணி நிறுத்தம்

Posted: 29 Oct 2013 09:47 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 19-ம் நூற்றாண்டை சேர்ந்த ராஜாராவ் ராம்பக்ஸ் சிங் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 1000 டன் தங்கம் பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி சாமியார் ஷோபம் சர்க்கார் கனவு கண்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் சோனியாவிற்கும் அவர் கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய தொல்லியல் துறை அந்த கோட்டையின் சுற்றுப்புறப்பகுதியில்

பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்: பிரதமர் முன்னிலையில் மோடி பேச்சு

Posted: 29 Oct 2013 07:54 AM PDT

பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அதே மேடையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியும் கலந்துகொண்டு பேசினார். அப்போது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால்

அரசு அலுவலகங்களில் இனி யாகூ-ஜிமெயில் பயன்படுத்த முடியாது

Posted: 29 Oct 2013 06:59 AM PDT

அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படும் தரவு சேவைகள் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்குவதை முற்றிலும் தடை செய்யவேண்டி வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் யாகூ, ஜிமெயில் வலைத்தளங்களின் உபயோகத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கம் இனி தனது உத்தியோகபூர்வ தகவல்களுக்கு கொள்கை தேசிய தகவல் மையத்தின்(நிக்) இணையதளத் தொடர்புகளையே பயன்படுத்த முடிவு

சர்தார் வல்லபாய் படேல் மதச்சார்பற்ற தலைவர்: மன்மோகன் சிங் புகழாரம்

Posted: 29 Oct 2013 06:43 AM PDT

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர். பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:- நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக, மதச்சார்பற்ற தலைவராக சர்தார் வல்லபால் படேல் திகழ்ந்தார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களின்

கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார்

Posted: 29 Oct 2013 06:09 AM PDT

மகராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜல்னா மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™