Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜோதிடர்கள் சொன்னதால் வீடு மாறும் மம்தா பானர்ஜி

Posted: 07 Oct 2013 11:08 PM PDT

மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தெற்கு கொல்கத்தாவில் உள்ள காளிகாட் என்ற பகுதியில் வசித்து வருகிறார். காளிகாட்டில் ஹரிஸ் சட்டர்ஜி தெருவில் உள்ள அந்த வீடு மம்தாவின் பூர்வீக வீடாகும். திருமணம் செய்து கொள்ளாத மம்தா, அந்த வீட்டில்தான் சகோதரருடன் கூட்டுக்கு குடும்பமாக வசித்து வருகிறார்.

ஆந்திராவில் விரைவில் புயல் தாக்கும்: வானிலை இலாகா எச்சரிக்கை

Posted: 07 Oct 2013 11:03 PM PDT

கடந்த ஆண்டு 'நீலம்' புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு

பீகாரில் ஒரே நாளில் ஜனாதிபதி–மோடி சுற்றுப்பயணம்: நிதிஷ்குமார் மீது பா.ஜ.க. புகார்

Posted: 07 Oct 2013 10:33 PM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே மோடியை எதிர்த்து வரும் பீகார் முதல்–மந்திரி சமீபத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார். எனவே, பீகார்

கிரண்குமார் ரெட்டியை பதவியில் இருந்து நீக்குங்கள்: தெலுங்கானா தலைவர்கள் கோரிக்கை

Posted: 07 Oct 2013 10:31 PM PDT

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தலைவர் கே.டி.ராமராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– சீமாந்திராவில் தற்போது நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில் பெரிய சதி திட்டமே உள்ளது. முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி அந்த சதி திட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறார். எனவே முதல்வர் பதவியில் இருந்து கிரண்குமார் ரெட்டியை உடனே நீக்க வேண்டும். அவரை பதவியில் இருந்து விரட்டினால்தான் சீமாந்திராவில்

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் கடன்: ராஜ்நாத்சிங் வாக்குறுதி

Posted: 07 Oct 2013 10:12 PM PDT

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா 375 கி.மீ. தூர பாத யாத்திரை மேற்கொண்டது. இதன் நிறைவு விழா நேற்று அவுரங்காபாத்தில் நடந்தது. இதில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு 5 கி.மீ. தூரம் விவசாயிகள், தொண்டர்களுடன் நடந்து சென்றார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:–

வாஜ்பாய், அத்வானியை விட மோடி பெரிய தலைவர் அல்ல: ப.சிதம்பரம் கடும் தாக்கு

Posted: 07 Oct 2013 09:53 PM PDT

வாஜ்பாய், அத்வானியை விட மோடி பெரிய தலைவர் அல்ல என்று ப.சிதம்பரம் கூறினார். மத்திய மந்திரி ப.சிதம்பரம் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பற்றியும், காங்கிரஸ் அரசு மீதான ஊழல் புகார்கள் குறித்தும் கேட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் அளித்த பதில்கள் வருமாறு:– இப்போது கடந்த காலங்களைப் பற்றி யாராவது எழுதுகிறார்களா? நாம் இப்போது வாஜ்பாயை எதிர்த்து நிற்கவில்லை. நரேந்திரமோடியைத்தான் சந்திக்கிறோம். அவர் சதுரங்க கட்டத்தில் தூக்கி வைக்கப்படும் காய் போன்றவர் வாஜ்பாய், அத்வானி போன்று நரேந்திரமோடியை நான் பெரிய தலைவராக நினைக்கவில்லை. நாட்டில் இப்போது ஊழல் பற்றி பெரிதாக பேசப்படுவதாக சொல்கிறார்கள். சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், குஜராத்தில் தான் ஊழல் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட தயாராக உள்ளது. அது இந்தியில் மட்டுமல்ல, தமிழ், தெலுங்

இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உடனடி விசா திட்டம்

Posted: 07 Oct 2013 08:24 PM PDT

இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக உடனடி விசா பெறும் திட்டத்தை இன்னும் 40 நாடுகளுக்கு அரசு அனுமதித்துள்ளது. இணையதளத்தில் விண்ணப்பம் அளிக்கும் முறையை உருவாக்கி மூத்த குடிமக்களுக்கும், மாநாடுகளில் கலந்துகொள்ள வருபவர்களுக்கும் உடனடியாக விசா கிடைக்குமாறு புதிய நடைமுறைகளை இந்தியா நேற்று அறிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாட்டவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தால்

பிரதமர் மன்மோகன்சிங்குடன் உள்துறை மந்திரி ஷிண்டே சந்திப்பு

Posted: 07 Oct 2013 08:14 PM PDT

ஆந்திரா மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்திலும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லியிலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப்பேசினார். அப்போது போராட்டம் நீடித்து வரும் ஆந்திர மாநில நிலைமை குறித்து பிரதமரிடம் அவர்

டெல்லி கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தீக்குளித்த பெண் உயிரிழந்தார்

Posted: 07 Oct 2013 03:54 PM PDT

டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர் தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார்

கொல்கத்தா நகரில் சைக்கிள் ஓட்ட தடை: மம்தா அரசுக்கு எதிராக வணிகர்கள் ஆவேசம்

Posted: 07 Oct 2013 03:23 PM PDT

கொல்கத்தாவின் வாகன நெரிசலை குறைக்க நினைத்த மம்தா பானர்ஜி இயந்திரம் பொருத்தப்படாமல் மெதுவாக செல்லும் சைக்கிள், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் கொல்கத்தா நகரில் உள்ள சில சாலைகளில் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய டெல்லி பெண்ணை ஜாமினில் விடுவிக்க கோர்ட் மறுப்பு

Posted: 07 Oct 2013 02:50 PM PDT

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டாள்

மந்திரிகளுக்கு ராணுவம் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு: மத்திய அரசு விசாரணை நடத்த காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

Posted: 07 Oct 2013 02:24 PM PDT

தலைமை ராணுவ தளபதியாக வி.கே.சிங் பதவி வகித்தபோது உருவாக்கப்பட்ட ரகசிய உளவுப்படை நிதியில் ரூ.8 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும், காஷ்மீர் மாநிலத்தில் உமர் அப்துல்லா ஆட்சியை கவிழ்ப்பதற்கு அந்த உளவுப்படை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆங்கிலப் பத்திரிகை

மும்பை ரெயில்களில் மந்திரம், பில்லி, சூனியம் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை

Posted: 07 Oct 2013 12:03 PM PDT

பில்லி, சூனியம், மந்திரம் போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிவந்த நரேந்திர தபோல்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி புனேயில் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மூட நம்பிக்கைகளை பரப்பி வருவோரை சிறையில் அடைக்கும் சட்டத்தை மகாராஷ்டிரா அரசு

எல்லைப் பகுதியில் பாக். தீவிரவாதிகளுடன் 15வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை: ஏராளமான ஆயுதங்கள் பிடிபட்டன

Posted: 07 Oct 2013 11:35 AM PDT

பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலர் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லைக் கோட்டின் வழியாக கடந்த மாதம் 24ம் தேதி இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றனர். இந்திய ராணுவ வீரர்கள் விழிப்புடன் செயலாற்றி இந்த ஊடுருவல் திட்டத்தை முறியடித்தனர்

ஐதராபாத்-கர்நாடக பகுதிக்கு தனி மேம்பாட்டு வாரியம் அமைப்பது குறித்து மத்திய அமைச்சரவை நாளை முடிவு

Posted: 07 Oct 2013 10:12 AM PDT

கர்நாடகாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பீதர், குல்பர்கா, ராய்ச்சூர், கொப்பால், பெல்லாரி மாவட்டங்களும், ஆந்திரப்பிரதேசத்தில் இருந்த தெலுங்கான பகுதியும் முன்பு ஐதராபாத் நிஜாமின் ஆளுகைக்குள் இருந்த பகுதியாகும்

மோடியை பாராட்டிய ஆந்திர காங்கிரஸ் எம்.பி.

Posted: 07 Oct 2013 09:10 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்திய நாள் முதல், காங்கிரஸ் கட்சி அவரது செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மோடியை பாராட்டியிருக்கிறார். குண்டூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான

தெலுங்கானாவை உருவாக்க முடிவெடுக்கும் தருணம் இது அல்ல: சரத் யாதவ்

Posted: 07 Oct 2013 09:00 AM PDT

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து கடந்த 3 நாட்களாக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திரபவனில் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவரை

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நியமனம்

Posted: 07 Oct 2013 07:51 AM PDT

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சாரியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும். 57 வயதான

கர்நாடக சிவன் கோவிலில் விதவைப் பெண்களுக்கு அர்ச்சகர் பணி

Posted: 07 Oct 2013 07:09 AM PDT

கணவனை இழந்த பெண்கள் எந்த நிகழ்ச்சியிலிருந்தும் பொதுவாக ஒதுக்கி வைக்கப்படுவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் சமூகத் துறவி நாராயண குருவின் விருப்பப்படி, இரண்டு விதவைப் பெண்களுக்கு குத்ரோலியில் உள்ள கோகர்ணநாதேஸ்வரர் கோவிலின் இறைபணிக்குரிய அர்ச்சகர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.

ஷிண்டேயின் உத்தரவை குப்பை தொட்டியில் வீசுங்கள்: பா.ஜ.க. முதல் மந்திரிகளுக்கு வெங்கையா வேண்டுகோள்

Posted: 07 Oct 2013 06:13 AM PDT

தீவிரவாதம் என்கிற பெயரில் உரிமைகளை மீறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது சட்ட அமலாக்க பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதையடுத்து முஸ்லிம் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சமீபத்தில் கடிதம் எழுதினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™