Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நியூயோர்க் ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச உரை: அணிதிரளத் தயாராகிவரும் வட அமெரிக்கத்தமிழர்கள்!

Posted: 06 Sep 2013 11:05 PM PDT

நியூ யோர்க் ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் கூட்டத் தொடரின் முதலாம்நாளில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், எதிர்ப்பினை காட்டுவதற்கு வட அமெரிக்கத் தமிழர்கள் அணிதிரளத் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பொங்குதமிழ் என்ற முழக்கத்துடன், இந்த ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதாக அறியமுடிகின்றது. ஐ.நா பொதுச்சபையின் வருடாந்த கூட்டத் தொடர் வரும் செப்ரெம்பர் 24ம் நாள் தொடக்கம் ஒக்ரோபர் 4ம் நாள் […]

இலங்கைக்கு போர்க் கப்பல்கள் வழங்கக் கூடாது: ராமதாஸ்

Posted: 06 Sep 2013 10:59 PM PDT

இலங்கைக்கு போர்க் கப்பல்கள் வழங்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் கடல் பரப்பை பாதுகாக்க இரு போர்க் கப்பல்களை அந்த நாட்டுக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. கடந்த 2007-ஆம் ஆண்டில் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சி.ஜி.எஸ். வராஹா, சி.ஜி.எஸ். விக்ரஹா என்ற இரு போர்க் கப்பல்களை இலங்கைக்கு இந்தியா குத்தகைக்கு வழங்கியது. 2009-ஆம் […]

பாடசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Posted: 06 Sep 2013 10:49 PM PDT

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகள் 5 பேர் பெற்றோர்களுக்கு சொல்லாமல் மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றதால், அவர்களைக் காணவில்லை என பெற்றோர்களும், ஆசிரியர்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசி (15), கார்த்திகா (15), மப்பேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரீத்தா (15), இருளஞ்சேரியைச் சேர்ந்த சர்மிளா (16), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (15) ஆகியோர் கீழச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். வியாழக்கிழமை ஆசிரியர் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நைஜீரியாவில் 15 பேரை சுட்டுக்கொன்ற மர்ம மனிதன்

Posted: 06 Sep 2013 10:45 PM PDT

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள காஜிரன் நகர் சந்தைக்குள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன், கண்மூடித்தனமாக சுட்டதில் பொதுமக்கள் 15 பேர் பலியாகினர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் புலாமா என்பவர் கூறுகையில், சந்தையில் வர்த்தகர்கள் மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அதிரடியாக நுழைந்து 15 பேரை சுட்டுக்கொன்றனர் என்றார்.

திருமணத்திற்கு பெண் தேடும் பெண்

Posted: 06 Sep 2013 10:27 PM PDT

பாகிஸ்தானில் கணவருடன் வசித்த பெண், தற்போது தனக்கொரு மனைவியை தேடி வரும் விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் நகினா. இவரது கணவர் காலீத், ஸ்பெயின் நாட்டில் பணிபுரிகிறார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மனைவி நகினாவை வந்து பார்த்து செல்வார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் நகினாவுக்கு குழந்தை இல்லை. மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் படி கணவர் காலீத் வற்புறுத்தினார். இதையடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகினார் நகினா. இவரை பரிசோதித்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு

Posted: 06 Sep 2013 10:16 PM PDT

உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. 130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கம் இளைஞர்களை கொலை செய்கிறது!

Posted: 06 Sep 2013 10:07 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் 67வது வருடப் பூர்த்தி நிகழ்வில் நேற்று உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் இளைய சமூகத்தினரை கொலை செய்து வருவதாக குற்றம் சுமத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் 67 வது வருட பூர்த்தி மாத்திரமே எதிர்க்கட்சியில் இருந்து கொண்டாடப்படுகிறது. 68 வது வருடப் பூர்த்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் என்று கடசியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி நிச்சயமாக ஆட்சியமைக்கும் […]

ஈழத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்

Posted: 06 Sep 2013 09:26 PM PDT

25 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் நடைபெறப் போகிறது வட மாகாணத் தேர்தல். கொழும்பு வாழ் தமிழரும் இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியிருக்கிறது. பழுத்த அரசியல் வாதிகள் பலர் கூட்டமைப்பினுள் இருக்க அரசியலுக்கு புதியவரான விக்னேஸ்வரன் பேரினவாத சிங்கள அரசியலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். கேள்வி – ராஜபக்ச குடும்பத்தினரின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலத்தை மீறி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது-மகிந்த ராஜபக்ச

Posted: 06 Sep 2013 09:20 PM PDT

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாது போனதை, இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களால் செய்து விட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வடக்கு கிழக்கை இணைந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட அலகை உருவாக்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், "நாட்டைப் பிரிக்க ஒரு போதும் நான் அனுமதிக்கமாட்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் […]

கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் பிரபாகரனின் கொள்கைகள்

Posted: 06 Sep 2013 09:15 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை, காணி, காவல்துறை, கல்வி, சமூக, பொருளாதார அதிகாரங்களை கோருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். இவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கைகள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர், பிரபாகரனை ஒரு வீரன் என்று குறிப்பிட்டுள்ளார். […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™