Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கினால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Posted: 23 Sep 2013 08:34 PM PDT

ravana

ravanaவடக்கிற்கு 13ம் திருத்தச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டமொன்று உருவாக்கப்படும். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி விக்னேஸ்வரனுக்கு தனி இராச்சியம் அமைக்க இடமளிக்க முடியாது. 13ம் திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிட்டால், இந்தியாவைப் பயன்படுத்தி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு முயற்சிக்கும். மீண்டும் பயங்கரவாதத்தை தூண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என ராவணா பலய தெரிவித்துள்ளது,

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு முதலமைச்சருக்கு நடந்த சோகம்

Posted: 23 Sep 2013 08:25 PM PDT

vadakku

vadakkuவடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை  நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வாகன சாரதி  வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் வாகனத்தை எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தியுள்ளார்.

அங்கிருந்த ஊழியர்கள் அந்த வாகனத்திற்கு சுமார் 60 லீற்றர் வரை எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்துள்ளனர்.

தற்செயலாக அவதானித்தபோது அந்த வாகனத்திற்கு பெற்றோலுக்கு பதிலாக டீசலை நிரப்பிக்கொண்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வாகனம் திருத்துனரை அழைத்துவந்து வாகனத்தின் எரிபொருள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்ததன் மீளவும் பொருத்தி பெற்றோல் நிரப்பினர்.

மூன்று மணிநேரத்திற்கு பின்னரே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

இதேவேளை அவருடைய வாகனத்திற்கு பின்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன், தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் ஆகியோரும் பயணத்தை மேற்கொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெருக்கடியான நிலைமைக்கு முகம்கொடுத்திப்பதாக கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த  வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி டி. கே. அபயரட்ண அவருக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பினையும் வழங்கியிருந்தார்.

இதேவேளை அங்கு பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால சி. வி. விக்னேஸ்வரனுக்கு கைலாகு கொடுத்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு மாகாணசபையுடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் – அமெரிக்கா

Posted: 23 Sep 2013 07:09 PM PDT

american-flag-2a

american-flag-2aபுதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், "மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரெம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாணசபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர்.

மாகாணங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பொதுமக்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவாக செயற்பட சிறிலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

குறிப்பாக, பரந்தளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ஏற்புடையதல்ல

Posted: 23 Sep 2013 06:55 PM PDT

Commonwealth

Commonwealthஇலங்கை அரசு ஒரின சேர்க்கையாளர்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் துன்புறுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள பொதுநலவாய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் தலைவர் கலாநிதி பூர்ண சென், இவ்வாறான ஒரு நாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள்  மாநாட்டை நடத்துவது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.

பிரித்தானியா Brighton இல் இடம்பெற்ற தொழில்கட்சி நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறாக தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வு எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளை இலங்கை பின்பற்ற வேண்டும். எனவே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது ஒரின சேர்க்கையாளர்களின் மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை காப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும் சென் கோரியுள்ளார். அதேவேளை, இலங்கையின் அரசியல் அமைப்பின் 365ஏ சரத்தின்படி ஒரே இனத்தில் பாலியல் உறவு கொள்ளுதல் குற்றமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வட மாகாணத்தின் முழுமையான விருப்பு வாக்கு விபரம்

Posted: 23 Sep 2013 08:20 AM PDT

Northern_Province-298x212

Northern_Province-298x212நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் மக்களின் விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற உறுப்பினர்களின் முழு விபரம் வருமாறு: வட மாகாணம் - யாழ். மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.சி.வி. விக்கினேஸ்வரன் - 132,255 2.அனந்தி சசிதரன் - 87,870 3.தர்மலிங்கம் சித்தார்த்தன் - 39,715 4.பாலச்சந்திரன் கஜதீபன் - 29,669 5.இ.ஆர்னோல்ட் - 26,888 6.கந்தையா சிவஞானம் - 26,747 7.எம்.கே.சிவாஜிலிங்கம் - 22,660 8.பொன்னுத்துரை ஐங்கரநேசன் - 22,268 9.எஸ்.சுகிர்தன் -20,541 10.கே.சயந்தன் -20,179 11.விந்தன் கனகரத்தினம் -16,463 12.ஏ.பரம்சோதி -16,359 13.கந்தையா சர்வேஸ்வரன் -14,761 14.வி.சிவயோகம் - 13,479 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1. கந்தசாமி கமலலேந்திரன் - 13,632 2. அங்கஜன் இராமநாதன் - 10,034 வட மாகாணம் - முல்லைத்தீவு மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி 01.அன்டனி ஜெகநாதன் - 9309 02.சிவப்­பி­ர­காசம் சிவ­யோகன் - 9296 03.துரை­ராஜா ரவி­கரன் - 8868 04.கனக சுந்­தரம் சுவாமி வீர­பாகு - 8702 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 01.அஹமட் லெப்பை காசிம் - 1726 வட மாகாணம் - கிளிநொச்சி மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி 01.பசு­பதி அரி­ய­ரட்ணம் - 27264 02.தம்­பி­ராசா குரு­கு­ல­ராசா - 26427 03.சுப்­பி­ர­ம­ணியம் பசு­ப­திப்­பிள்ளை - 26132 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 01.வை. தவ­நாதன் - 3753 வட மாகாணம் - வவுனியா மாவட்டம் இலங்கை தமிழரசு கட்சி 01.ப. சத்­தி­ய­லிங்­கம் - 19656 02.ஜி.ரி. லிங்­க­நாதன் - 11901 03.ம. தியா­க­ராஜா, - 11681 03.ஆர். இந்­தி­ர­ராசா - 11535 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி 01.தர்­ம­பால சென­வி­ரத்ன - 5148 02.ஏ. ஜய­தி­லக்க - 4806 வட மாகாணம் - மன்னார் மாவட்டம் இலங்கை தமிழரசுக்கட்சி 01.சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா- 12927 02.சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ் - 12827 03.வைத்தியகலாநிதி ஜீ.குனசீலன்- - 12260 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 01.றிப்கான் பதியுதீன் - 11130 ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் 01.கபிர் முகமட் ரயிஸ் - 3165

This posting includes an audio/video/photo media file: Download Now

தொண்டை வலி நீங்க…

Posted: 23 Sep 2013 07:56 AM PDT

strep_throat_infection

strep_throat_infection* இருமல், தொண்டை வலி இருப்பவர்கள், சிறிதளவு வசம்பையும், மிளகையும் மென்று, தின்னலாம். * பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடிக்கலாம். தொண்டை வலி நீங்கும். * உப்பு நீரால் கொப்பளிப்பது நல்லது. * சூடான நீராகாரங்களைப் பருகுவதும் நல்ல பலனைத் தரும். * நீராவி பிடிப்பது (தொண்டையில் படும்படி) பிடிக்கலாம். * சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்துத் தொண்டையில், அதாவது கழுத்துப் பகுதியில் தடவுங்கள். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். * சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கரகர என்று செய்தல் வேண்டும் * வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலி போகும் என்று சொல்வார்கள். * கற்பூரவல்லி இலை சாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும். * துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது. * தண்ணீரைக் காய்ச்சும்போது,ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம். தொண்டைக்கு இதமாக இருக்கும். * இரவு படுக்கும்போது, பாலில் மஞ்சள்தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்ட‌ ‘தயா மாஸ்டர்’

Posted: 23 Sep 2013 07:47 AM PDT

daya_master

daya_masterஇன்று மாலை ரில்கோ ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரை உத்தியோகபூர்வமாக அக் கட்சியால் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் திடீரென வந்து கலந்து கொண்டுள்ளார். தயா மாஸ்டர் அவர்கள் டான் ரீவியின் முக்கிய பொறுப்பில் இருந்தவராவார். இவர் அரசியலில் கலந்த பின்னர் டான் ரீவியின் பொறுப்பில் இருந்து இவரை விடுவித்ததாக டான் ரீவியின் உரிமையாளர் குகநாதன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இவர் சுதந்திரக் கட்சியால் ஒதுக்கப்பட்டு வேட்பாளராக தெரிவு செய்யப்படாத நிலையில் இருந்துள்ளார். இந் நிலையில் எவரும் எதிர்பார்க்காத வண்ணம் இவர் ரில்கோ ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரு போனஸ் ஆசனங்கள் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்துள்ள நிலையில் சில வேளை அவ் ஆசனத்தில் ஒன்று தனக்கும் வழங்கப்படலாம் என எண்ணி இவர் அங்கு வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இதே வேளை இவர் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளரை கூப்பிட்டு 'குழப்பும் வகையில் உங்கள் ஊடகத்தில் செய்தியை வெளிவிட வேண்டாம். இது எனது கடும் எச்சரிக்கை ' எனவும் எச்சரித்துள்ளார். தயா மாஸ்டர் தற்போது டான் ரீவியில் பணி புரிகின்றாரா என்பது தெரியாதபடியால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர வந்துள்ளார்� என்றே தர்க்க ரீதியில் கருத இடமுள்ளது. அவர் டான் ரீவியில் தற்போதும் பணி புரிந்தால் ஒரு ஊடகவியலாளரை இன்னொரு ஊடகவியலாளர் எச்சரிப்பது என்பது வேடிக்கையான விடயமாகவே கருத இடமுள்ளது.

இவர் டான் ரீவியில் தொடர்ந்து வேலை செய்கின்றாரா என்பதை டான் ரீவி முதலாளி தெளிவுபடுத்த வேண்டும். ஒரு வேளை தயா மாஸ்டர் தற்போதும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் என்ற தோரணையில் இருக்கின்றாரோ?? என எண்ணத் தோன்றுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாதனை முயற்சிக்கு வயது தடையல்ல: 90 வயதில் 1497 கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா

Posted: 23 Sep 2013 07:25 AM PDT

90

90சாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த 90 வயதான பெர்த் பிளெவன்ஸ். சைக்கிள் பந்தயத்தில் அதிக ஈடுபாடு கொண்ட பிளெவன்ஸ், கென்சுக்சியில் இருந்து புளோரிடா வரையில் 1497 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது, குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர். இதையடுத்து, தனது சாதனைப் பயணத்துக்காக பிரத்யேகமாக 3 சக்கர சைக்கிளை தயாரித்தார். சாய்ந்து கொண்டு ஓட்டக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட அந்த சைக்கிளில் ஆகஸ்ட் 20-ம்தேதி தனது பயணத்தை தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார். 21 நாட்களில் பயணத்தை வெற்றிகரமாக முடித்த பிளெவன்சுக்கு அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நெடுஞ்சாலைகளில் அவரது மூன்று சக்கர சைக்கிளுக்கு அனுமதி கிடைக்காததால் கூடுதல் நாட்கள் ஆனதாக கூறப்பட்டுள்ளது. பெர்த்தின் இந்த பயணத்தின்போது பாதி தூரம் வரையில் அவரது மகனும், அடுத்த பாதி தூரம் மகளும் பாதுகாப்புக்கு சென்றனர். வழியில் ஓட்டல்களில் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மேலும் அவரது சாதனைப் பயணத்தைப் பாராட்டு தெரிவிக்கும் பார்வையாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தனது பயணத்தை நிறைவு செய்த உற்சாகத்தில் இருந்த பெர்த், தன்னால் முடியும் என்று நினைத்ததால், சோர்வே தெரியவில்லை என்று கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அபிவிருத்தியை விட‌ தமிழ் மக்கள் அசியல் சுதந்திரத்தையே கோருகின்றனர் – க்ளோபல் தமிழ் போராம்

Posted: 23 Sep 2013 07:13 AM PDT

global tamil forum

global tamil forumதமிழ் மக்கள் அசியல் சுதந்திரத்தையே கோரி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இதனை பறைசாற்றி நிற்பதாக க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் படையினரின் நெருக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மெய்யான அரசியல் சுதந்திரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அதன் வெளிப்பாடாக வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளை கருத முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுமனே உட்கட்டுமான அபிவிருத்தியும், புனரமைப்புப் பணிகளும் மட்டுமே தமிழ் மக்களின் அபிலாஷை அல்ல என்பதனை இப்போதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநதிகளும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எமது மக்கள் அரசியல் தீர்வுத் திட்டமொன்றையே வேண்டி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

தங்களது விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு தெற்கு மக்கள் வாக்களித்தார்கள் என ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் கருதினால், வடக்கு மக்கள் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு வாக்காளித்தார்கள் என்பதனையும் ஒப்புக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இவ்வளவு அடி வாங்கியும் இன்னுமா உடையல… இளைஞர்களே இது உங்களுக்காக!…

Posted: 23 Sep 2013 02:15 AM PDT

இவ்வளவு அடி வாங்கியும் இன்னுமா உடையல… இளைஞர்களே இது உங்களுக்காக!…

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™