Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


30 ஆசனங்களுடன் – மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted: 21 Sep 2013 11:03 PM PDT

vikn

viknவடக்கு மாகாணசபைத் தேர்தலில், மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் – மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

வடக்கு மாகாணசபையில், இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட, 38 ஆசனங்களுக்கான தேர்தலில், சுமார் 80 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஆசனங்களில், 14 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதிகளவு ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற வகையில், இரு போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைப்பது உறுதியாகியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில், 213,907 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்களே கிடைத்துள்ளன. இதன் மூலம், வடக்கு மாகாணசபையில் 30 ஆசனங்களைக் கைப்பற்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கவுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 26 ஆசனங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்பாராத பாரிய வெற்றியையும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு பெரும் அதிர்ச்சியையும் தமிழ்மக்கள் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு

Posted: 21 Sep 2013 10:56 PM PDT

vikneswaran

vikneswaranவட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு விடயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டமைப்பின் வெற்றியை தடுக்க அரசு எந்த சூழ்ச்சியையும் செய்யலாம் – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted: 21 Sep 2013 07:01 PM PDT

மக்களின் எழுச்சி மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை வடமாகாணத்தில் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை அரசு தடுக்க எந்த சூழ்சியையும் செய்யலாம், அத்துடன் மக்களை மிரட்டியதன் காரணமாய் அச்சத்தில் பலர் வாக்களிக்கவில்லை என த.தே.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா? ரூ90 கோடிக்கு மும்பையில் சூதாட்டம்

Posted: 21 Sep 2013 06:50 PM PDT

நாடாளுமன்ற தேர்தல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் முன்பாகவே மும்பையில் நரேந்திர மோடி மீதான சூதாட்டம் களை கட்டியுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக, தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் சூதாட்டம் தொடங்கும். ஆனால் இந்த முறை பா.ஜ. காங்கிரஸ் இடையேயான போட்டி பற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் சூதாட்டம் இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. இந்த சூதாட்டம் காங்கிரசுக்கு ஆதரவாக இல்லை. பா.ஜ. […]

சிறிய நகரங்களில் 100 ஏர்போர்ட்கள்

Posted: 21 Sep 2013 06:43 PM PDT

 ''வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கையை 30 கோடியாக உயர்த்த முயற்சிக்கப்படும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்காக, நாடு முழுவதும் 100 சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள கிஷன்கரில் ரூ161 கோடியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மன்மோகன் நேற்று நாட்டினார். விழாவில் அவர் […]

தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றி பெருவெற்றி

Posted: 21 Sep 2013 06:24 PM PDT

TNA-logo

TNA-logoஇலங்கை தமிழரசுக்கட்சி 30 ஆசனங்களுடன் வடமாகாண சபையைக் கைப்பற்றியுள்ளது. வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் போனஸ் ஆசனங்கள் இன்றி இலங்கை தமிழரசுக்கட்சி 28 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படுவது வழமை. அதற்கமைவாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மேலதிக 2 ஆசனங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

யாழில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மக்கள் அச்சம்!

Posted: 21 Sep 2013 05:33 PM PDT

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த குழுவொன்று புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரியவருகின்றது. வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டாசு வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன் எதிரொலியாகவே ஆயுதம் தரித்த குழுவொன்று பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் பலவந்தமாக புகுந்து அங்கு தங்கியிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வடமாகாண சபை தேர்தல்!போட்டியிட்ட இடமெல்லாம் வெற்றி

Posted: 21 Sep 2013 05:12 PM PDT

வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளதோடு முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழரசு கட்சி – 27,620 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,063 ஐக்கிய தேசியக் கட்சி -195 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 199 மக்கள் விடுதலை முன்னணி – 30 பதிவு செய்யப்பட்ட மொத்த […]

மன்னா​ரிலும் கூட்டமைப்பின் ஆட்சி

Posted: 21 Sep 2013 05:06 PM PDT

மன்னார் மாவட்ட மொத்த தேர்தல் முடிவுகளின் படி தெரிவு செய்யப்பட வேண்டிய 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது. இலங்கை தமிழரசு கட்சி – 33,118 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,104 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 4,571 ஐக்கிய தேசியக் கட்சி – 187 பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – […]

தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளி கற்பழிப்பு

Posted: 21 Sep 2013 04:59 PM PDT

மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 28–ந்தேதி பெண் ஒருவர் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். இரவு பணிக்கு வந்த டாக்டர் விஷால் வான்னே, அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார். அங்கு அவருக்கு மயக்க ஊசி போட்டு அவரை கற்பழித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டாக்டர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™