Tamil Star |
- கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள்
- கூட்டமைப்பு ஆதரவாளர் வீட்டில் அரசாங்க கட்சியினர் காடைத்தனம்
- சிரியா உடன்பாட்டுக்கு ஒப்புதல் : இஸ்ரேல் நெருக்கடியில்…..
- ஒருமித்த நாட்டிற்குள் ஒரு தீர்வையே நாங்கள் கேட்டிருக்கின்றோம் : தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் தனி நாட்டினை கோரவில்லை – இரா.சம்மந்தன்
- தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர்
- உன்னோட கார்ல ஏறினது ஒரு குத்தமாடா…. அவ்வ்வ்…
- என்னமா கூத்தடிக்கிறாங்க இவங்க!….
- அச்சத்துடன் வடக்குத் தேர்தல்
- வடக்கு மாகாண சபை தேர்தல்..! தமிழர்களின் தீர்ப்பு என்ன..?
- விலையில் வெளுத்துக் கட்டும் மல்லிகை
| கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள் Posted: 15 Sep 2013 07:55 PM PDT
வரும் நொவம்பர் மாதம், கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பதற்கு, சிறிலங்காவிடம் மூன்று நிபந்தனைகள் குறித்து அழுத்தம் கொடுக்க புதுடெல்லி தயாராகி வருகிறது. அடுத்தமாத முற்பகுதியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான, உயர்மட்டக் குழு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின்போது, சிறிலங்கா அரசாங்கத்திடம், சல்மான் குர்ஷித் இந்த மூன்று நிபந்தனைகளையும் வாய்மொழியாகத் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா 13வது திருத்தச்சட்டத்தை தொடர வேண்டும். 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக, எந்த திருத்தமோ, அதிகாரக் குறைப்பையோ மேற்கொள்ளக் கூடாது என்பது முதல் நிபந்தனை. இந்திய மீனவர்கள், மீன்பிடிப்பதற்கு சிறிலங்கா கடற்படை கடைப்பிடித்து வரும் கைது உள்ளிட்ட கெடுபிடிகளைத் தளர்த்த வேண்டும் என்பது இரண்டாவது நிபந்தனை. சம்பூர் அனல் மின் நிலைய உடன்பாடு குறித்து உடனடியாக முடிவுக்கு வரவேண்டும் என்பது மூன்றாவது நிபந்தனை. இந்த மூன்று நிபந்தனைகளுக்கும் சிறிலங்கா அளிக்கவுள்ள பதிலைப் பொறுத்தே, இந்தியப் பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூட்டமைப்பு ஆதரவாளர் வீட்டில் அரசாங்க கட்சியினர் காடைத்தனம் Posted: 15 Sep 2013 07:38 PM PDT
இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காடைத்தனத்தினை வடக்குமாகாணசபைத் தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு இலங்கை இராணுவத்தினர் சிபார்சில் வேட்பாளராக்கப்பட்ட சிராஸ் என்பவருடைய ஆதரவாளர்களே இக் காடைத்தனத்தினை புரிந்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தனக்குத் தெரிவித்துள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியா உடன்பாட்டுக்கு ஒப்புதல் : இஸ்ரேல் நெருக்கடியில்….. Posted: 15 Sep 2013 07:29 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 15 Sep 2013 07:13 PM PDT
ஜனாதிபதி உட்பட, தென்னிலங்கை தீவிரவாத சக்திகள் தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாக வாசித்தறியாத காரணத்தினாலேயே பொருத்தமற்ற விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருமித்த நாட்டிற்குள் அடிமைகளாக இல்லாமல், தமிழர்கள் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடியவர்களாகவும், கௌரவம், சுயுமரியாதையுடுன் தொடர்ந்து பாதுகாப்பாக வாழ்வதற்கு போதிய அளவு அதிகாரங்கள் சுயாட்சியின் மூலம் வழங்கப்பட வேண்டும் என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்.மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்மந்தமாகவும், காணமல் போனவர்கள், காணிப்பிரச்சினை போன்ற பல விடையங்கள் தொடர்பாகவும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அத்தேர்தல் விஞ்ஞாபனம் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டது. நாங்களும் அதனை பலரிடம் விநயோகித்திருந்தோம். அதற்குப்பின்னர் சில கருத்துக்கள் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்திருக்கின்றன. எல்லோரும் இந்தக்கருத்தினை கூறுவதாக நாம் சொல்லவில்லை. ஆனால் தென்னிலங்கையில் உள்ள தீவிரவாத சக்திகள் தேர்தலி விஞ்ஞாபனம் தொடர்பாக சில தவறான கருத்துக்களை கூறியுள்ளார்கள். ஜனாதிபதி வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போதும் விஞ்ஞாபனம் தொரடர்பாக கருத்து கூறுகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் கேட்டதையே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோரிநிற்கின்றது, தமிழீழ விடுதலைப் புலிகள் இதைக் கேட்ட போது நாங்கள் அதனை வழங்கவில்லை, அவர்களுக்கு நாங்கள் ஒரு முடிவு கட்டியிருக்கின்றோம், தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதனை வழங்கத் தயாரில்லை என் கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் எதைக் கேட்டார்கள் என்று அவர் சொல்லவில்லை. நாங்கள் தற்போது எதனை கேட்கின்றோம் என்றும் அவர் சொல்வில்லை. ஆனால் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றவகையில் அவருடைய கருத்து அமைகின்றது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தினை அவர் படித்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைக் கேட்கின்றது என்பது தெளிவாக அவருக்கு விழங்கியிருக்க வேண்டும். சில தீவிரவாக பெரும்பான்மையின சக்திகளும் இது போன்ற கருத்துக்களை கூறிவருகின்றன. இதனால் ஒரு அரசியல் தீர்வு சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒரு அரசியல் தீர்வு சம்மந்தமான சமீப காலத்தில் நடைபெற்றுவந்த நிகழ்வுகளை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றோம். அதனூடாக ஒருமித்த நாட்டிற்குள் உண்மையான, விசுவாசமான, போதுமான அளவிற்கு அதிகாரப்பகிர்வு தேவை என்றதை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். அத்தீர்வு எந்தவகையில் அமைய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாகவும் குறியிருக்கின்றோம். அத்தீர்வினைப் பொற்றுக் கொள்ள நாங்கள் எவ்வகையான செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளோம். அந்தக் கருத்துக்களில் கூட ஒருமித்த நாட்டிற்குள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என்று மிகவும் தெளிவாக கூறியுள்ளோம். தமிழில் வெளியிடப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் 7 ஆம் பக்கத்திலும், 8 ஆம் பக்கத்திலும், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட விஞ்ஞாபனத்தின் 6 ஆம் பக்கத்தில் இருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியது ஒருமித்த நாட்டிற்குள் ஒரு தீர்வையே நாங்கள் கேட்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்குறிப்பிட்ட பந்திகள் தான் அவர்களை குழப்பத்தில் ஏற்படுத்தி இருக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தெளிவாக கூறவருவது என்னவேன்றால். ஜ.நாவினுடைய அரசில் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற சிவில் அரசியல் உரிமை சம்மந்தமாகவும், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்மந்தமாக உருவாகியுள்ள ஒப்பந்தம் இரண்டிலும் குறிப்பிட்டிருப்பது என்னவேன்றால், ஒரு மக்கள் குழாமிற்கு சுயநிர்ணைய உரிமைக்கு உரித்துண்டு என்று கூறப்பட்டுள்ளது. அதனையே நாங்களும் கூறுகின்றோம். எமது சிவில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடையங்கள் சம்மந்தமாக நாம் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் எங்களுடைய தலைவிதியை நிர்ணையிக்கும் உரிமை எமக்கு உண்டு என்பதை. இதனால் இலங்கையினுடைய அரசியல் சாசனத்தை மீறுவது என்பது பொருளல்ல. சர்வதேச அளவில் தற்போது சுயநிர்ணைய உரிமை சம்மந்தமாக பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனடிப்படையல் உள்ளகசுயநிர்ணைய உரிமை, வெளியகசுயநிர்ணைய உரிமை என்று இரண்டு வகையாகக் கொள்ளப்படுகின்றது. உள்ளக சுயநிர்ணைய உரிமை என்றால், ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மக்கள் குழாம் தங்களுடைய சிவில், பொருளாதாக,கலாசரம் சம்மந்தமாக அபிலாசைகளை ஒருமித்த நாட்டிற்குள் நிறைவேற்றுவது. வெளியக சுயநிர்ணைய உரிமை என்றால், முற்றாகப் பிரிந்து செல்வது. அதாவது தனிப்பட்ட இறைமைக்கு உரித்தாவதாகும். ஒருமித்த நாட்டிற்குள் பெரும்பான்மை இனத்திற்கு நாங்கள் அடிமையாகப் போகாமல், நாங்கள் எமது நாட்டில் எமது பிரதேசத்தில் கௌரவத்துடன், சுயமரியாதையுடன், பாதுகாப்புடன் தொடர்ந்து வாழ போதிய அளவு அதிகாரங்கள் சுயாட்டி மூலம் வழங்க்பட வேண்டும் என்று கேட்கின்றோம். இதனால் நாங்கள் தனிநாட்டை கோருவதாக அர்த்;தம் இல்லை. ஜனாதிபதியும், வேறு விதமான கருத்துக்களை கூறுகின்றவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை கவணமாகப் படிக்க வேண்டும் என்று நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றோம். தவறான கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்த கூடாது. நிச்சைமாக தமிழ் மக்கள் குழம்புவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை இனத்தவர்களும் குழம்பக்கூடாது. ஏன் என்றால் ஒரு அரசியல் தீர்வினை காண்பதற்கு பெரும்பான்மை மக்களுடைய பங்களிப்பும் தேவை என்பதை நாங்கள் உணருகின்றோம். ஜனாதிபதி இவ்விதமான ஒரு கருத்தினை முன்வைக்க அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். துரதிஸ்ரவசமாக ஒரு அரசியல் தீர்வு இருக்குமாக இருந்தால் அவ்வாறான ஒரு கருத்தினை அவர்கள் இதுவரைக்கும் முன்வைக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு சர்வகட்சிக் குழு நியமிக்கப்பட்டது. அதே போன்று 2006 ஆம் ஆண்டு பல்லினங்களை சேர்ந்த நிபுணர் குழுவினை நியமித்துள்ளார். இவ்விரு குழுக்களுடைய நியமனங்களும் அரசியல் தீர்வு தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பதற்கே உருவாக்கப்பட்டது. ஆனாலும் சர்வகட்சிக் குழ மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் அரசாங்கத்திடம் வழங்கிய அறிக்கை இதுவரைக்கும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதே போன்று பல்லின நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்தும் அது இன்றுவரை நடைமுறைப்படடுத்தப்படவில்லை. இதற்கிடையில் சர்வதேச சமூகத்துடன பலவிதமான பேச்சுவார்த்தகைகளும் இடம்பெற்றது. இப்போச்சுவார்தைகள் மூலமும் கூட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டது. அதிலும் அரசில் தீர்வு தொடர்பாக கூறப்பட்டிருந்தது. ஆனாலும் இதில் எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் பதில் தருவதாக கூறினால்கள். அதற்கு இன்றுவரைக்கும் பதில் இல்லை. பதில் தரமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. நல்லிணங்கத்தின் சிபார்சுகளும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு சம்மந்தமாக இன்றுவரைக்கும் எந்தவிதமான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் விஞ்ஞாபனம் எங்கே? விஞ்ஞாபனத்தை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்காலம் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளதென அவர் கேள்வி எழுப்பியிருந்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர் Posted: 15 Sep 2013 07:02 PM PDT
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா தேரதல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை தொடர்பாகவோ, கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குறிப்பிடத்தக்க எந்த முறைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, ராவண பலய அமைப்பு மட்டும் தான், கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நாட்டின் அரசியலமைப்புக்கு முருணானது என்று முறைப்பாடு செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் சட்டங்களை மீறாத வகையில் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உன்னோட கார்ல ஏறினது ஒரு குத்தமாடா…. அவ்வ்வ்… Posted: 15 Sep 2013 08:24 AM PDT |
| என்னமா கூத்தடிக்கிறாங்க இவங்க!…. Posted: 15 Sep 2013 08:20 AM PDT |
| Posted: 15 Sep 2013 08:12 AM PDT யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும், அச்சம் சூழ்ந்த ஒரு நிலையிலேயே வடக்கு மக்கள் வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் களமிறங்கியுள்ள போதிலும், இரு முனைப் போட்டியே அங்கு முனைப்பு பெற்றிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் வாக்காளரின் பேராதரவைப் பெற்று ஆசனங்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று […] |
| வடக்கு மாகாண சபை தேர்தல்..! தமிழர்களின் தீர்ப்பு என்ன..? Posted: 15 Sep 2013 07:58 AM PDT
இலங்கையிலும், இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. அந்தளவுக்கு தேர்தல் நெருங்கி வந்து விட்டது.இந்தத் தேர்தல் நடத்தப்படும் முறையும் அதன் முடிவுகளும் இலங்கையின் எந்தவொரு மாகாண சபைக்கும் இல்லாத எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல்கள் மட்டுமே மிகவும் அதிகமான எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக அமைந்தவை என்று குறிப்பிடலாம். முதலாவது 1977 தொடக்கம் தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் ஐதேகவே கோலோச்சி வந்தநிலையில், சந்திரிகா குமாரதுங்கவை மாற்று அரசியல் தலைமைக்கு இழுத்து வந்தது 1993ம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தல். அந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு அரசியல் தலைமைக்கு வழிகாட்டியது. சந்திரிகா அப்போது பெற்ற வெற்றி தான் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரத்தை நிலைப்படுத்தி நிற்பதற்கு ஆணிவேராக உள்ளது. இரண்டாவது இப்போது நடக்கப் போகின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் தான் இதற்கடுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதலாம். 1988ற்கும் 2013ற்கும் இடையில் பல மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தியிருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட இவையிரண்டுக்கும் தான் முக்கியத்துவம் அதிகம். இப்போது நடக்கப் போவதுதான் வடக்கில் நடக்கப் போகும் முதல் மாகாண சபைத் தேர்தல். இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு 1988ல் தேர்தல் நடந்திருந்தாலும் அது காத்தரமான சூழலிலோ, நியாயமான முறையிலோ நடத்தப்படவில்லை என்பதால் அந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. பரவலான எதிர்பார்ப்பையும் அது ஏற்படுத்தியிருக்கவில்லை. மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை இந்தளவுக்கு சர்வதேச எதிர்பார்பபையோ முக்கியத்துவத்தையோ கொண்டிருக்கவில்லை. ஏனைய மாகாணங்களில் நடந்த மற்றெல்லாத் தேர்தல்களுமே வழக்கத்துக்கு அதிகமான எந்த முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவில்லை. அதனால்தான் வடக்கு மாகாண சபைக்கு நடக்கப் போகும் முதல் தேர்தலும் சந்திரிகா குமாரதுங்கவை அரசியலின் உச்சத்துக்கே கொண்டு செல்லக் காரணமாகிய 1993 மாகாண சபைத் தேர்தலும் இலங்கையின் வரலாற்றில் அதி முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கு மாகாண சபைத் தேர்தல் ஆயுதப் போராட்ட அரசியலுக்குப் பின்னர் தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பே வலுவாகக் காணப்படுகிறது. ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னர் வடக்கில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் அவர்களின் ஆணையையும் உலகிற்கு அறிவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் இந்தத் தேர்தல் அமையப் போகிறது. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கட்சிகளை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றனரா? அல்லது தமிழ் தேசிய அரசியலை வழிநடத்தும் தமிழர்களின் தனி உரிமைகளை வலியுறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனரா என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தப் போகிறது. கடைசியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தெளிவான ஓர் ஆணை பெற்று வந்தால் மற்றவற்றைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியதாக ஒரு தகவல். போருக்குப் பிந்திய தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. அதனால் தான் இந்தியப் பிரதமர் மன்மோன் சிங்கும் அழைத்துப் பேசுகிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தமது நாட்டுக்கு அழைத்துப் பேசுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிக்க பேச்சுக்களை சந்திப்புகளை நடத்தியிருந்தாலும் இந்தளவுக்கு இராஜதந்திர அங்கீகாரத்தை விடுதலைப் புலிகள் கூடப் பெற்றிருக்கவில்லை. முன்னர் விடுதலைப் புலிகளால் ஏற்கப்பட்ட அமைப்பாக, விடுதலைப் புலிகள் பின்னாலிருந்து இயக்கிய அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், புலிகளுக்குப் பின்னரும் அவர்களுக்கு இராஜதந்திர மரியாதை அளிக்கப்படுவதற்கு ஒரே காரணம் தமிழ் மக்கள் தேர்தல்களில் கொடுத்த ஆணை தான். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனநாயக ரீதியாகத் தேர்தல்களில் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்தவொரு நாட்டினாலும் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று மாகாண அரசு ஒன்றை நிறுவினால் அதற்கு இன்னும் கூடுதல் அங்கீகாரத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. அத்தகையதொரு வெற்றியை முன்னிறுத்தியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது. தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி, நிலையான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கான களமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கிறது. அதேவேளை, அரசாங்கத் தரப்போ, தமிழ் மக்கள் தனிநாட்டையோ, தன்னாட்சியையோ, சமஷ்டியையோ கேட்கவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வெறும் அபிவிருத்தி மட்டும் தான் என்றளவிலேயே தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தமிழரின் உரிமைகள் என்று எதையும் முன்னிலைப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தேர்தலில் நின்று வெற்றி பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரின் உரிமைகள் குறித்துப் பேச முடியாமல் செய்வதற்கு அரசதரப்பு முனைகிறது. இத்தகைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்கக் கூடிய நிலை எல்லா இடங்களிலும் இருக்குமா – நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விகள் வலுவாக இருந்தாலும் தமிழ் மக்கள் யாரைத் தெரிவு செய்யப் போகின்றனர் என்பதை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அது எந்தத்தரப்பு என்பதைப் பொறுத்தே அது சாதகமான மாற்றமா, பாதகமான மாற்றமா என்பது தீர்மானிக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை மேலும் வலுப்படுவதுடன், தமிழர் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதற்கான சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கும். அரசதரப்பு வெற்றி பெற்றால், அபிவிருத்தியே போதும் என்று தமிழர்கள் திருப்திப்பட்டு விட்டனர் என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழர் பிரச்சினையில் தமக்குள்ள கடப்பாடு முடிந்தது என்று ஒதுங்கிப் போக முனையலாம். இந்தநிலையில், வடக்கிலுள்ள தமிழர்களின் தெரிவு என்ன என்பது எதிர்வரும் சனிக்கிழமை தீர்மானிக்கப்பட்டு விடும். தமிழர்களின் தெரிவு என்னவாயினும், இலங்கையின் வரலாற்றில் முக்கியமான மாகாண சபைத் தேர்தல்களில் ஒன்று என்ற பதிவு மட்டும் அழிந்து விடாது. அதேவேளை, இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேராதரவுடன் வெற்றி பெற்றால், மேல் மாகாணசபைத் தேர்தல் சந்திரிகாவை எவ்வாறு உச்சத்துக்கு கொண்டு சென்றதோ, அதுபோல சி.வி.விக்னேஸ்வரனையும் தமிழர் தரப்புக்கு தலைமை தாங்கும் சக்தியாக உயர்த்தினாலும் ஆச்சரியமில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| விலையில் வெளுத்துக் கட்டும் மல்லிகை Posted: 15 Sep 2013 04:44 AM PDT சுபமுகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ கிலோ 600க்கு விற்பனை செய்யப்பட்டது. சுபமுகூர்த்தம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிரடியாக உயர்ந்தது. நாளை 16ம் திகதி சுபமுகூர்த்த தினம். அன்று நாடு முழுவதும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். நேற்று சேலம் வ.உ.சி. பூமார்க்கெட்டில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மல்லிகை, முல்லை, பட்டன் ரோஜா, ஜாதிமல்லி, கோழிக்கொண்டை, […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











