Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமெரிக்க நீதிமன்றம் சோனியாவுக்கு சம்மன்

Posted:

நியூயார்க் : டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த, கலவரத்தில் ஈடுபட்ட தலைவர்களை பாதுகாப்பதாக கூறி, அமெரிக்க கோர்ட், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.டில்லியில், '84ல், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. இதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும் படி, அமெரிக்காவில்உள்ள சீக்கிய உரிமை அமைப்பு போராடி ...

காவிரி பாசன பரப்பில் பணி மேற்கொள்ள அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted:

சென்னை:"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, காவிரி பாசன பரப்பில், கர்நாடக அரசு, எந்தப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கர்நாடக அரசின் நிறுவனமான, "காவிரி நீரவாரி நிகம லிமிடெட்' அர்க்காவதி நதி புனரமைப்பு, ஹேமாவதி கால்வாய் நவீனமயமாக்கல் தொடர்பாக, பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளது. இவ்விளம்பரம், அர்க்காவதி நதி புனரமைப்பு, ஹேமாவதி வலது புறக்கால்வாய், இடதுபுறக் கால்வாய், வலதுபுற உயர்நிலைக் கால்வாய் ஆகியவை சம்பந்தப்பட்டது.காவிரி நடுவர் ...

திராவிட கட்சிகளை எதிர்ப்பதால் பா.ம.க., தனிமைப்படுத்தப்படுமா?

Posted:

"ஆளுங்கட்சிக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்' என, பா.ம.க., விடுத்த கோரிக்கையை, எதிர்க்கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பா.ம.க., "திராவிடக் கட்சிகளுக்கு எதிராக, மாற்று அணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்' என்ற அறிக்கையை, நேற்று வெளியிட்டிருப்பதால், லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனிமைப்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளதுமாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில், அனைத்து கட்சிகளையும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார். அவரது கொச்சையான பேச்சுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

வல்லூர் திட்டங்கள் துவங்கி விட்டால் மின்வெட்டு இருக்காது: கருணாநிதி

Posted:

சென்னை:"வல்லூர் அனல் மின் நிலையம் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்க துவங்கி விட்டால், தமிழகத்தில், மின்வெட்டு இருக்காது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:வல்லூர் அனல் மின் நிலையத்தின், இரண்டாவது அலகு, இன்னும் இரண்டொரு மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்து விடும். தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து வல்லூரில், 9,000 கோடி ரூபாய் செலவில், தலா, 500 மெகா வாட் திறன் கொண்ட மூன்று அலகுகளை அமைக்க, தி.மு.க., ஆட்சியில் முடிவு செய்து, 2008ல் அதற்கான பணிகள் துவங்கப்பட்டன.டிசம்பர் மாதத்தில், வல்லூர் அனல் மின் நிலையத்தின் முதல் ...

கழிவு நீர் தொட்டியை மனிதர் சுத்தம் செய்ய தடை: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு அரசு உத்தரவு

Posted:

சென்னை:"உள்ளாட்சி அமைப்புகளில், மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர் நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க வேண்டும்' என, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இருந்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:ஐகோர்ட் அறிவுரை மற்றும் அரசாணையின்படி, மனிதர்களைக் கொண்டு, கழிவு நீர் நச்சுத் தொட்டியை, சுத்தம் செய்வது, அறவே தவிர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.*கழிவு நீர் சேகரிப்பு குழாய்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சேகரிப்பு கிணறுகள், பம்பிங் ஸ்டேஷனில் உள்ள தொட்டிகள், ஆகியவற்றை ...

"நாட்டின் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது': ரகுராம் ராஜன்

Posted:

மும்பை: ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னராக, நேற்று பொறுப்பேற்ற, ரகுராம் ராஜன், "நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது' என்று தெரிவித்தார்.ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, ரகுராம் ராஜன் நேற்று பதவியேற்றார். கடந்த ஐந்து ஆண்டு களாக, ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகித்த டீ.சுப்பாராவ், ரகுராம் ராஜனை கட்டித் தழுவி, பிரியா விடை பெற்றார்.பொருளாதார ஆலோசகர்:பன்னாட்டு நிதியத்தின், முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி குறித்து முன்கூட்டியே கணித்து ...

உண்மை கண்டறியும் சோதனை மறுத்த "மாஜி' அமைச்சர் ராஜா

Posted:

புதுடில்லி:"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் குறித்த விசாரணையின் போது, உண்மை அறியும் கண்டறியும் சோதனைக்கு, முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர், ராஜா சம்மதிக்க மறுத்தார் என, சி.பி.ஐ., அதிகாரி சாட்சியம் அளித்தார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இவ் வழக்கை, சி.பி.ஐ., தரப்பில் முதன் முதலாக விசாரித்த, டி.எஸ்.பி.,யான ராஜேஷ் சாகல், சி.பி.ஐ., தரப்பில் நேற்று சாட்சியம் அளித்தார்.நீதிபதி ஓ.பி.சைனி முன் அவர் கூறியதாவது:"2ஜி' வழக்கில், 2011, பிப்ரவரி 2ல், முன்னாள் அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்டார். ...

மானிய சமையல் காஸ் சிலிண்டர் பெற "ஆதார்' எண் கட்டாயம்: தமிழகத்தில் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது

Posted:

புதுடில்லி :சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு, நேரடி மானியம் வழங்கும் திட்டம், தமிழகத்தில், அரியலூர் மாவட்டத்தில், அக்., 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் அறிமுகமானதும், "மூன்று மாதங்களுக்குள், "ஆதார்' எண் வாங்குபவர்களுக்கு மட்டுமே, சமையல் காஸ் சிலிண்டருக்குரிய, நேரடி மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.அரியலூர் மாவட்டம்: சமையல், "காஸ்' சிலிண்டர்களுக்கு நேரடி மானிய வழங்கும் திட்டம், தமிழகத்தில் வரும், அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. துவக்கமாக, தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் ...

கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளுக்கு சிக்கல் : எம்.பி., - எம்.எல்.ஏ., பதவியை பறிக்கும் உத்தரவு சரிதான்

Posted:

புதுடில்லி:கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. "தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளைப் பறிக்கலாம்' என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சரியானது தான்; இந்த விஷயத்தில், மறு பரிசீலனைக்கே இடமில்லை' என, சுப்ரீம் கோர்ட் நேற்று, திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.ஊழல் கறைபடிந்த, மக்கள் பிரதிநிதிகளுக்கு, நெருக்கடி கொடுக்கும் வகையில், ஜூலை மாதம், சுப்ரீம் கோர்ட், ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.அதில் கூறப்பட்டு இருந்ததாவது:எம்.பி., அல்லது எம்.எல்.ஏ.,க்கள், குற்ற வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு ...

சிரியா மீதான தாக்குதலை 60 நாட்களுக்கு முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம்

Posted:

வாஷிங்டன்:சிரியா மீதான தாக்குதலை, 60 நாட்களுக்குள் முடிக்க அமெரிக்க பார்லிமென்ட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள், அந்த நாட்டில் இறங்கி போரிடாமல், வான்வழி தாக்குதல் நடத்தவும், இந்த தீர்மானம் வழி செய்கிறது.சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ரசாயன ஆயுதங்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™