Tamil News | Online Tamil News |
- செம்மொழி மாநாடு : கருணாநிதிக்கு சம்மன்
- மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு
- வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு
- தேர்தல் பணியை துவங்குங்கள்: தமிழக பா.ஜ.,வுக்கு மோடி ஆலோசனை
- ரஜினி, கமலை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல்: கருணாநிதி
- மன்மோகன், சிதம்பரத்திற்கு ஜே.பி.சி., நற்சான்றிதழ்
- வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமையுண்டு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது
- எம்.பி.,க்கள் பதவி பறிப்பை தடுக்க அவசர சட்டம்...:பிரதமர் மன்மோகன் ஒப்புதல்; ராகுல் கடும் எதிர்ப்பு:காங்கிரஸ் ‘கூத்து’ அம்பலம்!
| செம்மொழி மாநாடு : கருணாநிதிக்கு சம்மன் Posted: சென்னை : கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டுக்காக செய்யப்பட்ட செலவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுவதால், கருணாநிதி உள்ளிட்ட நால்வருக்கு, விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளது.கடந்த, 2010, ஜூன், 23ம் தேதி முதல், 27ம் தேதி வரை, கோவையில், செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு குழுவில், கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன், கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர். இந்த மாநாட்டிற்காக, 380 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், 301 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக, மாநாடு முடிந்தவுடன், சட்டசபையில் தெரிவித்தார். இந்த ... |
| மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு Posted: புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயதை, 62 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை, என்று, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர், நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது, தற்போது, 60 ஆக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில், மொத்தம், 50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை உள்ள நிலையில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன், பணிக்கொடை ஆகியவற்றை மொத்தமாக வழங்க முடியாத நிலை உள்ளதால், மத்திய பணியாளர் அமைச்சகம், மத்திய அரசு ஊழியர்களின் வயதை, 62 ஆக உயர்த்துவதற்கான வேலைகளில் ... |
| வாரம் ஒரு நாள் அரசு பஸ்சில் பயணிக்க பெட்ரோலிய அமைச்சர் மொய்லி முடிவு Posted: புதுடில்லி : ''எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், அக்டோபர் 9ம் தேதி முதல், புதன்கிழமை தோறும், பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன்,'' என்று, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி தெரிவித்தார்.டில்லியில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறியதாவது:கச்சா எண்ணெய் இறக்குமதியால், அரசின் அந்நில செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதற்காக செலவிடப்படும் தொகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவை மிச்சப்படுத்தும் வகையில், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க, பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ... |
| தேர்தல் பணியை துவங்குங்கள்: தமிழக பா.ஜ.,வுக்கு மோடி ஆலோசனை Posted: கூட்டணி விவகாரங்களை ஜனவரிக்கு பின் பார்த்துக் கொள்ளலாம்; இப்போது, லோக்சபா தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணியை துவக்குங்கள்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.திருச்சியில் நடந்த, "இளந்தாமரை' மாநாட்டில் பங்கேற்பதற்கு முன், அங்குள்ள ஆர்.எஸ்.எஸ்., காரியாலயத்தில், முக்கிய பிரமுகர்களை மோடி சந்தித்தார். தமிழகத்தை சேர்ந்த மற்ற கட்சி தலைவர்கள் சிலரும், அவரை சந்தித்தனர்.மாநில நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பில், தமிழகத்தில் கூட்டணி விவகாரம் குறித்து பேசப்பட்டுள்ளது. எந்தெந்த கட்சிகள், பா.ஜ.,வுடன் சேர ... |
| ரஜினி, கமலை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல்: கருணாநிதி Posted: சென்னை : சினிமா நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்களை அவமானப்படுத்தியது அநாகரிகமான செயல் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரதுஅறிக்கை: சினிமா நூற்றாண்டு விழாவில், ரஜினி, கமல், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர்., போன்ற மூத்த கலைஞர்களுக்கு, முன் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை. அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பின், அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி, பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்தியது அநாகரிகச் செயல்.ரஜினியும், கமலும் இரண்டாவது வரிசையில் எங்கோ நின்று கொண்டிருக்கும் காட்சியையும் கண்டேன். ... |
| மன்மோகன், சிதம்பரத்திற்கு ஜே.பி.சி., நற்சான்றிதழ் Posted: புதுடில்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரித்த, பார்லிமென்ட் கூட்டு குழுவின் அறிக்கை ஏற்கப்பட்டது. ஓட்டெடுப்பில், 16 பேர் உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டளித்தனர். பிரதமர், மன்மோகன் சிங்கிற்கும், நிதி அமைச்சர், சிதம்பரத்திற்கும் வரைவு அறிக்கையில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள், 'கறுப்பு நாள்' என வர்ணித்தன.சி.பி.ஐ., விசாரணை:'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கையால் பிரச்னை வெடித்தது. ... |
| வேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமையுண்டு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி : 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை நிராகரிக்கும் உரிமை, வாக்காளர்களுக்கு உண்டு. இது, அவர்களின் அடிப்படை உரிமை. எனவே, வேட்பாளர்களை நிராகரிப்பதை, வாக்காளர்கள் பதிவு செய்யும் வகையில், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், அதற்கான பட்டனை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட், அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால், நேர்மையான வேட்பாளர்களை தேடிப் பிடிக்க வேண்டிய நெருக்கடி, அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ... |
| ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது Posted: புதுடில்லி : அக்டோபர் 1ம் தேதி முதல், ரயில்வே சரக்கு கட்டணம், 15 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், உணவு தானியங்கள், சிமென்ட், ரசாயன உரங்கள், இரும்பு தாது, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான சரக்கு கட்டணத்தை, ரயில்வே துறை, உயர்த்த இருப்பதாக தெரியவந்துள்ளது.பொதுவாக, அக்டோபர் முதல், ஜூன் மாதம் வரை, சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலமாக கருதப்படுகிறது. இக்காலத்தில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், ... |
| Posted: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, நாடு முழுதும், ஆதரவு அலை வீசத் துவங்கி விட்டதால், அதை முறியடிக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைமை, நாடகம் நடத்தத் துவங்கி விட்டது. குற்றப் பின்னணி உடைய, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக, தானே அறிமுகப்படுத்திய, அவசரச் சட்டத்திற்கு, கட்சித் துணைத் தலைவரான ராகுலை எதிர்ப்பு தெரிவிக்க வைத்து, நாடகத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டுள்ளது.'கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 28,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |