Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மோடி பாய்ச்சல்: பிரச்னைகளுக்கு காரணம் பலம் இழந்த மத்திய அரசு என புகார்

Posted:

சண்டிகார்: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், முதல் முறையாக, அரியானா மாநிலத்தில் நடந்த, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று பங்கேற்றார். அப்போது, ""எல்லையில் நடக்கும் பிரச்னைகளுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும், பலம் இழந்த மத்திய அரசே காரணம்,'' என, ஆவேசமாக பேசினார்.குஜராத் முதல்வரும், பா.ஜ., தேர்தல் பிரசாரக் குழு தலைவருமான, நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக்குவதற்கு, அந்த கட்சியின் மூத்த தலைவரான அத்வானி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சம்மதிக்க வைப்பதற்காக, கட்சியின் மூத்த தலைவர்கள் மேற்கொண்ட ...

தங்க இருப்பு: ரிசர்வ் வங்கி வேண்டுகோளை நிராகரித்தது குருவாயூர் தேவஸ்தானம்

Posted:

திருச்சூர்: "குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் பற்றிய விவரங்களை தர வேண்டும்' என்ற ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளை, குருவாயூர் தேவஸ்தானம் நிராகரித்து உள்ளது.பொருளாதார வீழ்ச்சி: ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, அதிக அளவிலான தங்கத்தை இருப்பு வைக்க, ரிசர்வ் வங்கி மூலமாக, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக சில நடவடிக்கைகளை எடுத்தது. அதனடிப்படையில், கேரளாவில் உள்ள, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட, சில கோவில்களுக்கு கடிதம் ஒன்றை, ரிசர்வ் வங்கி அனுப்பியது. அதில், "உங்கள் கோவில்களுக்கு ...

முதல்வர் அகிலேஷ் விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு

Posted:

லக்னோ: உத்தர பிரதேசத்தில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று பார்வையிட்டார். அப்போது, அவருக்கு எதிராக, மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தியதோடு, கோஷங்களும் எழுப்பினர். அதேநேரத்தில், கலவரம் பாதித்த பகுதிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கும், இன்று பார்வையிடுகிறார்.இரு பிரிவினரிடையே மோதல்: முசாபர்நகர் மாவட்டத்தில், சில தினங்களுக்கு முன், பெண்ணை கேலி செய்த விவகாரத்தில், இரு பிரிவினரிடயே மோதல் ஏற்பட்டு, பின் கலவரமாக மாறியது. இதில், 47 பேர் கொல்லப்பட்டனர். அதனால், முசாபர் நகர் மற்றும் அதனைச் ...

304 பஸ் நிலையங்களில் மினரல் வாட்டர் விற்பனை: கண்டக்டருக்கு 12 பாட்டில்

Posted:

"அம்மா மினரல் வாட்டர்' திட்டத்தின் கீழ், 304 பஸ் நிலையங்களில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், நடத்துனரிடம், 12 பாட்டில்கள் வீதம் வழங்கப்பட்டு, பயணிகளுக்கு விற்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள பஸ் நிலையங்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், ஒரு லிட்டர் பாட்டில், 10 ரூபாய் என வினியோகிக்கும், "அம்மா மினரல் வாட்டர்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 12 ஸ்டால்கள்; சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு, 39 ஸ்டால்கள் என, எட்டு ...

கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் பெற ஈரான் மறுப்பு

Posted:

புதுடில்லி: கச்சா எண்ணெய் விற்பனைக்கான முழுத் தொகையை, இந்திய ரூபாய் மதிப்பில் பெற, ஈரான் திடீரென்று மறுத்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, இந்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள், ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.பொருளாதார தடை: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவை, அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது, பொருளாதார தடை விதித்துள்ளன. இதையடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கான ஈரானின் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ...

சுப்ரீம் கோர்ட்டில் "அப்பீல்' செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒப்புதல்

Posted:

தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள், சொத்து குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், "அப்பீல்' செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, "அப்பீல்' செய்வதற்கான நடவடிக்கைகளில், துறை இறங்கியுள்ளது.அதே நேரத்தில், 2006 - 11ம் ஆண்டு காலகட்டத்தில், அமைச்சர் பதவி வகித்த, 15 பேர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. சுரேஷ்ராஜன் உள்ளிட்ட சிலர் மீதான வழக்கில், சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன."மாஜி'க்கள்: கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, துரைமுருகன், ...

முதல்வர் ஜெ.,-"துக்ளக்' சோ திடீர் சந்திப்பு

Posted:

சென்னை: பா.ஜ., பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, "துக்ளக்' ஆசிரியர் சோ சந்தித்து, 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, 11:00 மணிக்கு மரியாதை செலுத்தி விட்டு, "அம்மா குடிநீர்' திட்டத்தை துவக்குவதற்காக, தலைமைச் செயலகத்திற்கு, 11:10 மணிக்கு வந்தார். தொடர்ந்து, திட்டம் துவக்கி வைக்கப்பட்ட நிலையில், பகல், 11:55 மணிக்கு, "துக்ளக்' ...

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி? மாநாட்டில் சஸ்பென்ஸ் வைத்த வைகோ

Posted:

விருதுநகர்: ""லோக்சபா தேர்தலில், எதிரி எந்த காயை நகர்த்துகிறார் என்பதை பார்த்து, நாம் காய் நகர்த்துவோம். அதற்கு ஏற்ப கூட்டணி வியூகம் இருக்கும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த, மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது: விருதுநகர் மண், திராவிட இயக்கத்தை வளர்த்தது. கடந்த 20 ஆண்டாக நாங்கள், பல்வேறு துன்பங்களால் அவதிப்பட்டு வருகிறோம். 2014 லோக்சபா தேர்தல், கதவை தட்டுகிறது; நாம் இலக்கை சரியாக நிர்ணயிக்க வேண்டும். சட்டசபை தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போகிறோம். விலகி நிற்கப்போவதில்லை. அப்படி என்றால், ...

இன்று முதல் ஆட்டோக்களில் புதிய கட்டணம் கட்டாயம்: நடவடிக்கை எடுக்க 50 குழுக்கள் தயார்

Posted:

சென்னை: சென்னையில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் வசூலிக்கும் அரசு அறிவிப்பு, இன்று முதல், கட்டாயமாகிறது. புதிய கட்டணத்தை பின்பற்றாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளதால், 15 ஆயிரம் ஆட்டோக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையில், 71 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோ கட்டணம், 1.8 கி.மீ.,க்கு, 25 ரூபாய்; அடுத்த ஒவ்வொரு, கி.மீ.,க்கு கட்டணம், 12 ரூபாய் என, அரசு நிர்ணயித்துள்ளது. கடந்த மாதம், 25ம் தேதி முதல், புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தது. புதிய கட்டண அட்டையை பெற்றுக் கொள்ள, செப்., 15ம் தேதி வரை, ஆட்டோ ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™