ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’
- அட்சய பாத்திரம் - கேள்விகளை கேளுங்கள்
- சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
- ஹன்சிகாவுக்கும், அமலாபாலுக்கும் வித்தியாசம் தெரியலை...!
- பால் வியாபாரத்தை ஏன்நிறுத்திட்டே..?
- அனைவருக்கும் வணக்கம்...(அறிமுகம்)
- மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்!
- லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார்
- அனுஷ்காவின் புதிய முடிவு
- அன்பான மனைவிமார்களுக்கு!
- யார் இவர்கள்? - விளையாட்டு
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- கருத்திடவும் .......
- அஞ்சலி
- உன்னால் மட்டுமே முடியும்
- தமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துது'யா சாமி!)
- என்னுள் விருட்சமாய் நீ ..
- மன்னிப்பின் அழுத்தம்
- ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி
- ஒரு தர்பூசணி = 6 லட்சம் தர்பூசணி - தெரியுமா உங்களுக்கு ?
- பெருமிதம்
- தமிழில் கையெழுத்திடுவோம்!
- அக்டோபர் மாத எண் ஜோதிடம் !
- தெரிஞ்சுக்கோங்க! - பாசக்கார புருஷன்! :)
- Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை
- ஆசை
- ஒரு நெல் மணி....
- பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- குறட்பாவில் விடுகதைகள்
- தழும்பு!
- மூன்று தண்டனை!
- படித்ததில் பிடித்தது :)
- தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா !
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -52)
- மும்பையில் நரேந்திர மோடி.. விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு
- எங்கே?
- 1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு முடிவு
- தோற்கப் பழகுவோம்...!!! (Mano Red)
- வணக்கம் நான் செல்வகுமார்
| திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’ Posted: 30 Sep 2013 02:40 PM PDT அட்லீ என்ற புதுமையான பெயர் கொண்ட அறிமுக இயக்குநர், கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட பரபரப்பு மிகுந்து செய்திகளுடன் உருவாக்கி வந்த படம் ராஜா ராணி. இந்தப் படத்தின் காட்சிகளை வைத்துத்தான் ஆர்யாவுக்கும், நயன்தாராவுக்கும் உண்மையிலேயே திருமணம் என கொஞ்ச காலத்திற்கு முன்னால் புரளிகள் கிளப்பி விடப்பட்டு தமிழக சினிமா உலகத்தை பரபரப்புக்குள்ளாகியது என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னத்தின் சிறந்த படைப்புக்களுள் ஒன்றான பழைய 'மௌனராகம்' படத்தின் ஒரு பகுதியை அப்படியே உருவி எடுத்து, அதற்கு நவீன பூச்சுக்கள் ... |
| அட்சய பாத்திரம் - கேள்விகளை கேளுங்கள் Posted: 30 Sep 2013 01:45 PM PDT நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்: வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு? |
| சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு Posted: 30 Sep 2013 11:31 AM PDT சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. - அதேநேரத்தில், டீசல் விலை வழக்கம்போல் லிட்டருக்கு 50 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. - --------------- |
| ஹன்சிகாவுக்கும், அமலாபாலுக்கும் வித்தியாசம் தெரியலை...! Posted: 30 Sep 2013 11:28 AM PDT - பொண்ணு குனிஞ்ச தலை நிமிர மாட்டா..! - அவ்வளவு அடக்கமா? - இல்லை! செல்போனே 'கதி'ன்னு கிடப்பா...! _ >கி.ரவிக்குமார் - ---------------------------------- - உங்க கண்ல ஆபரேஷன் பண்ண வேண்டிய நேரம் வந்தாச்சுன்னு எப்படி ணொல்றீங்க? - ஹன்சிகாவுக்கும், அமலாபாலுக்கும் வித்தியாசம் தெரியலை டாக்டர்...! - >ஒய்.கே.சங்கர் - ================================= |
| பால் வியாபாரத்தை ஏன்நிறுத்திட்டே..? Posted: 30 Sep 2013 11:24 AM PDT - பால் வியாபாரத்தை ஏன் நிறுத்திட்டே..? - மாட்டோட சொந்தக்காரன் கண்டு பிடிச்சுட்டான்...! - >எஸ்கா - ---------------------------------------------------------------- - எங்கம்மா நெஞ்சு வலியால் துடிச்சப்ப நீ டி.வி.சீரியல் பார்க்கப் போயிட்டியாமே..? - மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப மருமக அழலேன்னு யாரும் சொல்லக்கூடாதே..! - >பர்வின் யூனூஸ் - ---------------------------------------------------------------------------- |
| அனைவருக்கும் வணக்கம்...(அறிமுகம்) Posted: 30 Sep 2013 11:14 AM PDT அனைவருக்கும் வணக்கம்...உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி... - ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ... - கவிதை, நகைச்சுவை, சிறுகதை அனைத்தையும் நேசிப்பவன்...! - யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கோடு அவைகளை பகிர்தலும் பிடிக்கும்..!! |
| மீண்டும் நாயகியாக ஐஸ்வர்யா ராய்! Posted: 30 Sep 2013 11:11 AM PDT 'Happy Anniversary' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்குகிறார் ஐஸ்வர்யா ராய். - 'Happy Anniversary' படத்தின் தயாரிப்பாளர் தோஷி "ஐஸ்வர்யா ராய் இப்படத்திற்காக கடுமையாக உடலமைப்பினை மாற்றி வருகிறார். உடல் எடையை குறைத்து, 'தூம்' படத்தில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் போலிருப்பார் .என்றும் பெரும்பாலான காட்சிகளை தென்னாப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்" என்றும் கூறியுள்ளார். |
| லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார் Posted: 30 Sep 2013 11:09 AM PDT ராஞ்சி: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால் தேர்தலில் நிற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறிய பின்னர் இன்று வெளிவரும் தீர்ப்பு ஒரு பெரும் அரசியல் புள்ளியை பொது வாழ்வில் இருந்து நீக்கிட வகை செய்யும் வகையில் இன்று சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் லாலு உள்பட 45 பேர் குற்றவாளிகள் என அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்படும். குற்றவாளி என கோர்ட் அறிவித்ததும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ரூ. 38 கோடி வரை மாட்டுத்தீவனம் வாங்கியதாக கள்ளக்கணக்கு ... |
| Posted: 30 Sep 2013 11:06 AM PDT - ஹீரோக்களுக்கு இணையாக, தன்னாலும் மொத்த கதையையும், தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடிக்க முடியும் என்பதை, அருந்ததி படத்தில் நிரூபித்த அனுஷ்கா, இப்போது, ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி படங்களில், அதை, நிரூபித்து வருகிறார். - இதன் பின், தன் சினிமா கேரியரே டோட்டலாக மாறும் என்று கூறும் அனுஷ்கா, இனி, ஆண்டிற்கு இரண்டு படங்களில் நடித்தாலும், ஹீரோக்களுக்கு இணையான வேடம் கொண்ட படங்களை மட்டுமே ஏற்க போவதாகவும், பாடல் காட்சிகளில் மட்டுமே, வந்து செல்லும் கிளாமர் பொம்மையாக தோன்றி, தன் ... |
| Posted: 30 Sep 2013 10:59 AM PDT அவனைக் காதலி…! அவன் அந்த சிறப்புக்குரிய சந்தர்ப்பத்தை மறந்ததற்காக … அவன் உன்னுக்கு உன்னுடனான ஒவ்வொரு நிமிடமும் சிறப்புக்குரியதே அவனுக்கு அந்த சிறப்புக்குரிய சந்தர்ப்பம் தேவையில்லை. அவனைக் காதலி!…. அவன் மஸ்ஜிதிலிருந்து நேரம் தாழ்த்தி வந்ததற்காக … அவனுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடன் சுவனத்திக்கு நேரகாலத்துடன் சொன்றுவிடுவதுதான். அவனைக் காதலி!… அவன் உனக்கு ஹிஜாபைக் கொண்டு எச்சரித்தற்காக… அவனுக்கு வேண்டியதெல்லாம் நீ வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் அல்லாஹ்வின் அருள் உன்னை போர்த்திக் கொள்ளவேண்டுமென்பதே. அவனைக் ... |
| Posted: 30 Sep 2013 10:48 AM PDT இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள். நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா? 1. ![]() |
| Posted: 30 Sep 2013 10:47 AM PDT நானும் அதையே தெரிவித்து கொள்கிறேன். |
| Posted: 30 Sep 2013 10:18 AM PDT உறவுகளுக்கு வணக்கம் இன்று புதிதாக ஒரு பட்டை இணக்கபட்டிருக்கிறது போல்தெரிகிறது (அல்லது ஏற்கனவே இருக்கிறதா ). அதாவது வேறு சமூக வலை இணைப்பிலிருந்தும் கருத்துக் கூறமுடியும் . இதனை வரவேற்கிறீர்களா உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் . |
| Posted: 30 Sep 2013 10:12 AM PDT - நீண்ட நாட்கள் திறக்கப்படாத எங்களூரின் நூலகத்தில் ஒட்டடைகள் பெருகத் தொடங்கிவிட்டன! - கூட்டத்துடன் சுகமாய் வாழும் பசி மறந்த கரையான்கள் இது புத்தகங்கள் புதைக்கப்பட்ட கல்லறை - என பிதற்றும் தலைமை நூலகர் தினந்தோறும் அதன் வாசலில் அஞ்சலி செலுத்துகிறார் மலர்க் கொத்துக்களை வைத்து - ----------------------- >அதீதன் நன்றி: கல்கி |
| Posted: 30 Sep 2013 10:02 AM PDT உன்னால் மட்டுமே முடியும் வாழ்க்கை என்பது போராட்டம் தும்பம் வரும் நேரங்களில் கண்களிலிருந்து நீரோட்டம் இன்பம் காணும் நேரத்தில் மனதில் பொங்கி எழும் ஆர்ப்பாட்டம்! நண்பா இவ்வுலகில் எதுவும் நிரந்திரமில்லை இது நிரந்திரம் எனச்சொல்ல யாருக்கும் உரிமையில்லை !! இருப்பது சில வருடங்கள் அதில்தான் பல பிரச்சினைகள் பலப்பல தோல்விகள் - இங்கே தோல்வியைக் கண்டு பயந்தவர் தான் வந்த பாதச்சுவடு இல்லாமல் போகிறார் தோல்வியை துணிந்து எதிர்த்தவர் தனது பாதசுவடுகளை நாளைய உலகிற்கு காட்டிவிட்டு ... |
| தமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துது'யா சாமி!) Posted: 30 Sep 2013 09:55 AM PDT தமிழ்நாடு சாதிகள் பட்டியல். (தலை சுத்துது'யா சாமி!) தமிழர் நாம் சாதியாகப் பிரிந்து நின்று கொண்டு அடுத்தவர்களைக் குறை சொல்லுவது அர்த்தமற்றது. 'ஒன்றே குலம்' எனத் தமிழர் நாம் தமிழால் ஒன்றுபட வேண்டும். ஆதிதிராவிடர் பட்டியல் 1. ஆதி ஆந்திரர் 2. ஆதி திராவிடர் 3. ஆதி கர்நாடகர் 4. அஜிலா 5. அருந்ததியர் 6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்) 7. பைரா 8. பகூடா 9. பண்டி 10. பெல்லாரா 11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி ... |
| Posted: 30 Sep 2013 09:47 AM PDT - பெயர் சூட்டப்பெற்ற பறவையிட்ட எச்சத்தின் வழவழப்புகளில் புதைந்து கிடக்கிற துளி விதையென என்னுள் ஆழப்பதிந்து பிரிவினை தாண்டியும் விருட்சமாகிறாய் நீ பெரிதும் பெரிதாய்..! - ---------------- >கோ.பகவான் நன்றி: கல்கி |
| Posted: 30 Sep 2013 09:38 AM PDT - உறங்கி விழிக்கும் காலையில் மறந்து விடுகின்றன குழந்தைகள் முந்தைய எல்லா சண்டைகளையும் எல்லா காய்களும் பழமாகி விடுகின்றன. மன்னிப்பின் அழுத்தம் இல்லாமலே..! - ----------------------------------------------------- >ஜா.பிராங்க்ளின் குமார் நன்றி: கல்கி |
| ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Posted: 30 Sep 2013 09:07 AM PDT புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார். குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் ... |
| ஒரு தர்பூசணி = 6 லட்சம் தர்பூசணி - தெரியுமா உங்களுக்கு ? Posted: 30 Sep 2013 08:47 AM PDT ஒரு தர்பூசணிபழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம். நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜுலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு சீசிரியன் என்று பெயர் வந்தது. பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும் கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு ... |
| Posted: 30 Sep 2013 08:46 AM PDT - குழந்தைகளைப் படைத்துக் கொண்டிருப்பதால் என்றும்... உற்சாகத்துடனே இருக்கிறான் கடவுள்..! - --------------------- >நா.கி.பிரசாத் நன்றி: குமுதம் |
| Posted: 30 Sep 2013 08:43 AM PDT தமிழ் சிதைவிற்கு பல காரணங்களில் முதல் காரணம் நாம் தமிழில் கையெழுத்திடாததே. தமிழை அழிக்க முயலும் சிலரின் சூது, சூழ்ச்சி இங்கிருந்தே தொடங்குகிறது. மம்மி...டாடி என சொல்லச்சொல்லும் முட்டாள் பெற்றோர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதையே பெருமையாகக் கொள்கின்றனர். அதை குழந்தைகளிடம் திணிக்கவும் செய்கின்றனர். நம்முடைய முன்னோர்கள், அறிவாளிகள் சிலரின் கையெழுத்தையும் இங்கு வெளியிடுகிறேன். உறவுகள் தங்களுடைய கையெழுத்தையும் இங்கு வெளியிடுங்கள். தமிழ் பரவட்டும்! தரணி செழிக்கட்டும்!! 1. வள்ளலார் ... |
| Posted: 30 Sep 2013 08:39 AM PDT அக்டோபர் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புது வேலை கிடைக்கும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். அப்பாவுடனான பிணக்கு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். ஆனால் மனைவிக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உங்களின் மனமும், சிந்தனையும் மேலோங்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரால் ஆதாயம் ... |
| தெரிஞ்சுக்கோங்க! - பாசக்கார புருஷன்! :) Posted: 30 Sep 2013 08:33 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Samsung Galaxy S Duos GT-S7562 - கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை Posted: 30 Sep 2013 08:11 AM PDT நண்பர்களுக்கு காலை வணக்கம் Samsung Galaxy S Duos GT-S7562 வாங்கியுள்ளேன், அதில் கால் ரெக்கார்டிங் ஆப்சன் இல்லை அதில் கொண் டுவரமுடியுமா நண்பரே மேலும் என்னுடைய பேலன்ஸ் குறைந்து கொண்டே போகிறது என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி |
| Posted: 30 Sep 2013 08:05 AM PDT - குழந்தைகள் கைக்கு எட்டும் உயரத்தில் பேனாவை வையுங்கள் பேனா ஆசைப்படுகிறது குழந்தை கிறுக்க வேண்டுமென்று...! - --------------------- >டி.சேகர் நன்றி: குமுதம் |
| Posted: 30 Sep 2013 08:02 AM PDT அரபுநாட்டு அரசன் சித்ராங்கதனுக்குக் கதை கேட்பதில், மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் தினமும், சில அறிஞர்களை வரவழைத்து, கதைகளைக் கேட்டு வந்தான். சில அறிஞர்கள் கூறிய கதைகள் ஒரு நாளிலேயே முடிந்து விட்டன. சில அறிஞர்கள் கூறிய கதைகள், இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. அரசனும் அக்கதைகளைக் கேட்டு, கதை சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அனுப்பி வந்தான். திடீரென்று, அந்த அரசனின் மனதில் விபரீத ஆசை ஒன்று முளைத்தது. அதாவது, ""பலரும் வந்து கதை சொல்லிப்போகின்றனர். இருப்பினும், அக்கதைகள் ஒன்றிரண்டு நாட்களில், ... |
| பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 30 Sep 2013 07:58 AM PDT பற ... பற ... நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் கலைக்கூடம் 117.எல்டாம்ஸ் சாலை தேனாம்பேட்டை ,சென்னை .18.விலை ரூபாய் 30. தொலைபேசி 9841436213. இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் .பல படைப்பாளிகள் இதழ் தொடங்கியதும் படைப்பதில் தொய்வு வரும் .ஆனால் இவரோ படைப்பு , பத்திரிக்கை என்ற இரண்டு குதிரையிலும் லாவகமாக பயணிப்பவர் .ஆற்றல் மிக்கவர் .சிறந்த பண்பாளர் .மனித நேயம் மிக்கவர் . மதுக் கடைகளை மூடு ... |
| Posted: 30 Sep 2013 07:53 AM PDT குறட்பாவில் விடுகதைகள் தமிழில் விடுகதைகளுக்குப் பஞ்சமே யில்லை. ஒருவரியில் இருவரியில் பலவரியில் என்று அவை ரத்தினச் சுருக்கமாகவோ வெற்றிலைப் பெருக்கமாகவோ காணப்படுகின்றன. முதலில் புதிராகவும் விடையை அறிந்தபின் வியப்பாகவும் காணும் விடுகதைகளை வெண்பாக்களில் சேகரித்து எழுதுவோம். சின்னச் சின்ன விடுகதைகளைக் குறட்பாவில் எழுதலாம். விடுகதை ஒன்றைக் குறட்பாவிலோ, மற்ற வகை வெண்பாவிலோ அமைக்கக் கீழ்வருவது போன்ற விதிகளை அமைத்துக்கொள்ளலாம். 1. வெண்பாவின் ஈற்றடியில் உள்ள மூன்று சீர்களில் ஒன்றில் விடை அமைய ... |
| Posted: 30 Sep 2013 07:32 AM PDT ""அப்பா... நீங்களும், அம்மாவும், லவ் மேரேஜா இல்ல, அரேஞ்சுடு மேரேஜ்ஜா?'' எல்லாவற்றையும் எளிதாகக் கேட்டுவிடும் மகன், நகுல், இதையும் கேட்டுவிட்டு, பதிலுக்கு காத்திராமல், கண்ணாடியின் முன், முகத்தை நீட்டி, முன் நெற்றியில் விழும் தலைமுடியை சரிசெய்தான். ஆறாவது படிக்கும் அவன், சகலத்தையும் கேட்டு, நாம் பதிலுக்குத் தடுமாறினால், "நீ வேஸ்ட்டுப்பா' என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான். கண்ணாடி முன் நின்று, "ஜில்லெட் ஷேவிங் போம்'மைத் தடவிக் கொண்டே, ""டேய்... போடா... ஸ்கூலுக்கு, லேட்டாகப் போகுது,'' என்றவனைப் ... |
| Posted: 30 Sep 2013 07:29 AM PDT அத்திப்பட்டி என்னும் ஊரில் மாணிக்கம் என்பவர் நெய் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் சிங்காரம். அவன் மிகவும் பேராசை பிடித்தவன். மாணிக்கத்திற்கு வயதாகி விட்டதால், வியாபாரத்தைத் தன் மகன் சிங்காரத்திடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுத்துக் கொண்டார். சிங்காரத்துக்கு அவன் தந்தையின் வியாபார முறைகளான நியாயம், நாணயம் முதலியவை சிறிதும் பிடிக்கவில்லை. அவன் வெகு விரைவில் பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்பட்டான். நீண்ட நாட்கள் சிந்தித்த சிங்காரம், "தான் விற்கும் பொருட்களில் ... |
| Posted: 30 Sep 2013 07:09 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| தீர்த்தம் - 18000வது பதிவு - கிருஷ்ணாம்மா ! Posted: 30 Sep 2013 07:09 AM PDT நாம் தினமும் பருகும் தண்ணீரைத்தான் தீர்த்தம் என்றேன். கோவில்களில் உள்ள குளத்தையும் 'தீர்த்தம்' என்று சொல்வதுண்டு நான் இந்த பதிவில் இந்த தண்ணீரைப்பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். இந்த தண்ணீரை நீர், குடிநீர், உப்புத்தண்ணீர், ஆற்று தண்ணீர், சுனை நீர், கடல் நீர், ஜலம், தீர்த்தம் என்று பலவாறாக சொல்கிறோம். இந்த தண்ணீர்தான் நம்முடைய வாழ்வாதாரமே. மனிதன் நாடோடியாக வாழ்ந்த போது கூட தன் குடி இருப்பை ஆறுகளின் ஓரமாக அமைத்துக் கொண்டான் என்று நாம் படித்திருக்கிறோம். இந்த அளவு முக்கியமான தண்ணீர் நமக்கு ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -52) Posted: 30 Sep 2013 06:51 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| மும்பையில் நரேந்திர மோடி.. விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு Posted: 30 Sep 2013 06:19 AM PDT மும்பை: பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். விமான நிலையத்தில் லட்சக்கணக்கான மக்கள் அவரை காண கூடினர். அங்கு திரண்டிருந்த கூட்டத்தில் மோடி பேசியது,இந்த நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து நீஙகள் தான் காப்பாற்ற வேண்டும் என்றார். . அப்போது கூட்டத்தில் திரண்டிருந்தவர்கள் காப்பாற்றுவோம் காப்பாற்றுவோம் என உரக்க கூச்சலிட்டு உறுதியளித்தனர். |
| Posted: 30 Sep 2013 06:11 AM PDT எங்கள் தென்னை மரத்தில் கூடு கட்டி விளையாடிய தூக்கனாங் குருவிகள் எங்கே என் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி கொஞ்சி விளையாடிய சிட்டுக் குருவிகளும் எங்கே தென்னை மரத்தில் இருந்து செங்குத்தாய் கீழே குதித்து நீந்தி விளையாடிய கிணறுகளும் எங்கே நாங்கள் சந்தோசத்தில் ஆக்கி தின்ற கூட்டஞ்சோறும் கில்லி,நொண்டி,கபடி,கண்ணாமூச்சி,கிச்சு கிச்சு தம்பளம் என்று விளையாடிய விளையாட்டுக்களும் எங்கே ஆடு , மாடுகளுடன் துள்ளி விளையாடிய பச்சை பசேலென இருந்த வயல் வெளிகள் எங்கே அனைத்தும் இன்று கனவுகளாக என் கண் முன்னால் ... |
| 1444 அரசியல் கட்சிகளையும் ஆர்.டி.ஐ.,யில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு முடிவு Posted: 30 Sep 2013 05:36 AM PDT புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உட்படாமல் 6 தேசிய கட்சிகளை மட்டும் காப்பாற்ற உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் காப்பாற்ற முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முயற்சி : ஆர்.டி.ஐ., மூலம் விபரம் கேட்பதில் இருந்து 6 தேசிய கட்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் இதனை தேசிய மற்றும் மாநில கட்சிகளான 52 கட்சிகளுக்கு விரிவுபடுத்தியது. தற்போது நாட்டில் உள்ள 1444 அரசியல் கட்சிகளையும் ... |
| தோற்கப் பழகுவோம்...!!! (Mano Red) Posted: 30 Sep 2013 05:15 AM PDT தோல்வி தரும் சோகத்தினை தோளில் சுமந்து நிற்கையில், வேட்கையுடன் வெற்றிக்கனி பறிக்க விடாமுயற்சியுடன் வா நண்பா தோற்கப் பழகுவோம்..!! இன்னல்கள் கூடி வந்து இகழ்ந்து சிரித்தாலும், இறப்பு கண்முன்னே இழிவாய் நின்றாலும், தோல்வி கண்டு பயம் வேண்டாம் தோற்கப் பழகுவோம்..!! முதல் முயற்சியிலே முழு வெற்றியென்பது, அனுபவமில்லா ஆசிரியனிடம் அரைகுறையாய் பயின்றதற்குச் சமம்..!! நல்ல தோல்விகள் தரும் நன் மந்திரம் கற்க தோற்கப் பழகுவோம்..!! கசக்கும் தோல்வி நிலையை களிப்புடன் ஏற்கும் போது, இனிக்கும் ... |
| Posted: 30 Sep 2013 05:11 AM PDT நான் ஈகரையில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜு சரவணன் உடன் பணியாற்றும் நண்பர். நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
