ஈகரை தமிழ் களஞ்சியம் |
- Leo tolstoy's war and peace மின்னூல் தமிழில் வேண்டும்!
- அம்மா
- கடி ஜோக்ஸ் -சில..
- காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?
- தேநீர் ஒரு சுவையான பானம் !
- உஷார் எலும்பு தேயலாம்!
- இளந்தாமரை மாநாடு
- அலமாரி பொம்மைகள்
- 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி
- சிரிக்க சில நகைச்சுவைகள்
- 6000 மதிப்பீடுகளை கடந்த இனிய கொலவெறி அண்ணனை வாழ்த்துவோம் வாங்க
- சொல்வதெல்லாம் உண்மையல்ல
- குழந்தைகளின் உலகில்
- இருந்திருக்கலாம்
- 21/9 நைரோபி கென்யா
- பழைய சாதத்தில் பலம் இருக்கு !
- "என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!”
- 15000 பதிவுகளை கடந்து வெற்றிநடை போடும் நாட்டாமையை வாழ்த்தலாம் வாங்க
- குறுங்கவிதைகள் ....அந்தாதி
- எதிர்காலம் எங்கே?
- விவசாயம்
- தாலிக்கு அர்த்தம்
- பேஸ்புக் பற்றி சைபர் கிரைம்
- ஆம்லெட் வகைகள்
- சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப்
- தமிழ் இரண்டாவது தேசிய மொழி!
- விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு
- தலையணை மந்திரம்!
- மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்!
- பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி
- விண்டோஸ் 8: டாஸ்க் மானேஜர் அப்கிரேட்
- செவிமடுப்பாயோ சிந்திப்பாயோ
- இளம் குற்றவாளிகள் - ஞாநி
- நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red)
- நிறக்குருடு சிறுகதை !
- ரவிக்கை.............:)
- தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் !
- இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9
- இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி
- படித்ததில் பிடித்தது :) -சரத்சந்திரரின் குறும்பு பேச்சு!
- என்னுடைய ஐபோன்
- மினி ஸ்டோரி! - தலைகீழாக!
- நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,,
| Leo tolstoy's war and peace மின்னூல் தமிழில் வேண்டும்! Posted: 25 Sep 2013 01:48 PM PDT Leo tolstoy எழுதிய war and peace புத்தகமாகிய போரும் சமாதானமும் மின்னூல் தமிழில் உள்ளதா? இருந்தால் அதன் தரவிறக்க முகவரி தரவும்! War and Peace E-Book Download | |
| Posted: 25 Sep 2013 12:10 PM PDT ![]() | |
| Posted: 25 Sep 2013 11:11 AM PDT "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?" "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்." | |
| காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா? Posted: 25 Sep 2013 11:07 AM PDT காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும். வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை வைட்டமின்கள் வீணாகாமல் இருக்க, காய்கறிகளை நறுக்கியபின் கழுவுவதைத் தவிர்த்து, கழுவியபின் நறுக்க வேண்டும். வைட்டமின்-ஏ மற்றும் கெரோட்டின் சத்துக்கள் நீரில் கரையாது. இருப்பினும், வேக வைக்கும்போது ... | |
| Posted: 25 Sep 2013 11:01 AM PDT சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சுறுசுறுப்பும், புத்துணர்வும், உற்சாகமும் அளிக்கவல்ல ஒரு சுவையான பானம் தேநீர். சுவையான தேநீர் தயாரிப்பதும் ஒரு கலை தான். ஒரு கப் தேநீர் தயாரிக்க 1/2 கப் நீரில் 1/2பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தவும். சில வித்தியாசமான சுவையான தேநீர் தயாரிக்கும் முறைகளை பார்ப்போம். மசாலா டீ: ஏலக்காய் 6, கிராம்பு-6, சோம்பு 1 டீஸ்பூன், தனியா 1/2 ஸ்பூன் ஜாதிக்காய் சிறு துண்டு சுக்கு சிறு துண்டு, பட்டை சிறிது இவற்றை நைஸாக பொடி செய்யவும். தேநீருக்கு ... | |
| Posted: 25 Sep 2013 10:50 AM PDT ""கால்சியம் சத்து குறைபாடுதான் எல்லாத்துக்கும் காரணம்!'' "உடம்பு குண்டாக இருந்தால்தான் பிரச்னை. எடை கூடக்கூடத்தான் இதய நோய்கள் வரும். பி.பி. வரும். உடல் எடையைத் தாங்க முடியாமல் எலும்புகள் உடைந்துவிடும் அல்லது எலும்புத் தேய்மானம் ஏற்படும்' என்றெல்லாம் தானாகவே கற்பனை செய்துகொண்டு, உடலை வருத்தூதி உணவைச் சுருக்கியிருக்கிறார் அனிதா. விளைவு? போதியளவு சாப்பிடாததால் உணவிலிருந்து எலும்புக்குப் போகவேண்டிய சக்தியை போகவிடாமல் தடுத்திருக்கிறார். அதனால் எலும்பு தேய்ந்து உடைந்து போய் இன்று மருத்துவமனையில் ... | |
| Posted: 25 Sep 2013 10:48 AM PDT மோடி பேச குண்டு துளைக்காத மேடை திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், ... | |
| Posted: 25 Sep 2013 10:46 AM PDT அலமாரி பொம்மைகள் விழிகளில் ஏக்கப் பூக்களை ஏந்தி முதியோர் இல்லங்களில் காத்திருக்கும் பெற்றோர்களைப் போல… ஏக்கத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.. வளர்ந்த குழந்தைகளின் ஸ்பரிசத்திற்காக அலமாரியில் ஒதுக்கப் பட்ட அவர்கள் விளையாடிய பொம்மைகள் | |
| 90 வயதானாலும் ஓயாத என்.டி. திவாரி Posted: 25 Sep 2013 10:31 AM PDT முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள். சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் ... | |
| Posted: 25 Sep 2013 10:29 AM PDT நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க ? நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்..... மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ? கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. . ஏன்... என்னாச்சு ? பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா... அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி ... | |
| 6000 மதிப்பீடுகளை கடந்த இனிய கொலவெறி அண்ணனை வாழ்த்துவோம் வாங்க Posted: 25 Sep 2013 10:28 AM PDT Side Dish (மதிப்பீடு) ஆகவே அடித்து தெளிவா இருக்கும் எங்கள் அண்ணன் அஞ்சாநெஞ்சன் கொலவெறி இனியவன் அவர்கள் இன்னும் பல்லாயிரம் மதிப்பீடுகளை தாண்ட வாழ்த்துகிறேன் | |
| Posted: 25 Sep 2013 10:26 AM PDT ஒரு கணவனுக்காகப் பெண்கள் இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அந்தச் சாமானியனிடம் பண்பாட்டைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அடுத்த சேனலைத் திருப்பினால் ஓய்வுபெற்ற நடிகை ஒருவர், தகாத உறவிலிருப்பதாகச் சொல்லப்படும் பெண்ணொருத்தியிடம் பெண்களுக்கான இலக்கணங்கள் குறித்து விவரிக்கிறார். மற்றொரு சேனலில், பிரம்மாண்டமான குரல் தேர்வில் தோற்றுப்போனதற்காக ஒரு சின்னக் குழந்தை அழுதுகொண்டிருக்கிறாள். இடையிடையே விளம்பரங்கள். நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு துண்டு இது. நீங்கள் பார்ப்பது ... | |
| Posted: 25 Sep 2013 10:15 AM PDT குழந்தைகளின் உலகில் தன்னைத் தானே கோபித்துக் கொண்டன கொஞ்சலும் கோபமும் காமமில்லாத கட்டித் தழுவழும் மோகமில்லாத முத்தங்களும் நிறைந்த குழந்தைகளின் உலகில் பொம்மையாகாது கயவர்களின் உலகில் கடவுளாகிப் போனதை எண்ணிய சிலைகள்! | |
| Posted: 25 Sep 2013 10:11 AM PDT குழந்தையாகவே இருந்திருக்கலாம்... நிலாச்சோறு நிதம் சாப்பிட்டபடி.... இப்படி தேயும் நிலவாக இல்லாதிருக்க... - வித்யாசன் | |
| Posted: 25 Sep 2013 10:01 AM PDT 26/11 அன்று மும்பையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எவ்வாறு தாஜ் ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அரசை கலங்க வைத்தார்களோ அதைப்போலவே இப்பொழுதும் செய்துள்ளார்கள் . இந்த முறை அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு கென்யா தான் .ஆப்ரிக்காவில் சிறிய அளவு முன்னேறிய நாடு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு . அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு நாடு அதற்கு காரணமும் உள்ளது இதற்க்கு முன்பும் அல் கைதா தீவிரவாதிகள் கென்யா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி சுமார் 200 மக்களை கொன்றனர் ..அதன் பிறகு தீவிரவாதிகளின் ... | |
| Posted: 25 Sep 2013 09:36 AM PDT முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். பொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ... | |
| "என் குழந்தையைக் கொன்னுடுங்க... ப்ளீஸ்!” Posted: 25 Sep 2013 09:32 AM PDT உங்கள் குடும்பத்தில் முதல் வாரிசாக ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆசை ஆசையாக வளர்க்க ஆரம்பிக்கிறீர்கள். சில நாட்களிலேயே அந்தக் குழந்தைக்கு தினமும் 20 முறைக்கு மேல் வலிப்பு வருகிறது. மழலைச் சிணுங்கலோ, உடல் அசைவுகளோ, மன வளர்ச்சியோ, உணர்வுகளோ இல்லாமல், அந்தக் குழந்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே மட்டும் இருந்தால் என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு சூழலில் அழுதழுதே கடந்த ஒரு வருடத்தைக் கடத்தியிருக்கும் சுஜா, இப்போது தன் மகனைக் கருணைக்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்! கர்ப்ப காலத்திலும், பிரசவ ... | |
| 15000 பதிவுகளை கடந்து வெற்றிநடை போடும் நாட்டாமையை வாழ்த்தலாம் வாங்க Posted: 25 Sep 2013 09:26 AM PDT + + கடந்தும் நிதானமா வெற்றிநடை போடும் அன்பிற்குரிய நாட்டாமை பாலாஜி அவர்களை வாழ்த்த வயதும் அனுபவமும் இல்லை என்பதால் வணங்கி மகிழ்கிறேன். | |
| Posted: 25 Sep 2013 09:01 AM PDT தடுக்கி விழுந்தாலும் மிடுக்காக ஓடுகிறது நடை வண்டி ..... உயரத்தில் இருந்து உருண்டாலும் தெருவெல்லாம் உருளுது நுங்கு வண்டி ....
| |
| Posted: 25 Sep 2013 08:49 AM PDT எதிர்காலம் எங்கே? பல்லாங்குழி ஆடும் வயதில் பட்டாசை சுற்றுகிறோம், ஆலமர நிழலில் ஐந்தாறு பேர் சேர்ந்து விளையாடும்போது ஆக்கிய கூட்டாஞ்சோறு ருசி பார்க்கும் முன்னே வந்தோமே சிவகாசிக்கு ! என்ன செய்வோம் குடிசை வீட்டில் பிறந்த எங்களுக்கு பள்ளியெல்லாம் எட்டாக் கனிதான், பாடப் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் கந்தகத்தை தூக்கி நிற்கிறோம்!! பிறந்தது செம்மண் பூமியானாலும் பெற்றது கஞ்சிக்கு வழியில்லாத கருப்பனும், கந்தாயியும்தான்! பெற்ற பிள்ளையை காப்பாற்ற வக்கில்லாமல் போனாலும் ... | |
| Posted: 25 Sep 2013 07:39 AM PDT கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம். ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க முடியாது. ...!! அனைத்து நாடுகளும் விவசாயத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறது...! ஆனால், நம் நாடோ விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கிறது...! உணவு வாங்க பணம் வேண்டும் அதற்காக விவசாய நிலத்தை விற்றாய், நாளை உன் கையில் பணம் இருக்கும்... ஆனால், உண்ண உணவு இருக்காது.. பணத்தையும் உண்ண முடியாது... இந்த நிஜத்தை நாம் என்றுதான் உணர்ப்போகிறோமோ தெரியவில்லை..?! | |
| Posted: 25 Sep 2013 07:27 AM PDT திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால் அது எப்படி நாளடைவில் இல்லாமல் போனது பற்றி போதிய தகவல்கள் இல்லை அதனால் அதை விட்டுவிடுவோம் சரி பெண்கள் மட்டும் கழுத்தில் திருமணம் முடிந்ததன் அடையாளமாக ... | |
| Posted: 25 Sep 2013 06:56 AM PDT சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள். 1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report abuse) செய்யுங்கள். 2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது. 3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள். 4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம். சைபர் ... | |
| Posted: 25 Sep 2013 06:55 AM PDT காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது. இப்போது அந்த காளான் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்! காளான் ஆம்லெட் தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் ... | |
| சர்வதேச தரத்தில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் இல்லாதது வேதனை தருகிறது - பிரணாப் Posted: 25 Sep 2013 06:54 AM PDT உலகளவில் முதல் 200 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லாதது மிகுந்த வேதனை தருகிறது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். புதுச்சே மத்தியப் பல்கலைக்கழகத்தின் 23-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. துணை வேந்தர் டாக்டர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி, பி.கண்ணன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி குடியரசுத் தலைவர் ... | |
| Posted: 25 Sep 2013 06:27 AM PDT ""உலகின் மிக மூத்த மொழியான தமிழ் நம்முடைய மொழி. அதைப் பேசுபவர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அத்தகைய மொழியை மொத்த இந்தியர்களும் கற்றுக்கொள்ள என்ன தயக்கம்? இலக்கிய வளம் நிறைந்த தமிழ் எல்லா இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் இருக்க வேண்டும். அதற்கு அது இரண்டாவது தேசிய மெழியாக அறிவிக்கப்பட வேண்டும்''. ""ராஜ்ய சபாவில் கேட்ட இந்தக் குரல் எந்தவொரு தமிழக அரசியல் கட்சி உறுப்பினர்களுடையதும் அல்ல. பேசியது, உத்தரகாண்ட் பிஜேபி எம்.பி., தருண்விஜய். தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கிற கட்சிகளே, "இந்திய அரசியலமைப்புச் ... | |
| விஜயகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்- கொடும்பாவி எரிப்பு Posted: 25 Sep 2013 05:59 AM PDT தாது மணல் விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனை கடுமையாக சாடி, தூத்துக்குடியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் பேசியது இப்போது ஜாதிப் பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. விஜயகாந்த் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவியையும் எரித்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு நிலவுகிறது. தேமுதிக 9ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தபால்தந்தி காலனி மைதானத்தில் கடந்த 22ஆம் ... | |
| Posted: 25 Sep 2013 05:57 AM PDT எல்லாமே இயந்திரமயமாகிப் போன இன்றைய உலகில், தூக்கத்தின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், மனதின் அமைதி கெட்டு, தூக்கமின்றி தவிக்க நேரிடுகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, மக்களிடையே, கடுமையான உழைப்பும், எதையும் ஆழ்ந்து ரசிக்கும் மனதும் இருந்தது. இதனால், மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட்டன. அதனால், அவனுக்கு, படுத்தவுடன் தூக்கம் கண்களை தழுவியது. ஆனால், இன்றைய காலக் கட்டத்தில், தொழில், வேலை, வசதி, பொறாமை பெருகி விட்டதால், மன அமைதி கெட்டுப் போனது. இதனால், தூக்கம் குறைந்து ... | |
| மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்! Posted: 25 Sep 2013 05:55 AM PDT ஆரஞ்சுப் பழத்தில் எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின், "சி' சத்துகள் நிறைந்து காணப்படும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை, "தகதக' வென ஜொலிக்க வைக்கும். தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வரும் பெண்களை, மார்பக புற்றுநோய் ஒரு போதும் நெருங்கவே நெருங்காது. மார்பக புற்றுநோயை விரட்டும் அருமருந்தாக ஆரஞ்சு பழம் உள்ளது. உடலில், அளவுக்கு அதிகமாக காணப்படும் கொழுப்பை குறைத்து விடுகிறது. பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டாலோ, கொழுப்பின் ... | |
| பாரதியாரை பற்றிச் சத்தியமூர்த்தி Posted: 25 Sep 2013 05:43 AM PDT இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கை முழுதும் போராடிய பாரதியும் சத்தியமூர்த்தியும் நாடு விடுதலை பெறுவதை காணாமலே காலமாகிவிட்டார்கள். பாரதியார் மறைவுக்கு பின் அவரது தொண்டின் மகத்துவத்தை மக்களுக்கு புரிய வைப்பதில் சத்தியமூர்த்தி முக்கியமான பங்காற்றியிருக்கிறார்கள். அவருடைய சட்டசபை பேச்சுகள் இதற்கு சான்றாகின்றன. சென்னை சட்டசபையில் 1923 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி ஆற்றிய முதல் சொற்பொழிவிலேயே பாரதியின் பெருமை பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதி என்ற ஒரு மனிதர் இருந்தார். அந்த மனிதர் ... | |
| விண்டோஸ் 8: டாஸ்க் மானேஜர் அப்கிரேட் Posted: 25 Sep 2013 05:39 AM PDT விண்டோஸ் 8 சிஸ்டம் வெளி வந்து ஏறத்தாழ ஒராண்டாகியும், அதனைக் குறை கூறி வரும் தகவல்கள் இன்னும் நிற்கவில்லை. டச் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் சொல்லும் குறைகள் ஏராளம். ஆனால், இதில் டாஸ்க் மானேஜர் பயன்பாட்டைக் கண்டவர்கள், நிச்சயம் அதில் ஏற்பட்டுள்ள பல பயனுள்ள மாற்றங்களைப் புகழ்வார்கள். மிகப் பெரிய அளவில் டாஸ்க் மானேஜர் அப்கிரேட் செய்யப்பட்டு,புதிய வசதிகள் பல தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் மானேஜர் புரோகிராமினைத் திறக்க, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் ... | |
| Posted: 25 Sep 2013 05:28 AM PDT முத்து மலர் தத்தையென திங்கள்முக ===மங்கையென சாந்தநிலாமுகம் கண்டு பித்து மனம்பொங்க பருவ மோகங்கொண்டு ===வார்கற்பனையில் காதல் மது கொள்ளும் சக்தி மிக்க இளைஞனே மறந்தாயோ ===பூமிமகள் நீர்ச்சத்திலக்க கண்ணீர் விட்டு சத்த மில்லாமல் கட்டிலில் விழுந்ததந்தை ===கைப்பிடித்து குடும்பம் காப்பாற்ற சொன்னதை கனிவளத்து தேன் நிலவாய் கோதைமகள் ===பனிமலர் இடையழகில் சொட்டும் தேனை தேனீயாக பருகிவிட தளிருள்ளத்தில் வீரமுறும் ===இளைஞனே இங்கு மறந்தாயோ சீருடையில் அணிவகுத்து நீகற்றிட கழுத்துதாலி விற்று ... | |
| Posted: 25 Sep 2013 05:24 AM PDT இளம் குற்றவாளிகள் மீது நம் சமூக கவனம் இப்போதுதான் திரும்பியிருக்கிறது. பாலியல் குற்றத்தில் சிறுவர் எனப்படும் விடலைப் பருவக் குற்றவாளி சம்பந்தப்பட்ட தில்லி நிகழ்ச்சி அதன் கோரத் தன்மையால் நம்மை உலுக்கும் வரை நாம் இளங்குற்றவாளிகள் பற்றியும் கவலைப்படவில்லை. இப்போதும் கொலை, கொள்ளை போன்ற இதர குற்றங்களிலே அவர்கள் பங்கைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பாலியல் குற்றம்தான் பிஞ்சிலேயே பழுத்துவிட்டவர்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. விரைவாக தீவிர அக்கறை செலுத்த வேண்டிய விஷயம் இவை என்பதில் துளியும் ... | |
| நல்லதோர் காதல் செய்தேன்....!!! (Mano Red) Posted: 25 Sep 2013 05:04 AM PDT உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!! கொடியே சூழும் இளந்தளிரே பெண்ணே, பாடும் படியே என்னை சுருக்கிவிரிக்கும் சுடரே, அன்புப் பிடியே அர்த்தம் ஆயிரம் கொண்ட காதலே, உன்னை அடியேன் தொழ காத்திருக்கிறேன், என் ஆழ்ந்த ஆசையே..!! ஆசைப் பட்ட அடி நெஞ்சம் ஆருயிர் தேட, உன் பாசச் சிறையில் என்னுயிர் வேர் அகல, கூந்தல் வாசம் பட்டு உடல் சிலிர்த்து தெறிக்க, மெல்ல நேசக் கரம் நீட்டி ... | |
| Posted: 25 Sep 2013 04:42 AM PDT அம்மாவை எனக்கு ரொம்பப்பிடிக்கும். கடவுளுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அம்மா மூலமாக கடவுளுக்கு விண்ணப்பம் செய்தேன். "எப்படியாவது எனக்குப் பிடித்த கோர்ஸில் எனக்கு ஒரு சீட் கிடைத்துவிட வேண்டும்'. ப்ளஸ் டூ முடித்துவிட்டு பொறியியல் கல்லூரியில் சேர ஆசைப்படும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் ஒருவனாக இருந்த சமயம் அது. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் கடல்துறைப் பொறியியலாகிய மரைன் இன்ஜினியரிங்கில் சேரத்துடித்த சில நூறு மாணவர்களில் ஒருவனாக நான் இருந்தேன். சில நாட்கள் ... | |
| Posted: 25 Sep 2013 04:27 AM PDT * குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது. * சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும். * மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம். * குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள். * ... | |
| தக்காளி சாற்றின் சூப்பர் உபயோகம் ! Posted: 25 Sep 2013 04:04 AM PDT வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி. ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற ... | |
| இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 Posted: 25 Sep 2013 04:01 AM PDT இங்கிலாந்து நாட்டு ராணுவ வீரரின் மனித நேயம் நைரோபி 21/9 சுமார் 15 தீவிரவாதிகள் கென்யா நாட்டின் தலைநகரில் உள்ள நைரோபி வணிக வளாகத்தை அதிரடியாகத் தாக்கி அதை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 100 மணி நேரத்திற்கும் மேல் வைத்திருந்தனர் சம்பவம் நடை பெற்ற போது அங்கு காபி குடிக்க வந்திருந்த ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் சில ஊடகங்கள் அவர் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்னாலும் அவர் உண்மையில் தற்போது ஆஃப் டியூட்டி யில் இருந்த ... | |
| இளமையாக இருக்க.....தட்டைப் பயிறு / காராமணி Posted: 25 Sep 2013 03:46 AM PDT வயதாகி விட்டால் பலரும் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவர். அதற்கு, உடலில் புதிய செல்கள் உருவாக வேண்டும். இதற்கு, தட்டை பயிறு நன்கு பயன் தருகிறது. தட்டைப் பயிரில் உள்ள போலிக் அமிலம், உடலில் புதிய செல்களை உருவாக்க தேவையான செரீன், கிளைஜின் என்ற இரண்டு அமினோ அமிலங்களை உருவாக்குகிறது. இது, இளமை குன்றாமல் இருக்க செய்யவும், இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியுடனும் வாழ வழி வகுக்கிறது. இத்துடன், கூடுதலான சத்துணவு மற்றும் பிடித்தமான உணவு என்றாலும், குறைவாக சாப்பிட லெப்டின் என்ற ஹார்மோனை, தட்டைப் ... | |
| படித்ததில் பிடித்தது :) -சரத்சந்திரரின் குறும்பு பேச்சு! Posted: 25 Sep 2013 03:23 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... | |
| Posted: 25 Sep 2013 03:21 AM PDT என்னுடைய ஐபோன் 4 இப்போ ஐபோன் 5s வாங்கிட்டேன் ![]() | |
| Posted: 25 Sep 2013 03:14 AM PDT அது கி.பி. 1937ம் ஆண்டு. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக, அப்போது பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். ஒருசமயம் அவருடைய உதவியாளரை அழைத்து, தன் கையில் இருந்த ஒரு தபால் கவரைக் கொடுத்தார். அதில், தபால் தலையை ஒட்டும்படி கூறித் தபால் தலையையும் அவரிடம் கொடுத்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார். உதவியாளர் தபால் கவரை எடுத்துச் சென்று தன் மேஜையின் மேல் வைத்துத் தபால் தலையையும் அதன் மேல் ஒட்டினார். அப்படி ஒட்டும்போது அந்தத் தபால் தலையைத் தலைகீழாக ஒட்டி விட்டார். இந்தத் தவறை அவர் கவனிக்கவில்லை. ... | |
| நெய்ரோபி தாக்குதல் -2 இந்தியர்கள் உள்பட 59 பேர் சாவு,,,,,,,,, Posted: 25 Sep 2013 03:11 AM PDT துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 59 பேர் பலியாகினர். 175க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர். எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது! நைரோபியில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

