Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்த வித்தையே போதும் போல பொண்ணுங்கள கவர்வதற்கு…

Posted: 23 Aug 2013 10:17 PM PDT

இந்த வித்தையே போதும் போல பொண்ணுங்கள கவர்வதற்கு…

This posting includes an audio/video/photo media file: Download Now

திருடவா போனீங்க?… எல்லா இடமும் ஒரே மாதிரி இருக்காது!….

Posted: 23 Aug 2013 10:16 PM PDT

திருடவா போனீங்க?… எல்லா இடமும் ஒரே மாதிரி இருக்காது!….

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் இனத்திற்காக போராடும் ஒரே இயக்கம் ம.தி.மு.க: நெய்வேலியில் வைகோ பேச்சு

Posted: 23 Aug 2013 09:12 PM PDT

தமிழனத்திற்காக போராடும் ஒரே இயக்கம் ம.தி.மு.க. என்று வைகோ கூறினார். நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் ம.தி.மு.க. தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் கூட்டம் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது. மாநில பொருளாளர் மாசிலாமணி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் குணசேகரன், வெளியீட்டு அணி செயலாளர் வந்தியதேவன், மாவட்ட அவைதலைவர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிச்சை வரவேற்றார். கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். […]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் காரியாலயத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைக்க முயற்சி

Posted: 23 Aug 2013 09:05 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் காரியாலயத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கிளைக் காரியாலயமாக இந்த நிறுவனம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, எனினும், இவ்வாறான ஓர் காரியாலயத்தை அமைக்க அனுமதியளிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த யோசனைத் திட்டத்தை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைக் காரியாலயமொன்றை அமைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி எடுத்து வருவதாகத் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒபாமாவை அதிர்ச்சியடைய வைத்த இளம்பெண்

Posted: 23 Aug 2013 08:57 PM PDT

obama_001.w245

obama_001.w245அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உரையாற்றிய போது குறுக்கிட்ட ஒரு பெண், அரசு ரகசியங்களை வெளியிட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராட்லி மேனிங்கை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நியூயார்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, கூட்டத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர் எழுந்து, "பிராட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை எழுப்பினார். அவர் தொடர்ந்து தனது கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தார்.

இதனால், தனது உரையை சில நொடிகள் நிறுத்திய ஒபாமா, "நீங்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது'' என்று தெரிவித்தார்.

அப்போதும், அந்தப் பெண் உரத்த குரலில் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்பெண்ணை உட்காருமாறு சத்தம் போட்டனர்.

ஆனால், ஒபாமா குறுக்கிட்டு, "அமைதியாக இருங்கள். சற்று காத்திருங்கள்'' என்று கூட்டத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கோஷம் எழுப்பிய இளம்பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, அரங்கை விட்டு வெளியேற்றினர்.

அதன் பின் "அந்த இளம்பெண் மிகவும் மரியாதையாகவே பேசினார். அவர் முக்கியமான விஷயத்தை எழுப்பினார்'' என்று கூறிய ஒபாமா, தனது உரையைத் தொடர்ந்தார்.

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை சுமார் 7 லட்சம் பக்கங்கள் அளவுக்கு விக்கிலீக்ஸ் இணைதளத்துக்குக் கசிய விட்டதற்காக பிராட்லி மேனிங் என்ற 25 வயது ராணுவ வீரருக்கு அமெரிக்க நீதிமனன்றம் 35 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

அவர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாகப் பாலின மாற்றம் பெற்றுள்ளதாகவும், தன்னை இனி செல்சியா மேனிங் என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேகப்பந்துவீச்சாளர் லசீத் மாலிங்கவுக்கு ஓய்வு

Posted: 23 Aug 2013 08:54 PM PDT

சிம்பாப்வே கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை 27 பேர் கொண்ட முன்னோடி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் லசீத் மாலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 2 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 சர்வதேச இருபதுக்கு20 போட்டிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான 27 பேர் கொண்ட இலங்கை முன்னோடி குழாமில் லசித் மலிங்க இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி […]

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது பாகிஸ்தான்

Posted: 23 Aug 2013 08:51 PM PDT

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 25 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான். ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாய பாகிஸ்தான் அணியில் நசிர் ஜம்ஷெத் 2, முகமது ஹபீஸ் 3, உமர் அமின் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். எனினும் அஹமது ஷெஸாத்-சோயிப் மஸூத் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 6.1 ஓவர்களில் 55 ஓட்டங்களை […]

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குண்டு: யுவராஜ் சிங்

Posted: 23 Aug 2013 08:47 PM PDT

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குள்ளதுள்ளது என்பதை எளிதில் மறந்து விடக்கூடாது. நாங்களும் ஹீரோ’ தான் என, யுவராஜ் சிங் தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல் நடந்த உலக கோப்பை போட்டியில், தொடர் நாயகன் விருது வென்றார். இதன் பின் ஏற்பட்ட நுரையீரல் கேன்சர் நோயிலிருந்து மீண்ட இவர், 2012 “டுவென்டி-20′ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டததால் இந்திய […]

ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து வெளியேறும் நச்சுநீர் பசிபிக் பெருங்கடலை நோக்கி பாய்கிறது

Posted: 23 Aug 2013 07:17 PM PDT

ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா டய்ச்சி அணுஉலை கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து, இந்த அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனினும், உலையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ரியாக்டர்களுக்கு செல்லும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாலும், அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கசிவாலும் ஃபுகுஷிமா அணு உலை தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. அணு உற்பத்தி நடந்து வரும் ரியாக்டர்களை குளிர்விக்க தற்காலிக முகாம்களை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. […]

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெறுகிறார்

Posted: 23 Aug 2013 07:09 PM PDT

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் பால்மர் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்று அறிவித்துள்ளது. இவர் இந்நிறுவனத்தைத் தோற்றுவித்த பில் கேட்சின் நீண்ட நாள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், ஆரம்ப காலத்திலிருந்து அவருடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மாற்றாக மற்றொரு தலைவர் தேர்வு செய்யப்படும்வரை பால்மர் பதவியில் நீடித்திருப்பார் என்று நிர்வாகிகள் குழு அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் தொழில்முனையில் ஒரு கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™