Tamil Star |
- வானிலை சரியில்லாததால் கிரிக்கெட் விளையாடிய ஒமர்
- இளவரசி டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவமா?
- பயங்கரவாதி, அப்துல் கரீம் துண்டா தூக்கிலிடப்பட வேண்டும்
- பொதுநலவாய மாநாடு : இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேரில் அழைப்பு
- வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல்
- தேர்தலை கண்காணிப்பதற்கு சார்க் கண்காணிப்பாளர்கள் 17 பேர் வருகை
- தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன
- மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையை சந்தித்துப் பேச எழிலனின் மனைவி முயற்சி
- நைஜீரியாவில் ராணுவம்-தீவிரவாதிகள் மோதலில் 18 பேர் பலி
- ஜப்பானின் சகுரஜிமா எரிமலை வெடித்து சிதறியது
| வானிலை சரியில்லாததால் கிரிக்கெட் விளையாடிய ஒமர் Posted: 18 Aug 2013 07:13 PM PDT
தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான, பரூக் அப்துல்லாவின் மகன், ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக உள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம், கிரிக்கெட் விளையாடத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், நீர் மின் திட்டம் ஒன்றை பார்வையிட, ஸ்ரீநகரிலிருந்து ஹெலிகாப்டரில், அதிகாரிகளுடன் ஒமர் பயணம் செய்தார். அங்கிருந்து திரும்பும் போது, மோசமான வானிலை காரணமாக, ஹெலி காப்டர் அவசரமாக தரையிறங்கியது. பிரென்வார் என்ற கிராமத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்தில், இளை ஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிச் சென்று, இளைஞர்களுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தார். வானிலை சீரானதும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளவரசி டயானாவை கொலை செய்தது பிரிட்டன் ராணுவமா? Posted: 18 Aug 2013 07:07 PM PDT
1997 ஆகஸ்ட் 31-ல் டயானா தனது நண்பர் டோடியுடன் பாரீஸில் காரில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.இத்தகவல் உண்மையானது தானா என்பது குறித்து விசாரணை நடத்த ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உயரதிகாரி சர் பெர்னார்ட் ஹோரன்-ஹவ் அனுமதி வழங்கியுள்ளார். இருந்தாலும் இப்போது நடைபெறுவது டயானா மரணம் குறித்த முழுமையான மறுவிசாரணை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாதி, அப்துல் கரீம் துண்டா தூக்கிலிடப்பட வேண்டும் Posted: 18 Aug 2013 07:00 PM PDT
துண்டாவின் கைது குறித்து, காஜியாபாத் அருகே, ஹபூர் என்ற இடத்திலுள்ள, அவனது வீட்டிற்கு அருகில் வசிப்போரும், உறவினர்களும் கூறுகையில், "பயங்கரவாதி துண்டா, கைது செய்யப்பட்டது வரவேற்கத் தக்கது. அவன் கைதால், நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். துண்டா செய்த குற்றங்களுக்காக, அவனை தூக்கிலிட வேண்டும்' என்றனர். துண்டாவின் சகோதரர், அப்துல் மாலிக் கூறியதாவது: துண்டா எங்கிருக்கிறான் என்பதை அறிய, போலீசார் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து சென்றனர்; விசாரணை நடத்தினர். நான் கடைசியாக, என் சகோதரனை, 1991ல் பார்த்தேன். துண்டாவின் குடும்பத்தினர், ஹபூரில், 1994 மற்றும், 1995ம் ஆண்டிற்கு இடையே, ஒன்றரை ஆண்டு காலம் வசித்தனர். நமது நிர்வாகத்தினரும், அதிகாரிகளும், துண்டா விஷயத்தில், சரியாக செயல்பட்டுள்ளனரா, இல்லையா என்பதை கோர்ட் முடிவு செய்யும். இவ்வாறு, அப்துல் மாலிக் கூறினார். துண்டாவின் மைத்துனி, தகிரா கூறுகையில், ""எங்களது, ஒட்டு மொத்த குடும்பத்தினரும், துயரங் களுக்கும், கொடுமை களுக்கும், ஆளாக காரணமாக இருந்த துண்டா விற்கு, மரண தண்டனை வழங்க வேண்டும். இதற்கு முன், பல முறை துண்டா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்த முறைதான், நல்ல செய்தியை கேட்டுள்ளோம்,'' என்றார். அப்துல் கரீம் துண்டாவின் அண்டை வீட்டுக்காரரான, தேவேந்தர் சர்மா கூறியதாவது: துண்டா கைது செய்யப்பட்டதில், எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அவனிடம் தீவிர விசாரணை நடத்துவதோடு, இந்திய தண்டனை சட்டத்தின்படி, அதிகபட்ச தண்டனையும் வழங்க வேண்டும். எங்கள் பகுதியில் வசிப்பவர்களின், கவுரவத்தையே பாழ்படுத்தியவன் அவன். சுதந்திர தினத்திற்கு பின், அவன் கைது செய்யப்பட்டதாக, செய்தி வெளியாகியுள்ளது, பெருமை அடைய வைக்கிறது. இவ்வாறு, தேவேந்தர் சர்மா கூறினார். கடந்த, 1990ம் ஆண்டுகளில், துண்டா தலைமறைவாகி விட்டாலும், 2000ம் ஆண்டில், அவன் இறந்து விட்டதாக, உளவு நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவனை தேடும் வேட்டையில், தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும், 2005ம் ஆண்டில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின், ஒருங்கிணைப்பாளர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்திய போது, துண்டா உயிரோடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும் தேடுதல் பணி தொடர்ந்தது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுநலவாய மாநாடு : இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேரில் அழைப்பு Posted: 18 Aug 2013 06:53 PM PDT
புதுடில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே அழைப்பிதழை வழங்கவிருக்கின்றார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்ககூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உலக நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை அரசியல் காரணங்களைக் கூறி தவிர்க்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல் Posted: 18 Aug 2013 06:47 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தலை கண்காணிப்பதற்கு சார்க் கண்காணிப்பாளர்கள் 17 பேர் வருகை Posted: 18 Aug 2013 06:41 PM PDT
கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள், மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போதும் அரசாங்கம், அரச சொத்துக்களை தேர்தல்கள் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கில் இராணுவத்தின் இடையூறுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி கட்சி உறுப்பினர்களின் விபரங்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் திரட்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன Posted: 18 Aug 2013 06:35 PM PDT
வடமாகாண சபைத் தேர்தல் தங்களின் மூன்றாவது போராட்டம் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சு வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்றாவது நோக்கம் ஒன்று உள்ளது என்பது, அதன் முதலமைச்சு வேட்பாளரது கருத்தில் புலனாகி உள்ளது. அதன் உள்நோக்கம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளையை சந்தித்துப் பேச எழிலனின் மனைவி முயற்சி Posted: 18 Aug 2013 06:26 PM PDT
நவி பிள்ளை அம்மையாரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியிருக்கின்ற போதிலும், அதற்கான நேரம் இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்று அனந்தி சசிகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இறுதிப் போரில் படையினரிடம் சரணடைந்த, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தொடர்பாகவும், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பாகவும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளரை சந்தித்துப் பேசவுள்ளதாக அவர் கூறினார். 'மனித உரிமைப் பிரச்சனை''பாதிக்கப்பட்டவல்களில் ஒருவர் என்ற வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குபவர் என்றபடியாலும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் நேரில் அவரிடம் தெரிவிப்பதற்காகவே நான் அவரைச் சந்திக்க இருக்கின்றேன். அதற்காகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றேன்' என்றார் அனந்தி சசிகரன். வருகின்ற செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக இருக்கின்ற நிலையில் தேர்தல் நலன்களை முன்வைத்தே, நவி பிள்ளையைச் சந்திக்கின்றீர்கள் என்ற விமர்சனம் உங்கள் மீது வைக்கப்படலாம் அல்லவா என்று கேட்கப்பட்டபோது, 'இது மனித உரிமை தொடர்பான விடயம். வெறும் அரசியல் பிரச்சினை அல்ல என்று' அவர் பதிலளித்தார். 'மனித உரிமைகள் தொடர்பாகவே நவநீதம் பிள்ளையைச் சந்திக்கவுள்ளேன். அவர் மனித உரிமைகள் சம்பந்தப்பட்டவர். அவருடனான சந்திப்பின் போது அரசியல் பேச முடியாது. அவரைச் சந்திப்பதை அரசியல் ரீதியானது என்று சிந்திப்பதே தவறு' என்று அனந்தி சசிகரன் சுட்டிக்காட்டினார். 'சரணடைந்த, காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாகாண சபைத் தேர்தல் வருவதற்கு முன்பிருந்தே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அது முற்றிலும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயம். அதற்கும் அரசியலுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லை' என்றும் அவர் குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நைஜீரியாவில் ராணுவம்-தீவிரவாதிகள் மோதலில் 18 பேர் பலி Posted: 18 Aug 2013 06:19 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜப்பானின் சகுரஜிமா எரிமலை வெடித்து சிதறியது Posted: 18 Aug 2013 06:14 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















