Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


3 மாதங்களுக்கு பின் தமிழகத்தில் மீண்டும் மின்தடை : காற்றாலை உட்பட அனைத்து உற்பத்தியும் சரிவு

Posted:

காற்றாலை, அனல் மின் உற்பத்தி குறைவு, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைவு ஆகியவற்றால், 1,654 மெகா வாட் மின் பற்றாக்குறை நேற்று ஏற்பட்டுள்ளது; பற்றாக்குறை நீங்கி, நிம்மதியாக இருந்த, மூன்று மாதத்துக்கு பின், தமிழகத்தில், பரவலாக மின்தடை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன், 10,364 மெகா வாட் ஆக உள்ளது. ஆண்டுதோறும், தமிழக மின் தேவை, 500 முதல், 700 மெகா வாட் அதிகரித்தது. மின் தேவையை விட, உற்பத்தி குறைந்ததால், 2008ம் ஆண்டு முதல், தமிழகத்தில், மின்தடை நடைமுறைக்கு வந்தது. கடந்த, 2009ல், 9,500 மெகா வாட் ஆக இருந்த, தமிழகத்தின் உச்சபட்ச ...

பாலியல் பலாத்கார வழக்குகளில் சமரசம்: தண்டனையை குறைக்க கோர்ட் மறுப்பு

Posted:

புதுடில்லி:"பாலியல் பலாத்காரம் என்பது, சாதாரண குற்றமல்ல; சமூகத்துக்கு எதிரான குற்றம். எனவே, இந்த வழக்குகளில், குற்றவாளிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமரசம் ஏற்பட்டதைக் காரணமாக வைத்து, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்து உள்ளது.பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற இருவர், பாதிக்கப்பட்டவர்களுடன் சமரசம் ஏற்பட்டதாகக் கூறி, தங்களின் தண்டனையைத் தள்ளுபடி செய்யும்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.இந்த மனு, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, ...

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி : பொறுமைகாக்க நிதி அமைச்சர் யோசனை

Posted:

புதுடில்லி : டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், 66க்கும் மேல் சரிவடைந்து, வரலாறு காணாத அளவில், 66.24ல் நிலை பெற்றது. நேற்று முன்தினத்தை விட, நேற்று, ரூபாய் மதிப்பு, 1.93 ரூபாய் குறைந்து உள்ளது.சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆனாலும், சரிவு நிலையை தடுத்து நிறுத்த முடியவில்லை.மத்திய அரசின் தவறு:பார்லிமென்டில், நேற்று பேசிய, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா உட்பட, ...

ஜெ., சொத்து வழக்கு: அரசு வழக்கறிஞரை திரும்ப பெற்றது கர்நாடகா ஐகோர்ட்

Posted:

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, அரசு வழக்கறிஞர் பவானி சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இரு தரப்பு சாட்சியம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்துள்ளது.

அன்பழகன் மனு:
இந்நிலையில், அரசு வழக்கறிஞர்கள், தங்கள் வழக்கறிஞர்களையும் சேர்த்து வாதிட அனுமதிக்க வேண்டும் என, தி.மு.க., ...

பசியை போக்கும் மணிமேகலையாக சோனியா திகழ்கிறார்: கருணாநிதி

Posted:

சென்னை : "பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு ...

சிறுமிக்கு நிகழ்ந்த அநீதி: கேரளா முழுவதும் அதிர்ச்சி

Posted:

திருவனந்தபுரம்:கேரளாவைச் சேர்ந்த, 17 வயது முஸ்லிம் சிறுமியை, அரபு ஷேக் ஒருவன் மணந்து, 17 நாட்களில் புறக்கணித்த விவகாரம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் இதுபோன்ற திருமணங்கள் நடக்காமல் தடுக்க, தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.17 நாள் குடித்தனம்:கோழிக்கோடு பகுதியில் செயல்படும், முஸ்லிம் அனாதை இல்லத்தில், பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட சிறுமி, 4 வயது முதல் தங்கியிருந்தார். தற்போது, 17 வயதாகும் அந்தச் சிறுமியை, கடந்த ஜூன் மாதம், 13ம் தேதி, அரபு ஷேக் ஒருவர், முஸ்லிம் ...

வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.,க்கள் தப்பிக்க ராஜ்யசபாவில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

Posted:

புதுடில்லி:குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, நெருக்கடி கொடுக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, பயனற்றதாக்கும் சட்ட திருத்த மசோதா, நேற்று, ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஊழல் கறைபடிந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் அளித்தது. அதில், "குற்ற வழக்குகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெற்றால், அவர்களின் பதவியை பறிக்க வேண்டும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும் தேர்தலில் ...

நாய் குட்டி வாங்கித்தராத பெற்றோருக்கு "தண்டனை': பள்ளிச் சிறுவர்கள் கோவையில் விபரீத முடிவு

Posted:

கோவை:பெற்றோரிடம் பலமுறை நாய்குட்டி கேட்டும், வாங்கி கொடுக்காததால், விரக்தியடைந்த பள்ளி மாணவர்கள் இருவர், கடிதம் எழுதி வைத்து, வீட்டை விட்டு வெளியேறியனர்; மாணவர்களை மீட்ட போலீசார், இரண்டு நாய்குட்டிகளை வாங்கி கொடுத்து, மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.கோவை, ராமநாதபுரம், சவுரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த டர்னர் மற்றும் எலக்டீரிசியன் தொழில் செய்யும் இருவரது 14 வயது மகன்கள், ராமநாதபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றனர். சிறு வயதிலிருந்து ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும், தங்களது வீடுகளில் செல்லமாக ஒரு ...

தங்கம் வாங்குவதைவிட விற்பது அதிகரிப்பு: நிலையில்லாத விலையால் மக்கள் குழப்பம்

Posted:

கடலூர்:தங்கத்தின் விலை திடீர், திடீரென குறைவதும், ஏறுவதுமாக உள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தவிர்த்து கையிருப்பில் உள்ளதை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால், நகைக்கடைகளில் விற்பனையின்றி வெறிச்சோடுகிறது.தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விற்பனை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகள் விற்பனை செய்யும் நகைக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், வியாபார போட்டி காரணமாக பல்வேறு சலுகைகள், பரிசு போன்ற திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.கடலூர் ...

"திருப்பதிக்கு பக்தர்கள் வர வேண்டாம்!' : போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

Posted:

திருப்பதி : திருப்பதி இடம் பெற்றுள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு முழு அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே, இந்த நாட்களில், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பொது வேலை நிறுத்தம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநிலம் முழுவதும், பல்வேறு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™