Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சென்னை விசாரணையில் ஆஜராக தயாளுவுக்கு உத்தரவு: உடல் நிலையை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட் சலுகை

Posted:

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி தயாளு, டில்லியிலுள்ள சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், சென்னையில் அமைக்கப்படவுள்ள, நீதிபதிகள் குழு முன் ஆஜராக வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கலைஞர், "டிவி'க்கு பல நிறுவனங்கள் வழியாக கைமாறிய, 200 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி, தயாளுவுக்கு சிறப்பு கோர்ட் ...

சொந்த உழைப்பில் 1.5 கி.மீ., வாய்க்கால் வெட்டும் விவசாயிகள்

Posted:

சென்னை: பொதுப்பணித் துறையினர் கைவிட்டும், துவண்டு விடாத தஞ்சை மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக, தங்கள் சொந்த உழைப்பில், ஒன்றரை கி.மீ., தூரம் வாய்க்கால் வெட்டி வருகின்றனர்.டெல்டா மாவட்டங்கள்: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் வெண்ணாறு, காவிரி, கல்லணை கால்வாய், அவற்றின் துணை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் புதர் மண்டி, மணல் மேடாகி தூர்ந்து கிடக்கின்றன. இவற்றில், சம்பா சாகுபடிக்கான தண்ணீரை எடுத்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து, பொதுப்பணித் துறையிடம், விவசாயிகள் ...

ரூ.30 லட்சம் சுருட்டிய டி.எஸ்.பி., - இன்ஸ்.,: விசாரணையில் திடுக் தகவல் அம்பலம்

Posted:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பஸ்சில் பயணம் செய்தவர்களிடம், 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில், தொடர்புடைய இருவரிடம், டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர், 30 லட்சம் ரூபாயைச் சுருட்டியது, விசாரணையில் தெரியவந்து உள்ளது.நாமக்கல் மாவட்டம், அனிமூர் குள்ள வண்ணான்காடு பகுதியைச் சேர்ந்தவர், போர்வெல் ரிக் வண்டி அதிபர், வின்ஸ், 40; ரிக் வண்டிகளுக்கான உதிரி பாகம் கடை வைத்துள்ளார். இவரிடம், சுந்தரம், 30, சேகர், 45, ஆகியோர் பணிபுரிந்தனர். வின்ஸ், பெங்களூரில் ரிக் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வரும் தன் சகோதரர்களிடம் இருந்து, கடைக்குத் தேவையான ...

அரசு மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 100 குழந்தைகள் விற்பனை

Posted:

வேலூர்: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை, விற்ற கும்பலில், மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள், ஒரே ஆண்டில், 102 குழந்தைகளை விற்றுள்ளது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினமும், 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. இதில், கள்ளக்காதல், காதலில் கர்ப்பமாவது போன்றவற்றால், குழந்தை பெற்றுக்கொள்வோரும் உண்டு. இதை பயன்படுத்தி, ஒரு கும்பல், இது போன்று பிறக்கும் குழந்தைகளை விற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக, ஆம்பூர் மருத்துவமனையில், இது நடந்து வருகிறது. மருத்துவமனை ஊழியர்களுக்கும், இதில் ...

விஜயகாந்தை கூட்டணிக்குள் இழுக்க ஏற்பாடு தீவிரம்: பிறந்தநாள் வாழ்த்து மூலம் அச்சாரம் போட முடிவு

Posted:

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு தி.மு.க., - பா.ஜ., - காங்., தலைவர்களை, பிறந்தநாள் வாழ்த்து கூற வைத்து, அதன் மூலம், லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு, இழுப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.தனித்து போட்டியிட்ட, தே.மு.தி.க., கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து தே.மு.தி.க., கழற்றி விடப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள, லோக்சபா தேர்தலுக்காக, தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க., தலைமை காய் நகர்த்தியது. ஆனால், ராஜ்யசபா தேர்தலில் நடந்த சம்பவங்களால், தே.மு.தி.க., தலைமை மீது தி.மு.க.,வினர் கடும் ...

இப்போது மாற்றப்பட வேண்டியது அ.தி.மு.க., ஆட்சி தான்: கருணாநிதி

Posted:

சென்னை: ""மாற்றப்பட வேண்டியது, இப்போது நடைபெறுகின்ற ஆட்சி தான்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அறிவாலயத்தில், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், "சென்னை நகரத்தின் வயது, 374 ஆகிறதையொட்டி, என்ன சொல்கிறீர்கள்' என, நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த கருணாநிதி, ""சென்னைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,'' என்றார். "தற்போது உள்ள நிலையில், சென்னையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும் என, நினைக்கிறீர்கள்?' என்ற கேள்வியை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு கருணாநிதி, ""இப்போது மாற்றப்பட வேண்டியது, இப்போது நடைபெறுகின்ற ஆட்சி தான்,'' ...

பெரும் பணக்காரர்களுக்கு 35 சதவீதம் வரி விதிக்க பரிசீலனை

Posted:

புதுடில்லி: ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய் ஈட்டும் பெரும்பணக்காரர்களுக்கான வரியை, 35 சதவீதமாக உயர்த்துவது குறித்து, மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.தற்போது, ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.நேரடி வரிகள்: 5 லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு, 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு, 30 சதவீத வரியும் ...

எம்.பி.,க்கள் "சஸ்பெண்ட்' விவகாரத்தால் லோக்சபாவில் களேபரம்

Posted:

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லோக்சபாவில் தொடர்ச்சியாக ரகளையில் ஈடுபட்டு வந்த, அம்மாநில எம்.பி.,க்கள், 10 பேரை, "சஸ்பெண்ட்' செய்ய, லோக்சபாவில் நேற்று, தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இந்த தீர்மானத்தை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்த்ததால், சபையில் களேபரம் உருவானது. சபாநாயகரின், "மைக்'கை உடைக்க முற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷத்தால், தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை அரசுக்கு உருவானது.23 நாளாக போராட்டம்: "ஆந்திராவை பிரித்து, ...

"பல கூட்டங்களில் பங்கேற்றதால் நினைவில் இல்லை': அனில் அம்பானி சாட்சியம்

Posted:

புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, விசாரணை நடத்தி வரும், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், நேற்று ரிலையன்ஸ் அதிபர், அனில் அம்பானி நேரில் ஆஜரானார். ""நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் பலமுறை பங்கேற்றுள்ளதால், என்னால் அவற்றை நினைவுபடுத்த முடியவில்லை. இருப்பினும் ஆவணங்களில் உள்ளவை உண்மையானவையே,'' என, சாட்சியம் அளித்தார்.சி.பி.ஐ., விசாரணை: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™