Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Posted: 17 Aug 2013 01:10 PM PDT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கோடியக்கரையில் இலங்கைப் படகு கரை ஒதுங்கியது

Posted: 17 Aug 2013 01:09 PM PDT

நாகை மாவட்டம், கோடியக்கரையில் ஆளில்லா இலங்கைப் படகு கரை ஒதுங்கியது சனிக்கிழமை தெரிய வந்தது.

எம்.பி.பி.எஸ்.: 2-ஆம் கட்ட கலந்தாய்வில் தேர்வானோருக்கு நாளைமுதல் வகுப்பு

Posted: 17 Aug 2013 01:09 PM PDT

தமிழகத்தில் இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) வகுப்புகள் தொடங்குகின்றன.

தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்

Posted: 17 Aug 2013 01:08 PM PDT

தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள வயநாடு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளதால் அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவுடனான ராணுவ உறவு பாதிக்காது

Posted: 17 Aug 2013 01:04 PM PDT

சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்து காரணமாக, ரஷியாவுடனான ராணுவ உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி: தருமபுரியில் பெண் உள்பட 6 பேர் கைது

Posted: 17 Aug 2013 12:58 PM PDT

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

திருமலைக்கு ஜீப்களை இயக்காததால் பக்தர்கள் பெரும் அவதி

Posted: 17 Aug 2013 12:54 PM PDT

திருப்பதியிலிருந்து திருமலைக்கு ஜீப்களை இயக்காததால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

"எய்ம்ஸ் ' பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்காவிடில் சட்டத் திருத்தம்

Posted: 17 Aug 2013 12:53 PM PDT

"எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரி பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் மத்திய அரசின் மனுவுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.

திமுகவுடன் காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி சாத்தியமா?

Posted: 17 Aug 2013 12:53 PM PDT

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் தேமுதிக - காங்கிரஸýடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செப்டம்பர் 25 முதல் தொடர் மறியல்: தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு

Posted: 17 Aug 2013 12:52 PM PDT

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது.

ஆகஸ்ட் 21-ல் எம்.இ. கலந்தாய்வு

Posted: 17 Aug 2013 12:51 PM PDT

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்

Posted: 17 Aug 2013 12:51 PM PDT

தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொல்.திருமாவளவன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

Posted: 17 Aug 2013 12:51 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளையொட்டி அவர் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

காங்கிரஸ் துணையில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது

Posted: 17 Aug 2013 12:50 PM PDT

நீதிநெறி விளக்கம்

Posted: 17 Aug 2013 12:45 PM PDT

எத்துணைய ஆயினும் கல்வி இடமறிந்து உய்த்துணர்வு இல்லெனில் இல்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றெனின் என்னாம், அஃதுண்டேல் பொன்மலர் நாற்ற முடைத்து.       (பாடல்-4)

இந்த வார கலாரசிகன்

Posted: 17 Aug 2013 12:44 PM PDT

காலத்தைக் கடந்து நிற்பவை எழுத்துகள். எழுத்தாளன் மறைந்தும் வாழ்கிறான். இதெல்லாம் படிப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகவே இருக்கிறது.

கவிராயர்கள்

Posted: 17 Aug 2013 12:42 PM PDT

இவர் முதுகுளத்தூரில் பிறந்தவர். முத்துராமலிங்க சேதுபதியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். பணவிடு தூது, தருமர் அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுகவிலாசம், முத்திருப்பப் பிள்ளை மீது காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

கல்லங்குடியில் கம்பர்!

Posted: 17 Aug 2013 12:40 PM PDT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கல்லங்குடி கிராமம் அருகில் உள்ள அடர்ந்த காட்டில், 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பரின் முழு உருவச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்!

Posted: 17 Aug 2013 12:39 PM PDT

வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும். அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செüராஷ்டிர மொழியாகும்.

புலவராற்றுப்படை!

Posted: 17 Aug 2013 12:36 PM PDT

ஆற்றுப்படை இலக்கியங்கள் வரிசையில், 19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றியதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை.

தமிழிசைக் கருவிகளின் தோற்றம்

Posted: 17 Aug 2013 12:35 PM PDT

வேட்டுவன் கையில் எப்போதும் வில்லம்பு இருக்கும். அவன் வேட்டையாட, வெகு தூரத்துக்குப் பாயும் அம்பும், அதனைச் செலுத்தும் வில்லிலுள்ள நரம்பும் பக்குவப் படுத்தப்பட்டிருக்கும்.

தமிழின் ஈர்ப்பாற்றல்

Posted: 17 Aug 2013 12:31 PM PDT

ஆங்கிலம் அதிகமாய்ப் படித்த எனக்கு இளமையில் தமிழார்வம் உண்டானது.

சொல் வேட்டை- 41

Posted: 17 Aug 2013 12:30 PM PDT

இரண்டாம் உலகப்போர், மனித குலத்தின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் கொண்டுவந்து கொட்டிய அறிவியல் கண்டுபிடிப்புகளும், சாதனங்களும் ஏராளம்.

அம்மா திட்ட முகாம்களால் பயன்பெறுவோர் எண்ணிக்கை உயர்வு

Posted: 17 Aug 2013 12:29 PM PDT

:அம்மா திட்ட சிறப்பு முகாம்களால், முதியோர் உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்தார். ராஜாக்கமங்கலம் ஊராட்சி, அளந்தங்கரையில்  நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஆட்சியர் எ

தக்கலையில் தேசபக்தர்கள் குடும்ப சங்கம விழா

Posted: 17 Aug 2013 12:28 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தியை முன்னிட்டு, குமரி மாவட்ட பாரத் மாதா சேவா டிரஸ்ட் சார்பில் தேசபக்த தொழிலாளர்களின் குடும்ப சங்கம விழா தக்கலையில் நடைபெற்றது.

நாகர்கோவிலில் ஜெனிவா தின விழா

Posted: 17 Aug 2013 12:28 PM PDT

நாகர்கோவிலில் ஜெனிவா தின விழா நடைபெற்றது.

திற்பரப்பில் காவல் உதவி மையம் திறப்பு

Posted: 17 Aug 2013 12:28 PM PDT

திற்பரப்பு அருவியில் காவல் உதவி மையத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் திறந்து வைத்தார்.

களியக்காவிளை பேரூராட்சிக் கூட்டம்

Posted: 17 Aug 2013 12:27 PM PDT

களியக்காவிளை பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத் தலைவர் டி.ஆர்.ஆஷா டயானா தலைமை தாங்கினார். செயல்அலுவலர் ஆ

தென்னக நதிகளை இணைக்க வேண்டும்

Posted: 17 Aug 2013 12:27 PM PDT

தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய ஜனதாதள தலைமை பொதுச்செயலர் டி. ராஜகோபால் வலியுறுத்தினார்.

நாகராஜா கோவிலில் இன்று ஆவணி ஞாயிறு விழா தொடக்கம்

Posted: 17 Aug 2013 12:27 PM PDT

:நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) தொடங்குகிறது.

முள்ளங்கனாவிளையில் கிராமசபைக் கூட்டம்

Posted: 17 Aug 2013 12:26 PM PDT

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 9-வது வார்டுக்குள்பட்ட பிலாக்கவிளையில் நடைபெற்ற கூட்டத்திற்கு, முத

ரூ. 40 லட்சத்தில் நடமாடும் மண் பரிசோதனை வாகனம்

Posted: 17 Aug 2013 12:26 PM PDT

:அரசு சார்பில் குமரி மாவட்ட வேளாண்மைத் துறைக்கு ரூ.40.08 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் எ

"தீயணைப்புத் துறை ஓட்டுநர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் நியமனம்'

Posted: 17 Aug 2013 12:26 PM PDT

தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் காலியாகவுள்ள 392 ஓட்டுநர் பணியிடங்கள், தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் படை வீரர்களைக் கொண்டு நிரப்பப்பட

திருநந்திக்கரையில் திடக்கழிவுத் திட்டம்: பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 17 Aug 2013 12:26 PM PDT

திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட திருநந்திக்கரையில் 4 பேரூராட்சிகளின் திடக்கழிவுகளைக் கொட்டும் திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திற்பரப்பு பேரூராட்சி திருந்திக்கரை அருகில் தும்பகோடு கிராம புறம்போக்கு பகுதியில் திற்

ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை

Posted: 17 Aug 2013 12:25 PM PDT

ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மீனவப் பிரதிநிதி இந்திய தூதரை சந்தித்து பேசினார்.

மணல் கடத்தவிருந்த லாரி பறிமுதல்: இருவர் கைது

Posted: 17 Aug 2013 12:25 PM PDT

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு ஆற்றுமணல் கடத்திச் செல்லவிருந்த  லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர், கிளீனரை கைது செய்தனர்.

சிலம்பக் கலை போட்டி: வென்றோருக்கு பரிசளிப்பு

Posted: 17 Aug 2013 12:25 PM PDT

:கன்னியாகுமரி மாவட்ட சிலம்பக் கலை போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை திருநெல்வேலி மண்டலம், கன்னியாகுமரி மாவட்ட ஜவஹர்

பன்னம்பாறை பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

Posted: 17 Aug 2013 12:24 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை ஆவே மரியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி புதிய  வகுப்பறை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

முத்துக்கிருஷ்ணாபுரத்தில் கிராமசபைக் கூட்டம்

Posted: 17 Aug 2013 12:23 PM PDT

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

22-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 17 Aug 2013 12:23 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இம் மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது.

சிங்கி இறால் கொழுக்க வைத்தல் இலவசப் பயிற்சியில் சேர அழைப்பு

Posted: 17 Aug 2013 12:23 PM PDT

தூத்துக்குடி தருவைகுளம் கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில், இம் மாதம் 27-ம் தேதி நடைபெறவுள்ள சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் தொடக்கம்

Posted: 17 Aug 2013 12:23 PM PDT

தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் மகளிர் கல்வி மையம் மற்றும் சம வாய்ப்பு மையங்களின் தொடக்க விழா, சுதந்திர தின விழா நடைபெற்றது.

திருச்செந்தூரில் நலத்திட்ட உதவி அளிப்பு

Posted: 17 Aug 2013 12:22 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை சார்பில் அக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா, கருத்தரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.

ஆங்கில மன்றத் தொடக்க விழா

Posted: 17 Aug 2013 12:22 PM PDT

: சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில மன்றத் தொடக்க விழா, ஜ

நாசரேத்தில் அபிஷேகப் பெருவிழா

Posted: 17 Aug 2013 12:22 PM PDT

நாசரேத் காமா ஊழியம் சார்பில் 13-வது அபிஷேகப் பெருவிழா நாசரேத் கதீட்ரல் மைதானத்தில் 3 நாள்கள் நடைபெற்றது.

மெய்யாலுமா..?

Posted: 17 Aug 2013 12:22 PM PDT

ஏன் இந்தப் பெயரை வைத்தோம் என்று நொந்து கொள்கிறார்களாம் "தலைவா' படத் தயாரிப்பாளர்களும், நடிகர் விஜய் தரப்பினரும். "குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்குப் பிறகு வெளிவந்த "தலைவா' என்கிற பெயருள்ள எல்லா திரைப்படங்களுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அதன் தயாரிப்பாளரை போண்டியாக்கி இருக்கிறது என்கிறார்கள் திரைப்படத் துறையினர்.

நலத் திட்ட உதவி அளிப்பு

Posted: 17 Aug 2013 12:21 PM PDT

மனித நேய உதவும் கரங்கள் 19-ம் ஆண்டு விழாவையொட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பரிசளிப்பு, சிறந்த சேவை செய்த அரசு, பொதுத் துறை ஊழியர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. கோட்டாட்சியர் கதிரேசன் தலைமை வகித்தார். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் செ. ர

நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி வீரர்களுக்கு பாராட்டு

Posted: 17 Aug 2013 12:21 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்ற நாகம்பட்டி மனோ கல்லூரி கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இலவச பொது மருத்துவ முகாம்

Posted: 17 Aug 2013 12:20 PM PDT

கோவில்பட்டி தாமஸ் நகர் நலத் தொண்டு மாணவர் இயக்கம், கமலா மருத்துவமனை இணைந்து தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

Posted: 17 Aug 2013 12:20 PM PDT

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்ற

சுவாமி விவேகானந்தர் 150-வது ஜயந்தி விழா

Posted: 17 Aug 2013 12:20 PM PDT

உடன்குடி அருகே கொட்டங்காடு முத்துக்கிருஷ்ணபுரம் முத்தாரம்மன் கோவிலில், பாரத மாதா சேவா சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிழ்ச்சிக்கு பாலகண்ணன் தலைமை வகித்தார். இந்து மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணிச் செயலர் பாலன், சுதன் முன்னிலை வகித்தனர்.

நாசரேத் பள்ளியில் "இடதுகைப் பழக்கமுடையோர்' தினம்

Posted: 17 Aug 2013 12:20 PM PDT

நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் அகில உலக இடதுகைப் பழக்கமுடையோர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

உடன்குடி வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

Posted: 17 Aug 2013 12:19 PM PDT

உடன்குடி வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் 32-வது ஆண்டு விழா நடைபெற்றது.

ஆறுமுகனேரி, காயல்பட்டினம், சாத்தான்குளத்தில் சுதந்திர தின விழா

Posted: 17 Aug 2013 12:19 PM PDT

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் நகராட்சி சார்பில் நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா ஷேக் தேசியக் கொடியேற்றினார்.

தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

Posted: 17 Aug 2013 12:19 PM PDT

பழையகாயலில் தீப்பிடித்த காரை விரைந்து சென்று அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: முதல் தாளை 2.62 லட்சம் பேர் எழுதினர்

Posted: 17 Aug 2013 12:18 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 2.62 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வினை எழுத 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சுமார் 5 ஆயிரத்து 854 பேர் மட்டுமே தேர்வு எழுதவில்லை.

சந்தையடியூர் நாராயண சுவாமி கோவிலில் பால்முறை திருவிழா

Posted: 17 Aug 2013 12:18 PM PDT

உடன்குடி சந்தையடியூர் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் ஆடி மாத பால்முறை திருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6,279 பேர் எழுதினர்

Posted: 17 Aug 2013 12:18 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 6,279 பேர் எழுதினர்.

சுதந்திர தினத்தில் விடுமுறை வழங்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Posted: 17 Aug 2013 12:17 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில், தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 50 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

Posted: 17 Aug 2013 12:17 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்  ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

Posted: 17 Aug 2013 12:16 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத் திறப்பு விழா

Posted: 17 Aug 2013 12:16 PM PDT

சாத்தான்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றி

சிங்கிலிப்பட்டி, விளாத்திகுளம் காளைகள் வெற்றி

Posted: 17 Aug 2013 12:16 PM PDT

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியில் சிங்கிலிப்பட்டி, விளாத்திகுளம் காளைகள் முதல் பரிசு வென்றன.

கோவில்பட்டி அணி வெற்றி

Posted: 17 Aug 2013 12:15 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மண்டலம் 18-க்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர் கால்பந்து போட்டி 2 நாள்கள் நடைபெற்றது.

பார்வையற்றோர் சங்க குறை தீர்ப்புக் கூட்டம்

Posted: 17 Aug 2013 12:15 PM PDT

கோவில்பட்டியில், தமிழ்நாடு யுரேனஸ் பார்வையற்றோர் சங்க குறை தீர்ப்பு மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி

Posted: 17 Aug 2013 12:15 PM PDT

சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சங்க ஊர்திப் பயணத்துக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

Posted: 17 Aug 2013 12:15 PM PDT

கோவில்பட்டிக்கு சனிக்கிழமை வந்த இந்திய மாணவர் சங்க ஊர்திப் பயணத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல்

Posted: 17 Aug 2013 12:14 PM PDT

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காவிட்டால், மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

நாகர்கோவில்

Posted: 17 Aug 2013 12:14 PM PDT

4 நாள் டெஸ்ட்: இந்திய "ஏ' அணி ரன் குவிப்பு

Posted: 17 Aug 2013 12:12 PM PDT

தென் ஆப்பிரிக்க "ஏ' அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய "ஏ' அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்துள்ளது.

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஃபெடரர், ஜோகோவிச் தோல்வி

Posted: 17 Aug 2013 12:12 PM PDT

ஆறாவது முறையாக சின்சினாட்டி மாஸ்டர்ஸ் பட்டத்தை வெல்லும் ரோஜர் ஃபெடரரின் கனவை தகர்த்தெறிந்தார் ரஃபேல் நடால்.

உலக கல்வி கேந்திரமாக தமிழகத்தை உருவாக்குவதே லட்சியம்

Posted: 17 Aug 2013 12:12 PM PDT

பல்கலைக்கழகக் கல்விக்கான உலகக் கேந்திரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே தமது அரசின் லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

எங்கள் நிலைப்பாட்டை மாற்ற முடியாது: ஐஓசி திட்டவட்டம்

Posted: 17 Aug 2013 12:06 PM PDT

குற்றப் பத்திரிகைகளில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைப்பாட்டை மாற்ற முடியாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து: இன்று தொடக்கம்

Posted: 17 Aug 2013 12:05 PM PDT

பிகார் தலைநகர் பாட்னாவில் 40-வது சப்-ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் கூடைப்பந்துப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது

Posted: 17 Aug 2013 12:03 PM PDT

இந்தியாவில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடர்: உமர் அக்மல் விலகல்

Posted: 17 Aug 2013 12:03 PM PDT

ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் விலகியுள்ளார். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை:குஜராத் அரசுக்கு எதிராக மத்திய அரசு மனு

Posted: 17 Aug 2013 12:03 PM PDT

சிறுபான்மையின ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் குஜராத் அரசின் நடவடிக்கையை விமர்சித்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குஜராத் மாநில அரசின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்

ஆசிய இளைஞர் விளையாட்டு: முதல் நாளில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

Posted: 17 Aug 2013 12:03 PM PDT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா தனது பதக்கப் பட்டியலில் கணக்கைத் தொடங்கியது.

சி.ஆர்.பி.எப். புதிய தலைமை இயக்குநர் பொறுப்பேற்பு

Posted: 17 Aug 2013 12:03 PM PDT

சி.ஆர்.பி.எப்.பின் புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி திலீப் திரிவேதி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

200 மீட்டர் ஓட்டம்: உசேன் போல்ட்டின் "ஹாட்ரிக்' தங்கம்

Posted: 17 Aug 2013 12:02 PM PDT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் உசேன் போல்ட் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 19.66 விநாடிகளில் கடந்தார்.

"மோடியை விமர்சித்த ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்

Posted: 17 Aug 2013 12:02 PM PDT

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அவரது ஜாதியின் பெயரால் விமர்சித்த மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை

Posted: 17 Aug 2013 12:02 PM PDT

அரசுப் பணத்தை விளம்பரங்களுக்கு முறைகேடாகச் செலவிட்டதாக முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை' என்று தில்லி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

"டிசம்பர் 16' பா−யல் வன்கொடுமை:22-இல் இறுதிகட்ட வாதம் தொடக்கம்

Posted: 17 Aug 2013 12:01 PM PDT

தில்லியில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு துணை மருத்துவ மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கின் இறுதிகட்ட வாதம் இம்மாதம் 22-ஆம் தேதி தொடங்குகிறது

உள்கட்சிப் பூசலை தவிர்க்க வேண்டும்

Posted: 17 Aug 2013 12:01 PM PDT

"காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு, உள்கட்சிப் பூசலைத் தவிர்த்து, தொண்டர்கள் தீவிரமாக பாடுபட வேண்டும்'' என்று முதல்வர் ஷீலா தீட்சித் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர்களிடம் கற்றது வாழ்வில் உதவியது

Posted: 17 Aug 2013 12:01 PM PDT

"ஆசிரியர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில் உதவியிருக்கின்றன'' என்று தில்லி காவல் துறையின் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறினார்.

தில்லி ரயில் நிலையத்தில் 150 சிறார்கள் மீட்பு

Posted: 17 Aug 2013 12:00 PM PDT

: குஜராத்தில் இருந்து ரயிலில் அழைத்து வரப்பட்ட பிகார், நேபாளம் பகுதிகளைச் சேர்ந்த 150 சிறார்கள் புது தில்லி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர்.

சிவில் லைனில் உடற்கல்வி மையம்

Posted: 17 Aug 2013 12:00 PM PDT

வடக்கு தில்லி மாநகராட்சி சார்பில் சிவில் லைன், சத்யவதி நகரில் கட்டப்படவுள்ள உடற்கல்வி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி அடிக்கல் நாட்டினார்.

குளியலறையில் பெண் கொலை

Posted: 17 Aug 2013 12:00 PM PDT

நொய்டாவில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் சனிக்கிழமை கூறியது:

பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதே காரணம்: ரஷியா

Posted: 17 Aug 2013 11:59 AM PDT

சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதே முக்கிய காரணமாக இருந்திருக்கும் என்று அக்கப்பலை உருவாக்கிய ரஷியா தெரிவித்துள்ளது.

2ஜி: சுவாமி மனு மீது அக்டோபர் 5-ல் விசாரணை

Posted: 17 Aug 2013 11:59 AM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 5-ல் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

பண்ருட்டியில் சுதந்திர தின விழா

Posted: 17 Aug 2013 11:57 AM PDT

பண்ருட்டியில் பகுதியில் உள்ள பள்ளிகளில் 67-வது சுதந்திர தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நந்தனார் அரசுப் பள்ளியில் புதிய போர்வெல் அமைக்கும் பணி

Posted: 17 Aug 2013 11:56 AM PDT

சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 லட்சம் செலவில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது தொடங்கியது

Posted: 17 Aug 2013 11:56 AM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இதில் இரு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கோயில் நிர்வாகிகள் மீது தாக்கு: 5 பேர் கைது

Posted: 17 Aug 2013 11:56 AM PDT

காளிக்கோயில் கரகம் ஊர்வலத்தில், கரகம் எடுத்து வந்தவரையும், கோயில் நிர்வாகிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பேரை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

"அம்மா' திட்டத்தில் மருத்துவர் வருகை தாமதம்: முதியோர் அவதி

Posted: 17 Aug 2013 11:55 AM PDT

அம்மா' திட்ட முகாமில் மருத்துவர்களின் வருகை தாமதமாவதால், வயது சான்று பெற முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அனைத்து கிராமத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பரிசு

Posted: 17 Aug 2013 11:55 AM PDT

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் ரொக்கப்பரிசு மற்றும் விடுதிக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 10,427 பேர் பங்கேற்பு

Posted: 17 Aug 2013 11:54 AM PDT

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட முதல் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 10,427 பேர் பங்கேற்றனர்.

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 17 Aug 2013 11:54 AM PDT

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 19 மின் தடை

Posted: 17 Aug 2013 11:53 AM PDT

அரசின் சாதனை விளக்க பிரசுரம் விநியோகம்

Posted: 17 Aug 2013 11:53 AM PDT

அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி ஆதனூர் பகுதியில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் சனிக்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™