Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 16 Aug 2013 01:17 PM PDT

அரியலூரில் வீட்டுக்கு மின் இணைப்பு  கொடுத்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 16 Aug 2013 01:17 PM PDT

அரியலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

வெவ்வேறு விபத்துகளில் இருவர் காயம்

Posted: 16 Aug 2013 01:16 PM PDT

அரியலூரில் வியாழக்கிழமை நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் காயமடைந்தனர்.

அரியலூர் அருகே பெண்கடத்தப்பட்டதாக புகார்

Posted: 16 Aug 2013 01:16 PM PDT

அரியலூர் அருகே பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக,  அவரது தந்தை போலீஸில் புகார் தெரிவித்தார். அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியை அடுத்த பிலாக்குறிச்சி காலனி தெருவைச்  சேர்ந்தவர் இளங்கோவன் (45). விவசாயி. இவரது மகள் இளந்தமிழ் (19).

சதுரங்க விளையாட்டு விழிப்புணர்வு பேரணி

Posted: 16 Aug 2013 01:16 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான  சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம்

Posted: 16 Aug 2013 01:15 PM PDT

ஆத்மா திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பணி அமைப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட  செய்திக் குறிப்பு:

கருத்தரங்கம்

Posted: 16 Aug 2013 01:15 PM PDT

பெரம்பலூர் ரோவர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள்

Posted: 16 Aug 2013 01:15 PM PDT

பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சு. தம்புசாமி தெரிவித்தார்.

மின் இணைப்புக்காக காத்திருக்கும் சிட்கோ தொழில்பேட்டை முதலீட்டாளர்கள்

Posted: 16 Aug 2013 01:14 PM PDT

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சிட்கோ தொழில்பேட்டைக்கு மின் இணைப்பு கிடைக்காததால் சிறு, குறு முதலீட்டார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்

Posted: 16 Aug 2013 01:14 PM PDT

அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றார் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலரும், கண்காணிப்பு அலுவலருமான பனீந்திரரெட்டி.

பெண்ணிடம் 18 பவுன் நகை திருட்டு

Posted: 16 Aug 2013 01:13 PM PDT

ஆலங்குடி அருகே பேருந்தில் பயணம் செய்தபோது பெண்ணிடம் இருந்து 18 பவுன் நகை வெள்ளிக்கிழமை திருடு போனது.

பொதுத்தேர்வில் சிறப்பிடம்  பெற்றோருக்கு ரொக்கப் பரிசு

Posted: 16 Aug 2013 01:13 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பட்டா மாறுதலுக்கு காலதாமதம் திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Aug 2013 01:13 PM PDT

பட்டாமாறுதல் செய்து தர காலதாமதம் செய்த திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அறிவுரைகளை பின்பற்றாத வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை

Posted: 16 Aug 2013 01:12 PM PDT

மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றாத வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் எச்சரிக்கை விடுத்தார்.

மாணவர்களுக்கு கவிதை,பேச்சு,கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு

Posted: 16 Aug 2013 01:12 PM PDT

புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் மேனிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே "அம்மா' திட்ட குறை தீர் முகாம் 97 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Posted: 16 Aug 2013 01:12 PM PDT

பொன்னமராவதி வட்டம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உள்ள மூலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட குறை தீர் முகாமில் 97 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

லஞ்ச வழக்கில் கனடா வாழ் இந்தியர் குற்றவாளி

Posted: 16 Aug 2013 01:11 PM PDT

எர்-இந்தியா நிறுவன ஒப்பந்தத்தைப் பெற, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கனடாவைச் சேர்ந்த இந்தியர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எண்ணெய் வித்து உற்பத்தி பயிற்சி

Posted: 16 Aug 2013 01:11 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் எண்ணெய் வித்து உற்பத்தி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் பள்ளியில் மரம் சாய்ந்து 3 பேர் காயம்

Posted: 16 Aug 2013 01:11 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான மரம் வெள்ளிக்கிழமை முறிந்து விழுந்ததில் 3 பேர் காயம் அடைந்தனர்.

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 Aug 2013 01:11 PM PDT

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகுடி வாய்க்காலில் 3,500 கன அடி தண்ணீர் திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Posted: 16 Aug 2013 01:11 PM PDT

அறந்தாங்கி வட்டம், நாகுடி வாய்க்காலில் 3,500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கப்பல்கள் மோதல்: 17 பேர் சாவு

Posted: 16 Aug 2013 01:10 PM PDT

பிலிப்பின்ஸில் சரக்குக் கப்பலுடன் மோதிய பயணிகள் கப்பல் சிபு துறைமுகம் அருகே கடலில் மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.

6 வார காலப் பயிற்சி: தொழில்முனைவோர் பங்கேற்கலாம்

Posted: 16 Aug 2013 01:10 PM PDT

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொழில்முனைவோருக்கான 6 வார காலப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வேளாண் மையங்களில் விதை நெல் இருப்பு வைக்க வலியுறுத்தல்

Posted: 16 Aug 2013 01:10 PM PDT

வேளாண் விரிவாக்க மையங்களில் விதை நெல் இருப்பு வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 இடங்களில் மாதர் சங்கம் பிரசாரம்

Posted: 16 Aug 2013 01:09 PM PDT

பெண்கள், சிறுமிகள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட வலியுறுத்தி,  தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 இடங்களில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை பிரசார இயக்கம் நடத்தினர். இந்தச் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கக் குழுக்கள் தமிழகத்தில் 7 இடங்களில் இருந்து

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

Posted: 16 Aug 2013 01:09 PM PDT

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணிப் பெருந் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

மும்பைக்கு வழக்குரைஞர் குழு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

Posted: 16 Aug 2013 01:09 PM PDT

மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வழக்குரைஞர்கள் குழுவை மும்பைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யும்படி அரசுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 16 Aug 2013 01:09 PM PDT

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆக. 17 சனிக்கிழமை முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

Posted: 16 Aug 2013 01:08 PM PDT

தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தினப்  பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை தடை விதித்ததைக் கண்டித்து, பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு  சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுதந்திர தினத்தன்றுமதுபானம் விற்றதாக இருவர் கைது

Posted: 16 Aug 2013 01:08 PM PDT

தஞ்சாவூர் அருகே சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்றதாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

வாழை விவசாயிகள் அக். 15-க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்

Posted: 16 Aug 2013 01:08 PM PDT

வாழை விவசாயிகள் அக். 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எம். செல்வராஜு தெரிவித்தார்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விரைவில் காய்கறி சந்தை: ஆட்சியர்

Posted: 16 Aug 2013 01:07 PM PDT

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே விரைவில் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன்.

ஜெனீவா ஒப்பந்தநாள் விழா

Posted: 16 Aug 2013 01:07 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு இமாகுலேட் உயர்நிலைப் பள்ளியில் ஜெனீவா  ஒப்பந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

கனடா நகர சாலைக்கு மகாத்மா காந்தி பெயர்

Posted: 16 Aug 2013 01:07 PM PDT

கனடாவில் வின்னிபெக் நகரில் உள்ள சாலை ஒன்றுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 மின் தடை

Posted: 16 Aug 2013 01:07 PM PDT

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 17) மின் விநியோகம் இருக்காது.

கரூர்

Posted: 16 Aug 2013 01:05 PM PDT

புதுக்கோட்டை

Posted: 16 Aug 2013 01:05 PM PDT

வாழ்வின் சுவையறிவோம்

Posted: 16 Aug 2013 12:59 PM PDT

சமீபத்தில் எனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நான்கு நாள் நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பா? சீர்குலைப்பா?

Posted: 16 Aug 2013 12:58 PM PDT

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் பணி நாள்கள் 16 மட்டுமே. ஆனால் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் 44. நாட்டு மக்கள் நலன் சம்பந்தப்பட்ட மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடக்குமா விவாதமில்லாமலே மசோதாக்கள் நிறைவேறுமா என கேள்விகள் எழுகின்றன.

திருஷ்டி!

Posted: 16 Aug 2013 12:57 PM PDT

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல், ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என இரண்டு சாதனைகளால் மகிழ்வுற்றிருந்த வேளையில், துரதிருஷ்டவசமாக ஐஎன்எஸ் சிந்துரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து தீவிபத்துக்குள்ளாகியதுடன், 18 பேரை பலிகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

தேர்தல் கூட்டணி: கருணாநிதிக்கு முடிவு எடுக்கும் அதிகாரம்

Posted: 16 Aug 2013 12:52 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கும் முழு அதிகாரம் வழங்கி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஸ்.பி.சி. பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

Posted: 16 Aug 2013 12:51 PM PDT

ஆரணி எஸ்.பி.சி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் "தற்போதைய தானியங்கிக் கருவிகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 16 Aug 2013 12:50 PM PDT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பின்தங்கியப் பகுதி மானிய நிதி பயிற்சி முகாம் தண்டராம்பட்டில் உள்ள வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 16 Aug 2013 12:50 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட   செங்கம் தீத்தாண்டப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் பரிசுகள் வழங்கினார்.

சீட்டு தகராறில் மோதல்:  10 பேர் கைது

Posted: 16 Aug 2013 12:50 PM PDT

செய்யாறு அருகே சீட்டு தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

காமன்வெல்த் மாநாடு: பிரதமர் மன்மோகனை நாளை சந்திக்கிறார் இலங்கை அமைச்சர்

Posted: 16 Aug 2013 12:50 PM PDT

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) தில்லி வரவுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த வாரம் திறப்பு

Posted: 16 Aug 2013 12:49 PM PDT

திருவண்ணாமலையில் ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொளி மூலம் அடுத்த வாரம் திறந்து வைக்கிறார் என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

வறட்சி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 16 Aug 2013 12:49 PM PDT

: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மது விற்பனை: 4 பேர் கைது

Posted: 16 Aug 2013 12:49 PM PDT

வந்தவாசியில் சுதந்திர தினத்தன்று கள்ளத்தனமாக மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விஷம் குடித்த முதியவர் சாவு

Posted: 16 Aug 2013 12:48 PM PDT

செய்யாறு அருகே விஷம் குடித்த முதியவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

தங்கம் விலை அதிரடி: ஒரே நாளில் ரூ.840 உயர்வு

Posted: 16 Aug 2013 12:48 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வால் சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 48-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விஷம் குடித்த முதியவர் சாவு

Posted: 16 Aug 2013 12:48 PM PDT

செய்யாறு அருகே விஷம் குடித்த முதியவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

"ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்

Posted: 16 Aug 2013 12:48 PM PDT

மலேசியாவின் "ஏர் ஏசியா' விமான நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தாக்க

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு

Posted: 16 Aug 2013 12:46 PM PDT

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.

சென்னைக்கு தினமும் வீராணம் குடிநீர்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 16 Aug 2013 12:44 PM PDT

சென்னை நகருக்கு தினமும் வீராணம் குடிநீர் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.  2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவு

Posted: 16 Aug 2013 12:43 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 1,981 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் கனமழை: 11 பேர் சாவு

Posted: 16 Aug 2013 12:25 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.

நீதி விசாரணைக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல்

Posted: 16 Aug 2013 12:24 PM PDT

சோலார் பேனல் மோசடி தொடர்பாக நீதி விசாரணை நடத்த கேரள அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பெண் ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டுக்கு எதிரான பொது நல மனு தள்ளுபடி

Posted: 16 Aug 2013 12:23 PM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

பிரதமர் மன்மோகனை நாளை சந்திக்கிறார் இலங்கை அமைச்சர்

Posted: 16 Aug 2013 12:22 PM PDT

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக இலங்கை

1,000 இடங்களில் வெங்காய விற்பனை

Posted: 16 Aug 2013 12:21 PM PDT

தில்லியில் உள்ள அரசின் ஷஃபல் விற்பனையகம், நாஃபெட் மையங்கள், தில்லி வேளாண் விற்பனை வாரியம் ஆகியவற்றின் மூலம் 400 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலம் 600 இடங்களிலும் சனிக்கிழமை முதல் நியாயவிலையில் வெங்காய விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தில்−யில் இயல்பு நிலை பாதிப்பு

Posted: 16 Aug 2013 12:21 PM PDT

தில்லியில் வெள்ளிக்கிழமை காலையில் சுமார் 3 மணி நேரத்தில்  33.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

25-இல் "வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டிகள்

Posted: 16 Aug 2013 12:21 PM PDT

தில்லி ராமகிருஷ்ணாபுரம் சௌத் இந்தியன் சொûஸட்டி சார்பில்  இம்மாதம் 25-ஆம் தேதி "வர்ணம் வாய்ப்பாட்டுப் போட்டிகள்' நடைபெற உள்ளன.

குர்கான் தமிழ்ச் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

Posted: 16 Aug 2013 12:21 PM PDT

குர்கான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவரின் வாதத்தை மறுத்து தேவாலய நிர்வாகி சாட்சியம்

Posted: 16 Aug 2013 12:20 PM PDT

தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட வினய் குமாரின் வாதங்களை மறுத்து தேவாலய நிர்வாகி வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தார்.

ஷீலா தீட்சித் உரையில் உண்மையில்லை

Posted: 16 Aug 2013 12:20 PM PDT

சுதந்திர தின விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆற்றிய சுதந்திர தின உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா  குற்றம்சாட்டினார்.

"ஏர் ஏசியா' நிறுவனத்துக்கு எதிரான மனு: உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்

Posted: 16 Aug 2013 12:20 PM PDT

மலேசியாவின் "ஏர் ஏசியா' விமான நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு வழங்கிய அனுமதியை எதிர்த்து பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஐ.டி.ஓ. சந்திப்பில் புதிய தொழில்நுட்பத்தில் சுரங்க நடைபாதை

Posted: 16 Aug 2013 12:20 PM PDT

போக்குவரத்து மிகுந்த இந்திர பிரஸ்தா மார்கில் ஐ.டி.ஓ. சந்திப்பில், "பாக்ஸ் புஷ்ஷிங்' தொழில்நுட்பம் மூலம் சுரங்க நடைபாதை அமைக்கும் பணி அடுத்த மாதம் நிறைவடையும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆர்சி) வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று இலவசபல் மருத்துவ முகாம்

Posted: 16 Aug 2013 12:19 PM PDT

ஜாமியா பல்கலைக்கழக பல் மருத்துவத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) இலவச பல் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் திட்டம்:மார்க்சிஸ்ட் போராட்டம்

Posted: 16 Aug 2013 12:19 PM PDT

வருமான வரி செலுத்துவோரைத் தவிர்த்து அனைவருக்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரிடையே மோதல்: 18 பேர் காயம்

Posted: 16 Aug 2013 12:19 PM PDT

மேற்கு தில்லி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் காயமடைந்தனர். அதில் மூவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்தனர்.

மின் வழிப் பாதையில் கோளாறு: மெட்ரோ ரயில்கள் தாமதம்

Posted: 16 Aug 2013 12:19 PM PDT

மெட்ரோ ரயில்களுக்கான மேல்நிலை உயர் அழுத்த மின் பாதையில் வெள்ளிக்கிழமை கோளாறு ஏற்பட்டதால் துவாரகா, நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் வழித் தடத்தில் காலையில் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கர்ப்பப்பையில் ஊசி: பெண்ணுக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு

Posted: 16 Aug 2013 12:18 PM PDT

மகப்பேறு அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை ரூ. 3 லட்சம் இழப்பீடு

தீலீப் சிங் ஜூதேவ் மரணம்:மனைவி தற்கொலை முயற்சி

Posted: 16 Aug 2013 12:18 PM PDT

பிலாஸ்பூர் தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் திலீப் சிங் ஜுதேவ் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து, தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மாதவியை (

கொள்ளை: தடுத்த நகைக் கடைக்காரர் சுடப்பட்டார்

Posted: 16 Aug 2013 12:18 PM PDT

வடக்கு தில்லியில், நகைக் கடையில் கொள்ளையிட முயன்றவர்களைத் தடுக்க முயன்ற கடைக்காரர் வினோத் மல்ஹோத்ரா (58) சுடப்பட்டார். வடக்கு தில்லி ரோஹிணியில் நகைக்கடை நடத்தி வருக

பாரதி கனவை நனவாக்கும் என்.எல்.சி.

Posted: 16 Aug 2013 12:17 PM PDT

புரட்சிக் கவி பாரதியாரின் கனவை என்.எல்.சி. நிறுவனம் நனவாக்கி வருவதாக அந்நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி கூறினார்.

கறிக்கோழி வளர்ப்போர் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது

Posted: 16 Aug 2013 12:16 PM PDT

தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதால் கோழிக்கறி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்

வீதியில் அறுந்து விழுந்த உயர் மின்அழுத்த கம்பி

Posted: 16 Aug 2013 12:16 PM PDT

சிதம்பரத்தில் தேரோடும் வீதியில் வெள்ளிக்கிழமை மாலை உயர் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

பெற்றோர் சங்கத்தினர் கைது

Posted: 16 Aug 2013 12:16 PM PDT

அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை பணியமர்த்தக் கோரி விருத்தாசலத்தில் வியாழக்கிழமை ஊர்வலமாகச் சென்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க

அத்வானி, மோடி இடையே கருத்து மோதல் இல்லை

Posted: 16 Aug 2013 12:15 PM PDT

அத்வானி, நரேந்திர மோடி இடையே கருத்து மோதல் எதுவும் இல்லை என்று மறுத்துள்ள பாஜக தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து நரேந்திர மோடி பேசியதில் தவறு எதுவுமில்லை என்று கூறினார்.

ஓய்வுபெற்ற காவலர் சங்கத் தேர்தல்:விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 16 Aug 2013 12:15 PM PDT

ஓய்வுபெற்ற காவலர் நலச் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைமலை நகரில் போலி மதுபான தொழிற்சாலை

Posted: 16 Aug 2013 12:15 PM PDT

மறைமலைநகர் அருகே போலி மதுபான தொழிற்சாலையில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள போலி மதுவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரை கைது செய்தனர்.

இருளில் மூழ்கியது உத்தரமேரூர்

Posted: 16 Aug 2013 12:14 PM PDT

உத்தரமேரூர் நகரில் கடந்த 7 நாட்களாக இரவு நேரங்களில் அனைத்து தெருக்களிலும் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

ரயிலில் அடிபட்டு பெண் சாவு

Posted: 16 Aug 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் உயிர் இழந்தார். காஞ்சிபுரம் மின்நகர் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் சையத்இப்ராஹீம். இவரது மனைவி பைரோஜாசபீன் (42). இவர்களுக்கு ஷப்னா என்ற மகளும், முகம்மது ஜமீல், முகம்மது பிலார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

கல்குவாரியை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 16 Aug 2013 12:14 PM PDT

வடமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதிதிராவிடர்களுக்கு மானியத்துடன் கடன்

Posted: 16 Aug 2013 12:13 PM PDT

ஆதிதிராவிட இனத்தவர்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் பெற வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதி தேர்வு: 18 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 16 Aug 2013 12:13 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர். சனிக்கிழமை நடைபெறும் முதல் தாள் தேர்வை 10 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

சமபந்தி விருந்து

Posted: 16 Aug 2013 12:12 PM PDT

செங்கல்பட்டு அருள்மிகு சக்தி விநாயகர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.

ஆகஸ்ட் 17 மின் தடை

Posted: 16 Aug 2013 12:12 PM PDT

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம்

Posted: 16 Aug 2013 12:11 PM PDT

புதுச்சேரி, மாகே, யேனம், காரைக்கால் ஆகிய பிரான்ஸ் ஆட்சிப் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்த தினம் பிரெஞ்ச் இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அர்ஜுனா விருது பெற்றவருக்கு பாராட்டு

Posted: 16 Aug 2013 12:11 PM PDT

அர்ஜுனா விருது பெற்ற மாற்றுத்திறனாளி தீபா மாலிக்கிற்கு, அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில், கெüரவ விருது வழங்கும் விழா புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

தியாகிகளுக்கான ஓய்வூதிய உயர்வு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

Posted: 16 Aug 2013 12:11 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியத்தை 5,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 16 Aug 2013 12:10 PM PDT

ஆபத்து காலங்களில் நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி தொடர்பான -அவசரகால மருத்துவ தொழில்நுட்பவியல்- சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 முடித்தவர்

2ஜி: அனில் அம்பானி தம்பதி மனு மீதான விசாரணை 21-க்கு ஒத்திவைப்பு

Posted: 16 Aug 2013 12:10 PM PDT

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை எதிர்த்து, அனில் அம்பானி தம்பதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Posted: 16 Aug 2013 12:10 PM PDT

புதுச்சேரியில் நாட்டின் 67-வது சுதந்திர தினவிழா பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு

Posted: 16 Aug 2013 12:10 PM PDT

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்குகிறது.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 16 Aug 2013 12:09 PM PDT

விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராம சபைக் கூட்டம்

Posted: 16 Aug 2013 12:09 PM PDT

திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழங்குடியினரின் நிலையை ஆய்வு செய்ய குழு: பிரதமர் நடவடிக்கை

Posted: 16 Aug 2013 12:09 PM PDT

பழங்குடியினரின் (எஸ்.டி.) நிலை குறித்து ஆய்வு செய்ய, 7 பேர் கொண்ட குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.

பாகர்ஷா வீதியை சீரமைக்கக் கோரி வணிகர்கள் மனு

Posted: 16 Aug 2013 12:09 PM PDT

விழுப்புரத்தில் உள்ள பாகர்ஷா வீதியை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை வணிகர்கள் மனு அளித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™