Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மாயாவதி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தபோது சோனியா எங்கிருந்தார்: சமாஜ்வாடி கட்சி

Posted: 06 Aug 2013 10:59 PM PDT

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மசூதியின் சுற்றுச்சுவர் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அதனை இடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் உத்தரவிட்டார். இதனால் இன ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி அவரை மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

5 இந்திய வீரர்கள் படுகொலையால் மன்மோகன் சிங் - நவாஸ் ஷெரீப் பேச்சுவார்த்தை தடைபடாது

Posted: 06 Aug 2013 10:59 PM PDT

ஐ.நா. சபையின் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த (செப்டம்பர்) மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பாகிஸ்தானின்

பங்கு மார்க்கெட்டு மூலம் 2 மடங்கு பணம் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி

Posted: 06 Aug 2013 10:51 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தப்பகோடு காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலோருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகளவில் லாட்டரி சீட்டுகள் வாங்கு வார்கள்.

5 வீரர்கள் சுட்டுக்கொலை: பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

Posted: 06 Aug 2013 10:22 PM PDT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 20 பாகிஸ்தான் வீரர்களும், தீவிரவாதிகளும் ஊடுருவி இந்திய வீரர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மிகவும் பொறுமையாக இருப்பதால் தான் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் இத்தகைய அடாவடியில் ஈடுபடுவதாக நாடெங்கும் மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் சில இடங்களில் "பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்'' என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

பாகிஸ்தான் தாக்குதலில் பலியான 4 வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: நிதீஷ்குமார் அறிவிப்பு

Posted: 06 Aug 2013 09:34 PM PDT

காஷ்மீர் எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அதிகாலை ஜம்மு–காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்

சந்திரசேகர் ராவ் உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை

Posted: 06 Aug 2013 08:58 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தனிமாநிலம் கோரி நடந்த போராட்டங்களில் முக்கிய பங்காற்றிய தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் எடலா ராஜேந்தர் மற்றும் ஹரிஷ் ராவ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று கூறியதாவது:-

பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது: சோனியா கடும் கண்டனம்

Posted: 06 Aug 2013 08:46 PM PDT

5 வீரர்கள் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது என்று குறிப்பிட்டார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியானார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். பலியான 5 பேருடைய குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்ட அவர், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியும் இந்த நாடும் ஆதரவாக

ஐ.நா பொதுச் செயலருடன் ஒடிசா பழங்குடி மாணவர்கள் கலந்துரையாடல்

Posted: 06 Aug 2013 08:28 PM PDT

திங்கட்கிழமை அன்று ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருந்து ஐந்து பள்ளிகளின் நூறு மாணவ,மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடியோ மூலம் ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூனுடன் கலந்துரையாடல் நடத்தினர்.பொதுச் செயலருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். ஆசியாக் கண்டத்தில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் இந்த உரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது .இந்த நிறுவனம் சமூகத் தொழிலதிபர் அச்யுதா

எல்லையில் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை?

Posted: 06 Aug 2013 08:15 PM PDT

புருனேயில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, நின்று போன இந்திய-பாகிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர முடிவு செய்யப்பட்டது. ஆனால் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து நடத்தி வருகிற தாக்குதல்கள் இந்த சூழலை கெடுத்துள்ளது. அதுவும் இப்போது எல்லையில் இந்திய

எல்லையில் 5 இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்

Posted: 06 Aug 2013 03:26 PM PDT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினார்கள். அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைவான இடத்தில் இருந்தபடி, இந்திய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்திய

நிலக்கரி ஊழல் வழக்கு: சி.பி.ஐ. கேட்கும் ஆவணங்களை மத்திய அரசு தர வேண்டும்-சுப்ரீம் கோர்ட்டு

Posted: 06 Aug 2013 02:15 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், சி.பி.ஐ. கேட்கும் ஆவணங்களை தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை குழு குற்றம் சாட்டியது.

உ.பி. மந்திரிக்கு எதிராக பேஸ்புக்கில் தகவல்: ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காவின் ஆதரவாளர் கைது

Posted: 06 Aug 2013 08:06 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள மசூதியின் சுற்றுச்சுவர் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி அதனை இடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி உத்தரவிட்டார். இதனால் இன ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதாக கூறி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில், துர்கா சக்திக்கு ஆதரவாக தலித் அறிஞரும்,

டெல்லியில் மத்திய மந்திரி அந்தோணி வீட்டை பா.ஜனதா தொண்டர்கள் முற்றுகை

Posted: 06 Aug 2013 07:41 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வீரர் காயங்களுடன் உயிர் தப்பினார். 5 வீரர்களும் எப்படி இறந்தார்கள்? என்பதை தீர்மானிப்பதற்கு, காயமடைந்த வீரரின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், தங்கள் ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இதனை ஆமோதிப்பது போன்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் அறிக்கை அமைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு ஆண்டில் 11 லட்சம் கருக்கலைப்புகள்: மத்திய அரசு தகவல்

Posted: 06 Aug 2013 07:26 AM PDT

கருக்கலைப்பு மற்றும் பிரசவகால மரணங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:- நாட்டில் 2008-09 ஆண்டில் 11.06 லட்சம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய பதிவுத்துறை தலைவர் தகவலின்படி, பிரசவகால மரணத்தில் 8 சதவீத மரணத்திற்கு கருக்கலைப்பு காரணமாக இருந்துள்ளது. 2008-ல் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு காரணமாக தெற்கு மத்திய ஆசிய

நாட்டையும் நாட்டு மக்களையும் ராகுல் இன்னும் புரிந்துகொள்ளவில்லை: சுக்பீர் சிங் பாதல்

Posted: 06 Aug 2013 06:17 AM PDT

அலகாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், வறுமை என்பது மனநிலையைப் பொறுத்தது. உணவு, பணம் அல்லது மற்ற பொருட்கள் பற்றாக்குறை என்று அர்த்தம் அல்ல. ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் அவரால் வறுமையை சமாளிக்க முடியும்" என்றார். அமேதி தொகுதியில் உள்ள ஏழை பெண் ஒருவர், சுய உதவிக்குழுவில் இணைந்து தன் சுய மரியாதையை மீட்டிருப்பதை உதாரணமாக காட்டி ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.

திருவனந்தபுரம் அருகே ஓட்டல் அதிபரை வெட்டிக்கொன்று தங்க கட்டிகள்–பணம் கொள்ளை

Posted: 06 Aug 2013 05:17 AM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் ஹாஜி (வயது 58).இவர், துபாயில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் காசர்கோட்டில் வசித்து வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகையையொட்டி சமீபத்தில் அப்துல் சலாம் ஹாஜி, காசர்கோட்டிற்கு வந்திருந்தார். தற்போது நோன்பு இருந்து வருவதால் அவர், தினமும் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று வந்தார். நேற்றும் வழக்கம்போல அவர், தொழுகைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். பிறகு அவரும், மனைவி மகளும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

பாகிஸ்தானில் உள்ள 42 முகாம்களில் பயிற்சி பெற்ற 270 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்

Posted: 06 Aug 2013 04:47 AM PDT

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் கூறியதாவது:- பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. தூண்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் தீவிரவாத அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது

அத்துமீறி தாக்கிய பாகிஸ்தானை தப்பிக்க வைக்க மத்திய அரசு உதவி: பா.ஜனதா குற்றச்சாட்டு

Posted: 06 Aug 2013 04:38 AM PDT

காஷ்மீர் எல்லையில் நேற்று இரவு பாகிஸ்தான் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை அவசரமாக வரவழைத்தது. நேற்று இரவு அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் 5 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ராணுவத்தின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

தனிமாநில கோரிக்கை: ரம்ஜானுக்குப் பிறகு 1000 மணி நேரம் போராட்டம் நடத்தப்போவதாக போடோ மாணவர்கள் எச்சரிக்கை

Posted: 06 Aug 2013 04:21 AM PDT

ஆந்திரா மாநிலத்தில் இருந்து தெலுங்கானா உருவானதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதிலும் தனி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெறத் துவங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதி முழுவதும் நேற்று போராட்டக்காரர்களால் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து போடோலாந்தை உருவாக்கக் கோரி போடோ மாணவர்களும், மேகாலயாவிலிருந்து கரோலாந்தும் ,திரிபுராவில் வாழும் பழங்குடியினர் தங்களுக்கென தனி மாநிலமும் பிரிக்கக் கோரி தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நியமனம்

Posted: 06 Aug 2013 04:02 AM PDT

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பாராவ் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன், ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் 3 ஆண்டுகள் நீடிப்பதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்திருக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™