Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

Posted:

மாமல்லபுரம்:புத்த கயா பாரம்பரிய கோவிலில் நடந்த, பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மாமல்லபுரம் பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.மாமல்லபுரம், பல்லவ சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 32 கலைச் சின்னங்களை, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு (யுனெஸ்கோ), சர்வதேச கலாசார சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதைக் கண்டுகளிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.இந்திய தொல்பொருள் ...

தவறு செய்யும் "பார்' உரிமையாளர் மீது "குண்டாஸ்'

Posted:

முதல் முறையாக, முறைகேடுகளில் ஈடுபடும், டாஸ்மாக் ஊழியர்களை சிறைக்கு அனுப்பவும், அனுமதி இன்றி செயல்படும், "பார்' உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள், விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணிபுரிந்து வருகின்றனர்.டாஸ்மாக் நிறுவனம், மேற்பார்வையாளரிடம், 50 ஆயிரம் ரூபாய், விற்பனையாளரிடம், 15 ...

உரத்த சிந்தனை : மக்கள் பெருக்கம் வளர்ச்சியா... வீழ்ச்சியா?- பி.கே.மனோகரன்-

Posted:

நேரத்தைக் காட்டும் கடிகாரம் போல, உலக மக்கள் தொகையைக் காட்டும் கடிகாரம் ஒன்று உள்ளது. இணையதளத்தில் இந்தக் கடிகாரத்தைப் பார்க்கலாம். இம்மாதம், 11ம் தேதி, "உலக மக்கள் தொகை' தினத்தன்று இந்தக் கடிகாரம் காட்டிய உலக மக்கள் தொகை அளவு, 710 கோடி. பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் இந்தக் கடிகாரம், "புரோகிராம்' செய்யப்பட்டு உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை, நூற்றாண்டின் இறுதியில், 600 கோடியை மிஞ்சி விட்டது. அதாவது, 19 நூற்றாண்டுகளில் அதிகரித்த மக்கள் தொகையைப் போல், இரு மடங்கு, ஒரே நூற்றாண்டில் அதிகரித்து ...

புலிகளுக்கு நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்: இலங்கை வலியுறுத்தல்

Posted:

கொழும்பு:"விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் நிதி கொடுப்பதை தடுக்க வேண்டும்' என, ஐ.நா., பிரதிநிதிகளிடம், இலங்கை வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த, ஆறு உறுப்பினர் அடங்கிய குழு, இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நடக்கும், நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளது. இந்த குழுவினரை சந்தித்து பேசிய பின், இலங்கை வெளியுறவு அமைச்சர், பெரீஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கையில், போர் முடிவுக்கு வந்தபின், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முழு வீச்சில் நிவாரண பணிகள் நடக்கின்றன. இவற்றை, ஐ.நா., குழு ...

அன்னிய முதலீடு: பாதிப்போடு பக்க விளைவையும் உண்டாக்கும்: மத்திய அரசு மீது கருணாநிதி சாடல்

Posted:

சென்னை : "அன்னிய முதலீடு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பக்க விளøவுகளையும் உண்டாக்கும். எனவே, மத்திய அரசின் முடிவுகளை முழுவதுமாக எதிர்க்கிறோம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சில்லரை வணிகத்தில், 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரகசியங்களுக்கு, முக்கியமான தொலைத் தொடர்பு, ராணுவத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட, 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை, கூடுதலாக அனுமதித்துள்ளது.இதனால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல், இந்திய நிறுவனங்கள் ...

ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியையின் சொத்துகள் பறிமுதல்?

Posted:

புதுடில்லி:பீகாரில், மதிய உணவு சாப்பிட்டு, 23 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சொந்தமான சொத்துகளை, பறிமுதல் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவில், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு கலந்திருந்ததை, தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

கெட்டுப்போன பொருட்கள்:
பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சரண் மாவட்டத்தில், தர்மாசதி கண்டேவான் என்ற கிராமத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 15ம் தேதி, பெரும் துயரச் சம்பவம் நடந்தது. ...

கனிமொழிக்கு முக்கிய பதவியை வழங்க கருணாநிதி திட்டம்

Posted:

லோக்சபா தேர்தலுக்குள், தி.மு.க., மகளிர் அணியை வலுப்படுத்துவதற்கும், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர் கனிமொழிக்கு, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள் அளவில், முக்கிய பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கனிமொழிக்கு துணைப்பொதுச்செயலர் பதவியை வழங்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், உடல் நலம் கருதி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற கருத்தும், மற்றொரு தரப்பில் ராஜினாமா செய்யவில்லை என்ற கருத்தும் கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.ராஜ்யசபா எம்.பி., ...

முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் அ.தி.மு.க.,வினர் உற்சாகம்: மாற்று கட்சியினர் கலக்கம்

Posted:

முதல்வர் ஜெயலலிதாவின், அதிரடி நடவடிக்கைகள், அ.தி.மு.க., தொண்டர்களிடம் மகிழ்ச்சியையும், மாற்றுக் கட்சியினரிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன.முதல்வர் ஜெயலலிதா, லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார். கடந்த காலங்களில், ஒரு முடிவு எடுத்தால், அதில் உறுதியாக இருப்பார். மக்கள் விரும்பவில்லை எனத் தெரிந்தாலும், தான் எடுத்த முடிவு சரியானதாக இருந்தால், அதை நிறைவேற்றுவதில் முனைப்புடன் இருப்பார்.

மாற்றம்:
ஆனால், சமீப காலமாக, அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கேற்ப, ...

முதுகலை ஆசிரியர் தேர்வில் 1.67 லட்சம் பேர் போட்டி : ஒரு இடத்தை பிடிக்க 58 பேர் மோதுகின்றனர்

Posted:

சென்னை: டி.ஆர்.பி., நடத்தும், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு, மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று நடக்கிறது. இதில், 1.67 லட்சம் பேர், பங்கேற்கின்றனர். ஒரு பணிக்கு, 58 பேர் வீதம், போட்டி போடுகின்றனர்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான போட்டித் தேர்வுக்கு, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், ஆண்கள், 57,136 பேர்; பெண்கள்,1,09,864 பேர்.மாற்றுத் திறனாளிகள், 8,506 பேரும், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 971 பேர், பார்வையற்றவர். மாநிலம் முழுவதும், 421 மையங்களில், இன்று காலை, 10:00 மணி முதல், பிற்பகல், ...

முலாயம் மீதான சொத்து குவிப்பு வழக்கு வாபசா? காங்கிரஸ் மறுப்பு

Posted:

பெங்களூரு : ""உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு பெறுவதற்காக, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் மீதான சொத்து குவிப்பு வழக்கை, வாபஸ் பெற்றதாக கூறுவது, தவறான தகவல்,'' என, காங்., செய்தி தொடர்பாளர், சந்தீப் தீட்ஷித் கூறினார்.காங்., செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான, சந்தீப் தீட்ஷித் கூறியதாவது:உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு பெறுவதற்காக, சி.பி.ஐ., அமைப்பை, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, ஒரு கருவியாக பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதற்காகவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீதான, சொத்து குவிப்பு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™