Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆள் கடத்தல் கூலிப்படையால் வி.ஐ.பி.,க்கள் பீதி

Posted:

தமிழகத்தின் முக்கிய நகரங்களில், பணத்துக்காக கொலை, ஆட்கடத்தலில் ஈடுபடும் கூலிப்படையால், வி.ஐ.பி.,க்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். கடத்தல், கொலை, கொள்ளையில் ஈடுபடும் கூலிப்படை, சேலத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் "நெட்வொர்க்' அமைத்து செயல்படுவதாக, உளவுத் துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

ரவுடி கும்பல்:
சேலம், அஸ்தம்பட்டியில், கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்த, ராஜ்குமார் என்பவரை, அஸ்தம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தலைமையிலான ரவுடி கும்பல் கடத்தி சென்று பணம் பறிக்க முயற்சித்தது. இந்த கடத்தல், போலீசாருக்கு தெரிய வரவே, ...

சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்?

Posted:

புதுடில்லி: "கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால், அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் ஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஆர்வலர்கள்:
"குற்றப் பின்னணி உடையவர்கள், தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்களும், தேர்தல் ஆணையமும், நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. ...

உரத்த சிந்தனை:வருமா ஜாதியற்ற ஒரு காலம்:- சி.கார்த்திகேயன்

Posted:

"ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற ஒரு தமிழனின் குரல், அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எட்டியது. ஆனால், இங்குள்ள நம்மிடம் எட்டவில்லை.தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், இதர என்று, 360க்கும் குறையாமல் ஜாதிகள் இருக்கின்றன. இவைகளில், இரண்டு வகுப்பினர்களுக்கு மட்டும், இந்தியா முழுவதும் சுதந்திரம் அடைந்து, ஐம்பது ஆண்டுகள் வரை அனைத்து வகைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு, அரசியல் சட்டத்தின் மூலம் செய்துள்ளது. இது காந்தி கண்ட ...

போலீஸ் துறையில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு குறி

Posted:

தமிழகத்தில், சில வாரங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தாங்கள் அங்கம் வகிக்கும் போலீஸ் துறையில், லஞ்சம் வாங்கி குவிக்கும் இன்ஸ்பெக்டர்களை குறி வைத்து, வேட்டை நடத்தி வருகின்றனர். இது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக போலீசில், லஞ்ச புகார்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லஞ்சம் வாங்குபவர்களை, கையும் களவுமாக பிடிப்பதற்கு, போலீசில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் உள்ளவர்கள், பிற அரசுத்துறை அதிகாரிகளை வேட்டை ஆடி வந்த நிலையில், தற்போது, தங்களின் துறையிலேயே வேட்டையை துவக்கி, லஞ்ச ...

"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?'அலறும் அரசு பேருந்துகள்

Posted:

ஆர்ப்பாட்டம், சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபடுவோர், தங்களது பலத்தை நிரூபிப்பதாக எண்ணிக் கொண்டு, அரசு பேருந்துகளை சேதப்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளனர். மாணவர்கள் மோதல்களிலும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு வருகின்றன.

அரசு பேருந்துகள்:
கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, 800க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், 600க்கும் மேற்பட்ட, அரசு பேருந்துகள் குறி வைத்து தாக்கப்பட்டன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின், 40க்கும் மேற்பட்ட பேருந்துகளும் ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கியது:* எதிர்ப்பாளர்கள் கிளப்பிய பீதி வெறும் கூச்சல் என நிரூபணம்

Posted:

திருநெல்வேலி:நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குவதற்காக அணுஉலை நேற்று நள்ளிரவு முதல் இரவு இயங்கத் தொடங்கியது. அணு உலை இயங்கினால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற உதயகுமார் கும்பலின் மிரட்டல்கள், கிளப்பி விடப்பட்ட பீதி போன்றவை எல்லாம், வெறும் கூச்சல் என நிரூபணமானது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன்கொண்ட, இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவக்கும் வேளையில், பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன.கடந்த 2012 ...

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு சோனியா கட்டளை

Posted:

"உணவு பாதுகாப்பு திட்டத்தை, ராஜிவ் பிறந்த நாளான, ஆகஸ்ட், 20ம் தேதி துவக்க வேண்டும். அதை சிறப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்' என, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் சோனியா கட்டளையிட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கனவுத் திட்டமான, உணவு பாதுகாப்பு மசோதா, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில், தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், சமீபத்தில், அம்மசோதா, அவசர சட்டமாக அமல்படுத்தப்பட்டது.கவலைப்படவில்லை :பார்லிமென்டை கூட்டி, விவாதம் ...

காங்.,க்கு கூடுதல் சீட் ஒதுக்காமல் இருக்க மீண்டும் "டெசோ?'

Posted:

சில மாதங்களாக, கிடப்பில் போடப்பட்டிருந்த, "டெசோ' கலந்துரையாடல் கூட்டம், இம்மாதம் 16ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில், அவசரமாக கூடுகிறது. லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட்டுகளை, ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதற்கும், மீண்டும், "டெசோ'வை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அறிவாலயத்தில், "டெசோ' கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், கச்சத்தீவு மீட்க, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடுக்க வேண்டும். இது குறித்து ...

என்.எல்.சி., பங்கு வாங்க தமிழக அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

Posted:

சென்னை:"மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ள, என்.எல்.சி.,யின், 5 சதவீதப் பங்குகளை, தமிழக பொதுத் துறை நிறுவனங்களுக்கு வாங்குவது தொடர்பாக, நாளை, தமிழக அதிகாரிகள், மும்பையில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் "செபி' அதிகாரிகளுடன் பேசுவர்' என, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், என்.எல்.சி., பங்குகளை, தமிழக அரசின், பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்கும்படி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம், முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு முதல்வர் ...

துவக்கப்படாத குறுவை சிறப்பு திட்டம்: அமைச்சர்கள் துவக்குவதில் காலதாமதம்

Posted:

டெல்டா விவசாயிகளுக்கு, குறுவை சாகுபடி சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்து, ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், அமைச்சர்களின் தேதி கிடைக்காததால், திட்டத்தை துவங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்து உள்ளது.

சிறப்பு திட்டம்:
இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு, இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. நிலத்தடி நீராதாரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, கடந்த மாதம், 14ம் தேதி, மூன்று அம்ச சிறப்பு திட்டங்களை, முதல்வர் அறிவித்தார்.அதன்படி, 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்; 6 கோடி ரூபாய் செலவில், உயிர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™