Tamil News | Online Tamil News |
- தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்...
- இயக்குனர் முதல் டி.இ.ஓ.,க்கள் வரை கல்வித்துறையில் எல்லாமே காலி
- அன்சுல்மிஸ்ரா மாற்றம்: கிரானைட் குவாரி மீதான நடவடிக்கை கேள்விக்குறி
- "எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து
- கருணை மனுக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மத்திய அரசு எதிர்ப்பு
- இயற்கை எரிவாயு விலை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை
- பா.ம.க.,விடம் இழப்பீடு வசூலிக்க விசாரணை துவங்கியது : பொது சொத்துக்கு ரூ.100 கோடி அளவுக்கு சேதம்
- சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் : அவசர சான்றிதழ் பெறுவதில் கால தாமதம்
- தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு?
- வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது நேவிகேஷன் செயற்கைகோள்
| தமிழ் படும் பாடு: குறில் நெடில் அறியாத பள்ளி மாணவர்கள்... Posted: கோவை : கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.தமிழகம் முழுவதும், ஆரம்பப்பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ... |
| இயக்குனர் முதல் டி.இ.ஓ.,க்கள் வரை கல்வித்துறையில் எல்லாமே காலி Posted: மதுரை:தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.கல்வித் துறையில் செயல்படுத்தும் திட்டங்களை கண்காணித்து, செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் "வழிநடத்தும்' பொறுப்பில் உள்ளவர்கள். பல மாதங்களாக, இதுபோன்ற தலைமையிட அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக கிடப்பதால், துறை உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேக்கம் ... |
| அன்சுல்மிஸ்ரா மாற்றம்: கிரானைட் குவாரி மீதான நடவடிக்கை கேள்விக்குறி Posted: மதுரை:மதுரை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா, வணிகவரித் துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதால், மேலூர் கிரானைட் குவாரிகள் மீதான நடவடிக்கை, இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகள், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தில் இருந்தது. அவற்றை, முறைகேடாக சுரண்டியதன் மூலம், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், முறைகேடு நடந்திருக்கலாம் என, அப்போதய, கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.அவருக்குப் பின், பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா, கிரானைட் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். ... |
| "எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் கவலையில்லை...': விஜயகாந்த் ஆதரவாளர்கள் கருத்து Posted: "எதிர்க்கட்சித் தலைவருக்கான சலுகைகளை பயன்படுத்தாத போது, அந்த பதவி போனாலும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு கவலையில்லை' என, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், ஏழு பேரும், அ.தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். அவர்களை, "சஸ்பெண்ட்' செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். வரும், 10ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி, அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், தங்களை நிரந்தரமாக, கட்சியில் இருந்து நீக்கும்படி, ஏழு எம்.எல்.ஏ.,க்களும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். அவ்வாறு, நிரந்தரமாக கட்சியில் இருந்து ... |
| கருணை மனுக்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட மத்திய அரசு எதிர்ப்பு Posted: புதுடில்லி:"தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு தொடர்பாக, ஜனாதிபதி எடுக்கும் முடிவே, இறுதியானது. கருணை மனுக்கள் மீது, ஜனாதிபதி, ஒரு முடிவு எடுத்தபின், அதில், கோர்ட் தலையிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொலை வழக்கு: கொடூர கொலை வழக்கில், அசாம் மாநிலத்தை சேர்ந்த, மகேந்திர தாசுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும், இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன் தண்டனையை குறைக்க கோரி, ஜனாதிபதியிடம், 1999ம் ஆண்டு, மகேந்திர தாஸ், கருணை மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை, 12 ... |
| இயற்கை எரிவாயு விலை: மத்திய அரசுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை Posted: சென்னை:"இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், அடுத்த தேர்தலில், மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும், என் தலைமையிலான அ.தி.மு.க., இக்கொள்கையை மாற்றும் நடவடிக்கையை எடுக்கும்' என, மத்திய அரசுக்கு, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: |
| பா.ம.க.,விடம் இழப்பீடு வசூலிக்க விசாரணை துவங்கியது : பொது சொத்துக்கு ரூ.100 கோடி அளவுக்கு சேதம் Posted: சென்னை : வட மாவட்டங்களில், 100 கோடி ரூபாய் அளவிற்கு, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தது தொடர்பாக, பா.ம.க.,வினரிடம், தமிழக அரசின் விசாரணை, நேற்று துவங்கியது. பா.ம.க., தலைவர் கோ.க.மணி, காடுவெட்டி குரு சார்பில், வழக்கறிஞர்கள் ஆஜராயினர்.சென்னையை அடுத்த, மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. விழாவிற்கு சென்றோருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே, மரக்காணத்தில் மோதல் நடந்தது. இதில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.ராமதாஸ் கைதை கண்டித்து, வட ... |
| சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் : அவசர சான்றிதழ் பெறுவதில் கால தாமதம் Posted: சென்னை :சவுதி அரேபியாவில், சட்ட விரோதமாக தங்கியுள்ள தமிழர்களின், தமிழக முகவரியை கண்டு பிடிப்பது சிரமமாக இருப்பதால், அவர்களுக்கு அவசர சான்றிதழ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.சவுதி அரேபியாவில், "ஒர்க் பெர்மிட்', விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், சட்ட விரோதமாக தங்கியுள்ள, வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப, கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள், சவுதியில் உள்ள, தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலமாக, அவசர சான்றிதழ் பெற வேண்டும். ... |
| தெலுங்கானா விவகாரத்தில் முக்கிய முடிவு : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு? Posted: ராஜமுந்திரி: ""தெலுங்கானா விவகாரத்தில், முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக, மத்திய அரசு தீவிரமாகவும், உறுதியாகவும் உள்ளது,'' என, ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் கூறினார்.ராஜமுந்திரியில், நிருபர்களிடம் பேசிய நரசிம்மன் கூறியதாவது: மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக, ஒருமித்த கருத்தும், மக்களிடையே நல்ல புரிதலும் ஏற்பட வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன், இங்கு வந்திருந்த, காங்கிரஸ் பொதுச் செயலரும், மாநில காங்., பொறுப்பாளருமான, திக் விஜய் சிங், தெலுங்கானா விவகாரம் ... |
| வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது நேவிகேஷன் செயற்கைகோள் Posted: சென்னை : நாட்டின் முதல், "நேவிகேஷன்' செயற்கைக்கோள், நேற்று நள்ளிரவில், பி.எஸ்.எல்.வி., சி-22 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, "இஸ்ரோ', நாட்டின் அனைத்து வகையான போக்குவரத்துக்கு உதவும் வகையில், ஏழு செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்த செயற்கைக்கோள்களின் மூலம், நாட்டின் உள்பகுதிகளிலும், எல்லையிலிருந்து, 1,500 கி.மீ., வரை, ஆகாயம், நீர், சாலை வழியில் பயணிக்கும் இடங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், கடல் மற்றும் விமான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 02,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |