puthiyathalaimurai.tv online |
- சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம்
- முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: மழையால் இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் பாதிப்பு
- அசாமில் கடுமையான வெள்ளப்பெருக்கு : 11 மாவட்டங்கள் தத்தளிப்பு
- மேட்டூர் அணை நீர்மட்டம் 56.34 அடியாக உயர்வு
- செகந்திரபாத்தில் ஹோட்டல் இடிந்து 6 பேர் பலி
- ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது
- இளவரசன் மரணம் உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம்: முதலமைச்சர் உத்தரவு
- ‘அரசியல் நாடகமாடும் கருணாநிதி’ : பரிதி இளம்வழுதி
- சென்னையில் மழை !
- புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வுக்குழு விசாரணை
| சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம் Posted: 07 Jul 2013 10:43 PM PDT சேது கால்வாய் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையிலும், சென்னையில் க.அன்பழகன் தலைமையிலும், தூத்துக்குடியில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரயில் நிலையம் எதிரில் கே.என்.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது. தயாநிதி மாறன், மு.க.தமிழரசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தூத்துக்குடியிலும் ஏராளமான தி.மு.க., வினர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ![]() |
| முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: மழையால் இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் பாதிப்பு Posted: 07 Jul 2013 10:32 PM PDT முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டம் இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 19 ஓவரில் 60 ரன்களை எடுத்தபோது பலத்த மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. அப்போது இலங்கை அணி 3 விக்கெட்களை இழந்திருந்தது. மழை நிற்காததால் இன்று போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. |
| அசாமில் கடுமையான வெள்ளப்பெருக்கு : 11 மாவட்டங்கள் தத்தளிப்பு Posted: 07 Jul 2013 10:15 PM PDT அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 11 மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர். அண்டை மாநிலமாக அருணாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஜியாத்கோல் உள்ளிட்ட கிளை ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. தேமாஜி மாவட்டத்தில் 25 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுதவிர கோலாகாட், கரீம்கஞ்ச் உள்ளிட்ட 10 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற கசிரங்கா தேசியப் பூங்காவினுள் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள அரிய மிருகங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தின் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளம் குறைந்தால் மட்டுமே மீட்புப் பணியை துரிதப்படுத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. |
| மேட்டூர் அணை நீர்மட்டம் 56.34 அடியாக உயர்வு Posted: 07 Jul 2013 10:12 PM PDT கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பிவருகிறது. இன்று காலை 8 மணி நேர நிலரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.34 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 22.03 டி.எம்.சியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 362 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. |
| செகந்திரபாத்தில் ஹோட்டல் இடிந்து 6 பேர் பலி Posted: 07 Jul 2013 10:08 PM PDT ஆந்திர மாநிலம் செகந்திரபாத்தில் ஹோட்டல் இடிந்து விழுந்தத்தில் 6 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. செகந்திரபாத் நகரில் இன்று அதிகாலை இரண்டு அடுக்குமாடி கொண்ட ஹோட்டல் திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது ஹோட்டலுக்குள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக தெரிகிறது. கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலியானவர்களின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். |
| ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்தது Posted: 07 Jul 2013 09:52 PM PDT அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.10 ஆக இருந்தது. கடந்த மாதம் 26ம் தேதி ( ஜூன் 26) ரூபாயின் மதிப்பு ரூ60.76 ஆக சரிந்தது. அதற்குப் பின்னர் இன்று மேலும் சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. |
| இளவரசன் மரணம் உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம்: முதலமைச்சர் உத்தரவு Posted: 07 Jul 2013 09:24 PM PDT கலப்புத் திருமணம் செய்து கொண்ட தருமபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் கடந்த 4ம் தேதியன்று தருமபுரியில் ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இளவரசன் மரணம் குறித்து உண்மை நிலை அறிய விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் : இளவரசன் இறப்பு குறித்து பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன,. சமூக ஆர்வலர்களும், தனி நபர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை எழுப்பி வருகின்றனர். இறந்த இளவரசனன் தந்தையும் இளவரசன் இறப்பில் சந்தேகங்களை எழுப்பியுள்ளார். எனவே இளவரசன் இறப்பின் உண்மை நிலையை அறியும் பொருட்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தருமபுரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 326 ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா 50 ஆயிரம் வீதம் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தேவையான மறுவாழ்வுப் பணிகள் நடைபெற்றதன் மூலம் அங்கு விரைவில் இயல்பு நிலை திரும்பியதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசனின் மரணம், தற்கொலையே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், இளவரசனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.காவல்துறையினர் செல்வதற்குமுன் அந்த கடிதத்தை இளவரசனின் உறவினர் ஒருவர் எடுத்து வைத்திருந்ததாகவும் அதனை தற்போது மீட்டிருப்பதாகவும் அஸ்ரா கார்க் கூறினார். 4 பக்கங்களைக் கொண்ட அந்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என இளவரசன் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.இருப்பினும் கையெழுத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய கடிதத்தை ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். |
| ‘அரசியல் நாடகமாடும் கருணாநிதி’ : பரிதி இளம்வழுதி Posted: 07 Jul 2013 08:02 PM PDT தி.மு.க.வின் வளர்ச்சிக்காக 35 ஆண்டுகாலம் உழைத்த தனக்கு கருணாநிதியும்,ஸ்டாலினும் துரோகம் செய்துவிட்டதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி குற்றம்சாட்டியுள்ளார். அ.தி.மு.க அரசின் இரண்டு ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தி.மு.க முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி, இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் கருணாநிதி, தனது மகள் கனிமொழி மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக்கொண்டதாக விமர்சித்தார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கருணாநிதி பாடுபடவில்லை என்று கூறிய பரிதி இளம்வழுதி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறுவது கூட அரசியல் நாடகம் என குற்றம்சாட்டினார். |
| Posted: 07 Jul 2013 06:54 PM PDT சென்னையில் மீனம்பாக்கம், தாம்பரம், சைதாபேட்டை ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையில் கடந்த சில தினங்களாகவே மாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்துவருகிறது.நேற்றிரவும் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பட்டினம்பாக்கம், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் சாரல் மழையும், மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. இதுதவிர தமிழகத்தில் இன்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வுக்குழு விசாரணை Posted: 07 Jul 2013 06:22 PM PDT புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் பாட்னா சென்ற புலனாய்வுக்குழுவினர், சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து நேற்று மாலை புத்தகயா சென்றனர். விகாஷ் வைபவ் தலைமையிலான புலனாய்வுக் குழுவினர், புத்தகயா கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தனர். புத்த துறவிகள், யாத்ரீகர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே, புத்தகயா தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து புத்த மதத் தலைவர் தலாய்லாமாவுக்கும், நாடு முழுவதும் உள்ள புத்த மதம் சார்ந்த புனிதத் தலங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எழும்பூர் புத்த மடம், இலங்கை துணைத் தூதரகம் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் புத்த மதத்தவருக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மத்திய திபெத்தியர் நிர்வாகத்துறை, டெல்லியில் இன்று கூடி ஆலோசிக்கிறது. புத்தகயாவில் வழக்கம் போல் வழிபாடு இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்புகளுக்கு இலக்கான புத்தகயாவில் வழக்கம் போல் வழிபாடு நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் புத்தகயாவில் நேற்று காலை குண்டுகள் வெடித்த நிலையில், நேற்று மாலையே வழக்கம் போல் புத்த துறவிகள் வழிபாடுகளைச் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள புத்த துறவிகளைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேசிய புலனாய்வுக்குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வசதியாக, தடயங்கள் அழிக்கப்படாமல் இருக்கவுமே பிறருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், யாத்ரீகர்கள் அனைவரும் இன்று முதல் புத்தகயா கோவிலுக்குள் வழக்கம் போல் சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தகயா செல்வதை ஒரு வார காலம் ஒத்திப் போடுமாறு இலங்கை நாட்டவரை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

இதற்கிடையில் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசனின் மரணம், தற்கொலையே என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், இளவரசனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தற்கொலைக்கான கடிதம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. டெல்லியில் இருந்து விமானத்தில் பாட்னா சென்ற புலனாய்வுக்குழுவினர், சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து நேற்று மாலை புத்தகயா சென்றனர். விகாஷ் வைபவ் தலைமையிலான புலனாய்வுக் குழுவினர், புத்தகயா கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்தனர். புத்த துறவிகள், யாத்ரீகர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே, புத்தகயா தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து புத்த மதத் தலைவர் தலாய்லாமாவுக்கும், நாடு முழுவதும் உள்ள புத்த மதம் சார்ந்த புனிதத் தலங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் எழும்பூர் புத்த மடம், இலங்கை துணைத் தூதரகம் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் புத்த மதத்தவருக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மத்திய திபெத்தியர் நிர்வாகத்துறை, டெல்லியில் இன்று கூடி ஆலோசிக்கிறது.