Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

Posted: 15 Jul 2013 01:15 PM PDT

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின், முதல்போக சாகுபடிக்காக திங்கள்கிழமை

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Posted: 15 Jul 2013 01:08 PM PDT

சேலம் ராஜகணபதி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேட்டூருக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உயர்வு

Posted: 15 Jul 2013 01:06 PM PDT

மேட்டூர் அணைக்கு திங்கள்கிழமை நீர்வரத்து 17,260 கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால்

இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம்

Posted: 15 Jul 2013 01:00 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, அந்த ஆலை தொடர்ந்து செயல்படலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை கூறியது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு கசிவதாகக் கூறி, கடந்த மார்ச்

காவிரி: மேலும் 10 டிஎம்சி நீரை தர கர்நாடகம் ஒப்புதல்

Posted: 15 Jul 2013 12:58 PM PDT

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் திறந்துவிட வேண்டிய 34 டிஎம்சி நீர் இம்மாத இறுதிக்குள் முழுமையாக வழங்கப்படும் என்று காவிரி மேற்பார்வைக் குழுவிடம் கர்நாடகம் திங்கள்கிழமை உறுதியளித்தது.

ரேஷன் கடைகளில் ரூ. 13.50 விலையிலேயே சர்க்கரை

Posted: 15 Jul 2013 12:57 PM PDT

"சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கிய பிறகும், தில்லியில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவரும் சர்க்கரையை கிலோ ரூ. 13.50 விலையிலேயே தொடர்ந்து வழங்க தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது'' என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

காமராஜர் பிறந்த நாள்: தில்லியில் அமைச்சர்கள், தமிழர்கள் மரியாதை

Posted: 15 Jul 2013 12:57 PM PDT

பெருந்தலைவர் காமராஜரின் 111-ஆவது பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை தில்லி காமராஜ் மார்கில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், தில்லித் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

18 லட்சம் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள்

Posted: 15 Jul 2013 12:56 PM PDT

தில்லியில் உள்ள 18 லட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளும், 38 லட்சம் குழந்தைகளுக்கு குடல்புழு நீக்க மருந்து, மாத்திரைகளும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.

ஆர்பிஎஃப் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: கான்ஸ்டபிள் உள்பட இருவர் கைது

Posted: 15 Jul 2013 12:56 PM PDT

கடந்த மாதம் நாடு முழுவதும் நடைபெற்ற ரயில்வே காவலர் தேர்வு (ஆர்பிஎஃப்) வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மோஹித் குமார் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அரசுப் பள்ளி மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் தந்தை மனு

Posted: 15 Jul 2013 12:56 PM PDT

தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு பள்ளிச் சேர்க்கைக்கு அனுமதி மறுத்ததாகக் கூறி தில்லியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மீது நடவடிக்கை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் அக்குழந்தைகளின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார்.

மது அருந்திய 100-க்கும் மேற்பட்ட சிறார்கள் சிக்கினர்

Posted: 15 Jul 2013 12:55 PM PDT

ர்கானில் பிரபல வணிக வளாக மதுபான விடுதியில் போலீஸாரும், கலால் வரித் துறை அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தியபோது மது மற்றும் உட்கா அருந்தி கொண்டிருந்த 20 வயதுக்கு குறைவான பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.

ரூ. 1 கோடி மோசடி: ஒருவர் கைது

Posted: 15 Jul 2013 12:55 PM PDT

தனியார் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பெற்று ரூ. 1 கோடி வரை மோசடி செய்ததாக மும்பையைச் சேர்ந்த ராஜீவ் தெவாரை தில்லி போலீஸார் கைது செய்தனர். இது குறித்து, போலீஸார் கூறியதாவது:

அங்கீகாரமற்ற செல்ஃபோன் கோபுரம்:விரிவான அறிக்கை தர உத்தரவு

Posted: 15 Jul 2013 12:55 PM PDT

: தெற்கு தில்லியில் உள்ள அங்கீகாரமற்ற செல்ஃபோன் கோபுரங்கள் குறித்த விரிவான அறிக்கையை அளிக்கும்படி மாநகராட்சி ஆணையருக்கு,   மேயர் சரிதா செüத்ரி உத்தரவிட்டுள்ளார்.

கச்சத் தீவை மீட்கக் கோரி கருணாநிதி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 15 Jul 2013 12:54 PM PDT

இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்தத் தீவை மீட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு. கருணாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்

தயாநிதி மாறனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் "டிராஃபிக்' ராமசாமி மனு

Posted: 15 Jul 2013 12:54 PM PDT

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில், சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள நடவடிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் "டிராஃபிக்' ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

கைதானவர்கள் மீது ஆள் கடத்தல்,கொள்ளை குற்றச்சாட்டுகள்  பதிவு

Posted: 15 Jul 2013 12:53 PM PDT

தில்லியில், ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் கைதான நான்கு பேர் மீது ஆள் கடத்தல் மற்றும் கொள்ளை

சிறுமி பலாத்காரம்: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 15 Jul 2013 12:53 PM PDT

பன்னிரண்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த பதாரி மெஹ்தோ (45) என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிறுவனிடம் தகாத உறவு: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

Posted: 15 Jul 2013 12:53 PM PDT

எட்டு வயது சிறுவனை வீட்டுக்குள் அடைத்து வைத்து தகாத உறவு கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லியைச் சேர்ந்த வினோத் (32) என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நெய்யாறு நீர் கோரி தமிழகம் வழக்கு: வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

Posted: 15 Jul 2013 12:52 PM PDT

நெய்யாறு நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

குடிநீர்த் தேவையை சமாளிக்க பாசன நீர்?தில்லி ஜல் போர்டு பரிசீலனை

Posted: 15 Jul 2013 12:52 PM PDT

தில்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க, யமுனை நதியில் இருந்து பாசனத்துக்காகப் பயன்படுத்தப்படும் நீரை உபயோகிக்கும் வாய்ப்புகளை தில்லி ஜல் போர்டு ஆராய்ந்து வருகிறது. ஹரியாணாவின் முனக் கால்வாயில் இருந்து தில்லி ஹைதர்பூர் வரை 102 கிலோ மீட்டர் தொலைவுள்

"இனி ஒரு சதவீத பங்கைக்கூட விற்க அனுமதிக்க மாட்டோம்'

Posted: 15 Jul 2013 12:51 PM PDT

இனிவரும் காலங்களில் ஒரு சதவீத பங்கைக் கூட விற்க அனுமதிக்கமாட்டோம் என நெய்வேலி தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு வி

பண்ருட்டி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

Posted: 15 Jul 2013 12:50 PM PDT

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கு செபி ஒப்புதல் அளித்த செய்தியை அறிந்த பண்ருட்டி அதிமுகவினர், பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

13 தினங்களை பணிநாளாகக் கருதி சம்பளம் வழங்கக் கோரிக்கை

Posted: 15 Jul 2013 12:50 PM PDT

: என்.எல்.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 13 தினங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கும், 13 தினங்களுக்குண்டான ஊதியத்தை வழங்க வேண்டும் என தொமுச பேரவைச் செயலர் மு.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலீஸ்காரர் மாரடைப்பால் சாவு

Posted: 15 Jul 2013 12:49 PM PDT

: சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை சிறைச் சாலையில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பில் இறந்தார்.

ரேஷன் அட்டை கோரி இருளர் மக்கள் மனு

Posted: 15 Jul 2013 12:49 PM PDT

தங்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி...

Posted: 15 Jul 2013 12:48 PM PDT

தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு வீடு இழந்தோர் நலப்பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திரௌபதி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா

Posted: 15 Jul 2013 12:48 PM PDT

திருத்தணியை அடுத்துள்ள கீழாந்தூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

மாணவிகளுக்குப் பரிசு

Posted: 15 Jul 2013 12:48 PM PDT

காமராஜர் பிறந்தநாளையொட்டி, மணவாளநகரில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட மணவாளநகர் பெண்கள் உயர்

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.66 லட்சம் திருட்டு

Posted: 15 Jul 2013 12:48 PM PDT

கும்மிடிப்பூண்டியில், வங்கியில் செலுத்துவதற்காக பைக்கில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கொண்டு சென்ற டாஸ்மாக் கடை வசூல் பணம் ரூ.1.66 லட்சம், திங்கள்கிழமை திருடுபோனது.

காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2013 12:47 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஜோசப் ஆல்பர்ட் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜரத்தினம் வரவேற்றார்.

கல்வி வளர்ச்சி நாள் விழா

Posted: 15 Jul 2013 12:47 PM PDT

திருத்தணி அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியை சுப்பாலட்சுமி தலைமை வகித்தார்.

சுனாமியால் வீடு இழந்தவர்கள் ..

Posted: 15 Jul 2013 12:47 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் சுனாமியால் வீடுகளை இழந்தவர்கள், தங்களுக்கு வீடுகள் வழங்கக் கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மனைவி கொலை:கணவருக்கு ஆயுள்

Posted: 15 Jul 2013 12:46 PM PDT

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பொன்னேரியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீஞ்சூர் அருகே நாலூர் ஏரிக்கரையோரம் உள்ள காலனியில் வசிப்பவர் வெங்கடேசன்(34).  இவரது மனைவி தேவி (24). காதல் திருமணம் செய்த இருவருக்கும்

புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

Posted: 15 Jul 2013 12:46 PM PDT

புழல் மத்திய சிறையில், கைதியின் அறையில் இருந்து இரு செல்போன்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய ரயில்கள் நவம்பருக்கு பின்னர் இயக்கப்படும்

Posted: 15 Jul 2013 12:45 PM PDT

: ரயில் டிரைவர்கள் பற்றாக்குறை காரணமாக, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் வரும் நவம்பர் மாதத்துக்குப் பிறகு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் கோட்லா

மதிப்புக் கூட்டு வரிகள் (வாட்) குறைப்பு

Posted: 15 Jul 2013 12:45 PM PDT

புதுச்சேரியில் மதிப்புக் கூட்டு வரியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்று, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.

கருவுற்ற 5 ஆயிரம் பெண்களுக்குஉதவித்தொகை

Posted: 15 Jul 2013 12:44 PM PDT

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கருவுற்ற 5 ஆயிரம் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 15 Jul 2013 12:43 PM PDT

புதுச்சேரி அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை (ஜூலை 15)  கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ராஜா திரையரங்கம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் என்.ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆட்சியர் அலுவலகம் முன் திடீர் தர்னா

Posted: 15 Jul 2013 12:43 PM PDT

விழுப்புரம் அருகே உள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தன், மர்மச்சாவு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அட்டவணை இனத்தவர், பழங்குடியினர் சம்மேளனத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை திடீர் தர்னா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஊராட்சி அலுவலகத்தில் வட்டாட்சியர் திடீர் ஆய்வு

Posted: 15 Jul 2013 12:43 PM PDT

உளுந்தூர்பேட்டை வட்டம் காட்டுநெமிலி ஊராட்சி அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆர்.லலிதா, திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அ.தி.மு.க., தி.மு.க. கொண்டாட்டம்

Posted: 15 Jul 2013 12:42 PM PDT

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை, விழுப்புரத்தில் அதிமுகவினர், தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Posted: 15 Jul 2013 12:42 PM PDT

ிருக்கோவிலூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 15 Jul 2013 12:42 PM PDT

விழுப்புரம் மந்தக்கரை ஸ்ரீ மழுக்கரமேந்திய ஸ்ரீ அமைச்சார் அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு, கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 15 Jul 2013 12:42 PM PDT

ஜூலை மாதத்துக்கான விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம், வரும் 19-ம் தேதி காலை, ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும்

ஜூலை 16 மின் தடை

Posted: 15 Jul 2013 12:41 PM PDT

ஷேர் ஆட்டோக்களால் அதிகரிக்கும் விபத்துகள்

Posted: 15 Jul 2013 12:40 PM PDT

கடலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

கடலூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று: மருத்துவர்கள் குழு ஆய்வு

Posted: 15 Jul 2013 12:40 PM PDT

கடலூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கோரி விண்ணப்பிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கக் கூட்டம்

Posted: 15 Jul 2013 12:40 PM PDT

சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு

Posted: 15 Jul 2013 12:39 PM PDT

கடலூர் சங்கமம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கடலூரில் அண்மையில் நடந்தது. அசோக்குமார் வரவேற்றார். விஜயபாஸ்கர் ஆண்டறிக்கை வாசித்தார். புதிய நிர்வாகிகளை துணை கவர்னர்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரிக்கை

Posted: 15 Jul 2013 12:39 PM PDT

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழை வேண்டி பிரார்த்தனை

Posted: 15 Jul 2013 12:39 PM PDT

மழை வேண்டி சிதம்பரத்தில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் திருஞானசம்பந்தர், சுந்தரர் பதிகங்களில் உள்ள அதற்கான பாடல்களை வெள்ளிக்கிழமை மாலை கூட்டாக படித்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

முதல்வருக்கு ஊராட்சி செயலர்கள் நன்றி

Posted: 15 Jul 2013 12:38 PM PDT

கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு தமிழக ஊராட்சிச் செயலர்கள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஊராட்சிச் செயலர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் இளங்

வருவாய்த் துறை ஊழியர்களுக்கு தனி ஊதியம் வழங்கக் கோரிக்கை

Posted: 15 Jul 2013 12:38 PM PDT

வருவாய்த் துறை ஊழியர்களுக்கு 30 சதவீத தனி ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பேராசிரியர் ரா.சாரங்கபாணி நினைவு இலக்கியப் பேரூரை விழா

Posted: 15 Jul 2013 12:38 PM PDT

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு தீப்பாய்ந்த நாச்சியார் கோயில் வளாகத்தில் பேராசிரியர் ரா.சாரங்கபாணியார் நினைவு இலக்கியப் பேரூரை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நடராஜர் கோயிலில் பெண்ணிடம் சங்கிலி திருட்டு

Posted: 15 Jul 2013 12:37 PM PDT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர் திருவிழாவின்போது பெண்ணிடம் மூன்றரை பவுன் சங்கிலி திருட்டு போனது.

காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Posted: 15 Jul 2013 12:36 PM PDT

கர்மவீரர் காமராஜரின் 111-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

திட்ட அலுவலரை முற்றுகையிட்ட மக்கள்

Posted: 15 Jul 2013 12:36 PM PDT

100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் மாவட்ட திட்ட அலுவலரை முற்றுகையிட்டனர்.

கோயில்களில் பாதுகாப்பு தீவிரம்

Posted: 15 Jul 2013 12:35 PM PDT

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் ரெüடி கைது

Posted: 15 Jul 2013 12:35 PM PDT

கூடுவாஞ்சேரி பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரெüடி செல்வம் (35), குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.  இவர் மீது, கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டு நல்லூரில், சில ம

200 பவுன் மோசடி புகார்:பெண் வி.ஏ.ஓ.விடம் விசாரணை

Posted: 15 Jul 2013 12:35 PM PDT

பல லட்சம் பணம், 200 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டதாக பெண் வி.ஏ.ஓ.விடம் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

ரூ.5,890 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

Posted: 15 Jul 2013 12:34 PM PDT

புதுச்சேரி மாநிலத்தின் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை (ஜூலை 15) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ. 5,890 கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

வரவு - செலவு திட்டம் என்னென்ன?

Posted: 15 Jul 2013 12:34 PM PDT

புதுச்சேரியில் நடப்பு ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்திற்கு ரூ.5,890 கோடி மதிப்பில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு;திமுக புறக்கணிப்பு

Posted: 15 Jul 2013 12:33 PM PDT

புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் போது காங்கிரஸ், அதிமுக கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. இக்கூட்டத்தை திமுக புறக்கணித்தது.

பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி இலவச சீருடை

Posted: 15 Jul 2013 12:33 PM PDT

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி இலவச சீருடை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

காமராஜர் மணி மண்டப பணிகள் மீண்டும் தொடங்கும்

Posted: 15 Jul 2013 12:33 PM PDT

புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

வறட்சி நிவாரணத்தில் அலட்சியம் :அதிமுக கண்டனம்

Posted: 15 Jul 2013 12:33 PM PDT

கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணத்தை புதுவை அரசு வழங்காமல் அலட்சியப்படுத்துவது கண்டனத்துக்குரியது என அதிமுக கூறியுள்ளது.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கக் கோரிக்கை

Posted: 15 Jul 2013 12:32 PM PDT

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என புதுச்சேரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரேஷன் கார்டுகளுக்கு ஒற்றை அவியல் அரிசி

Posted: 15 Jul 2013 12:31 PM PDT

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒற்றை அவியல் அரிசி வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

நஷ்டஈடு வழங்காததால் அரசு நவீன பஸ் ஜப்தி

Posted: 15 Jul 2013 12:31 PM PDT

விபத்தில் காயமடைந்தவருக்கு உரிய நஷ்டஈடு வழங்காததால் தமிழக அரசின், உணவகம் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய நவீன விரைவு பஸ் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.  விழுப்புரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் 1998-ம் ஆண்டு ஆசனூர் என்ற பகுதியில்

பெரியாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 15 Jul 2013 12:30 PM PDT

உளுந்தூர்பேட்டையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில், வடபுறத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபெரியாயி அம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.

கண் சிகிச்சை முகாம்

Posted: 15 Jul 2013 12:30 PM PDT

திண்டிவனம் புனித அன்னாள் நர்சரி பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கார் மீது பஸ் மோதல்: 3 பேர் காயம்

Posted: 15 Jul 2013 12:30 PM PDT

கனியாமூர் கைகாட்டி அருகே கார் மீது பஸ் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.

பா.ஜ.க. ஒன்றிய செயற்குழுக் கூட்டம்

Posted: 15 Jul 2013 12:29 PM PDT

திருநாவலூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம், பாதூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

20}ல் தொல்லியல் கழகத்தின் கருத்தரங்கம் தொடக்கம்

Posted: 15 Jul 2013 12:29 PM PDT

தமிழக தொல்லியல் கழகத்தின் 23-வது ஆண்டு கருத்தரங்கமும், 24-வது ஆவணம் இதழ் வெளியீட்டு விழாவும், வரும் ஜூலை 20-ம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சலக அலுவலர் சிறையில் அடைப்பு

Posted: 15 Jul 2013 12:29 PM PDT

திருக்கோவிலூரில் ரூ.14 லட்சத்துடன் தலைமறைவானதால், கைது செய்யப்பட்ட அஞ்சலக அலுவலர் திங்கள்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு பூட்டு போட்டு விவசாயிகள் போராட்டம்

Posted: 15 Jul 2013 12:18 PM PDT

கொள்முதல் பணத்தை பட்டுவாடா செய்யாததால், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் திங்கள்கிழமை பூட்டு போட்டு போராட்டம்

காமராஜர் பிறந்தநாள் விழா அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

Posted: 15 Jul 2013 12:17 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காமராஜரின் 111-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி புத்தகத் திருவிழா ஜூலை 19 தொடக்கம்

Posted: 15 Jul 2013 12:16 PM PDT

கன்னியாகுமரி புத்தகத் திருவிழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஜூலை 19-ஆம் தேதி தொடங்குகிறது.

குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் முற்றுகை

Posted: 15 Jul 2013 12:16 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கள்கிழமை திடீரென ஒத்திவைக்கப்பட்டதால், அதிக உறுப்பினர்களைக் கொண்ட சம்பத் சந்திரா தலைமையிலான அணியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு

அருமனை அருகே பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 15 Jul 2013 12:16 PM PDT

அருமனை அருகே திங்கள்கிழமை மொபட்டில் சென்று கொண்டிருந்த அங்கன்வாடி ஊழியரை மறித்து 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா

Posted: 15 Jul 2013 12:15 PM PDT

காமராஜரின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாமியார் வீட்டுக்கு தீ வைப்பு: மருமகன் கைது

Posted: 15 Jul 2013 12:15 PM PDT

கொற்றிகோடு, குமாரபுரம் அருகே மாமியாரின் வீட்டை தீ வைத்து கொளுத்திய மருமகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2013 12:15 PM PDT

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லூர்து மவுன்ட் பொறியியல் கல்லூரி தொடக்கம்

Posted: 15 Jul 2013 12:14 PM PDT

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை நட்டாலத்தில் லூர்து மவுன்ட் பொறியியல் கல்லூரி  தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூரில் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

Posted: 15 Jul 2013 12:13 PM PDT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு

Posted: 15 Jul 2013 12:13 PM PDT

ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

நாசரேத்தில் மாயமான 25 பவுன் நகை 10 மணி நேரத்தில் மீட்பு

Posted: 15 Jul 2013 12:13 PM PDT

: நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை மாயமான 25 பவுன் நகை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.  திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் செல்வராஜ் மனைவி கெத்சி (40). இவர் தனது சகோதரி மகள்

காமராஜர் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 15 Jul 2013 12:13 PM PDT

காமராஜரின் பிறந்தநாளை யொட்டி, கோவில்பட்டியில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்தனர்.

பேட்மாநகரம் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா

Posted: 15 Jul 2013 12:12 PM PDT

பேட்மாநகரம் எம்.எம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ரூ.90 லட்சத்தில் புதிய வகுப்பறை மற்றும் நவின கழிப்பறைக் கட்டடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு அருகே காப்பர் வயர்களை திருடிய 3 பேர் கைது

Posted: 15 Jul 2013 12:12 PM PDT

கயத்தாறு அருகே காப்பர் வயரை திருடிய 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.  கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரென்னீஸ் தலைமையில், போலீஸார் ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி துறைமுகத்தில்ஒரே நாளில் 3,200 மெட்ரிக் டன் உப்பு கையாண்டு சாதனை

Posted: 15 Jul 2013 12:12 PM PDT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரே நாளில் 13,200 மெட்ரிக் டன் உப்பு கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வரதட்சிணை வழக்கில் 2 பேர் கைது

Posted: 15 Jul 2013 12:11 PM PDT

திருச்செந்தூரில் வரதட்சிணை வழக்கு தொடர்பாக ùóபண்ணின் கணவர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விவேகானந்தா கேந்திர ஆலோசனைக் கூட்டம்

Posted: 15 Jul 2013 12:11 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி ரத ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Posted: 15 Jul 2013 12:11 PM PDT

காமராஜரின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்செந்தூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Posted: 15 Jul 2013 12:10 PM PDT

திருச்செந்தூர் ஸ்ரீ சபாபதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜூலை 16 மின் தடை

Posted: 15 Jul 2013 12:10 PM PDT

தூத்துக்குடி தருவைகுளம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 18-ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

Posted: 15 Jul 2013 12:10 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு மனு அளிக்க வந்த தம்பதி கைது

Posted: 15 Jul 2013 12:09 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை, கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக மனு அளிப்பதற்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு குழந்தைகளுடன் வந்திருந்த தம்பதியை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

எரசக்கநாயக்கனூரில் தொற்று நோய் பரவும் அபாயம்

Posted: 15 Jul 2013 12:08 PM PDT

சின்னமனூர் ஒன்றியம், எரசக்கநாயக்கனூர் இந்திரா காலனியில்,  வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ரூ 4 கோடியில் திருப்பணிகள் தொடக்கம் 

Posted: 15 Jul 2013 12:08 PM PDT

பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயி லில் ரூ 4 கோடி மதிப்பிலான திருப்பணி வேலைகள் கணபதி ஹோமம் உள்பட சிறப்பு பூஜைகளுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™