Daily Thanthi |
- இன்று நாள் எப்படி?
- ஆன்மீக சிந்தனை (03-07-2013)
- ஆண்டியார் (03-07-2013)
- சாணக்கியன் சொல் (03-07-2013)
- கன்னித்தீவு (03-07-2013)
- இந்தியா, சீனா உள்பட 43 நாடுகள் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் இன்று தொடக்கம்
- விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் லிசிக்கி, ராத்வன்ஸ்கா
- இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: ஜெயவர்த்தனே, தரங்கா சதம் அடித்தனர்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை ஆஷஸ் தொடரில் இடம் பெற வாய்ப்பு?
- ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணியில் சந்தீப்சிங் நீக்கம்
| Posted: 02 Jul 2013 12:43 PM PDT |
| Posted: 02 Jul 2013 12:37 PM PDT |
| Posted: 02 Jul 2013 12:36 PM PDT |
| Posted: 02 Jul 2013 12:34 PM PDT |
| Posted: 02 Jul 2013 12:32 PM PDT |
| இந்தியா, சீனா உள்பட 43 நாடுகள் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் இன்று தொடக்கம் Posted: 02 Jul 2013 12:13 PM PDT புனே, இந்தியா, சீனா உள்பட 43 நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது. தடகள திருவிழா ஆசிய தடகள போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 20–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மராட்டியத்தின் புனே நகரில் உள்ள ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 7–ந்தேதி வரை நடைபெறுகிறது. |
| விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் லிசிக்கி, ராத்வன்ஸ்கா Posted: 02 Jul 2013 12:11 PM PDT லண்டன், விம்பிள்டன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் லிசிக்கி, ராத்வன்ஸ்கா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். லிசிக்கி வெற்றி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 23–ம் நிலை வீராங்கனை சபினே லிசிக்கி (ஜெர்மனி), கனேபியை(எஸ்தோனியா) எதிர்கொண்டார். |
| இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்: ஜெயவர்த்தனே, தரங்கா சதம் அடித்தனர் Posted: 02 Jul 2013 12:10 PM PDT கிங்ஸ்டன், முத்தரப்பு கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, தரங்கா சதம் விளாசினர். கோலி கேப்டன் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடையிலான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். இந்தியா, இலங்கை அணிகள் தங்களது தொடக்க ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி அடைந்தன. |
| பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை ஆஷஸ் தொடரில் இடம் பெற வாய்ப்பு? Posted: 02 Jul 2013 12:09 PM PDT மெல்போர்ன், பாகிஸ்தானில் பிறந்த கிரிக்கெட் வீரர் பவாத் அகமதுவுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை கிடைத்துள்ளது. இதனால் அவர் ஆஷஸ் தொடருக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் 31 வயதான பவாத் அகமது. பாகிஸ்தானில் உள்ளூர் கிரிகெட்டில் விளையாடியுள்ள இவர், பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததால் தனக்கு தீவிரவாதிகளிடம் இருந்து கொலைமிரட்டல் வந்ததாக கூறி 2010–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தார். |
| ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணியில் சந்தீப்சிங் நீக்கம் Posted: 02 Jul 2013 12:08 PM PDT புதுடெல்லி, எட்டு அணிகள் இடையிலான 9–வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24–ந்தேதி முதல் செப்டம்பர் 1–ந்தேதி வரை மலேசியாவின் இபோக் நகரில் நடக்கிறது. இதையொட்டி 48 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வருகிற 16–ந்தேதி முதல் ஆகஸ்டு 16–ந்தேதி வரை பெங்களூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |