மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஓரின சேர்க்கை புகார்: 36 வீடுகளில் சோதனை நடத்தி மந்திரியை கைது செய்த போலீஸ்
- அகமதாபாத் ஜகநாதர் கோவில் தேரோட்டம்: நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
- கேரளாவில் மத்திய மந்திரி சசிதரூர் அலுவலகம் சூறை: கண்ணீர் புகை குண்டுவீச்சில் அச்சுதானந்தன் மயக்கம்
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சமையல் கியாஸ், டீசல் விலை உயர்கிறது
- புத்தர் கோவிலை தகர்க்க மனித வெடிகுண்டாக மர்ம பெண் வந்தாரா?: துப்பு துலங்குகிறது
- போலி என்கவுன்டர் குறித்து கருத்து: அருண் ஜேட்லி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
- உம்மன் சாண்டி பதவி விலக கோரி கேரளாவில் இன்று முழு அடைப்பு: தமிழகத்தில் இருந்து பஸ் போக்குவரத்து ரத்து
- மும்பையில் விரைவில் தாக்குதல் நடத்துவோம்: இந்தியன் முஜாகிதீன்கள் ‘டூவிட்டர்’ மூலம் மிரட்டல்
- மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- உத்தரகாண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டார்
- 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் மனுவை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு பெஞ்சு இன்று விசாரணை
- ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் காயம்
- இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்
- லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்
- ஹசாரே-கெஜ்ரிவாலுக்கு கோர்ட் நோட்டீஸ்
- டெல்லியின் புதிய ஆளுநராக ஜங் பொறுப்பேற்றார்: பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதி
- சசி தரூர் அலுவலகம் மீது தாக்குதல்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு
- 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை
- பாலக்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முன்னாள் பஞ்.தலைவர் பலி
- ராஜஸ்தான்: ஆற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலி
| ஓரின சேர்க்கை புகார்: 36 வீடுகளில் சோதனை நடத்தி மந்திரியை கைது செய்த போலீஸ் Posted: 09 Jul 2013 11:02 PM PDT மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா அரசில் நிதி மந்திரியாக இருந்தவர் ராகவ்ஜி. 79 வயதான இவர் மீது ஓரின சேர்க்கை செக்ஸ் புகார் கூறப்பட்டது. அவரது வீட்டு வேலைக்காரன் தன்னிடம் 3 1/2 ஆண்டுகளாக மந்திரி தவறாக நடந்து கொண்டதாக சமீபத்தில் திடுக்கிடும் புகார் கூறினார். இது தொடர்பான சி.டி. ஆதாரமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகவ்ஜி |
| அகமதாபாத் ஜகநாதர் கோவில் தேரோட்டம்: நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் Posted: 09 Jul 2013 10:54 PM PDT 400 ஆண்டு கால பழமை வாய்ந்த அகமதாபாத் ஜகநாதர் ஆலய தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பாரம்பரிய மரபுகளின்படி, யானைகள் முதன்முதலாக ஜகநாதரை பார்வையிட்ட பின்னர் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி தேர் செல்லும் பாதையை சுத்தம் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். |
| கேரளாவில் மத்திய மந்திரி சசிதரூர் அலுவலகம் சூறை: கண்ணீர் புகை குண்டுவீச்சில் அச்சுதானந்தன் மயக்கம் Posted: 09 Jul 2013 10:50 PM PDT கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி பற்றி போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீதரன் நாயர் என்பவர் முதல்–மந்திரி உம்மன்சாண்டியை இருமுறை சந்தித்ததாகவும், அதன் பிறகே சோலார் பேனல் நிறுவனத்திற்கு பணம் கொடுத்ததாகவும் தனது புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து பிஜு ராதாகிருஷ்ணன்–சரிதா நாயருடன் காங்கிரஸ் மந்திரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் துணையுடனேயே இந்த மோசடி நடந்ததாகவும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர்களுக்கு இதில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், ஆதாரங்களுடன் தெரிவித்தனர். |
| ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சமையல் கியாஸ், டீசல் விலை உயர்கிறது Posted: 09 Jul 2013 10:37 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது. எனவே டீசல் விலையை உயர்த்த வேண்டியது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. |
| புத்தர் கோவிலை தகர்க்க மனித வெடிகுண்டாக மர்ம பெண் வந்தாரா?: துப்பு துலங்குகிறது Posted: 09 Jul 2013 10:10 PM PDT பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகா போதி புத்தர் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடித்த இடங்களில் கிடைத்த தடயங்கள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் மூலம் சதிகாரர்கள் பற்றிய துப்பு துலங்கி வருகிறது. குண்டு வெடித்த இடத்தில் கிடந்த ஒரு அடையாள அட்டையை வைத்து மிஸ்திரி என்ற தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். |
| போலி என்கவுன்டர் குறித்து கருத்து: அருண் ஜேட்லி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு Posted: 09 Jul 2013 09:34 PM PDT குஜராத் மாநிலத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி என்கவுன்டர் நடத்தப்பட்டது. இதில் 19 வயதான இஷ்ரத் ஜகான், ஜாவேத் செய்க் (எ) பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீசன் ஜோகர் ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரை அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்தினர். |
| Posted: 09 Jul 2013 09:12 PM PDT கேரளாவில் சூரிய மின்சக்தி தயாரிப்புக்கான கூரைகள் (சோலார் பேனல்) அமைத்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய சரிதா நாயர் என்பவர் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியை சந்தித்துப் பேசினார் என்ற தகவல் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. சோலார் பேனல் மோசடியில் தொடர்புடைய முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் இடதுசாரி மாணவர்கள் |
| மும்பையில் விரைவில் தாக்குதல் நடத்துவோம்: இந்தியன் முஜாகிதீன்கள் ‘டூவிட்டர்’ மூலம் மிரட்டல் Posted: 09 Jul 2013 09:06 PM PDT புத்தர் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுகள் வெடித்தன. அதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 'டூவிட்டர்' இணையத்தளத்தில் இந்தியன் முஜாகிதீன் என்றொரு பக்கத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதில் அவர்கள் தங்களது தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். புத்தர் கோவிலில் தாக்குதல் நடந்ததும் அந்த இணையத்தள பக்கத்தில் 'நாங்கள் 9 குண்டுகளை வெடிக்க வைத்துள்ளோம்' என்ற தகவலை வெளியிட்டனர். |
| மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்க தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 09 Jul 2013 08:38 PM PDT ராஷ்டிரீய ஜனதா தளத்தலைவர் லாலு பிரசாத், பீகார் மாநில முதல்-மந்திரி பதவி வகித்தபோது, மாட்டுத்தீவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதில், சாய்பாசாவில் உள்ள கருவூலத்தில் மோசடியாக ரூ.37.7 கோடி பணத்தை எடுத்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி பி.கே. சிங் விசாரித்து, வரும் 15-ந் தேதி தீர்ப்பு அளிக்க இருந்தார். ஆனால் நீதிபதி பி.கே. சிங், தனது அரசியல் எதிரியான நிதிஷ் குமார் அரசில் கல்வி மந்திரி பதவி வகிக்கும் பி.கே. ஷாகியின் உறவினர் என்பதால், ஒருதலைப்பட்சமாக செயல்படுவார் என்ற அச்சம் |
| உத்தரகாண்ட் வெள்ளத்தில் தனிமையாக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டார் Posted: 09 Jul 2013 02:59 PM PDT உத்தரகாண்ட் வெள்ளத்தில் 3 வயது குழந்தை ஒன்று தனிமையாக்கப்பட்டு 2 கால்களும் உடைந்த நிலையில் கோதியாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 2 கால்களும் உடைந்து, மாவு கட்டு போடப்பட்டு, அசைக்க முடியாத நிலையில் ஒரு கட்டிலில் அமர்ந்து இருக்கிறது. தற்போது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். |
| 2ஜி வழக்கு: தயாளு அம்மாள் மனுவை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு பெஞ்சு இன்று விசாரணை Posted: 09 Jul 2013 01:20 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தயாளு அம்மாள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்சு இன்று விசாரிக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு, இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக |
| ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ராணுவ வீரர் காயம் Posted: 09 Jul 2013 12:51 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துள்ளார். கடந்த 48 மணி நேரத்தில் எல்லைப்பகுதியில் 3 கண்ணி வெடிகுண்டுகள் வெடித்துள்ளனர். திங்கள் அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினரை |
| இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் Posted: 09 Jul 2013 12:44 PM PDT இந்தியாவின் வடமாநிலங்களான இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. |
| லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல் Posted: 09 Jul 2013 11:57 AM PDT இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி உள்ளது. லடாக் பகுதியில் அவர்கள் இந்திய ராணுவம் அமைத்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தினர். இமாசலபிரதேசம் லடாக் அருகே உள்ள ஜுமார் பகுதியில் லே என்ற |
| ஹசாரே-கெஜ்ரிவாலுக்கு கோர்ட் நோட்டீஸ் Posted: 09 Jul 2013 09:28 AM PDT ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "லோக்பால்-உண்மைகளும் விவாதங்களும்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், வலுவான லோக்பால் சட்டம் வந்தால் ஊழல்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். |
| டெல்லியின் புதிய ஆளுநராக ஜங் பொறுப்பேற்றார்: பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதி Posted: 09 Jul 2013 08:18 AM PDT நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு, அங்கீகாரம் இல்லாமல் உருவாகும் காலனிகளை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் உள்ள நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி நஜீப் ஜங் இன்று பொறுப்பேற்றார். |
| சசி தரூர் அலுவலகம் மீது தாக்குதல்: திருவனந்தபுரத்தில் பரபரப்பு Posted: 09 Jul 2013 07:32 AM PDT சோலார் பேனல் மோசடி விவகாரம் கேரள சட்டசபையில் இன்று எதிரொலித்தது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ரகளையில் ஈடுபட்டன. ஆனால், அரசியல் சதிக்கு முன்னால் நாங்கள் வளைந்து கொடுக்கமாட்டோம் என்று முதல்வர் சாண்டி திட்டவட்டமாக கூறினார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சோலார் மோசடியைக் கண்டித்து போராட்டம் நடத்தி வரும் ஒரு பிரிவினர், திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மந்திரி சசி தரூரின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். ஆட்டோக்களில் |
| 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை Posted: 09 Jul 2013 06:49 AM PDT உத்தர பிரதேசத்தில் 9 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெயின்பூரி மாவட்டம் பனாவ் கிராமத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பழத்தோட்டத்தில் தனியாக இருந்துள்ளார். |
| பாலக்காடு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முன்னாள் பஞ்.தலைவர் பலி Posted: 09 Jul 2013 05:42 AM PDT பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சக்கரியா(வயது 60). வடக்கஞ்சேரி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. அதனை பார்த்துக் கொண்டிருந்த சக்கரியா மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட சக்கரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சூர் அரசு |
| ராஜஸ்தான்: ஆற்றுக்குள் கார் பாய்ந்து 3 பேர் பலி Posted: 09 Jul 2013 04:44 AM PDT ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் ஆற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கட்டோலி நகரில் வசிக்கும் ஓம் (38), குல்தீர் (32), ஓம் பிரகாஷ் ஆகியோர் ஆற்றுப்பாலம் வழியாக நேற்று காரில் சென்றுக்கொண்டிருந்தனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |