Tamil Star |
- கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டசீன பிரஜை திடீர் மரணம்
- உத்தர்காசியில் நிலச்சரிவு; 60 பேர் உயிரிழப்பு.
- நியூசிலாந்தை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
- இத்தாலி நாட்டிற்கு கடல்வழியே சென்ற 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு
- ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு 30 பேர் பலி
- தமிழர்கள் பகுதியான வடக்கு மாகாண தேர்தல் செப்டம்பரில்
- கரையானின் பசிக்கு உணவாகிய 37 லட்சம் ரூபா
- கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
- எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை
- மக்களுக்காக சிவில் உடையில் பணியில் அமர்த்தப்படும் இராணுவம்
| கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டசீன பிரஜை திடீர் மரணம் Posted: 16 Jun 2013 11:08 PM PDT இலங்கையில் மொரகஹகந்த நீர்பப்பாசன வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அறியப்படாத கிழங்கு வகை ஒன்றை உட்கொண்டமையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிழங்கு வகையை உட்கொண்ட மேலும் இரு சீன பிரஜைகள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சீன பிரஜை 45 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாவுல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உத்தர்காசியில் நிலச்சரிவு; 60 பேர் உயிரிழப்பு. Posted: 16 Jun 2013 10:56 PM PDT இந்தியாவில் உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 25 ஆயிரம் யாத்ரீகர்கள் சிக்கித்தவித்தனர். நிலச்சரிவில் சிக்கிய ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. நிலச்சரிவு காரணமாக யாத்ரீகர்கள் உத்தர்காசி வரவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூசிலாந்தை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து Posted: 16 Jun 2013 10:42 PM PDT சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 10 ஓட்டங்களால் தோற்கடித்ததன் மூலம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இருந்து 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அணியின் தலைவர் குக், 64 ஓட்டங்களை பெற்றார். தொடர்ந்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இத்தாலி நாட்டிற்கு கடல்வழியே சென்ற 300-க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு Posted: 16 Jun 2013 10:32 PM PDT ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும்போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது. மத்திய தரைக்கடல் பகுதி வழியாக நேற்று இத்தாலிக்குள் வரமுயன்ற இரண்டு படகுகள் பழுதடைந்ததால், நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் இத்தாலி நாட்டிற்கு கடல்வழியே குடியேறியவர்களின் எண்ணிக்கை 900-க்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இதுபோல் கடல் வழியே இத்தாலிக்குள் நுழைய [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு 30 பேர் பலி Posted: 16 Jun 2013 10:13 PM PDT ஈராக்கில் நேற்று பல்வேறு பகுதிகளில் நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கின் பாஸ்ரா நகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று 2 கார் குண்டுகள் வெடித்ததில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 பேர் காயமடைந்தனர். நஜப், நசிரியா, குட், ஹில்லா, டஸ் குர்மடோ, மஹ்முதியா ஆகிய பகுதிகளிலும் ஷியா இன மக்களை குறி வைத்து கார் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. மொசூல் நகரில் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழர்கள் பகுதியான வடக்கு மாகாண தேர்தல் செப்டம்பரில் Posted: 16 Jun 2013 09:59 PM PDT இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு பகுதியில் செப்டம்பருக்குள் மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின் அங்கு இந்திய அரசின் உதவியுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு மறுத்து வருகிறது. இதன்காரணமாக, மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கும் 13வது திருத்தத்தை மாற்றியமைக்க புதிய சட்டமசோதா இலங்கை [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கரையானின் பசிக்கு உணவாகிய 37 லட்சம் ரூபா Posted: 16 Jun 2013 09:33 PM PDT சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஷுண்டே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு அவரது பிள்ளைகள் கடந்த 6 மாதங்களுக்கு முன் 4 லட்சம் யுவான்(ரூ.37.52 லட்சம்) அளித்திருந்தார்கள். அந்த பணத்தை அப்பெண் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு மர டிராயரில் வைத்தார். பின்னர், அது பற்றி அவர் மறந்தே போனார். 6 மாதங்கள் கழித்து வீட்டில் சில பராமரிப்பு பணிகளை செய்வதற்காக அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. எல்லா கரன்சி நோட்டுகளையும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு Posted: 16 Jun 2013 09:13 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து சுற்றுச் சூழல் அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த மாதம் நிராகரித்த உச்ச நீதிமன்றம், அணு உலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் காரணமாக கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகம், அணுசக்தி துறை ஆகியவற்றின் அனுமதிக்கு பிறகே அணு உலை செயல்பட வேண்டும் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை Posted: 16 Jun 2013 08:49 PM PDT எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் தடுப்பு ஏவுகணைகளை(பி.எம்.டி) தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ ஈடுபட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பு ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து வரும் எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானில் தடுத்து அழிக்கும் சக்தி படைத்தது. இதை தற்போது டெல்லியில் பொருத்துவதற்கு தயார் நிலையில் உள்ளது. 5 ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து ஏவப்படும் எதிரி ஏவுகணையை, நடுவானில் தடுத்து அழிக்கும் புதிய ஏவுகணை சோதனை விரைவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மக்களுக்காக சிவில் உடையில் பணியில் அமர்த்தப்படும் இராணுவம் Posted: 16 Jun 2013 08:32 PM PDT இராணுவ உடை மக்களுக்கு ஒருவித பயத்தினை ஏற்படுத்துகிறது (அலர்ஜி) என்பதனாலேயே தற்போது சிவில் உடையில் இராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மக்கள் அச்சங் கொள்ளத் தேவையில்லை. அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதும், மக்களது நலன் சார்ந்து சிந்திக்க வேண்டியதும் எங்களது கடமையாகும். மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பில் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்து தன்னிடம் முறையிமாறு இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா கூறியுள்ளார். தன்னுடைய கவனத்துக்கு இவ்விடயங்கள் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |