Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உலக சுற்றுச் சூழல் தின விழா

Posted: 25 Jun 2013 01:08 PM PDT

விக்கிரவாண்டி ஒன்றியம் துப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் மற்றும் வறட்சி எதிர்ப்பு தினவிழா நடைபெற்றது.

குறைகேட்புக் கூட்டம்: 22 பயனாளிகளுக்கு உதவி

Posted: 25 Jun 2013 01:07 PM PDT

கடலூரில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 15 பெண்கள் உள்பட 22 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் வழங்கினார்.

லால்பேட்டை அரபுக் கல்லூரி 150-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

Posted: 25 Jun 2013 01:07 PM PDT

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி 150-வது ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வர்த்தகர் சங்கம் பாராட்டு

Posted: 25 Jun 2013 01:06 PM PDT

சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வர்த்தகர் சங்கம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ

உள்ளூர் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு  வழங்கக் கோரிக்கை

Posted: 25 Jun 2013 01:06 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி சேர்க்கையில் உள்ளூர் மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் பால.அறவாழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வு : 5,642 பேர் பங்கேற்பு

Posted: 25 Jun 2013 01:06 PM PDT

ஆசிரியர் பட்டயப் பயிற்சி 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது.

விண்ணப்பம் விநியோகத்துக்கு 91 மையம், சமர்ப்பிக்க 2 மையம்

Posted: 25 Jun 2013 01:06 PM PDT

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் 91 மையங்களில் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதை பூர்த்தி செய்து திரும்பப் பெற இரண்டு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

தில்லை திருப்புகழ் சபை ஆண்டு விழா

Posted: 25 Jun 2013 01:05 PM PDT

சிதம்பரம் தில்லை திருப்புகழ் சபை ஆண்டு விழா இளமையாக்கினார் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 25 Jun 2013 01:05 PM PDT

பண்ருட்டி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி பள்ளி மாணவர்களை கொண்டு செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

கூட்டுறவு சங்க புதிய நிர்வாக தலைவர்களுக்குப் பயிற்சி

Posted: 25 Jun 2013 01:04 PM PDT

கூட்டுறவு சங்கங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு தலைவர்களுக்கு காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் 513 மெ.டன் நெல் விதைகள் இருப்பு

Posted: 25 Jun 2013 01:04 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 513 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பில் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் திறன் பயிற்சித் திட்டத்தில் சேர நாளை நேர்காணல்

Posted: 25 Jun 2013 01:04 PM PDT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் திறன் பயிற்சித் திட்டத்தில் சேர வியாழக்கிழமை முதல் நேர்காணல் நடைபெற உள்ளது.

ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு: முதியவர் கைது

Posted: 25 Jun 2013 01:03 PM PDT

திருப்போரூர் அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முதியவர் சுப்புராயுலு நாயுடுவை  போலீஸார் கைது செய்தனர்.

அம்மா திட்ட முகாம்: குவிந்தன மனுக்கள்

Posted: 25 Jun 2013 01:03 PM PDT

செங்கல்பட்டை அடுத்த மாமல்லபுரம், நெம்மேலி ஊராட்சியில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் மக்கள் தேடிவரும் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படைவீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

Posted: 25 Jun 2013 01:03 PM PDT

முன்னாள் படை வீரர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ. 1.90 லட்சம் கையாடல் என புகார்

Posted: 25 Jun 2013 01:02 PM PDT

காஞ்சிபுரம் அருகே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் ரூ. 1.90 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏடிஎம்.மில் கொள்ளை முயற்ச

Posted: 25 Jun 2013 01:02 PM PDT

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

நேரடி மானியத்தின் கீழ் சமையல் எரிவாயு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jun 2013 01:02 PM PDT

நேரடி மானியத் திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு திட்டத்தை சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி புதுச்சேரியில் சமையல் எரிவாயு தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும்

Posted: 25 Jun 2013 01:01 PM PDT

புதுவையில் அனைத்து துறைகளிலும் தோல்வி கண்டுள்ள முதல்வர் என்.ரங்கசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலர் ஏ.அன்பழகன் கூறினார்.

குட்கா, பான்மசாலா விற்பனைக்குத் தடை

Posted: 25 Jun 2013 01:00 PM PDT

புதுச்சேரியில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு ஓராண்டுக்காலம் தடைவிதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஜி.ராகேஷ்சந்திரா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

உயிரியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 25 Jun 2013 01:00 PM PDT

தென்னிந்திய அளவிலான உயிரியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தனித்தமிழ் சிறுகதைப் போட்டி

Posted: 25 Jun 2013 01:00 PM PDT

புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் சார்பில் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாராயக் கடைக்கு வருவோரால் பாலியல் தொந்தரவு

Posted: 25 Jun 2013 12:59 PM PDT

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், சாராயக்கடைக்கு வருவோரால் தங்கள் பகுதி பெண்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக முதல்வர் என்.ரங்கசாமியிட

பால் பண்ணைகள் அமைக்க மானியத்தில் கால்நடைகள்

Posted: 25 Jun 2013 12:59 PM PDT

புதுச்சேரியில் ஆதிதிராவிட இளைஞர்கள் பால் பண்ணைகள் அமைக்க, மானிய விலையில் கால்நடைகள் வழங்கப்பட்டன.

என்.எல்.சி. பங்கு விற்பனை: மத்திய அரசின் கருத்து ஏற்புடையதல்ல

Posted: 25 Jun 2013 12:59 PM PDT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை விற்பதன் மூலம் பெறப்படும் தொகை சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கருத்து ஏற்புடையதல்ல என்றார் ம

விநோதினி கொலை வழக்கு: மாஜிஸ்திரேட், மருத்துவர்கள் சாட்சியம்

Posted: 25 Jun 2013 12:59 PM PDT

அமில வீச்சால் உயிரிழந்த விநோதினி கொலை வழக்கில், விநோதினியிடம் மரண வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட், மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சாட்சியம் அளித்தனர்.

மின் வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை

Posted: 25 Jun 2013 12:57 PM PDT

சென்னை தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலியிடத்துக்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மாநில அளவில் பரிந்துரை

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சி

Posted: 25 Jun 2013 12:56 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனித்திறன் பயிற்சி அளிப்பதற்கான நேர்முகத் தேர்வு ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக மகளிர் திட்ட அலுவலர் பிச்சை தெரிவித்தார். 

சிவகாசியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jun 2013 12:56 PM PDT

வறட்சி நிவாரணம் முறையாக வழங்கக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிவகாசி வட்டக்கிளை சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 25 Jun 2013 12:56 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு ஆளுமைத்திறன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

பி.டெக். மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 25 Jun 2013 12:56 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2013-14 ஆம் கல்வியாண்டில் பி.டெக். படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கான சிறப்பு 5 நாள் புத்தாக்கப் பயிற்சி தொ

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 25 Jun 2013 12:55 PM PDT

சிவகாசி அருகே சித்துராஜபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

Posted: 25 Jun 2013 12:55 PM PDT

ராஜபாளையத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.   ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காந்தி ம

பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி

Posted: 25 Jun 2013 12:55 PM PDT

தொழிற்சாலை ஆய்வகத்துறை சார்பில் திங்கள்கிழமை சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. பட்

ரூ.1 கோடி வரை தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

Posted: 25 Jun 2013 12:54 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1 கோடி வரை தொழில் தொடங்க 25  சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் தெரிவித்தார்.

வாழை இலை விலை வீழ்ச்சி

Posted: 25 Jun 2013 12:54 PM PDT

வாழை இலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளிக்கு பரிசு

Posted: 25 Jun 2013 12:53 PM PDT

அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசினை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வழங்கினார்.

நாகாடி ஊராட்சியில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கல்

Posted: 25 Jun 2013 12:53 PM PDT

சிவகங்கை மாவட்டம் நாகாடி ஊராட்சியில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது.

நூல் அறிமுக விழா

Posted: 25 Jun 2013 12:53 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

கூட்டுறவு கடன் சங்க தலைவர்களுக்கு நிர்வாக நடைமுறைப் பயிற்சி

Posted: 25 Jun 2013 12:52 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்களுக்கு நிர்வாக நடைமுறை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ்.: முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு கட்-ஆஃப் என்ன?

Posted: 25 Jun 2013 12:50 PM PDT

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் கட்-ஆஃப் மதிப்பெண் வரையறுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.: 519 முதல் குடும்ப பட்டதாரி மாணவர்கள்

Posted: 25 Jun 2013 12:49 PM PDT

தமிழகத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் பிரிவைச் சேர்ந்த 519 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி:ஜூன் 29ல் ஆரம்பம்

Posted: 25 Jun 2013 12:49 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள், தமிழ்நாடு  சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்

Posted: 25 Jun 2013 12:49 PM PDT

திருப்பத்தூர் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பி.இ. கலந்தாய்வு: 5 நாளில் 13 ஆயிரம் இடங்கள் நிரம்பின

Posted: 25 Jun 2013 12:49 PM PDT

பி.இ. கலந்தாய்வில் 5 நாள்களில் 13 ஆயிரத்து 33 இடங்கள் நிரம்பியுள்ளன. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 3,053 பேர் வரவில்லை.

சுற்றுச்சூழல் பாதிக்காத தொழில்களுக்கு ரூ. 1 கோடி வரை நிதியுதவிதிண்டுக்கல்,

Posted: 25 Jun 2013 12:48 PM PDT

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தொடங்கப்படும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ரூ. 1 கோடி வரை கடனுதவி வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலையான அமைப்பின் கட்டுப்பாட்டில் கர்நாடக அணைகள்

Posted: 25 Jun 2013 12:48 PM PDT

"காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு சீராக தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு அணைகளின் (கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி) கட்டுப்பாட்டை நடுநிலையான அமைப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

Posted: 25 Jun 2013 12:48 PM PDT

வி.ஏ.ஓ. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிலக்கோட்டை காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

வேலம்பட்டி, கோதைமங்கலத்தில் "அம்மா' திட்டம்

Posted: 25 Jun 2013 12:47 PM PDT

பழனி அருகே கோதைமங்கலம், வேலம்பட்டி பஞ்சாயத்துகளில் செவ்வாய்க்கிழமை அம்மா திட்ட முகாமின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன.

சின்னமாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 25 Jun 2013 12:47 PM PDT

கொடைக்கானல் அருள்மிகு சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மின் அலங்கார ரத பவனி நடைபெற்றது.

கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் பயிற்சி

Posted: 25 Jun 2013 12:47 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு, 3 இடங்களில் நாளொன்றுக்கு ரூ. 35 ஊதியத்துடன் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.

வால்பாறையில் 200 மி.மீ. மழை

Posted: 25 Jun 2013 12:46 PM PDT

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளதால், அதன் உபரி மழை வால்பாறை, நீலகிரி, மூணாறு உள்ளிட்ட இடங்களில் பெய்து வருகிறது.

ரெட்டியபட்டி ஊராட்சி எழுத்தர் மர்மச் சாவு

Posted: 25 Jun 2013 12:46 PM PDT

  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (25). இவர், ரெட்டியபட்டி ஊராட்சி எழுத்தராகப் பணியாற்றி வந்தார்.   இவர், கடந்த திங்கள்கிழமை ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெ

ஜூன் 28, 29 வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம்: ஆட்சியர்

Posted: 25 Jun 2013 12:46 PM PDT

ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளதாக  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்

மாநிலங்களவைத் தேர்தல் நாளை வாக்கெடுப்பு: வாக்காளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

Posted: 25 Jun 2013 12:45 PM PDT

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது. இதனிடையே, தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு வாக்கெடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜூலை 8 அஞ்சல் துறை குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 25 Jun 2013 12:45 PM PDT

ராமநாதபுரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  ஜூலை 8 (திங்கள்கிழமை) பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

பரமக்குடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி கூடுதல் ரயில்களை இயக்க வியாபாரிகள் கோரிக்கை

Posted: 25 Jun 2013 12:45 PM PDT

பரமக்குடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தி பல்வேறு நகரங்களில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை வேண்டி ராமேசுவரத்தில் இன்று மகா யாகம்

Posted: 25 Jun 2013 12:45 PM PDT

மழை வேண்டி ராமேசுவரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள சேது மாதவ தீர்த்தம் அருகே மகா யாகம் புதன்கிழமை நடைபெற உள்ளது என கோயில் இணை ஆணையர் சீ. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலை எதிர்க்கும் மனு தள்ளுபடி

Posted: 25 Jun 2013 12:45 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் குதிரை பேரம் நடப்பதால் வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோஷ்டி மோதல்: ஊராட்சித் தலைவர் உள்பட 12 பேர் மீது வழக்கு

Posted: 25 Jun 2013 12:44 PM PDT

கோஷ்டி மோதல் காரணமாக ஊராட்சித் தலைவர் உள்பட 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

எந்த மனிதருக்கும் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசத் தெரியவில்லை

Posted: 25 Jun 2013 12:44 PM PDT

ஆங்கிலக் கலப்பில்லாமல் எந்த மனிதருக்கும் தமிழ் பேசத் தெரியவில்லை என்று காந்திய மக்கள் இயக்க மாநிலத் தலைவர் தமிழருவி மணியன் குறிப்பிட்டார்.

31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தலா ரூ.5 லட்சம், விருது

Posted: 25 Jun 2013 12:44 PM PDT

தூய்மையான கிராம இயக்க விருதினை 31 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஜூன் 27, 30 இல் இலவச கண் மருத்துவ முகாம்

Posted: 25 Jun 2013 12:43 PM PDT

இலவச கண் மருத்துவ முகாம்கள்  ஜூன் 27, 30 தேதிகளில் நடைபெறுகின்றன.

ஏ.டி.எம். மையக் காவலாளி தற்கொலை

Posted: 25 Jun 2013 12:43 PM PDT

வீணாகப் பணம் செலவு செய்ததை பெற்றோர் கண்டித்ததால் வங்கி ஏ.டி.எம். மையத்தின் காவலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இலவச கண் மருத்துவ முகாம்

Posted: 25 Jun 2013 12:43 PM PDT

: சாயல்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.   இதில் கிருஷ்ணன் கோவில் கண் மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீவித்யா மற்றும்  மருத்துவக் குழுவினர் 53

பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி: மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 25 Jun 2013 12:42 PM PDT

கீழக்கரை ஹமீதியா பள்ளிகளில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடத்தி சான்றிதழ்களும், இலவச புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன.

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 25 Jun 2013 12:42 PM PDT

திருப்பத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழக்கரையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி: எம்எல்ஏ

Posted: 25 Jun 2013 12:42 PM PDT

கீழக்கரையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார்.

ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்க முப்பெரும் விழா

Posted: 25 Jun 2013 12:41 PM PDT

ராமநாதபுரம் சேதுபதி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனியில் அன்னாபிஷேக விழாக்கள் நிறைவு

Posted: 25 Jun 2013 12:41 PM PDT

பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் நடைபெற்ற  அன்னாபிஷேக விழா நிறைவு பெற்றது.

தேசிய ஊரக வேலை திட்டத்தில் சம்பளம் குறைப்பு: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 25 Jun 2013 12:40 PM PDT

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டப் பணியாளர்களுக்கு கூலி குறைவாக கொடுப்பதாகக் கூறி, போடிதாசன்பட்டி கிராம பொதுமக்கள் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை

கைலாசநாதர் மலைக் கோயிலில் திருவாசக முற்றோதல்

Posted: 25 Jun 2013 12:40 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள அருள்மிகு கைலாசநாதர் மலைக் கோயிலில் நடைபெற்ற திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

 ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம்: ஆட்சியர் ஆலோசனை

Posted: 25 Jun 2013 12:40 PM PDT

ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடுவது என செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில்

முயல், அணில் வேட்டையாடிய 12 பேருக்கு அபராதம்

Posted: 25 Jun 2013 12:39 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வேட்டையாடி 12 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

சாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் 35 சவரன் நகை திருட்டு

Posted: 25 Jun 2013 12:39 PM PDT

சாத்தூரில் பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து 35 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை

Posted: 25 Jun 2013 12:38 PM PDT

விருதுநகர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை 3 மாதத்துக்குள் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிக் கூட்டத்தில் தலைவர் மா. சாந்தி உறுதி அளித்தார்.

அஞ்சலகத்தில் கள்ள நோட்டு கொடுத்தவரிடம் போலீஸ் விசாரணை

Posted: 25 Jun 2013 12:38 PM PDT

ராஜபாளையம் அருகே கிராம அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த வந்தவரிடமிருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் குறித்து தளவாய்புரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 25 Jun 2013 12:38 PM PDT

விருதுநகர் அருகே குடும்பப் பிரச்னையால் திருமணமான ஒரு மாதத்திலேயே இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்தார்.

பொதுப் பணிகளில் குறை: அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

Posted: 25 Jun 2013 12:37 PM PDT

ஊராட்சி ஒன்றியம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் குறைகள் இருந்தால் அதிகாரிகள் ஆய்வு செய்வதுடன், பணி தொடர்பாக எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என சிவகங்கை ஊராட்சி

அரசு பள்ளியில் திருட முயற்சி

Posted: 25 Jun 2013 12:37 PM PDT

கமுதி அருகே ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது.

அரசுக் கல்லூரி முன் ஆசிரியர்கள் தர்னா

Posted: 25 Jun 2013 12:36 PM PDT

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் முறைகேடான செயல்களைக் கண்டித்தும், முறையான பணி மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா போராட்டம் நடத்தினர்.

பேரிடர் தொடர்பான விவரங்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி

Posted: 25 Jun 2013 12:36 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் தொடர்பான விவரங்களை 1077 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கைது

Posted: 25 Jun 2013 12:36 PM PDT

மானாமதுரையில் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 4 பேரை டி.எஸ்.பி. வெள்ளத்துரை கைது செய்தார்.  

தாற்காலிக சமுதாய கள ஒருங்கிணைப்பாளர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Posted: 25 Jun 2013 12:35 PM PDT

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 4 களத் தொகுப்பில் (கிளஸ்டர்) 20 தாற்காலிக சமுதாய கள ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 25 Jun 2013 12:35 PM PDT

காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பா.ஜ.க இளைஞரணி முன்னாள் மாவட்டச் செயலாளர் சபரிநாதன் (35) உயிரிழந்தார்.

பூமிபாதுகாப்புச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jun 2013 12:34 PM PDT

பூமி பாதுகாப்புச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை

Posted: 25 Jun 2013 12:34 PM PDT

ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்தார்.

மின் ஆளுகை கணினி திட்டம் தொடக்கம்

Posted: 25 Jun 2013 12:34 PM PDT

:நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் மின் ஆளுகை கணினி திட்டத்தை, மண்டல இணைப் பதிவாளர் வி.எம். கலைச்செல்வன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

பி.எஸ்.என்.எல். ப்ரீபெய்டு பழைய திட்டங்களில் மாறுதல்

Posted: 25 Jun 2013 12:33 PM PDT

பி.எஸ்.என்.எல். மொபைல் ப்ரீபெய்டு பழைய திட்டத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவில் பொதுமேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புரோட்டா கடை உரிமையாளர் கொலை வழக்கு: 4 பேர் கைது

Posted: 25 Jun 2013 12:33 PM PDT

நாகர்கோவிலில் புரோட்டா கடை உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திருவட்டாறில் போலீஸ் பாதுகாப்புடன் சாலைப் பணி

Posted: 25 Jun 2013 12:33 PM PDT

திருவட்டாறு அருகே போலீஸ் பாதுகாப்புடன் சாலைப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவர்களின் தலைக்கு மேல் ஆபத்து!

Posted: 25 Jun 2013 12:31 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு அரசுப் பள்ளி கட்டடத்தின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைகள் கீழே விழும் நிலை உள்ளதால் மாணவர்கள் அச்சத்தின் பிடியில் கல்வி கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோதையாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திடீர் சூறைக்காற்று காரண

மார்த்தாண்டம் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

Posted: 25 Jun 2013 12:31 PM PDT

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில், காசநோய் விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் வனச் சரகத்தில் 14,658 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

Posted: 25 Jun 2013 12:31 PM PDT

வனத் துறை சார்பில் குலசேகரம் வனச் சரகத்தில் 14,658 மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது

உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்

Posted: 25 Jun 2013 12:30 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பக்தர்களின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் வீட்டில் திருடிய இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted: 25 Jun 2013 12:30 PM PDT

நாகர்கோவிலில் மருத்துவர் வீட்டில் திருடிய அண்ணன், தம்பிக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

மருதூர்குறிச்சி அருகே தோட்ட தொழிலாளி கொலை

Posted: 25 Jun 2013 12:30 PM PDT

மருதூர்குறிச்சி அருகே தோட்ட தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு தோட்ட தொழிலாளியை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

நாகர்கோவிலில் தொமுச ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jun 2013 12:30 PM PDT

போக்குவரத்துக் கழகத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் சுழற்சி முறையில் பணி ஒதுக்கக்கோரி நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனை முன்பு தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

Posted: 25 Jun 2013 12:29 PM PDT

:கன்னியாகுமரி மாவட்ட கவிதை உறவு சார்பில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 25 Jun 2013 12:29 PM PDT

கூடங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்தவர் செவ்வாய்க்கிழமை  இறந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™