Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வெள்ளம் பாதித்த பகுதியில் பாஜகவினர் உதவி

Posted: 20 Jun 2013 12:58 PM PDT

தில்லியில் வெள்ளம் பாதித்த இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் வியாழக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி, உதவிப் பொருள்களை வழங்கினர்.

துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கு:சிறையில் வினய் குமார் தேர்வு எழுதலாம்

Posted: 20 Jun 2013 12:58 PM PDT

துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வினய் குமார் தனது பட்டப் படிப்புக்கான தேர்வை சிறைக்குள்ளேயே எழுதலாம் என்று தில்லி விடுமுறைக் கால நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மலேரியா ஒழிப்பு மருந்து தெளிப்பு

Posted: 20 Jun 2013 12:58 PM PDT

வெள்ள நிவாரண முகாம்களில் தில்லி சுகாதாரத் துறை சார்பில் மலேரியா ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரகண்டில் கிராமச்சாலை சீரமைப்புக்கு ரூ.340 கோடி

Posted: 20 Jun 2013 12:57 PM PDT

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்டில் கிராமச் சாலைகளை சீரமைக்க ரூ.340 கோடி சிறப்பு நிதியை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் ஒதுக்கி உள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை

Posted: 20 Jun 2013 12:57 PM PDT

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ. 55 லட்சம் நகை திருட்டு

Posted: 20 Jun 2013 12:57 PM PDT

தில்லி சாந்தினி சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஹரியாணாவைச் சேர்ந்த நகை வியாபாரியின் ரூ. 55 லட்சம் மதிப்பிலான நகைப் பை திருட்டுப் போனது.

எம்.ஏ. அரசியல் அறிவியல் 4-இல் மறு நுழைவுத் தேர்வு ஜாமியா மில்லியா பல்கலை. அறிவிப்பு

Posted: 20 Jun 2013 12:56 PM PDT

எம்.ஏ. அரசியல் அறிவியல் படிப்புக்கான மறு நுழைவுத் தேர்வு ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என்று ஜாமியா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்ப்பப்பையில் குட்டி சிக்கியதால் உயிரிழந்த வெள்ளைப் புலி

Posted: 20 Jun 2013 12:56 PM PDT

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்த வெள்ளைப் புலிகளில் "குஷி' என்கிற 8 வயது பெண் புலி அண்மையில் உயிரிழந்தது.  கர்ப்பப் பையில் குட்டி சிக்கியதால் அந்தப் புலி இறந்ததாகப் பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.

நிவாரண நிதி: நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

Posted: 20 Jun 2013 12:55 PM PDT

மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவிட பொதுமக்கள் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 65: தில்லி அரசு பரிசீலனை

Posted: 20 Jun 2013 12:55 PM PDT

தில்லி அரசின் கல்வித் துறையில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளின் ஓய்வு பெறும் வயதை 62-இல் இருந்து 65-ஆக உயர்த்த தில்லி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி?

Posted: 20 Jun 2013 12:55 PM PDT

ஜார்க்கண்டில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

குறைகிறது வெள்ளம்

Posted: 20 Jun 2013 12:45 PM PDT

தில்லி யமுனை ஆற்றில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம், தற்போது வடிந்து வருவதாக தில்லி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தர்ம்பால் கூறினார்.

தில்லி பல்கலை.யில் ஆன்லைன் விண்ணப்பங்கள் 3 மடங்கு உயர்வு

Posted: 20 Jun 2013 12:45 PM PDT

தில்லி பல்கலைக்கழக படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

3 நாளாக இளம்பெண் பாலியல் வன்கொடுமை

Posted: 20 Jun 2013 12:45 PM PDT

மீரட்டில் இருந்து தில்லிக்கு கணவருடன் வந்த இருபது வயது பெண்ணை அடைத்து வைத்து மூன்று தினங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக    நான்கு பேரில் இரண்டு பேரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். 

ஐ.எஸ்.பி.டி. கஷ்மீரி கேட்டில் போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்

Posted: 20 Jun 2013 12:44 PM PDT

தில்லியில் மாநில பேருந்து முனையம் (ஐ.எஸ். பி.டி.) கஷ்மீரி கேட் பகுதியை ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும் வகையில் அப்பகுதியில் மோட்டார் வாகனங்கள், பாதசாரிகள், பிற வாகனங்களின் போக்குவரத்துக்கான திட்டத்தை உருவாக்க தில்லி அரசு திட்டமிட்டு வருகிறது.

சாலைத் தடுப்பில் கார் மோதல்:இளைஞர் சாவு

Posted: 20 Jun 2013 12:44 PM PDT

யமுனா எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையின் தடுப்பில் கார் மோதியதில் தில்லியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

இன்று இதமான வெயில்: வானிலை மையம் தகவல்

Posted: 20 Jun 2013 12:43 PM PDT

தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) இதமான வெயில் இருக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை, சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் தென் மேற்குப் பருவமழை தொடங்க

150 பேருக்கு காலரா; தில்லியில் டெங்கு பீதி

Posted: 20 Jun 2013 12:43 PM PDT

தில்லியில் மழை, வெள்ளத்துக்குப் பிறகு கொசுக்களால் ஏற்படும் டெங்கு, காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

மணல் கொள்ளை: பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்

Posted: 20 Jun 2013 12:42 PM PDT

திருக்கோவிலூர் பகுதியில் தொடந்து நடைபெறும் மணல் கொள்ளையால் போதிய தண்ணீர் வசதியின்றி பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மரக்காணம் கடலோரத்தில் "ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகை

Posted: 20 Jun 2013 12:42 PM PDT

ீவிரவாத ஊடுருவலை முறியடிக்கும் விதமாக, மரக்காணம் கடலோரப் பகுதியில், "ஆபரேசன் ஆம்லா' எனும் விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகையில் வியாழக்கிழமை கடற்படையினர், கடலோர பா

நாளை அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டம்

Posted: 20 Jun 2013 12:42 PM PDT

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, வரும் 22-ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மயிலம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 20 Jun 2013 12:41 PM PDT

மயிலம் பொறியியல் கல்லூரியின், 11-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிய மேம்பாலம் அமைக்கப்படுமா?

Posted: 20 Jun 2013 12:41 PM PDT

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஆங்கில மோகம் - கிராமப் பள்ளிகள் பாதிப்பு

Posted: 20 Jun 2013 12:41 PM PDT

தெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள நிலையில் தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு தலைவர்களுக்கான பயிற்சி

Posted: 20 Jun 2013 12:41 PM PDT

கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு தலைவர்களுக்கான பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.

காங்கிரஸ் பிரமுகர் மீது நில அபகரிப்பு வழக்கு

Posted: 20 Jun 2013 12:40 PM PDT

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மீது, அவரது சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், நில அபகரிப்பு பிரிவு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

மின்வாரிய வருவாயை மேம்படுத்த ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

Posted: 20 Jun 2013 12:40 PM PDT

மின்வாரிய வருவாயை மேம்படுத்துவதற்கு, ஊழியர்களுக்கான சிறப்பு கருத்தரங்கு, உளுந்தூர்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவராஜ் தலைமை வகித்தார். உளுந்தூர்பேட்டை கோட்டப்பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார்.

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா

Posted: 20 Jun 2013 12:40 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுந்காந்தி பிறந்த நாள் விழா விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்:ரூ.22.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 20 Jun 2013 12:39 PM PDT

சின்னசேலம் தாலுக்காவுக்கு உட்பட்ட கூகையூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.22.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்தார்.

சதிசெய்யும் ஓநாய்கள்...

Posted: 20 Jun 2013 12:39 PM PDT

இங்கிலாந்தில் "உல்ரிச்' என்ற புறநகரம். மே 22-ஆம் நாள் ராணுவ சிப்பாய் ரிட்லே என்பவர், ""உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யுங்கள்'' என்ற வாசகம் தாங்கிய மேலாடை அணிந்து தெருவில் சென்று கொண்டிருந்தபோது அவரை இருவர் பட்டப்பகலில் மடக்கி, கையில் வைத்திருந்த கொடு அரிவாளால் (ரிட்லேயின்) தலையைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்தனர்.

கடலூர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

Posted: 20 Jun 2013 12:39 PM PDT

மாலை நேர சிறப்பு வகுப்பால் வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் பாதிப்படைவதாகக் கூறி கடலூர் கிருஷ்ணசாமி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

24-ல் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Posted: 20 Jun 2013 12:38 PM PDT

கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

அம்பேத்கர் சிலை உடைப்பு: விருத்தாசலத்தில் பதற்றம்

Posted: 20 Jun 2013 12:38 PM PDT

விருத்தாசலத்தில் வியாழக்கிழமை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

100 நாள் வேலை திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்க இன்று கடைசி

Posted: 20 Jun 2013 12:38 PM PDT

வங்கிக் கணக்கு துவங்காத நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 21) கணக்கு துவங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநடராஜர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9.25 லட்சம்

Posted: 20 Jun 2013 12:38 PM PDT

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஜூன் 20-ம் தேதி வியாழக்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டத்தில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இதுவரை 21 முறை உண்டியல் திறந்து

வேகம் விவேகம் அல்ல

Posted: 20 Jun 2013 12:37 PM PDT

புதுக்கோட்டை அருகே, விஜயரகுநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் மினி வேன் - தனியார் பேருந்து மோதிய விபத்தில் பலியானதற்குக் காரணம் - தனியார் பேருந்துகளின் அசுர வேகம்தான்.

கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் 6 பேர் சிக்கினர்

Posted: 20 Jun 2013 12:37 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில், ஆபரேசன் ஆம்லா என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல வந்த 6 பேர் பிடிபட்டனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்

Posted: 20 Jun 2013 12:37 PM PDT

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புத்தேரி கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம் திறப்பு

Posted: 20 Jun 2013 12:36 PM PDT

காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராமத்தில் உள்ள பள்ளியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டங்கள் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jun 2013 12:36 PM PDT

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அடிப்படை வசதிகள்  மேம்படுத்தப்படவில்லை

Posted: 20 Jun 2013 12:36 PM PDT

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கிராமத்தில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என மத்திய அரசின் இணைச்செயலரிடம் கிராம மக்கள் குற்றச்சாட்டினர்.

நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் தொடக்க விழா

Posted: 20 Jun 2013 12:35 PM PDT

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க தொடக்க விழா, செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது. கில்பர்ட் வரவேற்றார்.

நூலக வாசகர்  வட்டக் கூட்டம்

Posted: 20 Jun 2013 12:35 PM PDT

காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை ஊர்ப்புற நூலகத்தில் வியாழக்கிழமை வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.  வாசகர் வட்டத் தலைவர் ஞானபரமேஸ்வரன் தலைமை வகித்தார். ஊர்ப்புற நூலகத்தில் அதிக

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

Posted: 20 Jun 2013 12:34 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்துப் பள்ளிகளிலும் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மனுநீதி நாள் முகாம்

Posted: 20 Jun 2013 12:34 PM PDT

உத்தரமேரூர் தாலுக்கா, திருமுக்கூடல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இரு சிறப்பு எஸ்.ஐ.க்கள் சாவு

Posted: 20 Jun 2013 12:34 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் கார் மோதி உயிரிழந்தார். மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர்  மாரடைப்பால் இறந்தார்.

அட நான்தான்..!

Posted: 20 Jun 2013 12:33 PM PDT

அட நான்தான்..!

மாணவர் சிறப்பு பஸ்களில் ரெüடிகள் தாக்குதல்

Posted: 20 Jun 2013 12:32 PM PDT

புதுச்சேரி மாணவர் சிறப்பு பஸ்களுக்குள் புகுந்து 3 பேரை கத்தியால் குத்திய ரெüடி கும்பலை தமிழக போலீஸார் தேடி வருகின்றனர்.

டேராடூன் சென்ற பேராசிரியர் மாயம்

Posted: 20 Jun 2013 12:32 PM PDT

காரைக்காலில் இருந்து டேராடூன் சென்ற உதவிப் பேராசிரியரை கடந்த ஒரு வாரமாக தொடர்புகொள்ள முடியவில்லையென உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நேரடி மானியத் திட்டத்தை கண்டித்து ஆளுநர் அலுவலகம் முற்றுகை முயற்சி

Posted: 20 Jun 2013 12:31 PM PDT

புதுச்சேரியில் நேரடி மானியத் திட்டத்தைக் கண்டித்து துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 175 மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க "ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகை

Posted: 20 Jun 2013 12:31 PM PDT

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் "ஆபரேஷன் ஆம்லா' என்ற ஒத்திகையில் போலீஸார் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

ஏ.எஃப்.டி. ஆலையை திறக்க நடவடிக்கை: ஐ.என்.டி.யு.சி. வலியுறுத்தல்

Posted: 20 Jun 2013 12:31 PM PDT

: புதுச்சேரியில் மூடப்பட்ட ஏ.எஃப்.டி. ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.என்.டி.யு.சி. வலியுறுத்தியுள்ளது.

காட்சிப் பொருளான மாதிரிப் பள்ளி

Posted: 20 Jun 2013 12:30 PM PDT

திருக்கோவிலூர் அருகே திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக மாறிப்போன மாதிரிப் பள்ளியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்: முதல்வர் திறந்துவைப்பு

Posted: 20 Jun 2013 12:30 PM PDT

உளுந்தூர்பேட்டையில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமாக செயல்பட்டு வந்த அலுவலகத்தை, வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் (காணொளி காட்சி) மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

ரூபாய் கடும் வீழ்ச்சி!

Posted: 20 Jun 2013 12:30 PM PDT

ரூபாய் கடும் வீழ்ச்சி!

ரிஷிவந்தியம் தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடக்கம்

Posted: 20 Jun 2013 12:30 PM PDT

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (இந்து) ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சி.ரகுராமன் தலைமை வகித்தார். பிரிவிடையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆ

போதிய வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் தவிப்பு

Posted: 20 Jun 2013 12:29 PM PDT

திருக்கோவிலூர் அருகே விளந்தை கிராமத்தில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இன்ஜின் பழுது: ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

Posted: 20 Jun 2013 12:29 PM PDT

உளுந்தூர்பேட்டை அருகே, வியாழக்கிழமை அதிகாலை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், என்ஜின் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

மாவட்டச் சிறைச்சாலை அமைக்க ஏ.டி.ஜி.பி. ஆய்வு

Posted: 20 Jun 2013 12:28 PM PDT

விழுப்புரத்தில், மாவட்ட சிறைச்சாலை அமைப்பது குறித்து சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை: 1,500 போலீஸார் பங்கேற்பு

Posted: 20 Jun 2013 12:28 PM PDT

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒத்திகை பயிற்சியில் கடலூர் மாவட்டத்தில் 1,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

144 தடையை ரத்து செய்யக் கோரி ஏஐடியுசி மனு:தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 20 Jun 2013 12:27 PM PDT

கடலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெய்வேலி

சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

Posted: 20 Jun 2013 12:27 PM PDT

: சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மா

தனியார் பள்ளி வாகனத்தை சிறைப்பிடித்த பெற்றோர்கள்

Posted: 20 Jun 2013 12:26 PM PDT

சிதம்பரத்தில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனத்தை பெற்றோர்கள் மறித்து சிறைப்பிடித்தனர்.

63 தர்மசாலைகளை மீட்க தீர்மானம்

Posted: 20 Jun 2013 12:26 PM PDT

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு நகரில் உள்ள 63 தர்மசாலைகளை (சத்திரங்கள்) மீட்பது என தமிழ்நாடு இந்து ஆலயப்  பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு இந்து ஆலயப் பாதுகாப்பு குழுக் கூட்டம் மேலபுதுத்தெரு வேதபாராயண மடத்தில்

செஸ் போட்டி: சி.கே. கல்லூரி மாணவர் சாம்பியன்

Posted: 20 Jun 2013 12:26 PM PDT

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கடலூர் சி.கே. கல்லூரி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார். கடலூர் விடியல் ஜே.சி.ஐ. கிளை இயக்கம் மற்றும் கடலூர் மாவட்ட செஸ் அகாதெம

கடலோர கிராம மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

Posted: 20 Jun 2013 12:26 PM PDT

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பு செல்போன், கேமரா திருட்டு

Posted: 20 Jun 2013 12:25 PM PDT

ிதம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கேமராக்கள் திருடு போனது.

குடிநீர் குழாயில் துளைபோட்டு நீரை உறிஞ்சும் தனியார் உணவு விடுதிகள்!

Posted: 20 Jun 2013 12:25 PM PDT

வடலூரில் பஸ் நிலையத்தில் உணவு விடுதி வைத்துள்ள சிலர், பேரூராட்சியின் உரிய அனுமதியின்றி முறைகேடான வகையில் துளைபோட்டு தண்ணீர் உறிஞ்சும் அவலம் நடைபெற்று

பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். "அலர்ட்'

Posted: 20 Jun 2013 12:25 PM PDT

பி.இ. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்கும் வசதி இந்த ஆண்டுமுதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

வள்ளல் சின்னா சுப்புராயப்பிள்ளை நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 20 Jun 2013 12:24 PM PDT

புதுச்சேரியைச் சேர்ந்த வள்ளல் சின்னா சுப்புராயப்பிள்ளையின் 139-வது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

Posted: 20 Jun 2013 12:24 PM PDT

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தனியார் பள்ளி வாகனத்தை சிறைப்பிடித்த பெற்றோர்கள்

Posted: 20 Jun 2013 12:23 PM PDT

சிதம்பரத்தில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனத்தை பெற்றோர்கள் மறித்து சிறைப்பிடித்தனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: 27-ல் வாக்குப் பதிவு

Posted: 20 Jun 2013 12:23 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில் 6 இடங்களுக்கு ஏழு பேர் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

63 தர்மசாலைகளை மீட்க தீர்மானம்

Posted: 20 Jun 2013 12:23 PM PDT

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு நகரில் உள்ள 63 தர்மசாலைகளை (சத்திரங்கள்) மீட்பது என தமிழ்நாடு இந்து ஆலயப்  பாதுகாப்புக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

செஸ் போட்டி: சி.கே. கல்லூரி மாணவர் சாம்பியன்

Posted: 20 Jun 2013 12:23 PM PDT

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கடலூர் சி.கே. கல்லூரி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

கடலோர கிராம மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி

Posted: 20 Jun 2013 12:23 PM PDT

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மழை, வெள்ளம், புயல் மற்றும் சுனாமி போன்ற பேரிடரா

சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 20 Jun 2013 12:22 PM PDT

சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஜூன் 20) திறந்து வைத்தார். இந்த வைர விழா வளைவு ரூ.1.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பு செல்போன், கேமரா திருட்டு

Posted: 20 Jun 2013 12:22 PM PDT

சிதம்பரத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் கேமராக்கள் திருடு போனது.

மத்தி மீன் சீசன் நீடிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

Posted: 20 Jun 2013 12:22 PM PDT

காரைக்கால் பகுதியில் மத்தி மீன் சீசன் நீடித்திருப்பதால் மீனவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தத் தயார்

Posted: 20 Jun 2013 12:21 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்நிலையில் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் எம்.சி.சம்பத் கூறினார்.

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 20 Jun 2013 12:21 PM PDT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 49 பேருக்கும் ஜூலை 4 வரை சிறைக் காவலை நீட்டித்து இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளன.

கருணை இல்லங்களில் சேர முருகன் கோயில் நிர்வாகம் அழைப்பு

Posted: 20 Jun 2013 12:21 PM PDT

முருகன் கோயில் சார்பில் நடத்தப்பட்டு வரும் கருணை இல்லங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்து உயர்கல்விப் படிக்க முருகன் கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக யாத்ரிகர்கள் 41 பேர் தில்லி வந்தனர்

Posted: 20 Jun 2013 12:21 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழக யாத்ரிகர்கள் 41 பேர் வியாழக்கிழமை தில்லி வந்தடைந்தனர்.

ஆக்கிரமிப்பில் மேய்ச்சல் நிலம்

Posted: 20 Jun 2013 12:20 PM PDT

திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பில் உள்ள மேய்ச்சல் நிலத்தை மீட்டுத் தரக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

காதலியை ஏமாற்றிய இளைஞருக்கு அதே பெண்ணுடன் போலீஸ் முன் திருமணம்

Posted: 20 Jun 2013 12:19 PM PDT

இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய இளைஞரை போலீஸார் சமரசம் செய்து, அதேபெண்ணுடன் புதன்கிழமை திருமணம் செய்து வைத்தனர்.

பெண் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

Posted: 20 Jun 2013 12:19 PM PDT

புழல் சிறைக்கு கொண்டுவரப்பட்ட பெண் கைதிகளிடம் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேம்புலி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

Posted: 20 Jun 2013 12:18 PM PDT

திருவள்ளூரில் உள்ள பிரசித்திபெற்ற வேம்புலி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சரக்கு ஆட்டோ-வேன் மோதல்: 6 பேர் காயம்

Posted: 20 Jun 2013 12:18 PM PDT

திருத்தணி அருகே புதன்கிழமை, சரக்கு ஆட்டோவும், வேனும் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர்.

கார் மோதி முதியவர் சாவு: டிரைவருக்கு 6 மாதம் சிறை

Posted: 20 Jun 2013 12:18 PM PDT

திருவள்ளூர் அருகே, கார் மோதி முதியவர் உயிரிழந்த வழக்கில், காரின் டிரைவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1.35 லட்சம் திருட்டு

Posted: 20 Jun 2013 12:17 PM PDT

செங்குன்றம் காவல்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து ரூ.1.35 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். செங்குன்றம், அலமாதி அண்ணா தெருவில் வசிப்பவர் நேசமணி (45). ரியல் எஸ்

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்

Posted: 20 Jun 2013 12:17 PM PDT

கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறவுள்ளது.

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 20 Jun 2013 12:17 PM PDT

திருவள்ளூர் மாவட்ட  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்  கூட்டம், வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறவுள்ளது. காலை பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகிக்கிறார்.

பொறுப்பேற்பு

Posted: 20 Jun 2013 12:16 PM PDT

சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட புழல் சரகம், செங்குன்றம் காவல்நிலையத்தில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக என்.கருணாகரன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு:ஆட்சியர் தகவல்

Posted: 20 Jun 2013 12:16 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாராட்டு விழா

Posted: 20 Jun 2013 12:16 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டக் குழு சார்பில் திரைப்படக் கலைஞர் ராமுவுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

ராஜா பய்யாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை

Posted: 20 Jun 2013 12:15 PM PDT

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் ராஜா பய்யாவிடம் சிபிஐ வியாழக்கிழமை உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டது.

காரில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted: 20 Jun 2013 12:15 PM PDT

தேனியில் காரில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ கஞ்சா மூட்டைகளை வியாழக்கிழமை போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸார் பறிமுதல் செய்து, கார் ஓட்டுநரையும் கைது செய்தனர்.

போடி மெட்டு சாலையில் போக்குவரத்து நிறுத்தம்: கம்பம் மெட்டு சாலை மாற்றுப் பாதை

Posted: 20 Jun 2013 12:15 PM PDT

போடி முந்தல் முதல் போடிமெட்டு வரையுள்ள சாலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், 3 மாதம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதற்குப் பதிலாக மூணாறு செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவித்துள்ளார்.

சோலார் மோசடி: கேரள சட்டப் பேரவையில் கடும் அமளி

Posted: 20 Jun 2013 12:15 PM PDT

சோலார் மோசடி விவகாரம் தொடர்பாக கேரள சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. கோஷங்களுக்கு இடையில் உறுப்பினர் ஒருவரை தாக்க முயற்சி நடந்தது.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா

Posted: 20 Jun 2013 12:14 PM PDT

ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™