மக்களின் குரல் |
- ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
- இரு உயர் கல்வி அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டி
- வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக விசனம்
- போலி பட்டங்களை வழங்கி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
- களுவாஞ்சிக்குடி - பெரியபோரதீவில் பொலிஸார் மீது தாக்குதல்
- தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் அரசியல் கட்சி பொதுச் செயலாளர்களுக்கும் இடையே சந்திப்பு
- நானே மீண்டும் மாகாண சபை உறுப்பினர்
- த.ம.வி.பு கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடல்
- குளத்தில் நீராடிய இளைஞர் மரணம்
- 11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் தலைமறைவு
- கத்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்
- மரப்பாலம் இராஜபுரம் கிராமத்தில் மக்களின் தேவைகள் குறித்த விசேட கலந்துரையாடல்
- தேர்தலுக்காவே தங்களையும் கொள்கையையும் மாற்றும் கூட்டமைப்பு – முன்னாள் முதலமைச்சர்
- முடிந்தால் ஜனநாயகப் போராளிகள் எனும் பெயரில் கிழக்கில் கால் வைக்கும் யாழ் மேலாதிக்க வாதிகள் வரட்டும் மோகன் சவால்
- கணபதி கிராமத்தில் பொதுக்கட்டிட திறப்பு விழா
| ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் Posted: 03 Jul 2012 12:56 PM PDT (SUKEN) ஆரையம்பதி அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி பேராலய புனராவர்த்தன நவகுண்ட பட்ஷ அஷ்ட பந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் -நந்தன வருஷம் -2012 ... கர்மாரம்பம் 2012.06.30 (சனிக்கிழமை) எண்ணெய்க்காப்பு 2012.07.04 (புதன்கிழமை) மகாகும்பாபிஷேகம் 2012.07.05(வியாழக்கிழமை) 1008 சகஸ்ரசத சங்காபிஷேகம் 2012.08.19(ஞாயிற்றுக்கிழமை)நடை பெறும். | ||
| இரு உயர் கல்வி அதிகாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டி Posted: 03 Jul 2012 12:27 PM PDT நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடுவதற்கு இரண்டு உயர் கல்வி அதிகாரிகளின் பெயர்களை பலர் பரிந்துரைத்துள்ளதாக கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு தொகுதிகளுக்கே இருவரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது. | ||
| வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக விசனம் Posted: 03 Jul 2012 12:22 PM PDT அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழ்கப்பட்ட வேலை வாய்ப்பு தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கின்றனர். சில பிரதேச செயலகங்களிலே வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் உள்வாரி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். | ||
| போலி பட்டங்களை வழங்கி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது Posted: 03 Jul 2012 12:13 PM PDT போலியான முறையில் முக்கிய பிரமுகர்களின் கையெழுத்துக்களை இட்டு பெறுமதியான பட்டங்ளை பல்வேறு அமைப்புகளின் பெயரில் வழங்கி இலட்சக்கணக்கில் பணம் பெற்றுவந்த குற்றச்சாட்டில் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்துள்ளதாக அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார். காலியை சேர்ந்த குறித்த நபர் பயணம் செய்த காரிலிருந்து சமஸ்த லங்கா சம்மான உபாதி சரசவிய – சமஸ்த லங்கா நெண குண பதனம என்ற அமைப்பின் பெயரில் அரச இலட்சினை பொறிக்கப்பட்ட 300 போலியான நற்சாட்சிப்பத்திரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பு 'மங்களராம ரஜ மஹா விகாரையின் விகாராதிபதியும் மட்டக்களப்பு – அம்பாறை வட்ட பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமணரத்ன தேரரிடம் நற்சாட்சிப்பத்திரங்களில் கையெழுத்து பெற இன்று காலை வந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். | ||
| களுவாஞ்சிக்குடி - பெரியபோரதீவில் பொலிஸார் மீது தாக்குதல் Posted: 03 Jul 2012 12:07 PM PDT மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி - பெரியபோரதீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டை சிலர் தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன் பொலிஸார் மீது தாக்குதலும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரியபோரதீவு - பழுகாமம் வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சிவிலுடையில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக சென்றவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சிவிலுடையில் வந்து இவர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் தவறான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்களுக்கு பல்வேறு தடவைகள் எச்சரிக்கை விடுத்த நிலையில் சில இளைஞர்கள் அவர்களின் நடவடிக்கையினை பொறுக்க முடியாமல் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | ||
| தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் அரசியல் கட்சி பொதுச் செயலாளர்களுக்கும் இடையே சந்திப்பு Posted: 03 Jul 2012 12:05 PM PDT அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு தேர்தல்கள் செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடவே தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தினால் இச்சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தல் நடைபெறவுள்ள மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். | ||
| நானே மீண்டும் மாகாண சபை உறுப்பினர் Posted: 03 Jul 2012 11:41 AM PDT எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் சார்பில் அவரின் ஆதரவுடன் நானே போட்டியிடுவேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீதிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் சார்பில் அவரின் ஆதரவுடன் நானே போட்டியிடுவேன் எனவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மேலும் தெரிவித்தார். நன்றி- காத்தான்குடி இன்போ | ||
| த.ம.வி.பு கட்சியின் உயர்மட்ட கலந்துரையாடல் Posted: 03 Jul 2012 11:37 AM PDT எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட இருக்கின்ற நிலையில், வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும், தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாகவும், கட்சியின் கிராமிய அமைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உயர்மட்ட உறுப்பினர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய விஷேட கலந்துரையாடல் எதிர்வரும் 04ஆம் திகதி கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைப் பணியகத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 07 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் அதிக ஆசனங்களைப் பெற்றதன் விளைவாக முதலமைச்சர் பதவியையும், அதனுடன் இணைந்த விவசாயம், மீன்பிடி அமைச்சினையும் பெற்று மக்கள் எந்த நோக்கத்திற்காக வாக்களித்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருந்தது. இம் முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உயர் மட்டக் கலந்துரையாடலின்படி மக்களின் ஆணையுடன் சந்திரகாந்தனுக்கே மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் உறுதியாக உள்ளது. இம் முறை அதிகமான வேட்பாளர்கள் கட்சியில் இணைந்து தேர்தல் கேட்க விருப்பம் தெரிவித்த நிலையில், மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிகளில் இரு உயர்மட்ட கல்வி அதிகாரிகளைக் களம் இறக்குவதற்கும் கட்சியில் முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கும், கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காகத் பாடுபடுவதற்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ந்தும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். | ||
| குளத்தில் நீராடிய இளைஞர் மரணம் Posted: 03 Jul 2012 11:33 AM PDT சிகிரியா பகுதியிலுள்ள குளமொன்றில் நண்பர்களுடன் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. இவரது சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பொலிஸாரினால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிகிரியாப் பகுதியில் தொழில் புரிவதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இவர் அங்கு சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். | ||
| 11 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் தலைமறைவு Posted: 03 Jul 2012 11:30 AM PDT மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரை நள்ளிரவில் வீதியில் விட்டுச்சென்ற ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வருகின்றனர். மேற்படி சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தையின் பாதுகாப்பில் மேற்படி சிறுமியும் அவரது 6 வயதான சகோதரர் ஒருவரும் இருந்துவந்துள்ளனர்.கடந்த 29ஆம் திகதி மேற்படி சிறுமியின் தந்தை தனது தந்தையின் மரணச்செய்தி கேட்ட நிலையில், இரு சிறார்களையும் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மரண வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் அன்றையதினம் இரவு 10 மணிக்கு வந்த மேற்படி சந்தேக நபர், மரண வீட்டிற்கு தான் செல்வதாகவும் இரு சிறார்களையும்; தந்தையிடம் அழைத்துச் செல்வதாகவும் கூறி இரு சிறார்களையும் அழைத்துச் சென்றுள்ளதாகவும் வழியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பின்புறத்தில் மேற்படி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு இவர்களை வீதியில் வி;ட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறுநாள் அதிகாலை வீட்டைச் சென்றடைந்த மேற்படி சிறுவர்கள், நடந்தவற்றை உறவினரிடம் கூறியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.கே.கே.குணசேகரவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பெண்கள் உபபொலிஸ் பரிசோதகர் பிரியதர்சினி திஸாநாயக்க தலைமையில் சார்ஜன் சபேசன், பொலிஸ் கொஸ்தா மனோகரன் ஆகியோர் இணைந்து தலைமறைவான சந்தேக நபரை தேடி வருகின்றனர். | ||
| கத்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம் Posted: 03 Jul 2012 11:26 AM PDT
கத்தோலிக்க திருச்சபையின் புதிய மறைமாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பரினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் மட்டக்களப்பு புதிய மறைமாவட்டம் வத்திக்கான் நேரப்படி செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு (இலங்கை நேரம் பிற்பகல் 3.30 மணி) வத்திக்கான் திருக்கூடத்தில் பரிசுத்த பாப்பரசர் 16ம் ஆசீர்வாதப்பரினால் பிரகடனம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக மட்டக்களப்பு – அம்பாறை கத்தோலிக்க மக்களாலும் துறவற சபைகளாலும் இலங்கைத் திருச்சபையினூடாக பாப்பரசருக்கு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையின் பயனாகவே இப்புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதாக மட்டக்களப்பிலுள்ள கத்தோலிக்க அருட்தந்தையொருவர் தெரிவித்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் திருகோணமலை மறைமாவட்டம் தனியாகவும் மட்டக்களப்பு மறைமாவட்டம் தனியாகவும் நிர்வாக ரீதியாக இயங்கவுள்ளதுடன் திருகோணமலையின் ஆயராக அதி வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையினாலும் மட்டக்களப்பு மறைமாநிலத்தின் முதல் ஆயராக அதி வணக்கத்திற்குரிய பொன்னையா ஜோசப் ஆண்டகையும் இறைபணிபுரிவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வறிவிப்பு வெளியானதும் வழக்கப்படி பங்கு ஆலயங்கள் அனைத்திலும் மணி ஒலிக்கப்பட்டது. | ||
| மரப்பாலம் இராஜபுரம் கிராமத்தில் மக்களின் தேவைகள் குறித்த விசேட கலந்துரையாடல் Posted: 03 Jul 2012 11:24 AM PDT மரப்பாலம், சின்னபுல்லுமலை ,கோப்பாவெளி மற்றும் இராஜாபுரம்; கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் விசேட கூட்டம் (30.06.2012) இராஜபுரம் விஸ்ணு ஆலய முன்றலில் இடம்பெற்றது. கிராம தலைவர்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலே குறித்த கிராமங்களின் உடனடித் தேவைகள் ஆராயப்பட்துடன் அவர்களது அத்தியாவசிய தேவையாக வீடுகள் காணப்படுகின்றன. மற்றும் குடிநீர் பிரச்சினையும் முதன்மை பெறுகின்றன. குறித்த பிரச்சினைகள் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் தெரிவிக்கப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை தான் உடன் மேற்கொள்வதாக உறுதியளித்தார். இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகனும் கலந்து கொண்டார். | ||
| தேர்தலுக்காவே தங்களையும் கொள்கையையும் மாற்றும் கூட்டமைப்பு – முன்னாள் முதலமைச்சர் Posted: 03 Jul 2012 11:20 AM PDT இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக எதனையுமே செய்யாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போதுதான் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து சிந்திக்கிறார்களாம். இதனைக் கேட்டால் குழந்தப் பிள்ளைக்கும் சிரிப்பு வரும். ஏன் என்றால் தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தபட உள்ள நிலையில், தங்களது கொள்ளைகளுக்கும் அப்பால். அதாவது வடகிழக்கு இணைந்த தனித் தமிழ் ஈழமே எங்களது உயிர் மூச்சு என்று எழுபது ஆண்டுகாலம் வங்குரோத்து அரசியல் நடாத்திய யாழ்மேலாதிக்க வாதிகளை முழுமையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர் ; தற்போது தங்களது கொள்கை கோத்திரங்கள் எல்லாம் தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக ; கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடப் போகின்றார்களாம். இவர்கள் இப்படித்தான் காலங்காலமாக தேர்தல்களுக்காக தங்களது கொள்கைகளை மாற்றி மாற்றி வாக்கு கேட்டு அரியாசனம் ஏறுவார்கள். பின்னர் மக்களுக்காக எதனையுமே செய்ய மாட்டார்கள.; இப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் மக்கள் வாக்களிக்கத்தான் வேண்டுமா? என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (30.06.2012) ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் எஸ். உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்ற கரடியனாறு கலாச்சார மண்டபத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இரு நாடுகள் இணைந்து சர்வதேச ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையப் பெற்ற மாகாண சபை முறைமையானது, உண்மையிலே 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்கள் பட்டதுயர்களை எல்லாம் ஓர் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்ப்தற்கான ஓர் முறைமையை கொண்டமைந்ததாகவே இம் மாகாண சபை முறைறைமை அமையப் பெற்றது. மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டபோது அதனை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றே இருக்க வேண்டும். காரணம் தமிழ் மக்களுக்கான ஓர் அதிகாரப் பகிர்வு விடயம் காலத்தின் கட்டாயம். அதன் ஆரம்பப் புள்ளிதான் மாகாண சபை. இதனை அப்போதைய விடுதலைப் புலிகள் ஏன் தமிழ் அரசியல் தலைவர்கள் கூட ஏற்க மறுத்தார்கள். ஆனால் 1988 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் சார்பில் வடகிழக்கிணைந்த மாகாண சபையை வரதராஜபெருமாள் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற விடயம் வரவேற்கத்தக்கதொன்றாக இருந்தாலும்கூட, இடைநடுவே அதாவது சுமார் 18 மாதங்கள் மாத்திரமே ஆட்சி செலுத்தி விட்டு பின்னர் தமிழீழத்தை பிரகடனஞ் செய்து விட்டு அவர் ஓடிவிட்டார். இவ்வாறாக முழுக்க முழுக்க தமிழ் மக்களுக்கென்றே கொண்டுவரப்பட்ட இம் மாகாண சபையினை பின்னர் யாருமே ஏற்கத்தயாராக இருக்கவில்லை. இந்த சந்தர்ப்த்தில்தான் 2008 ம் ஆண்டு கிழக்கிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கிழக்கு மக்களுக்கான தனிக் கட்சி ஒன்று உதயமாகி அதனூடாக தேர்தல் இடம்பெற்று கிழக்கு மாகாண சபையினை நாங்கள் கைப்பற்றினோம். உண்மையில் ஜனநாயகம் சார்ந்த ஓர் அரசியல் கட்சியின் மக்கள் தலைவர்கள் என்றால் தான் சார்நத சமூகத்திற்கு தங்களது அரசியல் பின்புலத்தால் ஆகக் கூடியதாக எதை பெற்றக் கொடுக்க முடியுமோ அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சமார் 70 வருட கால தமிழர் அரசியல் வரலாற்றிலே இவைகள் நடந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் நான் 4 வருடம் கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்று சீராக ஓர் ஜனநாக ஆட்சி முறையினை ஏற்படுத்தியதன் விளைவாக தற்புபாத அனைவருக்கும் முதலமைச்சர் பதவியின் மேல் மோகம் ஏற்பட்டு விட்டது. அதாவது எது வேண்டாம் அது தங்களது கொள்கைக்கு முரணானது என சர்வதேச ரீதியல் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்களோ அதே மாகாண சபை முறைமையயை ஏற்று இன்று தேர்தலிலே குதிக்க கங்கணம் கட்டுகிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். பாருங்கள் மக்களே! 1970 ம் ஆண்டு தேர்தலிலே தங்களது சொந்த தொகுதிகளிலே அப்போதைய தமிழ் தேசிய வாதிகள் என தங்களை பறைசாற்றிய அமிர்தலிங்கம் , ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தோற்றதன் வெளிப்பாடுதான் 1976 ஆண்டு கொண்டவரப்பட்ட தமிழீழப் பிரகடணம். உண்மையில் இப் பிரகடணம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் 1977ம் ஆண்டு தேர்தலிலே தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதாகும். ஆனால் அப்போது அவர்கள் வெற்றி பெற்றார்கள். அதனடிப்படைடயில் தற்போது அவர்கள் அவ்வாறே சிந்திக்கிறார்கள். அன்று அதனை மக்கள் முடட்டாள்தனமாக ஏற்றுக் கொண்டார்கள். காரணம் அவர்களுக்கு அரசியலின் யதார்த்தத்தை சொல்லிக் கெதாடுக்க யாரும் இருக்க வில்லை. அதற்கான ஓர் தேவையும் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்போது அந்த அரசியல் தெளிவை விசேடமாக கிழக்கு மக்களுக்கு சொல்ல எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது. கிழக்கு பற்றி சிந்திப்தற்கு மக்களுக்கு சுய அறிவும் அதற்கான தலைமையும் அவர்களிடத்தில் இருக்கிறது. எனவே 1976 ம் ஆண்டு போல் தற்போது எமது கிழக்கு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது . அதற்கு எமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது. கிழக்கின் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம். அன்றிருந்த காலம் வேறு இன்றைய காலம் வேறு. எனவே மக்களே இந்த காலத்திற்கு காலம் கொள்கைகளை மாற்றுகின்ற இந்த கூட்டமைப்பினர்க்கு தகுந்த பாடத்தினை கிழக்கு மக்கள் புகட்ட வேண்டும் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார். உண்மையில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு தேர்தலிலே போட்டியிடுவதன் உள் நோக்கம் கிழக்கிலே தமிழ்மகன் அதுவும் இந்த சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராக வரக் கூடாது என்பதே அவர்களது இமாலய இலக்கும் கூட. அதனை எமது மக்கள் புரிந்து கொண்டு எமது கிழக்கை எம்மவரே ஆள நீங்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். அதற்கான சந்தர்பப்ம் ஒவ்வொரு கிழக்கு தமிழ் மக்களின் கைகளிலே காலம் தந்திருக்கிறது. அதனை சரியாக எம் மக்கள் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க. மோகன், கரடியனாறு பெரும்போக உத்தியோகஸ்த்தர் வீமன், மற்றும் கரடியனாறு மகா வித்தியாலயத்தின் அதிபர் செந்தில்நாதன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். | ||
| Posted: 03 Jul 2012 11:17 AM PDT அறிக்கை விடும் ஜனநாயகப் போராளிகள் முடியுமாகவிருந்தால் மட்டக்களப்புக்கு வந்து தமது பிரசாரங்களை மேற்கொள்ளட்டும். அவ்வாறானவர்களை மக்களே விரட்டியடிப்பார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை செங்கலடியில் நடைபெற்ற கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்இ 'அண்மையில் கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெறுமாகவிருந்தால் வவுனியாவில் உள்ள ஜனநாயகப் போராளிகள் வருவார்கள் என்ற செய்தி ஒன்றைப்பார்த்தேன். பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன. அந்த வகையில் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறான நிலையில் வவுனியா பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் போன்ற சிலர் அறிக்கைகளை விடுபவர்களாக மாறியிருக்கிறார்கள். முடியுமாகவிருந்தால் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகைதரட்டும். வெள்ளத்தால் நாங்கள் கஷ்டப்பட்டோம்இ எல்லைக்கிராமங்களில் நமது மக்களைப் பாதுகாக்கப் பாடுபட்டோம்இ தமிழர்களின் காணிகளில் பள்ளிவாசல்கள் அமைக்கப்படும்போது அதனை எதிர்த்து நிற்கிறோம். இதுபோன்ற வேளைகளில் எல்லாம் வராத ஜனநாயகப்; போராளிகள் தேர்தல் வருகிறது என்றவுடன் மாத்திரம் வருகிறார்கள். இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. எவ்வளவு இரத்தத்தைச் சிந்தினோம். எவ்வளவு இன்னல்களைச்சந்தித்தோம். ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் வருகை தருகிறார்களாம். நாங்கள் மக்கள் போராளிகள். முடியுமாகவிருந்தால் எங்களது மண்ணில் கால் வைத்துப்பார்க்கட்டும். அவ்வாறு யாராவது வருவார்களாக இருந்தால் மக்களே விரட்டியடிப்பார்கள். இந்நிகழ்வில்இ கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்இ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா கலந்து கொண்டனர். | ||
| கணபதி கிராமத்தில் பொதுக்கட்டிட திறப்பு விழா Posted: 03 Jul 2012 11:15 AM PDT மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கணபதி கிராமத்தில் அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. கிராமத்துக்கொரு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜாவின் நிதியொதுக்கீட்டில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டது. இக்கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும்; சிறப்பு அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜாவும் கலந்துகொண்டனர். |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























