Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


கிழக்கில் இன்னும் ஆயுதக்குழுக்கள்: இராணுவப் புலனாய்வுப் பிரிவு

Posted: 02 Jul 2012 12:48 AM PDT

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பல ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாக இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆயுதக்குழுக்களில் சுமார் 150 பேர் உள்ளதாகவும், இதில் சுமார் 90 முஸ்லிம்களை கொண்ட பிரிவு ஒன்று செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த சிலர் தனித்து ஆயுதக்குழுவாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் கிழக்கு மகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய ஒரு பிரிவினர் கருணா தலைமையில் ஆயுதக்குழுவாக செயற்பட்டு வருகின்றனர் என்று இலங்கையின் இராணுவ புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல்களின்படி பல முஸ்லிம் குழுக்கள் ஆயுதங்களை கொண்டுள்ள போதும் அவை பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு பலத்தை கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னத்து ‘துன்பம் விளைவிக்கும் செயல்’ என்ற தீர்ப்பால் ஜெர்மனியில் சர்ச்சை

Posted: 02 Jul 2012 12:43 AM PDT

முஸ்லிம் மற்றும் யூத ஆண் பிள்ளைகளுக்கு மதரீதியில் செய்யப்படுகின்ற சுன்னத்து தொடர்பில், ஜேர்மனியின் நீதிமன்றம் ஒன்று அண்மையில் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜேர்மனியின் கொலோன் நகரில் 4 வயது முஸ்லிம் பையன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் சுன்னத்து செய்து வைத்துள்ளனர்.

ஆனால் அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவனுக்கு தொடர்ந்து ரத்தம் வரவே, பெற்றோர் அவனை மருத்துவமனை கொண்டு சென்றனர்.

இதனையடுத்து சட்ட நடவடிக்கை அதிகாரிகள் அந்த மருத்துவர் மீது கிரிமினல் வழக்கை தொடுத்தனர், ஆனால் மருத்துவரை நீதிமன்றம் விடுவித்தது.

மேலும் ஒப்புதல் வழங்கக்கூடிய வயது வராத ஒரு பிள்ளைக்கு மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது அப்பிள்ளைக்கு உடல் ரீதியான துன்பத்தை ஏற்படுத்துகிற செயலாகும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனவே குழந்தைகளுக்கு பெற்றோர்கள், தங்களது விருப்பப்படி சுன்னத்து செய்து வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுமார் நாற்பது லட்சம் முஸ்லிம்களும், ஒன்றரை லட்சம் யூதர்களும் வாழும் நாடு ஜேர்மனி.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மக்களுடைய மத சுதந்திரத்துக்கு எதிரான ஒரு தாக்குதல் என ஜேர்மனியின் முஸ்லிம் மற்றும் யூத சமூகங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு தடை அல்ல என்றும், பிள்ளைக்கு ஒப்புதல் வழங்குவதற்குரிய வயதுவரும் வரை பெற்றோர் காத்திருக்க வேண்டும் என்பதாகத் தான் தற்போதைய தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் சட்ட நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் பெர்லின் நகரின் யூத மருத்துவமனை சட்டம் என்ன சொல்கிறது என்ற தெளிவு ஏற்படாதவரை, தாங்கள் செய்யக்கூடிய சுன்னத்துகளை இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே கூறுகையில், மக்களின் மத ரீதியான உரிமைகளுக்கும் மரபுகளுக்கும் மதிப்பளிக்கிற ஒரு தேசம் ஜேர்மனி என்று தெரிவித்துள்ளார்.

திருப்தி இல்லையே... சீனப் பெண்களின் 'செக்ஸ்' புலம்பல்!

Posted: 02 Jul 2012 12:31 AM PDT

சீனாவில் 70 சதவிகிதம் பேர் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. வேலைப்பளுவினால் ஏற்படும் மனஅழுத்தம், மனதில் நிம்மதியின்மை போன்றவையே அவர்களால் தாம்பத்ய உறவில் முழுமையாக ஈடுபடமுடியாமல் போவது தெரியவந்துள்ளது.
திருமணமான தம்பதியர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும்.

சீனாவில் 70 சதவிகிதம் பேரின் வாழ்க்கை அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறதாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.

பல துறைகளில் நாட்டம் செலுத்தி, முன்னேறி வரும் சீனார்கள் செக்ஸ் விஷயத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். மேற்கத்திய நாடுகளை விட சீனாவில் உள்ளவர்கள்தான் செக்ஸில் அதிகம் ஈடுபடுகின்றனராம். அதனால் தான் அங்கு ஜனத்தொகையும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஆனாலும், நீடித்த செக்ஸ் வாழ்க்கையில் சீனர்களுக்கு குறை இருக்கிறது என்பது இப்போது தான் மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.

செக்சை பொறுத்தவரை, சீனப்பெண்களில் பெரும்பாலோருக்கு தங்கள் கணவர்களால் செக்ஸ் பிரச்னை இருக்கிறது. போதுமான அளவில் திருப்தி இல்லாமல் தான் திருமண வாழ்க்கையில் தாம்பத்ய உறவை அனுபவிக்கின்றனர். சீன மருத்துவ சங்கமும், சீன செக்ஸ் அறிவியல் கழகமும் இணைந்து சமீபத்தில் வித்தியாசமான சர்வே எடுத்தது.

அதில், சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்வே எடுத்ததில் 54.2 சதவீதம் பெண்களுக்கு, திருமணத்துக்குப் பின்னர் செக்ஸ் என்பது பெரிதும் முக்கியமான விஷயம் என்று தெரிகிறது. அது நிச்சயம், முழுமையாக தேவை என்றும் கருதுகின்றனர். அதில் 25 சதவீதம் பேர், தங்கள் கணவனால் தங்களுக்கு முழு செக்ஸ் திருப்தி தர முடியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.

பழங்கால சீனாவை பொறுத்தவரை, ரொம்பவும் கட்டுப்பட்டவர்களாக பெண்கள் இருந்துள்ளனர். செக்ஸ் விஷயத்தில் கூட, அதிக அளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்துள்ளனர். இப்போது சீனப் பெண்களின் செக்ஸ் தாகம் அதிகரித்துள்ளதாக சர்வே தெரிவிக்கிறது. அவர்களின் செக்ஸ் தாகத்தை தீர்க்கும் அளவுக்கு பெரும்பாலான சீன ஆண்களால் முடியவில்லை என்று கூறுகிறது.

சீனப் பெண்கள் இப்படி வெளிப்படையாக செக்ஸ் விஷயத்தில் இருப்பதும் அவர்களை திகைப்படையச் செய்துள்ளது. செக்ஸ் விஷயத்தில் உரிய அணுகுமுறைகளை கையாள, கணவன்மார்களுக்கு ஆலோசனையும் கூறலாம் என்றும் செக்ஸ் மருத்துவக் கழகம் யோசித்து வருகிறது. இது பற்றி சீன செக்ஸ் மருத்துவ கழகம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது.

இன்னும் சில மாதங்களில் அதிக அளவில் சர்வே எடுத்து, சீன தம்பதிகளின் பிரச்னைகளை போக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பு இருக்கும் நிலையில், சீனர்கள் மனப்போக்கு மாறியிருக்கும் அளவுக்கு, அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பது என்பது மருத்துவ உலகில் புது எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Topics:romance tips, kamasutra, காமசூத்ரா, ரொமான்ஸ் டிப்ஸ்

இதயம் ஒட்டிபிறந்த குழந்தைகள் பிரிந்து சாதனை! (படங்கள் உள்ளே)

Posted: 02 Jul 2012 12:30 AM PDT

அண்மையில் இந்தியாவில் இதயம் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளை மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார்கள். ஆராதனா மற்றும் யாதவ் என்கின்ற 11 மாதங்களே ஆன இந்த இரட்டைப்பிறவிகளுக்கு மேற்படி மருத்துவ ஆபரேசன் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த 23 டாக்டர்களுடன் 11 நேர்சுகளும் சேர்ந்து இயதம் ஒட்டிய நிலையில் இருந்த இந்த குழந்தைகளை சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகண்டுள்ளார்கள்.





சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த இரட்டைக்குழந்தைகளின் ஆபரேசன் செலவுக்காக அரசும் உதவி செய்தாக கூறப்படுகிறது. இக்காலகட்டத்தில் சாதரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளையே குப்பைத்தொட்டியில் வீசி எறியும் பெற்றோர்களுக்கு மத்தியில் இதயம் ஒட்டிப்பிறந்தும் உயிர் பிழைக்குமா இல்லையா என்ற அச்சத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்காக மிகவும் சிரமப்பட்டு நம்பிக்கையுடன் மருத்துவம் செய்த பெற்றோரை பாராட்டிதான் ஆகவேண்டும்.

ஒரே இரவில் 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவில்!

Posted: 02 Jul 2012 12:28 AM PDT

வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்க இலங்கை அரசு முயற்சி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

"உதாரணத்துக்கு, முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கீழ் இருந்த வெலிஓயா பகுதி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரவுடன் இணைக்கப்பட்டது.

தமிழில் நாங்கள் அதை மணலாறு என்றே அழைக்கிறோம். அங்கு 9000 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

தற்போது ஒரே இரவில் மணலாறு பிரதேசத்தில் உள்ள 9000 சிங்களவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம் இந்த மாவட்டத்தின் இனப்பரம்பல் முற்றாகவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வவுனியாவிலும் நிகழ்ந்துள்ளது. முன்னர் தமிழர்களால் நெற்செய்கை பண்ணப்பட்ட பகுதியில் தற்போது 600 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கின் சனத்தொகை கணிசமாக குறைந்து விட்டது. போரில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர்.

இந்தநிலையில் இது முக்கியமான விவகாரம்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வகுப்பறைக்குள் மாணவியுடன் மாணவன் சில்மிசம்.! (வீடியோ உள்ளே)

Posted: 01 Jul 2012 12:14 PM PDT

பொதுவாக கல்லூரி வாழ்கை என்றாலே சேட்டைகளும் சில்மிசங்களும் மாணவர்கள் மத்தியில் நிரம்பியே இருக்கும். இவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. இப்படிதான் இங்கேயும் நடக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்த மாணவர்களும் மாணவிகளும் அமைதியாக அமர்ந்து கவனிக்கிறார்கள். அதில் ஒருவன் மாத்திரம் முன்னால் உள்ள பெண்ணின் கூந்தலை சீண்டி பார்க்கிறான். இதனை தொடர்ந்து அவதானித்த ஆசிரியர் சற்றும் எதிர்பாராத விதமாக போட்டாரே ஒரு போடு.... ஆஹா.... நீங்களும் பாருங்கள் இந்த நகச்சுவை காணொளியை...


இரவில் வேட்டையாடும் புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

Posted: 01 Jul 2012 11:56 AM PDT

இந்தியாவில் இதுவரை கண்டறியப்படாத 12 புதிய வகை தவளையினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தவிர அழிந்துவிட்டதாக கருதப்பட்டு வந்த வேறு 3 தவளையினங்களையும் இவர்கள் மறுபடியும் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தவளையினங்கள் மிகவும் அரிதானவை என தவளை ஆராய்ச்சிக்கு தலைமையேற்றிருந்த விஞ்ஞானி சத்யபாமா பிஜு கூறினார்.

பூனை போல மியோவ் என்று ஒலியெழுப்பக்கூடிய இரவில் வேட்டையாடும் தவளையினம், ஒரு கிரிக்கெட் பந்து அளவுக்கு வளரக்கூடிய கேரளத்தின் வயநாடு பகுதியில் காணப்படும் இரவில் வேட்டையாடும் தவளையினம் உள்ளிட்டவை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தவளையினங்களில் அடங்கும். ஸுடாக்ஸா என்ற சர்வதேச அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

குழந்தை பிறந்த உடனே செக்ஸ் வேண்டாமே! : அட்வைஸ் ரிப்போர்ட்

Posted: 01 Jul 2012 11:48 AM PDT

புதிதாய் திருமணமானவர்களுக்கு பெற்றோர் புரமோஷன் கிடைத்து விட்டால் சந்தோசம்தான். அப்புறம் அவர்களின் கதி அதோ கதிதான் ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று கூறி பத்து மாதங்கள் பட்டினி கிடக்க வைத்து விடுவார்கள். இதில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழித்துக்கொண்டிருப்பவர்கள் ஆண்கள்தான்.

எப்படா குழந்தை பிறக்கும் என்று காத்திருந்து குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே உறவுக்காக மனைவியை கட்டாயப்படுத்துவர்களும் உண்டு. அவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை. குழந்தை பிறந்த சில வாரங்களில் தாம்பத்ய உறவு கொண்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பேறு காலம் முடிந்த உடன் பிறந்த குழந்தையை பாதுகாப்பாக கவனிக்க வேண்டும். குழந்தையை அருகில் படுக்கவைத்துக்கொண்டு தம்பதியர் உறவில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைக்கு தொற்றுநோய் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

குழந்தை பிறந்த சில வாரங்களில் உறவில் ஈடுபடுபவர்கள் நீண்ட நேரத்தை செலவழிக்க கூடாதாம். இதனால் தேவையற்ற சக்தி வீணாகுமாம். குழந்தை பேறினால் மனைவிக்கு உறுப்பில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே காயம் ஆறுவதற்கு முன்பாக உறவில் ஈடுபடுவதால் நோய் தொற்று ஏற்படுமாம்.
பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதற்காக மார்புகளில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்திருக்கும்.

எனவே அவசர உறவு மார்பகங்களில் காயங்களையும், பாதிப்பினையும் ஏற்படுத்தும் என்கின்றனர். இதனால் பிறந்த குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படுமாம். குழந்தை பிறப்பிற்கு முந்தைய சில மாதங்கள் வரை தம்பதியர் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் பிறப்புறுப்புக்களின் மூலம் நோய் தொற்று எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். அதுபோல குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை தம்பதியர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதை தள்ளிப்போடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Tags: romance tips, kamasutra, ரொமான்ஸ் டிப்ஸ், காமசூத்ரா

ஆதி மனிதன் இங்கிலாந்தில் தோன்றினான்: ஆய்வின் மூலம் நிரூபணம்

Posted: 01 Jul 2012 11:39 AM PDT

இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் இயான் கின்னார்டு. ஓய்வு பெற்ற அறிவியல் பேராசிரியர். இவர் தனது டி.என்.ஏ. மூலக்கூறை பரிசோதனை செய்தார். அதில், தான் தனது தாயாரின் வம்சாவளியில் இருந்து தோன்றியதை கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து, தனது மூதாதையர்களின் டி.என்.ஏ. மூலக்கூறுகளின் மீது ஆய்வு நடத்தினர்.

அதில், தனது ஆதிகால தாத்தாவின் மூலக்கூறு உலகில் முதன் முதலில் அதாவது 1 லட்சத்து 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஏவாளின் டி.என்.ஏ. மூலக்கூறுடன் ஒத்து போவதை கண்டறிந்தார். எனவே, ஆதிமனிதன் முதன் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றவில்லை. இங்கிலாந்தில்தான் தோன்றினான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™