Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும் போஸ்டர்

Posted: 29 Jun 2012 11:03 PM PDT

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடிக்கும், மாநில பாரதீய ஜனதா முன்னாள் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷிக்கும் பகை இருந்து வருகிறது. குஜராத்தில் மோடியை பிடிக்காதவர்கள் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்களாக மாறி மோடிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

சமீபத்தில் சஞ்சய் ஜோஷி ஆதரவாளர்கள் குஜராத்தின் முக்கிய நகரங்களிலும், டெல்லியிலும் மோடிக்கு எதிராக பேனர் மற்றும் சுவரொட்டி வைத்திருந்தனர். அதில், குறுகிய மனப்பான்மை உடையவர் உயர்ந்த பதவிக்கு (பிரதமர்) வர முடியாது என்று மோடியை மறைமுகமாக தாக்கி இருந்தனர். 

பதிலுக்கு மோடி ஆதரவாளர்கள் சஞ்சய் ஜோஷியின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படுத்தும் போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டினர். இதையடுத்து, போஸ்டர் யுத்தத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை சஞ்சய் ஜோஷி கேட்டுக் கொண்டார். எனினும் போஸ்டர் யுத்தம் ஓயவில்லை. சுவரொட்டி போர் தொடர்கிறது. 

நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரித்து இப்போது போஸ்டர்கள் ஒட்டுப்பட்டுள்ளன. பழம்பெரும் நடிகைகளாக லலிதா பவார், சசிகலா ஆகியோர் புகைப்படங்களுடன் பெண் வேடத்தில் நரேந்திர மோடியின் படமும் போட்டு, போஸ்டர் அச்சடிக்கப்பட்டுள்ளது. லலிதா பவார், சகிகலா இருவரும் பெரும்பாலான படங்களில் கொடுமைக்கார மாமியாராக நடித்துள்ளனர். இவர்கள் தந்திரமாக செயல்பட்டு, குடும்பங்களை பிரிக்கும் மோசமான பெண் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இவர்களின் புகைப் படங்களுடன் மோடியின் பெண் வேடபோட்டாவையும் இடம்பெறச் செய்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். 

மோடியை மாநில பாரதீய ஜனதாவின் கொடுமைக்கார மாமியாராகவும், கட்சியில் பிளவை ஏற்படுத்து பவராகவும் மறைமுகமாக தாக்கி அச்சியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர், ரேஸ் கோர்ஸ் ரிங்ரோடு, தாகூர் ரோடு, ராஜ்கோட் மேயர் வீடு அருகில் மற்றும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 

இந்த போஸ்டர்கள் பாரதீய ஜனதா தொண்டர்கள் மற்றும் மோடி ஆதரவார்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?

Posted: 29 Jun 2012 10:53 PM PDT


இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சென்ற சிவசங்கர் மேனன் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புகளின் போது இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய தரப்பில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சிவசங்கர் மேனன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்றார்.



இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கில்...!

Posted: 29 Jun 2012 07:44 AM PDT

இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.
ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பெரும் குஷியடைந்துள்ளனர்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது.

திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார்.

இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செய்யும் அறிவியல் ஆசிரியர்

Posted: 29 Jun 2012 07:06 AM PDT


திசையன்விளை பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு வித்தியாசமான முறையில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் குமுறலில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை உள்ள ஒரு தனியார் பள்ளியி்ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 9ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் ஒருவர் மாணவ, மாணவிகளுக்கு நூதன முறையில் தண்டனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் பெற்றோர்கள் கொதிப்பு அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்த மாணவர் மீது அந்த ஆசிரியர் புத்தகத்தை தூக்கி எறிந்தார். இதில் அந்த மாணவரின் கண்ணாடி உடைந்து முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் எழுதாமல் வகுப்பறைக்கு வந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து கண்டித்ததுடன் அவரை நிற்க வைத்து கால் மேல் ஏறி தனது காலால் மிதித்து அழுத்தியுள்ளார். வலி பொறுக்க முடியாத அந்த மாணவி அலறியபோதும் சுமார் 20 நிமிடம் தனது காலால் மிதித்து அவரின் பாதங்களை அழுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நேற்று பள்ளி்க்கு வந்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். அவர்கள் ஆசிரியரை கண்டிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல் மாணவர்களையும் நிற்க வைத்து அவர்களின் பாதங்களில் ஏறி நிற்கும் ஆசிரியர் சில சமயங்களில் அவர்களை பின் பக்கமாக திடீரென்று தள்ளி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியர் மீது பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் மீது மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.



மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்

Posted: 29 Jun 2012 06:44 AM PDT



மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!

Posted: 29 Jun 2012 06:33 AM PDT


ஜீவா நடிக்க, மிஷ்கின் இயக்கி வரும் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படத்தின் முன்னோட்டக் காட்சியை இன்று நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

'முகமூடி' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் இன்று சத்யம் சினிமாவில் வெளியிடப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா, கேவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலரை சூர்யா வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு, படத்தின் ஹீரோ ஜீவா, முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நரேன், செல்வா, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினர்.



சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்

Posted: 29 Jun 2012 06:24 AM PDT

சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை தற்போது விரிவுபடுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் பாதி முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டது. இதன்மூலம் சர்வதேச தரத்திற்கு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இவ்விமான நிலையத்தில் ஓடு பாதையில் மேற்கொள்ளவிருக்கும் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 6 மணி நேரம் ஓடு பாதை மூடப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், நாளை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையத்தின் அனைத்து ஓடு பாதைகளும் மூடப்படுகின்றன. 

ஓடு பாதைகள் மூடப்படுவதையடுத்து சர்வதேச, உள்நாட்டு விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, டெல்லி, கொச்சி, கொல்கத்தா செல்லும் ஏர்இந்தியாவின் விமானங்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.





மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

Posted: 29 Jun 2012 06:20 AM PDT


மேற்கு வங்கத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்ததால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகினார்.

மேற்கு வங்க மாநிலம் கைகாட்டாவில் உள்ளது பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர் நிலைப் பள்ளி. அங்கு 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர். இதைப் பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரம் அடைந்து அந்த 3 பேரையும் திட்டித்தீர்தது வகுப்பில் இருந்து வெளியேற்றினார்.

அதில் ஒரு மாணவி ஆசிரியையிடம் தான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வராததால் லெக்கிங்ஸ் அணிந்து வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் வெகுண்ட ஆசிரியை இருபாலர் அமர்ந்திருக்கும் வகுப்பில் அனைவருக்கும் முன்பு அந்த மாணவியின் லெக்கிங்ஸை பிடித்து கிழித்து அவரை அரை நிர்வாணமாக்கினார். மேலும் அப்படியே வீட்டுக்கும் போக வைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி கூறுகையில்,

நான் திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் பள்ளிக்கு வராததால் சீருடை விதிமுறைகள் எனக்கு தெரியாது என்று ஆசிரியையிடம் கூறினேன். ஆனால் அவர் கோபப்பட்டு அனைவரின் முன்பும் எனது லெக்கிங்ஸை கிழித்தார். அவமானத்தில் நான் கதறி அழுதுவிட்டேன். அவர் எங்கள் 3 பேரையும் வகுப்பை விட்டு வெளியேற்றினார்.

பள்ளி முடிந்த பிறகு லெக்கிங்ஸை கொடுங்கள் வீட்டு இப்படியே செல்ல முடியாது என்று கெஞ்சினேன். ஆனால் அவர் கொடுக்காததால் அரை நிர்வாணக் கோலத்திலேயே வீட்டுக்கு சென்றேன் என்றார்.

இந்த விவகாரம் குறித்து அந்த ஆசிரியை மன்னிப்பு கேட்டுள்ளார். இதெல்லாம் சின்ன விஷயம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்வபன் பாலா தெரிவி்ததுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தது. மற்ற பிள்ளைகள் வீட்டுக்கு சென்று வகுப்பறையில் நடந்ததை தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மறுநாள் காலை பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று அந்த மாணவியின் தந்தை கூறியதால் இது குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.



மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!

Posted: 29 Jun 2012 05:40 AM PDT


சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!



நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை

Posted: 29 Jun 2012 05:16 AM PDT

மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் "தெய்வத் திருமகள்" படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர்.

அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார்.

அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர்.

சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.



ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்

Posted: 29 Jun 2012 04:47 AM PDT


முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியதாது, தெருக்கூத்து மட்டும் தான் தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

மு்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு அவ்வப்போது வந்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பார். அதைப் போன்று நேற்று வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள திருப்பங்கூர் வந்தார்.
 மணிசங்கர் அய்யர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பற்றி?
பதில்: பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவது உறுதி.
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை மாறுபட்டதாக இருப்பது பற்றி?
பதில்: நான் பல நாட்களாகத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியலே தெரியவில்லை. அவருக்கு தெரிந்தது தெருக்கூத்து மட்டுமே.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™