புதிய உலகம்.கொம் |
- மைக்கேல் ஜாக்சன் ஆவி பாட்டு பாடுகிறதா? பொதுமக்கள் அச்சம்
- முல்லைத்தீவு பகுதியில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் மீட்பு
- தமிழ் செய்தி இணையத்தளங்கள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு திடீர்த் தடை!
- ஓவியத்திற்காக ஓன்று கூடிய 1700 நிர்வாண மொடல்கள் (படங்கள்)
| மைக்கேல் ஜாக்சன் ஆவி பாட்டு பாடுகிறதா? பொதுமக்கள் அச்சம் Posted: 26 Jun 2012 02:54 AM PDT மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் அடிக்கடி ஜன்னல்கள் வழியாக யார் போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பார்ப்பாராம். தற்போது அவர் இசையமைக்கும், பாட்டுப் பாடும் சத்தம் கேட்கிறதாம். மைக்கேல் ஜாக்சன் உயிருடன் இருக்கையில் தனது குழந்தைகள் பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட்டுடன் பெவர்லி ஹில்ஸ் வீட்டில் தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு ஆவிகள் மீது நம்பிக்கை இருந்தது. தற்போது அவரே ஆவியாக வருகிறார் என்று கூறப்படுகிறது. |
| முல்லைத்தீவு பகுதியில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் மீட்பு Posted: 26 Jun 2012 02:06 AM PDT முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாப்பான முறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளார்கள்.விசேட அதிரடிப்படையினர் கடந்த 20 ஆம் திகதி மேற்கொண்ட நடவடிக்கை போதே இத்தகைய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார். இதன்போது பின்வரும் இலக்கங்களைக்கொண்ட டிப்பர் வாகனங்கள் மூன்று, என்சி 2636 ,என்பி 1358, ஆர்பி 4397 ஆகிய இலக்கங்களைக்கொண்ட வாகனங்கள், உழவு இயந்திரம், தேக்கு மரங்கள் 104 மற்றும் கைக்குண்டுகள், 124 மோட்டர் குண்டுகள் ,135 82 இலக்கக் குண்டுகள், 37 வெடி மருந்து ,50 கிலோ 7.62 துப்பாக்கி ரவைகள், 431 12.7மில்லி மீற்றர் ரவைகள் 14 120 மில்;லிமீற்றர் மோட்டர் குண்டுகள் 12 உட்பட மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். |
| தமிழ் செய்தி இணையத்தளங்கள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு திடீர்த் தடை! Posted: 26 Jun 2012 02:03 AM PDT வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பல செய்தி இணையத் தளங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் திடீர்த் தடை விதித்திருக்கின்றது. உள்நாட்டில் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டம் மற்றும் சர்வதேச தமிழர்கள் தொடர்பிலான செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதால்தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. இது தொடர்பில் சிறிலங்கா அரச தரப்பு தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. தொலைத் தொடர்பு ஆணைக்குழு மூலமாகவே குறிப்பிட்ட இணையத் தளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. |
| ஓவியத்திற்காக ஓன்று கூடிய 1700 நிர்வாண மொடல்கள் (படங்கள்) Posted: 25 Jun 2012 07:41 AM PDT 45 வயதான ஜெர்மனியைச் சேர்ந்த Max-Joseph Platz என்ற ஓவியர் 1700 நிர்வாண மொடல்களை வைத்து பிரம்மாண்ட முறையில் ஓவியமொன்றை வரைந்திருக்கிறார், இதற்காக பிறந்த மேனியில் சிவப்பு மற்றும் தங்க நிறம் பூசப்பட்ட மொடல்களை Munich இலுள்ள Opera ஹவுஸ் முன்பாக ஓன்று கூட்டினார், 2012 ஆம் ஆண்டிற்கான கோடை காலத்தை வரவேற்கும் முகமாகவே இதுபோன்ற நிழ்கழ்வுகள் இடம்பெறுகின்றன, 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த வர்ணம் பூசப்பட்ட நிர்வாண ஓவிய கொண்டாட்டம் இடம்பெறுவதாகவும், 2000 , 2003 ஆம் ஆண்டுகளில் முறையே 800 , 1000 நிர்வாண மொடல்களுடன் நடைபெற்றதாகவும் ஓவியர் தெரிவிக்கின்றார் |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









