மக்களின் குரல் |
- கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் - முதலமைச்சர் சந்திரகாந்தன்
- கிழக்கு மாகாணத்தில் 38 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம்
- கிழக்கு முதல்வர் சுற்றுலா தகவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்
- வவுனியா பாடசாலை மாணவர்கள் கிழக்கு முதல்வருடன் சந்திப்பு
- மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு (படங்கள்)
| கிழக்கு மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் - முதலமைச்சர் சந்திரகாந்தன் Posted: 27 Jun 2012 01:05 PM PDT கிழக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சி காலம் இன்று(27.06.2012) நல்லிரவுடன் முடிவுக்கு வருகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அந்த வகையில் இன்று நள்ளிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைக்கபட்டு உடனடியாக தேர்தல் நடாத்தபட இருப்பததாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் கலைப்பு தொடர்பில் தாம் உரிய ஆவணங்களில் கைச்சாத்திட்டு ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனோடு இணைந்த வகையில் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளும் கலைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
| கிழக்கு மாகாணத்தில் 38 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம் Posted: 27 Jun 2012 01:00 PM PDT கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலுமிருந்து 38 பேருக்கு இன்று(27.06.2012) முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். மேற்படி நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் தலைமைக் காரியாலயத்தில்; இடம் பெற்றது. இதில் மட்டக்களப்பில் 11 பேருக்கும் திருகோணமலையில் 9 பேருக்கும் மற்றும் அம்பாரையில் 18 பேருக்குமாக மொத்தமாக 38 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், மாகாண பொது நிருவாக சேவையின் பிரதி பிரதம செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் முதலமைச்சரின் உதவிச் செயலாளர் சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டார்கள். |
| கிழக்கு முதல்வர் சுற்றுலா தகவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் Posted: 27 Jun 2012 12:37 PM PDT திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில் சுற்றுலா தகவல் மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார். சுமார் 35 இலட்சம் ரூபாய் நிதி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார். இந் நிகழ்வில் முதலமைச்சரின் உதவி செயலாளர் சித்திரவேல் , முதலமைச்சர் செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கௌரிதரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கு.நளினகாந்தன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். |
| வவுனியா பாடசாலை மாணவர்கள் கிழக்கு முதல்வருடன் சந்திப்பு Posted: 27 Jun 2012 12:31 PM PDT வவுனியாவிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு வருகைதந்த வவுனியா மகா வித்தியாலய மாவர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து கலந்துரையாடினார். இன்று திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பார்வையிடுவதற்காகக வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். |
| Posted: 27 Jun 2012 12:02 PM PDT |
| You are subscribed to email updates from மக்களின் குரல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




