Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


பூமியை அச்சுறுத்தும் மனிதர்களின் உடல் எடை : ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Posted: 22 Jun 2012 09:45 AM PDT

மக்கள் தொகைப் பெருக்கத்தைப் போல, அதிகரிக்கும் மனித உடல் எடையும் பூமியை அச்சுறுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது பூமியில் இருக்கும் மக்களின் அதிகப்படியான எடை, நூறு கோடி மக்களின் எடைக்கு சமமாக இருக்கிறது. அதாவது, இன்னும் நூறு கோடி மக்கள் பயன்படுத்த வேண்டிய இயற்கை வளங்கள், உணவுப் பொருட்களை தற்போதுள்ள மக்களே பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் பூமியின் வளங்கள் பாதிக்கப்படுகின்றன.

உலகில், வட அமெரிக்காவில் தான் உடற் பருமன் சதவீதம் அதிகம். ஆனால் உலக மக்கள் தொகையில் 6 சதவீதம் பேரே இங்கு வசிக்கின்றனர். அங்கு, மூன்றில் ஒருவருக்கு "ஒபிசிட்டி' எனப்படும் உடற்பருமன் நோய் உள்ளது. அமெரிக்கர்களின் பாடி மாஸ் இண்டெக்சின் (இ.எம்.ஐ.,) அளவு சராசரியாக 28.7. இதுவே ஜப்பானில் 22 மட்டுமே.

உலக மக்களின் மொத்த எடை 28.7 கோடி டன். இதில் 1.5 கோடி டன் அதிகப்படியான உடல் எடையாகவும், 35 லட்சம் டன் ஒபிசிட்டி நோயாகவும் உள்ளது. 2005ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (டபுள்யு.எச்.ஓ.,) கணக்கெடுப்பின்படி, உலக மக்களின் சராசரி எடை 62 கிலோ. இது, கண்டத்துக்கு கண்டம் மாறுகிறது. வட அமெரிக்காவில் ஒரு மனிதனின் சராசரி எடை 80.7 கிலோ. இது ஆசியாவில் 57.7 கிலோ.

உலக மக்கள் தொகையில் 61 சதவீதம் பேர் ஆசிய கண்டத்தில் தான் உள்ளனர். இங்கு "ஒபிசிட்டி' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 13 சதவீதம் பேர் மட்டுமே. கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் உலகில், அதிக எடையால் அவதிப்படும் மக்களும் நிறைய இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உலக நாடுகளுக்கு இருக்கிறது. உடல் எடையில் சமநிலையை பேண தனிமனிதனின் அக்கறையும் அவசியம்.

லண்டன் இசை அமைப்பாளருடன் தமிழ் பட ஹீரோயின் டும்டும்

Posted: 22 Jun 2012 09:43 AM PDT

தமிழ் பட ஹீரோயின் ராதிகா ஆப்தே லண்டன் இசை அமைப்பாளரை மணக்கிறார். 'வெற்றிச் செல்வன்' படத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே. இவருக்கும் லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனடிக்ட் டைலருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது: வெற்றிச் செல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியாக நடிக்கிறேன். வக்கீல் வேடம் என்பதால் அதற்கான ஒத்திகை பார்த்தேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் கதாபாத்திரம் ஹீரோவை சார்ந்த கதாபாத்திரங்களாகவே இருக்கும். இப்படத்தை பொறுத்தவரை அதில் வித்தியாசம் இருக்கிறது.

இதில் ஹீரோயின் வேடம் என்றாலும் அது ஹீரோவை சார்ந்ததாக இருக்காது. தனித்து இயங்கும் கேரக்டர். இதில் நடிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதற்காகவும், ஷூட்டிங்கிற்காகவும் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்துகொண்டிருக்கிறேன்.

இது எனக்கு அமைதியற்ற ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் அதை ரசனையோடு ஏற்கிறேன். திட்டமிட்டு செய்வதால் எதிலும் சிக்கல் ஏற்படுவதில்லை. இதையொரு புகாராக சொல்லவில்லை. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். சமீபத்தில் ராதிகா ஆப்தேக்கும் லண்டன் இசை அமைப்பாளர் பெனடிக் டைலருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பிடித்த ஹீரோ இருந்தால்தான் படங்களை ஏற்பேன்: சார்மி அடம்

Posted: 22 Jun 2012 09:38 AM PDT

ஹீரோவை பிடித்தால்தான் படங்களை ஏற்பேன் என்றார் சார்மி. இதுபற்றி அவர் கூறியதாவது: மம்முட்டியுடன் 'தப்பன்னா' மலையாள படத்தில் மல்லிகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அமைதியான அதேநேரத்தில் உறுதியான மனம் படைத்த கேரக்டர்.

அந்த வேடத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை. மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறேன். அவர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் எல்லோருடனும் சகஜமாக பழகினார். 'சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் 'புரொபைல்' என்ற படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?' என்று கேட்கிறார்கள். அப்படத்தில் பல காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

 ஒரு ஹீரோயின் என்றால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக இதுபோன்ற வேடங்களை ஏற்க விரும்பவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. அடுத்து இந்தியில் 'ஜில்லா காசியபாத்' படத்தில் நடிக்கிறேன். விவேக் ஓபராய் ஹீரோ. என்னுடைய உடை மற்றும் பேச்சு வழக்கு எல்லாமே காஸியாபாத் பகுதியை சேர்ந்த பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கில் 'சேவகுடு' என்ற படம் விரைவில் வரவிருக்கிறது. மீண்டும் மலையாளத்தில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எந்த படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பும் தயாரிப்பாளர், உடன் நடிக்கும் ஹீரோ, எனது வேடம் என மூன்று அம்சமும் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாக ஏற்க மாட்டேன். குறிப்பிட்ட வேடம் என்னை கவர வேண்டும். பேசும்படி இருக்க வேண்டும்.

வவுனியா சிறையில் மோதல் ஏழு விடுதலை புலிகள் காயம்.!

Posted: 22 Jun 2012 09:37 AM PDT

இலங்கையில், வவுனியா சிறையில் ஏற்பட்ட மோதலில் "மாஜி' விடுதலை புலிகள் ஏழு பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. ஏராளமான விடுதலைப் புலிகள் அரசு படைகளிடம் சரணடைந்தனர். இவர்கள் பல்வேறு மறுவாழ்வு முகாம் களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து, சிறை கண் காணிப்பாளர் கொடிப்பிலி குறிப்பிடுகையில், "காயமடைந்த ஏழு பேரில் இரண்டு பேர் மருத்துவ மனை யிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அனுராதபுரத்தில் உள்ள மூத்த சிறை அதிகாரிகள் வந்துள்ளனர்' என்றார்.

போதையில் ரோட்டில் விழுந்த பாகன்: எழும் வரை காவலாக இருந்த யானை

Posted: 22 Jun 2012 09:33 AM PDT

கேரளா, கடம்பநாடு அருகே, இளம்பல்லூர் கோவிலுக்குச் சொந்தமான கணேசன் என்ற யானையை, பாகன் மைதீன், 35, என்பவர் பராமரித்து வந்தார். அவர் நேற்று முன்தினம், யானையை கடம்பநாடு பகுதிக்கு கொண்டு சென்றார். அப்போது, பாகன் மைதீன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார். யானையுடன் அவர் கணேசவிலாசம் பகுதி அருகே சென்றபோது, போதை அதிகமாகி, நடுரோட்டில் மயங்கி விழுந்தார்.

 அதைப் பார்த்த யானை அதிர்ச்சி அடைந்து, தன் தும்பிக்கையால் பாகனை எழுப்ப முயற்சித்தது. பல முறை முயன்றும், அவர் எழாமல் போகவே, யானை அவருக்கு காவலாக இரண்டரை மணி நேரம் நடுரோட்டிலேயே நின்றது. யானை நடுரோட்டில் நிற்பதையும், பாகன் ரோட்டில் விழுந்து கிடப்பதையும் அவ்வழியே வாகனங்களில் வந்தவர்கள் பார்த்தனர்.

சிலர், யானை அருகே சென்றனர். அப்போது, பாகன் சற்று அசையவே, அவர் இறக்கவில்லை என்பதும், போதையில் விழுந்து கிடப்பதையும் அவர்கள் ஊகித்தனர். இதையடுத்து, வாளியில் தண்ணீர் எடுத்து வந்து, அவர் மீது ஊற்றினர். சிறிது நேரத்திற்கு பிறகு பாகன் மெதுவாக எழுந்தார். அருகே உள்ள மரத்தில் யானையை கட்டிப் போட்டார். மது அருந்தி, சாலையில் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாகன் மைதீன் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

10ம் வகுப்பு மாணவியிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷம் : பள்ளி முற்றுகை

Posted: 22 Jun 2012 09:29 AM PDT

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த ஒரு கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு படிக்கும் 10ம் வகுப்பு மாணவிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு வெளியே உள்ள மருந்துக்கடையில் மாத்திரை வாங்க முடிவு செய்த அந்த மாணவி அதற்காக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று அனுமதி கேட்டுள்ளார். அப்போது அந்த தலைமை ஆசிரியர், உனக்கு தலை வலிக்கிறதா? இல்லை காய்ச்சல் அடிக்கிறதா? நான் பார்க்கிறேன் எனக்கூறியபடி அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தலைமை ஆசிரியரின் பிடியில் இருந்து தப்பியோடி தனது வகுப்பறைக்கு சென்றார். மாலையில் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த அந்த மாணவி, பெற்றோர் உறவினரிடம் இதுபற்றி கூறி உள்ளார். தகவலறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர் (எஸ்எப்ஐ) தலைமை ஆசிரியருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இன்று காலை பள்ளியை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை: ஆச்சரியத்தில் இராணுவம்! (படங்கள்)

Posted: 22 Jun 2012 09:13 AM PDT

விடுதலைப் புலிகள் தயாரித்த பல்குழல் எறிகணை செலுத்தி ஒன்றை இராணுவம் மீட்டுள்ளதாக அறியப்படுகிறது. முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் இது மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 6 எறிகணைகளைச் செலுத்தக்கூடிய பல்குழல் எறிகணைகளை புலிகள் உள்ளூரில் தயாரித்துள்ளனர்.

இதனைக் கண்டு இராணுவத்தினர் வியப்படைந்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இறுதி யுத்தத்தில் அவை பாவிக்கப்படவில்லை என்றும், இதனைப் புலிகள் ஏன் பாவிக்கவில்லை என்று தமக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




உள்ளூரில் கிடைக்கும், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, இவ்வகையான கனரக ஆயுதங்களை புலிகள் மிக நுணுக்கமாகத் தயாரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள இராணுவத்தினர், புலிகளின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஒன்றையும் கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™