Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மக்களின் குரல்

மக்களின் குரல்


அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

Posted: 03 Jun 2012 05:18 PM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள பாடசாலை அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று 02.06.2012 வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கல்குடா கல்வி வலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.
அவர் குறிப்பிடுகையில் எதிர் வருகின்ற ஆண்டில் இக் கல்வி வலயமானது க்பொ.த.சா.தரப் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை மற்றும் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றில் அதிகூடிய பெறுபேறுகளை பெறவேண்டும்.அதற்காhக அதிகாரிகள் பாடசாலைகளின் தலைவர்களாக இருக்கின்ற அதிபர்கள் கடுமையான உழைப்பினை வழங்கி எமது சமூகத்தின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்க வேண்டும். இதற்காக என்னாலான அனைத்து உதவிகளையும் நான் வழங்குவேன் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதிக் கல்வி பணிப்பாளர் ரவி, கோட்டக் கல்வி அதிகாரிகளான குணலிங்கம், சுகுமாரன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இது போன்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலை முதலமைச்சர் சந்திரகாந்தன் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்ப ஆகிய வலயங்களில் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.



கிராண்குளம் காந்தி வீதிக்கு கொங்கிறிட் இடும் பணிகள் முதலமைச்சரால் ஆரம்பித்துவைப்பு

Posted: 03 Jun 2012 05:12 PM PDT


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்களுக்கிடையிலான கிராமிய சிறு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு,கிராண்குளத்தில் அமைக்கப்படவுள்ள வீதிக்கான கொங்கிறிட் இடும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
புறநெகு திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்காக சுமார் 60 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் அமைக்கப்படவுள்ள கிராண்குளம் காந்தி வீதிக்கான கொங்கிறிட் இடும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கிறிஸ்டினா சாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ள இவ்வீதி கொங்கிறிட் இடப்படுவதன் மூலம் இப்பிரதேசத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட குடும்ங்கள் நன்மையடையவுள்ளன.



மட்/புளியந்தீவு, புதுமைபுரம்-கூழாவடி தூய அந்தோனியார் ஆலயங்களின் வருடாந்த திருவிழா!கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

Posted: 03 Jun 2012 05:00 PM PDT

துமைபுரம் -கூழாவடி தூய அந்தோனியார் ஆலய வருடாந்த
திருவிழா 01 .06 .2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
திருவிழா கூட்டுத்திருப்பலி திருமலை-மட்டுநகர் மறை மாநில
ஆயர் அதி வந்தனைக்குரிய கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை
அவர்களின் தலைமையில் 10 .06 .2012 ஞாயிறு காலை 7 மணிக்கு
ஒப்புக்கொடுக்கப்படும்.
(நவநாட்காலங்களில் இவ்விரண்டு ஆலயங்களிலும் தினமும்
மாலை 5 .30 மணிக்கு திருச்செபமாலை ,மன்றாட்டு மாலை
திருப்பலி ,அருளுரை என்பன இடம்பெறும்.)
புளியந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
08 .06 .2012 வெள்ளிக்கிழமை மாலை 5 .15 மணிக்கு கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி திருவிழா கூட்டுத்திருப்பலி 17 .06 .2012 ஞாயிறு காலை
7 .15 மணிக்கு திருமலை-மட்டுநகர் மறை மாநில துணை ஆயர்
அதி வந்தனைக்குரிய பேரருட்திரு பொன்னையா ஜோசப் ஆண்டகை
அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும்.
13 .06 .2012 ஆம் திகதி புனிதரின் பெயர் கொண்ட திருநாள்.காலை
6 .15 மணிக்கு விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
புனித அந்தோனியாரின் திருப்பண்டமானது இவ்வாண்டு பக்தர்களின்
வணக்கத்திற்காக கொடியேற்றம் அன்று திருப்பலியின் பின்னர்
வெளியில் வைக்கப்பட்டு தொடர்ந்து திருவிழா நிறைவு நாளன்று
மதியம் 12 மணிக்கு பேழையினுள் எடுத்துவைக்கப்படும்.

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவமும் சடங்கும்

Posted: 03 Jun 2012 04:56 PM PDT


கிழக்கிலங்கையில் புகழ்பெற்று விளங்கும் கண்ணகை அம்மன் ஆலயங்களுள் செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயமும் ஒன்றாகும். கி.பி 1132 – 1153 காலப்பகுதியில் கஜபாகு மன்னன் ஈழத்திருநாட்டில் கண்ணகி வழிபாட்டை புகுர்த்தியதை தொடர்ந்து இலங்கை எங்கனும் கண்ணகி வழிபாடு வேறூன்றியது. அந்த வகையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயமும் ஒன்றாகும்.
இதன் சிறப்பம்சம் அன்று தொட்டு இன்றுவரை ஆறு கிராம மக்களால் (கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை) ஒற்றுமையாக பராமரிக்கப்பட்டு மரபுரீதியான பூசைகளும் பாரம்பரியங்களும் பண்டுதொட்டு இன்றுவரை இடம்பெற்று வருகின்றது.
இந்த செட்டிபாளையம் ஸ்ரீல ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் சடங்கும் 01.06.2012 ஆரம்பித்து 04.06.2012 முடிவுறும்.
இதன் சடங்கு கிரியை நிகழ்வுகள்.
01.06.2012 வெள்ளிக்கிழமை முன்னிரவு கதவு திறத்தல் கிரான்குளம் கிராம மக்கள்
02.06.2012 சனிக்கிழமை பகற் சடங்கு குருக்கள்மடம் கிராம மக்கள்
02.06.2012 சனிக்கிழமை இரவுச் சடங்கு மாங்காடு கிராம மக்கள்
03.06.2012 ஞாயிற்றுக்கிழமை பகல் கல்யாணச் சடங்கு தேற்றாத்தீவு கிராம மக்கள்
03.06.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு பூரண கும்பச் சடங்கு செட்டிபாளையம் கிராம மக்கள்
கும்பச் சடங்குக்குரிய நெல் கொண்டு வருதல் குடியிருப்பு கிராம மக்கள்
04.06.2012 திங்கட்கிழமை பகல் சடங்கு களுதாவளை கிராம மக்கள்
04.06.2012 திங்கட்கிழமை பின்னிரவு திருக்குளிர்த்திச்சடங்கு களுதாவளை கிராம மக்கள்
04.06.2012 திங்கட்கிழமை பின்னிரவு 3.30 மணிக்கு அம்மனுடைய திருக்குளிர்த்தி, உள்வீதி வலம்வருதல் என்பன இடம்பெறுவதோடு அடுத்த கிழமை 11.06.2012 அன்று எட்டாம் சடங்கு இடம்பெறும்.
 தற்போது மக்கள் வெள்ளம் வீதி எங்கனும் காணப்படுவதோடு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்த வருடாந்த உற்சவம். அத்தோடு கேட்ட வரம் அருளும் செட்டிபாளையம் ஸ்ரீல ஸ்ரீ கண்ணகை அம்மன் என்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்களின் நேர்த்திக்கடன்கள் சான்றுபகர்கிறது. இங்கு மடிப்பிச்சை எடுத்தல், அத்தோடு காவடி எடுத்தல் என்பவற்றுடன் பல்வேறு வகையான நேர்த்திக்கடன்கள் வந்தவண்ணமுள்ளன. அவற்றில் விசேடமாக இங்கு பல விதமான பறவைக் காவடிகள் வருவது மிகவும் சிறப்பான விடயமாகும். -

இந்து குரு பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

Posted: 03 Jun 2012 04:51 PM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்து குரு பீடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (02.06.2012) தாண்டியடி ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் இடம் மட்டக்களப்பு மாவட்ட இந்து குரு பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ சரண காசுபதி ஈஸ்வர குருக்கள் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு குருபீடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.
வைநெறி சிறந்தோங்குகின்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே இவ்வளவு காலமும் இவ்வாறானதொரு முறையான குருகலக்கல்வியுடன் ஆகமங்கள் மற்றும் சமஸ் கிருதங்களை கற்பதற்கான ஓர் பொதுவான குருபீடம் இல்லை என்கின்ற குறையினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இப் பணி உடனடியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா, வவுணதீவு பிரதேச சபையின் தவிசாளர் கா.சுப்பிரமணியம், பிரதி தவிசாளர் ஜெ.செயராஜ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவர் யோகவேள், இந்து குரு பீடத்தின் செயலாளர் சிவஸ்ரீ விக்கினேஸ்வர் குருக்கள், உபதலைவர் சிவஸ்ரீ ராமதாஸ் குருக்கள், ஆலோசகர் சிவஸ்ரீ நவரெத்தின முரசொலிமாற குருக்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் அமுர்தலிங்கம். செயலாளர் தீஸன் மற்றும் தாண்டியடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.









ஆரையம்பதியில் ‘புறநெகும’ அபிவிருத்தித் திட்டம்

Posted: 03 Jun 2012 04:41 PM PDT


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 'புறநெகும' அபிவிருத்தி திட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
உலக வங்கியின் நிதி உதவியுடன் உள்ளூராட்சிமன்றங்களை பலப்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேசங்களுக்கு இடையிலான கிராமிய சிறுநகர அபிவிருத்தி முனைப்பு என்ற இத்திட்டத்தின் கீழ் இவ் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரையம்பதியிலிருந்து காங்கேயனோடை ஊடாக சென்று வாவியை அடையும் வடிகாலமைப்புத்திட்டம், ஆரையம்பதி நவரட்னராஜா வித்தியாலய வீதி, ஆரையம்பதி நாவலடி வீதி, கிரான்குளம் வீதி ஆகியவற்றின் புனரமைப்புக்கான அபிவிருத்தி வேலைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் திருமதி கிறிஸ்டினா சசிகரன், ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினர்கள், ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.







கொம்மாதுறையில் மஞ்சள் கடவையை கடக்கமுற்பட்ட மாணவன் பலி

Posted: 03 Jun 2012 04:25 PM PDT


மட்டக்களப்பு கொம்மாதுறை வாகன விபத்தில் செங்கலடி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பு மாணவன் பலிகியுள்ளார். 

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் மஞ்சள் கடவையை கடக்கமுற்பட்ட மாணவன் ஒருவர் மீது நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனம் மோதியதனால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றுள்ள இவ் விபத்தில் தெய்வநாயகம் சியாம்பவன் (16) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். 

குறித்த வாகனம் வேறுஒரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட வேளை இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அப்பிரதேசப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 

இவ் மாணவனின் தாயாரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்மாதுறையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உயிரிழந்த மாணவனின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. 

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

கிழக்கு முதலமைச்சரினால் பொலிஸ் நிலையங்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Posted: 03 Jun 2012 10:35 AM PDT


கிழக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் கணணிகள், போட்டோ கொப்பி இயந்திரங்கள் மற்றும் பெக்ஸ் இயந்திரங்கள் ஆகியன இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சிரேஷட பிரதி பொலிஸ் மா அதிபர் அபேசிறி குணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் இரண்டு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 15 கணணிகள் மற்றும் 15 போட்டோ கொப்பி இயந்திரங்கள் மற்றும் 15 பெக்ஸ் இயந்திரங்கள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உபகரணங்களை கிழக்கு மாகாண சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முதலமைச்சர் சந்திரகாந்தன் கையளித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 23 பொலிஸ் நிலையங்களுக்கு இந்த உபரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர் தின நிகழ்வுகள்

Posted: 03 Jun 2012 10:33 AM PDT


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் தின நிகழ்வு மட்டக்களப்பு மகஜன கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜே.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பிர் பூ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய இளைஞர், யுவதிகள் உட்பட பலர் நினைவு சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களுக்கு பணம் பெறப்பட்டால் அறிவியுங்கள்

Posted: 03 Jun 2012 10:25 AM PDT


கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள பட்டதாரிகளுக்கான தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளோ அல்லது முகவர்களோ பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டால் அது தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

அத்துடன் இந்த தொழில் நியமனத்தில் எந்தவிதமான அரசியல் பலமும் பயன்படுத்தப்படாமாட்டாது என்பதுடன் ஆண்டு அடிப்படையிலேயே நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, முறைகேடான நியமனங்கள் இடம்பெறக்கூடாது, மூப்பு அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும் வலது குறைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் விடுத்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

"ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக திறைசேரிக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. பட்டதாரிகளாகிய உங்களது நீண்ட கால முயற்சிக்கு தற்போது பயன் கிடைத்திருக்கிறது. உங்களது சங்கம் பலமானது, இது தொடர்ச்சியாக இயங்க வேண்டும். 

பட்டதாரிகள் யாரும் எந்த ஒரு அரசியல்வாதிக்கும், முகவருக்கும் சிறு தொகையை கூட வழங்கி பிரச்சினைகளை ஏற்படுத்தி விட வேண்டாம். அவ்வாறானவர்கள் தொடர்பான விபரங்களை எனக்கு அறியத் தரவும்.  பரீட்சைகள் மூலம் பட்டதாரிகளை அரசாங்க நியமனங்களில் உள்வாங்கும் முறைமை நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் நேர்முக பரீட்சைகளின் மூலம் அரச நியமனங்களில் உள்வாங்கப்படுவீர்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேர்முக பரீட்சைகளில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். அத்துடன் நேர்முக பரீட்சை முடிவுற்றதும் அது தொடர்பிலும் எனக்கு தெரியப்படுத்துங்கள். நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்தும் ஏற்படும பண வீக்கத்துக்கு ஏற்றால் போல் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவே இது வாகும். 

இதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இந்த நேர்முக பரீட்சையில் அனைத்து பட்டதாரிகளும் பங்கு கொள்ளுங்கள். உங்களுடைய நியமனங்களை வழங்குவதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்று செயற்படுத்துகிறது.

அதன் மூலமும் பண வீக்கம் அதிகரிக்க போகிறது. பொருளாதாரத்தினை வளப்படுத்துவதற்காக பெரும் சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது" என்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™