கஹடோவிட |
| அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு Posted: 05 Jun 2012 07:00 PM PDT அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வை இணையத்தில் இப்போது நேரடியாக பார்வையிடலாம்.வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு.தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்) நடந்திருக்கிறது. இப்போது நடந்துகொண்டிருப்பது எட்டாவது நிகழ்வாகும்.இணையத்தில் சில மணி நேரங்களே பார்க்க முடிகின்ற இந்த நிகழ்வுக்கான இணைப்புக்கள் இங்கே http://sunearthday.gsfc.nasa.gov/webcasts/nasaedge/ |
| லண்டனில் மஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்தாகியது Posted: 05 Jun 2012 06:36 PM PDT ![]() பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது. புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது. அந்தக் கருத்தரங்கில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் உரையாற்றவிருந்தனர். அதன் பின்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரையாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் மிக கவனமாக பல விஷயங்களை ஆராய்ந்த பிறகு அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார அமைப்பு செவ்வாய்கிழமை மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மதிய அமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும் எனவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from கஹடோவிட To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
